என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Anbazhagan"

    • புதுவை, காரைக்கால் மாவட்டங்களில் நாளை முதல் கன மழை பெய்யும் என்ற அறிவிப்பை வானிலை அறிவித்துள்ளது.
    • கடந்த ஆண்டு பெய்த பெருமழையால் தண்ணீர் தேங்கிய பகுதிகளில் உடனடியாக கவனம் செலுத்த வேண்டும்.

    புதுச்சேரி:

    புதுவை கிழக்கு மாநில அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-

    புதுவை, காரைக்கால் மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்ற அறிவிப்பை வானிலை அறிவித்துள்ளது. கனமழையை எதிர்கொள்ளும் விதத்தில் சம்பந்தப்பட்ட பொதுப்ப–ணித்துறை, வருவாய்த்துறை மற்றும் உள்ளாட்சி துறை ஆகியவை இணைந்து முன்னெச்சரிக்கை நடவ–டிக்கை எடுக்க வேண்டும்.

    கடந்த 2 ஆண்டுகளாக அவ்வாறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்படாததால் நகரப் பகுதி முழுவதும் மழை நீர் தேங்கி மக்கள் சொல்லொன்னா துயரத்திற்கு ஆளாக்கப்ப–ட்டனர். கடந்த ஆண்டு பெய்த பெருமழையால் தண்ணீர் தேங்கிய பகுதிகளில் உடனடியாக கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாக கடற்கரைப் பகுதிகள், மக்கள் வசிக்கும் தாழ்வான பகுதிகள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

    முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுக்கும் விதத்தில் மாவட்ட கலெக்டர் தலைமையில் வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை, உள்ளாட்சி துறை, காவல்துறை மற்றும் தீயணைப்பு துறை ஆகிய துறைகளின் உயர்மட்ட குழு கூட்டத்தை கலெக்டர் உடனடியாக கூட்ட வேண்டும்.

    தாழ்வான மக்கள் வசிக்கும் பகுதிகளில் உள்ள தனியார், அரசு பள்ளிகள், திருமண மண்டபங்கள், சமுதாயக்கூடங்கள் ஆகியவற்றின் இடங்களை குறிப்பிட்டு சில நாட்களுக்கு வருவாய் துறையினரிடம் ஒப்படைக்க கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    பெருமழையால் பாதிக்கப்படும் ஏழை, எளிய மக்களுக்கு உடனடி உணவு வழங்க அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையை அரசு எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • புதுவை மாநில அ.தி.மு.க. சார்பில் ஜிப்மர் நிர்வா கத்தில் வேலை வாய்ப்பில் புதுவை மாநிலத்திற்கு தனி இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி மாநில செயலாளர் அன்பழகன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • தொகுதி செயலாளர்கள் சிவகுமார், பொன்னுசாமி ஆறுமுகம்,பாஸ்கர், துரை, கருணாநிதி,ராஜா,சம்பத், நடேசன், கமல்தாஸ், குண சேகர், கிருஷ்ணன், வேலவன், கோபால், சண்முகதாஸ் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    புதுச்சேரி:

    புதுவை மாநில அ.தி.மு.க. சார்பில் ஜிப்மர் நிர்வா கத்தில் வேலை வாய்ப்பில் புதுவை மாநிலத்திற்கு தனி இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி மாநில செயலாளர் அன்பழகன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

    ஆர்ப்பாட்டத்தில் புதுவை கிழக்கு மற்றும் மேற்கு மாநில நிர்வாகிகள் அவைத் தலைவர் அன்பானந்தம், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் பாஸ்கர், நடராஜன், ராஜாராமன், நிர்வாகிகள் வீரம்மாள், மகாதேவி, கணேசன், திருநாவுக்கரசு, மாநில பொருளாளர் ரவிபாண்டுரங்கன், அன்பழக உடையார், எம்.ஏ.கே. கருணாநிதி, கணேசன், வி.கே.மூர்த்தி, குணசேகரன், கிருஷ்ண மூர்த்தி, காந்தி, நாகமணி, சேரன், மணவாளன், குமுதன், சித்தானந்தம், பாண்டுரங்கன், சிவாலயா இளங்கோ, மருத மலையப்பன், பாப்புசாமி, மகளிர் அணி செயலாளர் விஜயலட்சுமி,

