என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Anantnag"
- பாராளுமன்ற தேர்தலை 7 கட்டமாக நடத்த தலைமை தேர்தல் ஆணையம் விரிவான ஏற்பாடுகளை செய்துள்ளது.
- ஜம்மு காஷ்மீரின் முக்கிய தலைவரான குலாம் நபி ஆசாத் அனந்தநாக் தொகுதியில் போட்டியிடுகிறார்.
ஸ்ரீநகர்:
பாராளுமன்ற தேர்தலை 7 கட்டமாக நடத்த தலைமை தேர்தல் ஆணையம் விரிவான ஏற்பாடுகளை செய்து வருகிறது.
ஜம்மு காஷ்மீரில் 3வது கட்டமாக மே 7-ம் தேதி பாராளுமன்ற தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
அங்கு முன்னாள் முதல் மந்திரியும், காங்கிரஸ் கட்சி தலைவராக இருந்த குலாம் நபி ஆசாத் , 2022-ம் ஆண்டு அக்கட்சியிலிருந்து விலகி ஜனநாயக முற்போக்கு விடுதலை என்ற கட்சியை தொடங்கினார்.
இந்நிலையில், வரும் பாராளுமன்ற தேர்தலில் குலாம் நபி ஆசாத் ரஜோரி மாவட்டம் அனந்தநாக் தொகுதியில் போட்டியிட முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியானது.
- ஜம்மு-காஷ்மீரில் இரண்டு நாட்களாக துப்பாக்கிச் சண்டை
- ரஜோரி, அனந்த்நாக் சண்டையில் வீரர்கள், போலீசார் வீரமரணம்
ஜம்மு- காஷ்மீரில் கடந்த சில தினங்களாக பாதுகாப்புப்படை வீரர்கள் உள்ளூர் போலீசார் உடன் இணைந்து பயங்கரவாதிகளை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அனந்த்நாக் மாவட்டத்தில் இரு தரப்பினருக்கும் இடையில் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இதில் இரண்டு உயர் அதிகாரிகள் உள்பட 3 பேர் வீரமரணம் அடைந்தனர்.
இதுதொடர்பாக பா.ஜனதா தேசிய செய்தி தொடர்பாளர் ஷாநவாஸ் கூறுகையில் ''நம்முடைய வீரர்களின் தியாகம் ஒருபோதும் வீணாகாது. தக்க பதிலடி கொடுக்கப்படும். இந்த சம்பவங்களில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள். வீர மரணம் அடைந்த வீரர்களின் குடும்பத்துடன் ஒட்டுமொத்த நாடும் இருக்கிறது. இந்த சம்பவங்களில் ஈடுபட்ட பயங்கரவாதிகளை மன்னிக்கமாட்டோம்'' எனத் தெரிவித்துள்ளார்.
நேற்று வீரர்கள் வீரமரணம் அடைந்த நிலையில், பிரதமர் மோடிக்கு பா.ஜனதாவின் தலைமை கழகத்தில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. பா.ஜனதா தலைவர்கள் இரங்கல் கூட தெரிவிக்கவில்லை என எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
ஜம்மு:
காஷ்மீர் மாநிலத்தில் உள்ள அனந்தநாக் பாராளுமன்ற தொகுதி நாடு முழுவதும் மக்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்த தொகுதியில் மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் மெகபூபா போட்டியிடுகிறார். கடந்த 2014-ம் ஆண்டு இதே தொகுதியில் வெற்றி பெற்ற அவர் மீண்டும் களம் இறங்கி உள்ளார்.
அவரை எதிர்த்து காங்கிரஸ் கட்சி சார்பில் மாநில தலைவர் குலாம் அகமது போட்டியிடுகிறார். தேசிய மாநாடு கட்சி சார்பில் மசூதி போட்டியிடுகிறார். இவர் ஓய்வு பெற்ற நீதிபதி ஆவார்.
பாரதிய ஜனதா கட்சி சார்பில் யூசுப் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். இதனால் இந்த தொகுதியில் 4 முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது.
இந்த தொகுதி அனந்த நாக், புல்வாமா, சோபியான், குல்கம் ஆகிய 4 மாவட்டங்களில் அமைந்துள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் புல்வாமாவில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 சி.ஆர்.பி.எப். வீரர்கள் பலியானார்கள்.
இதன் காரணமாக அனந்தநாக் பாராளுமன்ற தொகுதி தேர்தலை 3 கட்டமாக நடத்த தலைமை தேர்தல் ஆணையம் முடிவு செய்தது. அதன்படி ஏப்ரல் 23-ந்தேதி அனந்தநாக் மாவட்டத்திலும், ஏப்ரல் 29-ந்தேதி குல்கம் மாவட்டத்திலும், மே 6-ந்தேதி புல்வாமா, சோபியான் மாவட்டங்களிலும் ஓட்டுப் பதிவு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்தியாவில் ஒரு பாராளு மன்ற தொகுதிக்கு 3 கட்டமாக தேர்தல் நடத்தப்படுவது இதுவே முதல் முறையாகும். 13 லட்சத்து 95 ஆயிரத்து 272 வாக்காளர்கள் கொண்ட இந்த தொகுதியில் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் கட்ட ஓட்டுப்பதிவு நடை பெற்றது.
இன்று அனந்தநாக் மாவட் டத்தில் மட்டும் நடைபெறும் ஓட்டுப்பதிவுக்கு ஆயிரத்து 842 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கியது. 5 லட்சத்து 30 ஆயிரம் பேர் வாக்களிக்க தகுதியானவர்கள்.
