என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Anbarasan"
- திருக்கழுக்குன்றம் தாலுகாவில் ஜமாபந்தி வருவாய் தீர்வாய நிகழ்ச்சி, கடந்த மே.30ல் துவங்கி நேற்று நிறைவடைந்தது.
- பேரூராட்சி தலைவர் யுவராஜ், தனி சப் கலெக்டர் சாகிதா பர்வீன், தாசில்தார் ராஜேஸ்வரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மாமல்லபுரம்:
திருக்கழுக்குன்றம் தாலுகாவில் "ஜமாபந்தி" வருவாய் தீர்வாய நிகழ்ச்சி, கடந்த மே.30ல் துவங்கி நேற்று நிறைவடைந்தது. இதில் 857 பேருக்கு, 2.07, கோடி ரூபாய் மதிப்பு, இலவச வீட்டு மனை பட்டா, சமூக பாதுகாப்பு, குறு, சிறு, நடுத்தர தொழில் மேம்பாடு, வேளாண்மை, தோட்டக்கலை, பொறியியல் உள்ளிட்ட துறைகளுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் குறு, சிறு, நடுத்தர தொழில்கள் துறை அமைச்சர் அன்பரசன், செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத், காஞ்சிபுரம் எம்.பி செல்வம், திருப்போரூர் தொகுதி எம்.எல்.ஏ பாலாஜி, செய்யூர் தொகுதி எம்.எல்.ஏ பாபு, ம.தி.மு.க துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா, முன்னாள் எம்.எல்.ஏ தமிழ்மணி, திருக்கழுக்குன்றம் பேரூராட்சி தலைவர் யுவராஜ், தனி சப் கலெக்டர் சாகிதா பர்வீன், தாசில்தார் ராஜேஸ்வரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
- தி.மு.க.ஆட்சி பொறுப்பேற்ற சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்ல கமிட்டி அமைக்கப்பட்டது.
- முதல்-அமைச்சர் ரூ.100 கோடி நிதியில் தமிழ்நாடு கடன் உத்தரவாத திட்டத்தை தொடங்கிவைத்துள்ளார்.
திருப்பூர் :
திருப்பூர் திருமுருகன்பூண்டியில் நடந்த தோள் கொடுப்போம் தொழில்களுக்கு மண்டல மாநாட்டில், தமிழக குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேசியதாவது:- நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு தேவையான சமச்சீர், ஏற்றுமதி, பொருளாதாரம் போன்றவற்றிற்கு சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் பங்களிப்பு மிகவும் முக்கியமானதாகும். தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்ல கமிட்டி அமைக்கப்பட்டது. அந்த குழுவின் பரிந்துரைகள் திட்டமாக தீட்டப்பட்டது. இந்த திட்டங்களை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறார். குறிப்பாக தொழில்முனைவோர்கள் வங்கி கடன் பெறுவதில் உள்ள சிரமங்களை குறைக்க, இந்தியாவிலேயே முதல் முறையாக நமது முதல்-அமைச்சர் ரூ.100 கோடி நிதியில் தமிழ்நாடு கடன் உத்தரவாத திட்டத்தை தொடங்கிவைத்துள்ளார்.
இந்த திட்டத்தின் மூலம் சிறு, குறு நிறுவனங்கள் பெறும் சொத்து பிணயம் இல்லாத வங்கி கடனுக்கு 90 சதவீதம் வரை கடன் உத்தரவாதத்தை தமிழக அரசு ஏற்கும். இந்தியாவிலேயே 90 சதவீதம் வரை கடன் உத்தரவாதம் வழங்க உள்ள மாநிலம் தமிழகம் தான். சிறு, குறு நிறுவனங்களின் மூலதன சிக்கலை தீர்க்கும் விதமாக வர்த்தக வரவுகள் மற்றும் தள்ளுபடி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் வங்கிகள் போட்டி போட்டுக்கொண்டு கடன் வழங்குவார்கள். மேலும், கொரோனாவால் பாதிக்கப்பட்ட தொழில்முனைவோர்களுக்கு நிவாரண நிதியாக ரூ.50 கோடி ஒதுக்கீடு செய்து, தொழிலை மீண்டும் அமைக்கவும், தொடங்கவும் இந்த திட்டம் உதவும்.
மேலும் ரூ.25 லட்சம் வரை மானியத்துடன் கடன் வழங்கப்படும். இதுமட்டுமல்லாமல் நிதி நெருக்கடியில் சிக்கிய நிறுவனங்கள் தங்கள் உற்பத்தியை அதிகரிக்கவும், தொழிலை அதிகரிக்கவும் முதலீட்டு மானியத்தில் 25 சதவீதம் வரை மானியம் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பங்கள் பெறும் பணி நடந்து வருகிறது. விரைவில் இவர்களுக்கு கடன் மற்றும் மானியம் வழங்கப்படும். சிறு, குறு நிறுவனங்களுக்கு பொருட்கள் மற்றும் சேவைகளுக்காக ஏற்படும் காலதாமதத்திற்கு தீர்வு காண சென்னை, திருச்சி, மதுரை, கோவை ஆகிய மாவட்டங்களில் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
இதுவரை 252 நிறுவனங்களுக்கு ரூ.50 கோடியே 12 லட்சம் தொகை வழங்கப்பட்டுள்ளது. சிறு, குறு நிறுவனங்கள் மூலமாக நீட்ஸ் உள்ளிட்ட சுய வேலைவாய்ப்பு திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. தமிழக முதல்-அமைச்சர் ஆணைக்கிணங்க ஆண்டுக்கு 10 ஆயிரம் புதிய தொழில்முனைவோர்களை உருவாக்க வேண்டும் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற இந்த குறுகிய காலகட்டத்தில் ரூ.310 கோடியே 33 லட்சம் மானியத்துடன் ரூ.1253 கோடி வங்கி கடன் உதவி வழங்கப்பட்டு, இதுவரை 10 ஆயிரத்து 216 படித்த இளைஞர்கள் புதிய தொழில்முனைவோராக உருவாக்கப்பட்டுள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் ரூ.28 கோடியே 38 லட்சம் மானியத்தில், ரூ.113 கோடியே 52 லட்சம் கடன் உதவி வழங்கப்பட்டு 322 பேர் புதிய தொழில்முனைவோர்களாக உருவாக்கப்பட்டுள்ளனர். இதுபோல் ஈரோடு, கோவை மாவட்டத்தில் ரூ.248 கோடியே 59 லட்சம் மானியத்தில், ரூ.996 கோடியே 34 லட்சம் கடன் உதவி வழங்கப்பட்டு 906 புதிய தொழில்முனைவேர்களை உருவாக்கியுள்ளோம். இவ்வாறு அவர் பேசினார்.