    மாணவர் அணி செயலா ளர் பிரதீப், ராமலிங்கம், மீனவரணி செயலாளர் ஞானவேல், விவசாய அணி செயலாளர் சக்கரவர்த்தி, மாநில இலக்கிய அணி செயலாளர் ராமசாமி, மாநில அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணிச் செயலாளர் செல்வம் ,மாநில வர்த்தக அணி செயலாளர் முத்துராஜீலு மாநில தொழில்நுட்ப பிரிவு செயலாளர் தினேஷ் குமார், நகர தலைவர்கள் செல்வகுமார், கணேஷ், சிவா,

    தொகுதி செயலாளர்கள் சிவகுமார், பொன்னுசாமி ஆறுமுகம்,பாஸ்கர், துரை, கருணாநிதி,ராஜா,சம்பத், நடேசன், கமல்தாஸ், குண சேகர், கிருஷ்ணன், வேலவன், கோபால், சண்முகதாஸ் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • தமிழகம் முழுவதும் வருகிற 16-ந் தேதி கே.அன்பழகனின் நூற்றாண்டு நிறைவு பொதுக்கூட்டங்கள் நடத்தப்படும் என்று தி.மு.க. தலைமை கழகம் அறிவித்து உள்ளது.
    • காஞ்சிபுரத்தில் துரைமுருகன், கோவையில் டி.ஆர்.பாலு, திண்டிவனத்தில் கனிமொழி, ஆவடியில் உதயநிதி ஸ்டாலின் பேசுகிறார்கள்.

    சென்னை:

    தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நேற்று முன்தினம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் மறைந்த தி.மு.க. பொதுச்செயலாளர் கே.அன்பழகன் நூற்றாண்டு நிறைவாக தமிழகம் முழுவதும் 100 பொதுக்கூட்டங்கள் நடத்த தீர்மானிக்கப்பட்டது.

    அதன்படி தமிழகம் முழுவதும் வருகிற 16-ந் தேதி (வெள்ளிக்கிழமை) கே.அன்பழகனின் நூற்றாண்டு நிறைவு பொதுக் கூட்டங்கள் நடத்தப்படும் என்று தி.மு.க. தலைமை கழகம் அறிவித்து உள்ளது. தமிழகம் முழுவதும் உரையாற்றும் தி.மு.க. மூத்த தலைவர்களின் பட்டியலையும் தி.மு.க. தலைமை கழகம் வெளியிட்டு உள்ளது.

    அதன்படி காஞ்சிபுரத்தில் துரைமுருகன், கோவையில் டி.ஆர்.பாலு, திண்டிவனத்தில் கனிமொழி, ஆவடியில் உதயநிதி ஸ்டாலின் பேசுகிறார்கள்.

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் டிசம்பர் 18-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) வடசென்னையில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    • கி.வீரமணி க.அன்பழகனின் புகைப்பட கண்காட்சியை திறந்து வைத்தார்.
    • 40 ஆண்டுகளுக்கு முன்பே என்னை பாராட்டியவர் பேராசிரியர் அன்பழகன்.

    சென்னை :

    மறைந்த முன்னாள் தி.மு.க. பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகனின் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டம் நேற்று மாலை சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் நடைபெற்றது. சென்னை கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த பொதுக்கூட்டத்துக்கு தி.மு.க. பொதுச்செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் தலைமை தாங்கினார்.

