என் மலர்
நீங்கள் தேடியது "An old man"
- போலீசார் கோபிசெட்டி பாளையம் கச்சேரி மேடு பகுதியில் உள்ள ஒரு கடையில் சோதனை செய்து விசாரணை நடத்தினர்.
- அந்த கடையில் பரமசிவம் என்பவர் தடை செய்யப்பட்ட புகையிலை ெபாருட்கள் விற்பனைக்கு வைத்து இருந்தது தெரிய வந்தது.
கோபி:
கோபிசெட்டிபாளையம் பகுதியில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன் பேரில் போலீசார் கோபிசெட்டி பாளையம் கச்சேரி மேடு பகுதியில் உள்ள ஒரு கடையில் சோதனை செய்து விசாரணை நடத்தினர்.
அப்போது அந்த கடையில் பரமசிவம் (68) என்பவர் தடை செய்யப்பட்ட புகையிலை ெபாருட்கள் விற்பனைக்கு வைத்து இருந்தது தெரிய வந்தது.
இதையடுத்து கடையில் இருந்த 5 பாக்கெட் புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இது குறித்து கோபிசெட்டிபாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜமாணிக்கம் வழக்கு பதிவு செய்து கடை உரிமையாளர் பரமசிவத்தை கைது செய்தார்.
- ஈரோடு பஸ் நிலையத்தில் திருச்சி பஸ் ரேக்கில் ஈரோட்டை சேர்ந்த முதியவர் ஒருவர் பஸ்சுக்காக காத்திருந்தார்.
- அவரது அருகே நின்றிருந்த மர்ம நபர் ஒருவர் பாக்கெட்டில் வைத்திருந்த பணத்தை திருடி சென்றுள்ளார்.
ஈரோடு:
ஈரோடு பஸ் நிலையத்தில் காலை மற்றும் மாலை நேரங்களில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும். சமீப காலமாக இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி மர்ம நபர்கள் பயணிகளிடம் செல்போன், பணம் திருடி கொண்டு செல்கின்றனர். குறிப்பாக முதியவர்களிடம் அதிக அளவில் கைவரிசை காட்டி வருகின்றனர்.
இந்நிலையில் சம்பவத்தன்று இரவு ஈரோடு பஸ் நிலையத்தில் திருச்சி பஸ் ரேக்கில் ஈரோட்டை சேர்ந்த முதியவர் ஒருவர் பஸ்சுக்காக காத்திருந்தார்.
அப்போது அவரது அருகே நின்றிருந்த மர்ம நபர் ஒருவர் முதியவரின் பாக்கெட்டில் வைத்திருந்த ரூ.6,800 ரொக்க பணத்தை பாக்கெட்டில் பிளேடு போட்டு திருடி சென்றுள்ளார். பின்னர் முதியவர் தான் வைத்திருந்த பணம் திருடு போயிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இதையடுத்து அந்த முதியவர் ஈரோடு பஸ் நிலையத்தில் உள்ள புறநகர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதன் பேரில் போலீசார் முதியோரிடம் விசாரணை நடத்தி பஸ் நிலையத்தில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமிரா காட்சியின் பதிவுகளை கைப்பற்றி மர்ம நபரை தேடி வருகின்றனர்.
இதையடுத்து ஈரோடு பஸ் நிலையத்தில் இரவு நேரத்தில் போலீஸ் பாதுகாப்பு மேலும் அதிகரிக்கப்பட்டு போலீசார் கண்காணித்து வருகின்றனர்.
- பெட்டிக்கடையில் லாட்டரி சீட்டு விற்பனை நடைபெறுவதாக ரகசிய தகவல் கிடைத்தது.
- இது குறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து ரங்கசாமியை கைது செய்தனர்.