Happy to share the first look & title of @Anbudir1#Walter & am very happy to announce that our very own @iamVikramPrabhu joins the cast with @akarjunofficial & @bindasbhidu . Best wishes to this wonderful team. pic.twitter.com/JWuiRw9N7y
— Lingusamy (@dirlingusamy) September 13, 2018
காஞ்சி வடக்கு மாவட்ட தி.மு.க. அவசர செயற்குழு உறுப்பினர்கள் கூட்டம் கிழக்கு தாம்பரத்தில் நடந்தது.
அவைத் தலைவர் துரைசாமி தலைமை தாங்கினார். மாவட்டச்செயலாளர் தா.மோ.அன்பரசன் வரவேற்று பேசினார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட சிறப்பு தீர்மானங்கள் வருமாறு:-
தி.மு.க.வின் தகுதி வாய்ந்த தலைவராக மு.க.ஸ்டாலினை பொதுக்குழுவில் தேர்ந்தெடுத்ததற்காக காஞ்சி வடக்கு மாவட்டம் சார்பில் நன்றி தெரிவிக்கிறோம்.
மு.க.ஸ்டாலின் காட்டும் நல்வழியில் காஞ்சி வடக்கு மாவட்ட தி.மு.க. பீடுநடை போட்டு தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையில் நல்லாட்சி அமைய இந்த மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளிலும் வெற்றி பெற அயராது பாடுபடுவோம். இந்த வெற்றிக்கனியை மு.க.ஸ்டாலினிடம் சமர்ப்பிப்போம் என்று சப்தம் ஏற்போம்.
அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15-ந் தேதியை எழுச்சியுடன் கொண்டாடுவது, முப்பெரும் விழாவில் ஆயிரக்கணக்கில் சென்று பங்கேற்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. #DMK #MKStalin
சென்னை:
குன்றத்தூர் ஒன்றியம் பரணிபுத்தூர் ஊராட்சியில் உள்ள மின் வாரிய பிரிவு அலுவலகத்திற்கு துணை மின்நிலையத்துடன் கூடிய கட்டிடம் கட்ட அரசு முன் வருமா? என்று சட்டசபையில் தா.மோ.அன்பரசன் எம்.எல்.ஏ. கேள்வி எழுப்பினார்.
இதற்கு மின்துறை அமைச்சர் தங்கமணி பதில் கூறியதாவது:-
பரணிபுத்தூரில் புதிய கட்டிடம் தேவையென்று சொன்னால் ஏற்கனவே துணைமின் நிலையம் அமைப்பதற்காக ஒரு மயானப் புறம்போக்கை பார்த்திருக்கிறோம்.
உறுப்பினரும் அதற்கு ஒத்துழைத்து அந்த இடத்தை வாங்கிக் கொடுத்தால், புதிய கட்டிடம் கட்ட அரசால் நடவடிக்கை எடுக்கப்படும். தா.மோ.அன்பரசன் பரணிபுத்தூரில் ஊராட்சி மன்றத்துக்கு சொந்தமான 600 சதுரடி கட்டிடத்தில் மின் வாரிய அலுவலகம் இயங்கி வருகிறது.
இது பழுதடைந்த நிலையில் இடவசதி இல்லாமல் மழைக் காலத்தில் தண்ணீர் தேங்கி கட்டிடத்தை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.
அமைச்சர் தங்கமணி:- அந்த பகுதி வளர்ந்து வரும் பகுதி என்பதால் துணை மின்நிலையம் அமைக்க இடம் தேடிக் கொண்டிருக்கிறோம். அந்த துணைமின் நிலையம் அமைக்கிறபோது உதவி பொறியாளர் அலுவலகத் தையும் அங்கேயே கட்டித்தர நடவடிக்கை எடுக்கப்படும்.
தா.மோ. அன்பரசன்:- பரணிபுத்தூரில் நுகர்வோர் எண்ணிக்கை 16 ஆயிரமாக உள்ளதால் அங்கு அரசுக்கு சொந்தமான இடத்தில் துணைமின் நிலையத்துடன் கூடிய மின்சார வாரிய அலுவலகம் அமைக்க வேண்டும். அதோடு 60 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட மின் கம்பிகளை மாற்றி விட்டு புதிய மின் கம்பிகளை அமைக்க வேண்டும்.
அமைச்சர் தங்கமணி:- இதற்கு நடவடிக்கை மேற் கொள்ளப்படும்.
இவ்வாறு அவர் கூறினார். #TNassembly
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்