    சென்னை கிழக்கு மாவட்ட செயலாளரும், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சருமான சேகர்பாபு அனைவரையும் வரவேற்றார். கட்சியின் பொருளாளரும், தி.மு.க. நாடாளுமன்ற குழு தலைவருமான டி.ஆர்.பாலு, முதன்மை செயலாளரும், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே.என்.நேரு, கட்சியின் துணைப்பொதுச் செயலாளர்கள் ஐ.பெரியசாமி, க.பொன்முடி, எம்.பி.க்கள் ஆ.ராசா, அந்தியூர் செல்வராஜ், கனிமொழி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

    கருணாநிதியின் ஆற்றல், ஸ்டாலினின் செயலில் தெரிகிறது என்று 40 ஆண்டுகளுக்கு முன்பே என்னை பாராட்டியவர் பேராசிரியர் அன்பழகன். மு.க.ஸ்டாலினை போல், இன்னும் 100 ஸ்டாலின்கள் வரவேண்டும் என்று மேடையில் பாராட்டியவரும் அவர்தான். வாரிசு, வாரிசு என்று இன்று சொல்லிக்கொண்டிருக்கிறார்களே. அந்த வாரிசு என்ற குற்றச்சாட்டை என் மீது சுமத்தியபோது, கல்வெட்டு போல பாராட்டு பத்திரம் கொடுத்தவர் க.அன்பழகன்தான்.

    கருணாநிதிக்கு மட்டுமல்ல, எனக்கும் ஸ்டாலின் வாரிசுதான். எனவே அடுத்த தலைமுறையை பாதுகாக்கவேண்டிய கடமை அவருக்கு உண்டு என்று துணிச்சலாக சொன்னவர் க.அன்பழகன். கட்சியின் செயல்தலைவராக என்னை முன்மொழிந்தவரும் அவர்தான். தலைவர் மறைவுக்கு பிறகு என்னை தலைவராக முன்மொழிந்தவரும் அவர்தான். நான் இந்த அளவுக்கு தகுதி பெற்றவனாக இருக்க அனைத்துக்கும் காரணம் அவர்தான். அவர் எந்த அளவுக்கு கோபக்காரரோ, அந்த அளவுக்கு பாசக்காரர் என்பதையும் மறந்துவிடமுடியாது.

    திராவிட மாடல் ஆட்சி கொள்கையை, வலிமையை கருணாநிதி, க.அன்பழகன் ஆகியோரிடமிருந்துதான் கற்றுக்கொண்டேன். அனைவரும் பெற்றுக்கொள்ளவேண்டும் என்பதற்காகத்தான் கட்சியின் இளைஞர் அணி, மாணவர் அணி சார்பில் 234 தொகுதிகளில் திராவிட மாடல் பாசறை கூட்டம் என்ற கூட்டங்களை நடத்தி முடித்திருக்கிறோம். இதற்காக இளைஞர் அணி, மாணவர் அணிக்கு பாராட்டு தெரிவித்துக்கொள்கிறேன். அதேநேரத்தில் அதனை ஒன்றிய அளவிலே, கிராம அளவிலே என பட்டித்தொட்டிகளெல்லாம் பாசறை கூட்டங்கள் தொடர்ந்து நடைபெறவேண்டும். இதுதான் க.அன்பழகனுக்கு செலுத்தும் உண்மையான மரியாதையாக அமையும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் கே.எம்.காதர்மொய்தீன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் தி.வேல்முருகன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    கூட்டத்தில் க.அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழா சிறப்பிதழை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அமைச்சர் துரைமுருகன் வெளியிட திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி பெற்றுக்கொண்டார்.

    பொதுக்கூட்டத்தின் ஒரு பகுதியாக க.அன்பழகனின் புகைப்பட கண்காட்சியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைப்பதாக இருந்தது. ஆனால், அந்த கண்காட்சியை தான் திறந்து வைப்பது பொருத்தமாக இருக்காது என்றும், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி திறந்து வைப்பது தான் பொருத்தமாக இருக்கும் என்றும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

    அதைத்தொடர்ந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி க.அன்பழகனின் புகைப்பட கண்காட்சியை திறந்து வைத்தார். அதைத் தொடர்ந்து கூட்டணி கட்சி தலைவர்களுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அந்த புகைப்பட கண்காட்சியை பார்வையிட்டார்.

    • பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அவரது படத்திற்கு தி.மு.க.வினர் மரியாதை செய்தனர்.
    • பேரூராட்சி சேர்மன் மற்றும் மாவட்ட, ஒன்றிய, பேரூர் நிர்வாகிகள், வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் நகர் பேருந்து நிலையம் அருகே முன்னாள் பொதுச் செயலாளர் பேராசிரியர் அன்பழகனின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அவரது படத்திற்கு யூனியன் சேர்மன் சண்முகவடிவேல் தலைமையில் தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    இதில் திருப்பத்தூர் நகர செயலாளர் கார்த்திகேயன், பேரூராட்சி சேர்மன் கோகிலா ராணி மற்றும் மாவட்ட, ஒன்றிய, பேரூர் நிர்வாகிகள், வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    • அரியாங்குப்பம் வீராம்பட்டினம் தெப்பகுளம் அருகில் மறைந்த தமிழக முன்னாள் முதல் அமைச்சரும், அ.தி.மு.க. பொதுசெயலாளருமான ஜெயலலிதா உருவ சிலை அமைக்கப்படுகிறது.
    • ஏற்பாடுகளை மாநில இளைஞர் பாசறை மற்றும் இளம் பெண்கள் பாசறை செயலாளர் தமிழ் வேந்தன் செய்திருந்தார்.

    புதுச்சேரி:

    அரியாங்குப்பம் வீராம்பட்டினம் தெப்பகுளம் அருகில் மறைந்த தமிழக முன்னாள் முதல் அமைச்சரும், அ.தி.மு.க. பொதுசெயலாளருமான ஜெயலலிதா உருவ சிலை அமைக்கப்படுகிறது.

    இதற்கான பூமிபூஜை விழா நடந்தது. அ.தி.மு.க. மாநில செயலாளர் அன்பழகன் பூமி பூஜை செய்து பணியினை தொடங்கி வைத்தார். ஏற்பாடுகளை மாநில இளைஞர் பாசறை மற்றும் இளம் பெண்கள் பாசறை செயலாளர் தமிழ் வேந்தன் செய்திருந்தார்.

    நிகழ்ச்சியில்மா அ.தி.மு.க. அவைத் தலைவர் அன்பானந்தம், மாநில இணைச் செயலாளர்கள் திருநாவுக்கரசு, சாரம் கணேசன், மாநில பொருளாளர் ரவி பாண்டுரங்கன், நகர செயலாளர் அன்பழகன் உடையார், மாநில துணைச் செயலாளர்கள், கணேசன், ஜெய.சேரன், காந்தி, நாகமணி, மாநில எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் பாண்டுரங்கன், மேற்கு மாநில எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் சிவாலய இளங்கோ, மேற்கு மாநில ஜெயலலிதா பேரவை செயலாளர் சுத்துக்கேணி பாஸ்கரன், நகர தலைவர் கணேஷ், தொகுதி செயலாளர்கள் ராஜா, சம்பத், பொதுக்குழு உறுப்பினர் பாலன், மாநில எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர் அன்பழகன். துணை செயலாளர்கள்கணபதி, சுந்தரமூர்த்தி, விவசாய அணி இணைச் செயலாளர் ராஜா, மாநில மீனவரணி இணைச் செயலாளர் சக்திவேல், துணைச் செயலாளர் ராஜவேல், மாவட்ட பிரதிநிதி செங்கேணி, வார்டு செயலாளர்கள் பன்னீர் செல்வம், ஜெயக்குமார், கார்த்தி,கண்ணன் மற்றும் ஊர் பொதுமக்கள் உட்பட பலர் திரளாக கலந்து கொண்டனர்.