ஈரோடு:
சத்தியமங்கலம் சப்-இன்ஸ்பெக்டர் கோபால் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போது சத்தியமங்கலம் வரதம்பாளையம் அருகே உள்ள தியேட்டர் பக்கத்தில் உள்ள ஒரு பெட்டிக்கடையில் லாட்டரி சீட்டு விற்பனை நடைபெறுவதாக ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் பேரில் போலீசார் அந்த பெட்டிக்கடை யை ரகசியமாக கண்காணித்தனர். அப்போது அந்த பெட்டி கடையில் லாட்டரி சீட்டு விற்பனை நடைபெற்றது தெரியவந்தது.
இது குறித்து விசாரித்த போது சத்தியமங்கலம் பண்ணாரி யம்மன் நகரை சேர்ந்த ரங்கசாமி (75) என்பவர் அந்த பெட்டி க்கடை யை நடத்தி வந்தது தெரிய வந்தது.
10 லாட்டரி சீட்டு களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் ரங்கசாமி இடமிருந்து ரூ.17, 950 பணமும் பறிமுதல் செய்யப்பட்டது.
இது குறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து ரங்கசாமியை கைது செய்தனர்.
- மன வேதனையில் இருந்த பாரூக் சம்பத்தன்று கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
- இது குறித்து கருங்கல்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு பி.பி.அக்ரஹாரம், பூம்புகார் நகரை சேர்ந்தவர் அப்துல்பாரூக் (68). இவரது மனைவி ஆயிஷா. அப்துல் பாரூக்கு நீண்ட வருடமாக இருதய நோய் பிரச்சனை இருந்து வந்தது.
இதனால் கடந்த சில நாட்களாக மன வேதனையில் இருந்த பாரூக் சம்பத்தன்று தற்கொலை செய்ய முடிவு எடுத்து பி.பி.அக்ரஹாரம் காயிதே மில்லத் தெருவில் உள்ள ஒரு கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
அவர்கள் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து கருங்கல்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து பாரூக் எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என்ற விவரம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- முட்புதரில் மது பாட்டில்களை மறைத்து வைத்து விற்பனை செய்தது தெரிய வந்தது.
- பு.புளியம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து பெரியசாமியை கைது செய்தனர்.
பு.புளியம்பட்டி:
ஈரோடு மாவட்டம் புளியம்பட்டி, நல்லூர் பகுதிகளில் சப்-இன்ஸ்பெக்டர் ராஜாராம் மற்றும் போலீசார் ரோந்து சென்றனர்.
அப்போது பு.புளியம்பட்டி அடுத்த புங்கம்பள்ளி சாணார்பதி அருகே ஒரு பகுதியில் ஒருவர் நின்று கொண்டு இருந்தார்.
சந்தேகம் அடைந்த போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்தினர்.
இதில் அவர் குரும்பபாளையம் பகுதியை சேர்ந்த பெரியசாமி (60) என்பதும், அவர் அந்த பகுதியில் முட்புதரில் மது பாட்டில்களை மறைத்து வைத்து மது விற்பனை செய்தது தெரிய வந்தது.
இதையடுத்து அவர் மறைத்து வைத்து இருந்த 12 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இது குறித்து பு.புளியம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து பெரியசாமியை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- கொரோனா காலகட்டத்தில் மதுரையில் யாசகம் மேற்கொண்டு அதில் சேர்ந்த பணத்தில் ஏராளமான பேருக்கு உதவி செய்தேன்.
- தற்போது என்னிடமிருக்கும் ரூ. 10 ஆயிரத்தை முதல் - அமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வழங்கி உள்ளேன்.
- தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் சென்று யாசகம் எடுத்து அதன் மூலம் சேரும் பணத்தில் என்னால் முடிந்த உதவியை செய்வேன்.
ஈரோடு, ஏப். 17-
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் தாலுகா ஆலங்கிணறு பகுதியைச் சேர்ந்த பூல்பாண்டியன்(73) என்ற முதியவர் கையில் ரூ. 10,000 பணத்துடன் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு பணம் வழங்குவதற்காக இன்று ஈரோடு கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார்.