இவர்களை எதிர்நோக்கி நேற்று இரவு முதலே தேர்தல் பணியாளர்கள் தயாராக இருந்தனர். ஆனால் இன்று காலை ஒருவர்கூட வாக்களிக்க வரவில்லை.
7 மணிக்கு தொடங்கி 4 மணி நேரம் கடந்த பிறகும் அதாவது பகல் 11 மணி வரை 1,842 வாக்குச்சாவடிகளிலும் ஒரு வாக்கு கூட பதிவாகவில்லை.
வாக்காளர்கள் வருகைக்காக அதிகாரிகள் அதுவரை சும்மா காத்திருந்தனர். சில பகுதிகளில் வாக்களிக்க வருமாறு பொதுமக்களை அதிகாரிகள் அழைத்தனர். ஆனால் அவர்கள் வீடுகளை பூட்டிக் கொண்டு உள்ளேயே இருந்து விட்டனர்.
அனந்தநாக் தொகுதியில் பொதுமக்கள் யாரும் வாக்களிக்க வரக்கூடாது என்று கடந்த சில தினங்களாக பயங்கரவாதிகள் மிரட்டல் விடுத்தப்படி இருந்தனர். இதன் காரணமாக அங்கு ஓட்டுப்பதிவில் மந்தநிலை காணப்படுகிறது.
பாதுகாப்பு காரணங்களுக்காக பிற்பகல் 4 மணி வரைதான் ஓட்டுப்பதிவை நடத்த அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். அதற்குள் கணிசமானவர்களை அழைத்து வந்து வாக்குப் பதிவு செய்ய அதிகாரிகள் முயற்சிகளில் ஈடுபட்டனர்.
என்றாலும் அனந்தநாக் தொகுதியின் முதல் கட்ட வாக்குப்பதிவு வரலாறு காணாத வகையில் மிக மிக குறைவாக இருக்கும் என்பது தெரிய வந்துள்ளது. #LokSabhaElections2019
காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக் மாவட்டம் தூரு சாகாபாத் என்கிற இடத்தில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் சிறப்பு அதிரடிப்படை போலீசார் மற்றும் ராணுவ வீரர்கள் அங்கு விரைந்து சென்று தேடுதல் வேட்டையில் இறங்கினர்.
அப்போது அங்கு பதுங்கி இருந்த 2 பயங்கரவாதிகளை போலீசார் மற்றும் ராணுவ வீரர்கள் சுற்றிவளைத்தனர். அவர்களை தங்களிடம் சரணடைந்துவிடும் படி போலீசார் எச்சரித்தனர். மாறாக பயங்கரவாதிகள், போலீசார் மற்றும் ராணுவ வீரர்களை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர்.
இதில் 3 ராணுவ வீரர்களின் உடலை துப்பாக்கி குண்டுகள் துளைத்தன. ரத்த வெள்ளத்தில் சரிந்த அவர்களை சக வீரர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதனை தொடர்ந்து ராணுவவீரர்கள் தங்களுடைய துப்பாக்கிகளால் அவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்தனர்.
இதில் ஒரு பயங்கரவாதி கொல்லப்பட்டார். மற்றொரு பயங்கரவாதி அங்கிருந்து தப்பி ஓடினார். இதற்கிடையே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வந்த 3 ராணுவ வீரர்களில் ஒருவர் சிகிச்சை பலன் இன்றி பரிதாபமாக இறந்தார்.
இதே போல் புட்காம் மாவட்டம் பான்சான் என்கிற கிராமத்தில் மசூதி ஒன்றுக்குள் பதுங்கி இருந்த பயங்கரவாதிகளை ராணுவவீரர்கள் சுற்றிவளைத்தபோது இரு தரப்புக்கும் இடையே துப்பாக்கி சண்டை மூண்டது. அப்போது ராணுவ வீரர்கள் சுட்டதில் பயங்கரவாதிகள் 2 பேர் உயிர் இழந்தனர்.
மற்றொரு சம்பவமாக தலைநகர் ஸ்ரீநகரில் நூர்பாக் என்கிற இடத்தில் பயங்கரவாதிகளை பிடிப்பதற்கான தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்த ராணுவவீரர்கள் அங்கு துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் அந்த பகுதியை சேர்ந்த 24 வயது வாலிபர் ஒருவர் துப்பாக்கி குண்டு பாய்ந்து இறந்தார்.
இதனையடுத்து, தேவையற்ற வதந்திகள் பரப்பப்படுவதை தடுக்கும் வகையில் அனந்த்நாக் மற்றும் ஸ்ரீநகரில் செல்போன் இணைய சேவை தற்காலிகமாக துண்டிக்கப்பட்டது. #JKEncounter #MilitantKilled
ஜம்மு காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக் பகுதியில் இன்று அதிகாலை முதல் பாதுகாப்பு படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருகிறது.
இந்த துப்பாக்கிச்சண்டையில் பயங்கரவாதிகள் சிலர் சுற்றிவளைக்கப்பட்டதாக தகவல்கள் வெளியானது. இந்நிலையில், பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டதாக அதிகாரப்பூர்வ தகவல் தெரிவிக்கின்றன. மேலும், 1 பயங்கரவாதியை பாதுகாப்பு படையினர் கைது செய்துள்ளனர்.
மேலும், பதுங்கியுள்ள பயங்கரவாதிகளை பிடிக்கும் முயற்சியில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர். #Anantnag #JammuAndKashmir
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்