    • உப்பளத்தில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நடந்த விழாவுக்கு மாநில செயலாளர் அன்பழகன் தலைமை வகித்தார்.
    • மின்விசிறி, சில்வர் பாத்திரம், எல்.ஜி.பி. அடுப்பு, ஹாட் பாக்ஸ், இட்லி குக்கர், சலவைப் பெட்டி, மற்றும் 750 நபர்களுக்கு இலவச வேட்டி, சேலை, மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

    புதுச்சேரி:

    மறைந்த தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா புதுவை மாநில அ.தி.மு.க. சார்பில் இன்று கொண்டாடப்பட்டது.

    உப்பளத்தில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நடந்த விழாவுக்கு மாநில செயலாளர் அன்பழகன் தலைமை வகித்தார். அவைத் தலைவர் அன்பானந்தம், ஜெ. பேரவை செயலாளர் பாஸ்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    அங்கு கட்சி கொடி ஏற்றி, பட்டாசு வெடித்து, அலங்கரிக்கப்பட்ட ஜெயலலிதா உருவ படத்திற்கும்,

    எம்.ஜி.ஆர். சிலைக்கும் மாலையணிவித்து, மரியாதை செலுத்தி இனிப்புகள் வழங்கப்பட்டது.

    தொடர்ந்து வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் ஏழை, எளிய மக்களுக்கு தள்ளு வண்டி, தையல் மிஷன், கிரைண்டர், குக்கர், மிக்சி, மின்சார அடுப்பு, தவா வாணல், பில்டர் ஹீட்டர், மின்விசிறி, சில்வர் பாத்திரம், எல்.ஜி.பி. அடுப்பு, ஹாட் பாக்ஸ், இட்லி குக்கர், சலவைப் பெட்டி, மற்றும் 750 நபர்களுக்கு இலவச வேட்டி, சேலை, மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் நிர்வாகிகள் வீரம்மாள், கணேசன், மகாதேவி, பொருளாளர் ரவி பாண்டுரங்கன், நகர செயலாளர் அன்பழகன் உடையார், எம்.ஏ.கே. கருணாநிதி, கணேசன், நாகமணி, மூர்த்தி,

    காந்தி,கிருஷ்ணமூர்த்தி, குணசேகரன், குமுதன், சித்தானந்தம், பாண்டுரங்கன், சிவாலய இளங்கோ, பாப்புசாமி, மருதமலையப்பன், பிரதீப், ராமசாமி, செல்வம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    முத்தியால்பேட்டை அ.தி.மு.க. அலுவலகத்தில் புதுவை மாநில அ.தி.மு.க. துணை செயலாளர் வையாபுரி மணிகண்டன் தலைமையில் நிர்வாகிகள் ஜெயலலிதா படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

    தொடர்ந்து துணை செயலாளர் வையாபுரி மணிகண்டன், பொது மக்களுக்கு இனிப்பும், ஏழை, எளிய மக்களுக்கு அன்னதானமும் வழங்கினார்.

    நிகழ்ச்சியில் அ.தி.மு.க. நிர்வாகிகள் பழனிசாமி, கஜேந்திரன், உதயசூரியன், மோகன், விஸ்வநாதன், அந்துவான், குப்பன், மண்ணாங்கட்டி, தனலட்சுமி,ராதா, ஹரிகிருஷ்ணன், முனியாண்டி, கார்த்திக், விநாயகமூர்த்தி, ஜான், பஞ்சவர்ணம், பச்சையப்பன் , வினோத்குமார், பிரபா, எத்திராஜ், முரளிதரன், ஆறுமுகம், மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், ஊர் பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • முத்தமிழறிஞர் கலைஞருக்கு உறுதுணையாக இனமானம் காக்க அயராது பாடுபட்ட இனமான பேராசிரியரின் நினைவுநாளில் அவரைப் போற்றுகிறேன்.
    • அன்பழகனின் வாழ்வு ஒவ்வொருவரும் பயில வேண்டிய கொள்கை வகுப்பு.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில் கூறியிருப்பதாவது:-