இதுகுறித்து முதியவர் பூல் பாண்டியன் கூறியதாவது:-
எனது ஊர் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் தாலுகா ஆலங் கிணறு பகுதி ஆகும். எனக்கு சிறுவயதிலிருந்தே பொது சேவையில் ஈடுபடுவது, பிறருக்கு உதவி செய்வது மிகவும் பிடிக்கும். 1980 ஆம் ஆண்டு பிழைப்பிற்காக மும்பை சென்றேன். அங்கு ஒரு அயன் கடையில் வேலை பார்த்தேன். பின்னர் அந்த வேலை ஒத்து வராததால் வேலையை விட்டு விட்டு அங்கு சிறு ஆண்டுகள் யாசகம் மேற்கொண்டேன்.
அதன் பின்னர் 2010-ம் ஆண்டு தமிழ்நாட்டுக்கு வந்தேன். கன்னியாகுமரி, ராமேஸ்வரம், பாபநாசம் போன்ற பல்வேறு பகுதிகளில் யாசகம் எடுத்தேன். அதில் சேர்ந்த பணத்தில் என்னால் முடிந்த உதவி செய்ய முடிவு செய்து ஒவ்வொரு மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று முதல் - அமைச்சர் பொது நிவாரண நிதிக்கு பணம் கொடுத்து உதவினேன்.
இதேபோல் கொரோனா காலகட்டத்தில் மதுரையில் யாசகம் மேற்கொண்டு அதில் சேர்ந்த பணத்தில் ஏராளமான பேருக்கு உதவி செய்தேன். இதுவரை யாசகம் மூலம் சேர்ந்த பணத்தில் ரூ. 55 லட்சத்தை நிதி உதவியாக வழங்கி உள்ளேன். தமிழ்நாட்டில் இதுவரை 400 அரசு பள்ளிகளுக்கு சேர், மேஜைகள், ஆர்.ஓ. வாட்டர் போன்ற வசதிகள் செய்து கொடுத்துள்ளேன்.
தற்போது ஈரோடு மாவட்டத்திற்கு முதல் முதலாக வந்துள்ளேன். தற்போது என்னிடமிருக்கும் ரூ. 10 ஆயிரத்தை முதல் - அமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வழங்கி உள்ளேன். தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் சென்று யாசகம் எடுத்து அதன் மூலம் சேரும் பணத்தில் என்னால் முடிந்த உதவியை செய்வேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- ஒருவர் லாட்டரி சீட்டு எண்களை சீட்டில் எழுதி கொடுத்து கொண்டு இருந்தார்.
- ஆப்பக்கூடல் போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
ஆப்பக்கூடல்:
ஈரோடு மாவட்டம் ஆப்பக்கூடல் நால்ரோடு பகுதியில் கேரளா லாட்டரி சீட்டு எண்களை போலியாக துண்டு சீட்டுக்களில் எழுதி கொடுத்து ஏமாற்றி வருவ தாக ஆப்பக்கூடல் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன் பேரில் ஆப்பக்கூ டல் சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்த ராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சோதனை நடத்தினர். அப்போது அங்கு ஒருவர் லாட்டரி சீட்டு எண்களை துண்டு சீட்டில் எழுதி கொடுத்து கொண்டு இருந்தார்.
இதையடுத்து போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர் ஆப்பக்கூடல் புதுப்பா ளையம் அந்தியூர் மெயின் ரோடு பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் (60) என்பதும்,
அவர் பொதுமக்களிடம் பணம் பெற்று கொண்டு துண்டு சீட்டுகளில் லாட்டரி எண்களை எழுதி கொடுத்து வந்ததும் தெரிய வந்தது.
இதையடுத்து ராஜேந்திரன் மீது ஆப்பக்கூடல் போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். இதை தொடர்ந்து அவரை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பவானி கிளை சிறையில் அடைத்தனர்.
