search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "An argument between the two turned into a scuffle."

    • 2 பெண்களுக்கு கத்திக்குத்து-பரபரப்பு
    • வாலிபர் கைது

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மணலூர்பேட்டை சாலை யில் உள்ள நகராட்சி ஊழி யர் குடியிருப்பு பகுதியில் வசித்து வருபவர் ராம்ஜி (வயது 27). சுமை தூக்கும் தொழிலாளி.

    இவரது மனைவி சுகுணா (25). சுகுணாவின் தாயார் விஜயா. இவர்கள் அனைவரும் ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர்.

    இந்த நிலையில், நேற்றிரவு ராம்ஜி சுகுணாவிடம் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

    இதனைக் கண்ட விஜயா ஏன் என் மகளிடம் தகராறு செய்கிறார் என்று ராம்ஜிடம் தட்டிக் கேட்டார். இதனால் ஆத்திரமடைந்த ராம்ஜி விஐயாவிடம் தகராறு செய்து அவரை தாக்கி கீழே தள்ளினார்.

    விஜயா கீழே விழுவதை பார்த்த விஜயாவின் இளைய மகன் பரணி, ராம்ஜியை தட்டிக் கேட்டுள் ளார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறியது.

    இதில் ஆத்திரமடைந்த ராம்ஜி, சமையல் அறையில் இருந்த கத்தியை எடுத்து வந்து மைத் துனர் பரணியை சரமாரியாக குத்தினார். தடுக்க வந்த மாமியார் விஜயா, மைத்துனி கல்கி ஆகியோருக் கும் கத்திக்குத்து விழுந்தது.

    இதில் 3 பேரும் படுகாயங் களுடன் மயங்கி விழுந்தனர். உடனடியாக அங்கிருந்து ராம்ஜி தப்பி ஓடினார். அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வந்தனர்.

    ரத்த வெள்ளத்தில் கிடந்த 3 பேரையும் மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்த்த னர்.

    ஆனால், வரும் வழியிலேயே பரணி பரிதாபமாக இறந்தார்.

    மேலும் விஜயா மற்றும் கல்கி ஆகியோர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொலை செய்யப்பட்ட பரணி, திருவண்ணாமலை நகராட்சியில் தூய்மை பணியாளராக பணிபுரிந்து வந்தார்.

    இதுகுறித்து தகவலறிந்து விரைந்து வந்த திருவண்ணாமலை டவுன் டிஎஸ்பி குண சேகரன் மற்றும் போலீசார் ராம்ஜியை நேற்றிரவு கைது செய்தனர்.

    தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இது தொடர்பாக திருவண்ணாமலை டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    குடும்பத்தகராறில் நடந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்ப டுத்தி உள்ளது.

    ×