    வாழ்நாளெல்லாம் கொள்கை உறுதியோடு, தந்தை பெரியாரும், பேரறிஞர் அண்ணாவும் காட்டிய பாதையில், முத்தமிழறிஞர் கலைஞருக்கு உறுதுணையாக இனமானம் காக்க அயராது பாடுபட்ட இனமான பேராசிரியரின் நினைவுநாளில் அவரைப் போற்றுகிறேன்.

    அவரது வாழ்வு ஒவ்வொருவரும் பயில வேண்டிய கொள்கை வகுப்பு.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • அ.தி.மு.க. சார்பில் உப்பளம் கட்சி தலைமை அலுவலகத்தில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது.
    • பொய் வாக்குறுதி கொடுத்து ஆட்சியில் அமைந்து 23 மாதம் ஆகியும் குடும்ப தலைவிகளுக்கு ரூ.ஆயிரம் வழங்கும் திட்டத்தை ஸ்டாலின் நிறைவேற்ற வில்லை.

    புதுச்சேரி:

    புதுவை மாநில அ.தி.மு.க. சார்பில் உப்பளம் கட்சி தலைமை அலுவலகத்தில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது.

    அ.தி.மு.க. மாநில அவைத் தலைவர் அன்பானந்தம் முன்னிலை வகித்தார். மாநில செயலாளர் அன்பழகன் பெண்களுக்கு தள்ளுவண்டி, இலவச புடவை, தையல் மிஷின் ஆகியவற்றை வழங்கி பேசியதாவது:-

    தமிழகத்தில் பாலாறும் தேனாறும் ஓடுவது போன்று முன்னாள் முதல்- அமைச்சர் நாராயணசாமி தமிழக விடியா அரசின் முதல்-அமைச்சர் ஸ்டாலினுக்கு வென்சாரம் வீசுகிறார்.

    பொய் வாக்குறுதி கொடுத்து ஆட்சியில் அமைந்து 23 மாதம் ஆகியும் குடும்ப தலைவிகளுக்கு ரூ.ஆயிரம் வழங்கும் திட்டத்தை ஸ்டாலின் நிறைவேற்ற வில்லை. ஆனால் புதுவையில் அந்தத் திட்டம் அறிவிக்கப்படாமலேயே நிறைவேற்றப்பட்டது.

    தி.மு.க. ஆட்சியில் தமிழகத்தில் முதியோர் மற்றும் விதவைகளுக்கு மாதம் ரூ.1000 மட்டுமே நிதி உதவியாக வழங்கப்படுகிறது.

    ஆனால் புதுவையில் முதியோர் மற்றும் விதவைகளுக்கு மாதம் ரூ. 2500 வழங்குவதை மறந்து விட்டு நடக்கும் ஆட்சி டுபாக்கூர் ஆட்சி என்றும் முதல்-அமைச்சர் டம்மி முதல்-அமைச்சர் என்றும் தரம் தாழ்ந்து விமர்சனம் செய்கிறார்.

    தனது ஆட்சி காலத்தில் ரெஸ்ட்ரோ பார்களையும், அதில் பெண்களை வைத்து நடனம் நடத்தவும் அனுமதி வழங்கிவிட்டு தற்போது உத்தமர் போன்று அறிக்கை விடுகிறார்.அனைத்து துறைகளிலும் ஊழல் என தினம்தோறும் பேசும் நாராயணசாமி எந்த ஒரு ஊழலையாவது இன்று வரை ஆதாரத்துடன் கூறியுள்ளாரா.? இது போன்று முழு வேக்காட்டு அரசியல்வாதிகளின் உண்மை நிலையை மக்கள் உணர்ந்து உள்ளார்கள். வருகிற நாடாளுமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமி மாபெரும் வெற்றியை கட்சிக்கு பெற்று தருவார்.