- கொரோனா பாதிப்புடன் 52 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
- சிகிச்சை பலனின்றி முதியவர் உயிரிழந்தார்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு தடுப்பு நடவடிக்கை காரணமாக கொரோனா பாதிப்பு குறைவாகவே இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த 25 நாட்களுக்கும் மேலாக மீண்டும் தினசரி கொரோனா பாதிப்பு பதிவாகி வருகிறது.
நேற்றும் சுகாதார துறையினர் வெளியிட்டுள்ள பட்டியல்படி மாவட்டத்தில் மேலும் 7 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து மாவ ட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 36 ஆயிரத்து 860 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்ற வந்த 8 பேர் பாதிப்பிலிருந்து குணமடைந்து நேற்று வீடு திரும்பினர்.
மாவட்டத்தில் இதுவரை 1 லட்சத்து 36 ஆயிரத்து 072 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
கடந்த சில நாட்களாகவே மாவட்டத்தில் கொரோனா பாதிப்பை விட சிகிச்சை பெற்று குணமடைந்து வருபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
மாவட்டம் முழுவதும் கொரோனா பாதிப்புடன் 52 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் ஈரோட்டை சேர்ந்த 62 வயது முதியவர் கடந்த மார்ச் மாதம் 10-ந் தேதி காய்ச்சல் மற்றும் மூச்சு விடுவதில் சிரமம் போன்ற பாதிப்பால் கோவையில் உள்ள அரசு மருத்து கல்லூரி மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்ந்தார்.
இந்நிலையில் கடந்த மாதம் 25-ந் தேதி அந்த முதியவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அந்த முதியவர் கடந்த மாதம் 29-ந் தேதி உயிரிழந்தார்.
இதனால் ஈரோடு மாவ ட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 736 ஆக உயர்ந்துள்ளது.
- வாழைத்தோப்பு காட்டில் அருகே முதியவர் பிணம் அழுகிய நிலையில் கிடந்தது.
- கிராம நிர்வாக அலுவலர் மொடக்குறிச்சி போலீசாருக்கு தகவல் அளித்தார்.
மொடக்குறிச்சி:
மொடக்குறிச்சி பேரூராட்சிக்கு உட்பட்ட பஞ்சலிங்கபுரம் அருகே உள்ள பட்டாணி வயல் பகுதியில் மகேஷ் குமார் என்பவருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது.
இவரது தோட்டத்தின் வாழைத்தோப்பு காட்டில் அருகே உள்ள சிறிய வாய்க்கால் பகுதியில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதையடுத்து பொதுமக்கள் அங்கு சென்று பார்த்தனர். அங்கு 50 வயது மதிக்கத்தக்க முதியவர் பிணம் அழுகிய நிலையில் கிடந்தது.
இது குறித்து சாத்தம்பூர் கிராம நிர்வாக அலுவலர் பூபதி ராஜாவுக்கு பொது மக்கள் தகவல் தெரி வித்தனர். இதையடுத்து கிராம நிர்வாக அலுவலர் மொடக்குறிச்சி போலீ சாருக்கு தகவல் அளித்தார்.
சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மொடக்குறிச்சி போலீசார் வாய்க்கால் அருகே கிடந்த அடையாளம் தெரியாத 50 வயது மதிக்கத்தக்க அழுகிய நிலையில் கிடந்த முதியவர் பிணத்தை மீட்டனர். அவர் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர்? என தெரிய வில்லை.
இதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த டாக்டர் சங்கர் தலைமையிலான மருத்துவ குழுவினர் அவரது உடலை பிரேத பரிசோதனை செய்து பெருந்துறை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து மொடக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து இது கொலையா? தற்கொ லையா? என தொடர்ந்து தீவிர விசா ரணை நடத்தி வருகின்றனர்.
- வீட்டில் ஒற்றை குழல் நாட்டு துப்பாக்கி பதுக்கி வைத்து இருந்தது தெரிய வந்தது.
- கடம்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து பெரியசாமியை கைது செய்தனர்.
சத்தியமங்கலம்:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள கடம்பூர் அடுத்த அத்தியூர் கேர்மாளம் பகுதியை சேர்ந்த பெரியசாமி (49) என்பவர் வனவிலங்குகளை வேட்டையாட நாட்டு துப்பாக்கியை பதுக்கி வைத்து பயன்படுத்தி வரு வதாக கடம்பூர் தனிப்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன் பேரில் கடம்பூர் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ரவி தலை மையிலான போலீசார் கடம்பூர் அடுத்த அத்தியூர் கேர்மாளம் பகுதிக்கு சென்று பெரியசாமி என்பவரின் வீட்டை சோதனை செய்தனர்.
இதில் சட்ட விரோதமாக வீட்டில் ஒற்றை குழல் நாட்டு துப்பாக்கி பதுக்கி வைத்து இருந்தது தெரிய வந்தது.
இதையடுத்து உடனடி யாக கடம்பூர் போலீசார் நாட்டு துப்பாக்கி மற்றும் தோட்டா வுக்கு பயன்படுத்திய மருந்து ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
இது குறித்து கடம்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து பெரியசாமியை கைது செய்தனர். அவரை கோபிசெட்டிபாளையம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோபிசெட்டிபாளையம் மாவட்ட சிறையில் அடைத்த னர்.
- சென்னிமலை காங்கயம் ரோட்டில் உள்ளது மலைக் கணுவாய்.
- இங்குள்ள மரம் ஒன்றில் சுமார் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் தூக்குபோட்ட நிலையில் தொங்கியதை அவ்வழியே சென்றவர்கள் பார்த்தனர்.
சென்னிமலை:
சென்னிமலை காங்கயம் ரோட்டில் உள்ளது மலைக் கணுவாய். இதை சுற்றிலும் அடர்ந்த வனப்பகுதி உள்ளது. இங்குள்ள மரம் ஒன்றில் சுமார் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் தூக்குபோட்ட நிலையில் தொங்கியதை அவ்வழியே சென்றவர்கள் பார்த்தனர். பின்னர் இதுகுறித்து சென்னிமலை போலீசா ருக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முதியவர் உடலை மீட்டு பெருந்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? எப்படி இறந்தார் என்பது குறித்து எந்த விபரமும் உடனடியாக தெரியவில்லை .
இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது யாரேனும் கொலை செய்து அங்கு மரத்தில் தொங்க விட்டுள்ளனரா? என்பது போன்ற பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெறுகிறது.
சென்னிமலை டவுன் அருகே உள்ள வனப்ப குதியில் மலைக்கணுவாய் அருகில் உள்ள மரத்தில் முதியவரின் உடல் தொங்கியது சுற்று வட்டா ரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- அம்மாபேட்டை அருகே மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் முதியவர் பலியானார்.
- இது குறித்து அம்மா பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
அம்மாபேட்டை:
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தைச் சேர்ந்தவர் கோபால்(34)இவருடைய தந்தை சுப்பிரமணி (67). இவர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் மேட்டூர் சென்று விட்டு மீண்டும் பவானியை நோக்கி வந்து கொண்டி ருந்தனர்.
மோட்டார் சைக்கிளை கோபால் ஓடி வந்தார். சுப்பிரமணி பின்னால் அமர்ந்திருந்தார்.
அம்மாபேட்டையில் உள்ள ஒரு தனியார் கம்பெனி அருகே வந்து கொண்டிருந்த பொழுது வடமாநிலத்தைச் சேர்ந்த ரவிக்குமார் (26) என்பவர் ஓட்டி வந்த மொபட் மீது மோதியது.
இந்நிலையில் மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து வந்த சுப்பிர மணிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதைய டுத்து அவர் அந்தியூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் சுப்பிரமணி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
ெமாபட் ஓட்டி வந்த ரவிக்குமார் என்பருக்கு காயம் ஏற்பட்டு பவானி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் மேல் சிகிச்சைக்காக ஈரோடு உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து அம்மா பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.