    2026-ல் நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில் தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சி மலரும் போது, புதுவையிலும் அ.தி.மு.க. ஆட்சி மலரும். அதற்கு துணையாக மகளிர் இருக்க வேண்டும். இவ்வாறு அன்பழகன் பேசினார்.

    விழாவில், மாநில இணை செயலாளர்கள் வீரம்மாள், திருநாவுக்கரசு,கணேசன், மகாதேவி, மாநில பொருளாளர் ரவி பாண்டுரங்கன், மாநில துணைச் செயலாளர்கள், கருணாநிதி, பி.எல்.கணேசன், நாகமணி ,காந்தி, கிருஷ்ணமூர்த்தி,குமுதன், மணவாளன், உழவர்கரை நகர செயலாளர் சித்தானந்தம், மாநில எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் பாண்டுரங்கன், மாநில அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் பாப்புசாமி, மாநில அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணிச் செயலாளர் செல்வம், மாநில இளைஞர் பாசறை மற்றும் இளம் பெண்கள் பாசறை இணை செயலாளர் தீபிகாவதி உட்பட பலர் திரளாக கலந்து கொண்டனர்.

    • தமிழக டெல்டா விவசாய நிலங்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் நிலக்கரி சுரங்க ஏல அறிவிப்பினை வாபஸ் பெற்ற மத்திய அரசை அ.தி.மு.க. வரவேற்கிறது.
    • வருவாய்க்காக இரவில் கடை வைத்துக் கொள்ளலாம் என அரசு அனுமதித்துள்ளது மாநிலம் முழுவதும் சட்டம்-ஒழுங்கை சீரழிந்துள்ளது.

    புதுச்சேரி:

    புதுவை மாநில அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழக டெல்டா விவசாய நிலங்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் நிலக்கரி சுரங்க ஏல அறிவிப்பினை வாபஸ் பெற்ற மத்திய அரசை அ.தி.மு.க. வரவேற்கிறது. இது அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தொலைநோக்கு பார்வையுடன் கொண்டு வந்த வேளாண் பாதுகாப்பு சட்டத்திற்கு கிடைத்த வெற்றியாகும்.

    புதுவை மாநிலம் முழுக்க இரவு நேர மதுபான பார்கள் மற்றும் ரெஸ்டோ பார்கள், கடைகள் திறந்திருப்பதால் சட்டம்-ஒழுங்கு முழுமையாக சீர்கெட்டு உள்ளது. இரவு 2 மணி வரை ரெஸ்டோ பார்கள் திறந்திருப்பதால் இளைஞர், இளம்பெண்கள் மது, கஞ்சா போதைக்கு சர்வசாதாரணமாக அடிமையாகி உள்ளனர்.

    இதனால் வெளிமாநிலங்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளால் மாநில மக்களை பாதுகாக்க முடியாத சூழல் போலீசாருக்கு ஏற்பட்டுள்ளது. வருவாய்க்காக இரவில் கடை வைத்துக் கொள்ளலாம் என அரசு அனுமதித்துள்ளது மாநிலம் முழுவதும் சட்டம்-ஒழுங்கை சீரழிந்துள்ளது.

    அண்டை மாநிலத்தில் இருந்து விதவிதமாக போதை பொருட்கள் விற்பனை செய்யக் கூடிய கேந்திரமாக புதுவை மாறியுள்ளது. அரைகுறை ஆடையுடன் பெண்கள் நகரப்பகுதிகளில் சுற்றுகின்றனர். இதற்கு எல்லாம் அரசு அனுமதி கொடுப்பது என்பது நியாயமற்ற செயல்.

    பல்வேறு நல்ல திட்டங்களை செயல்படுத்தும் முதல்-அமைச்சர் ரங்கசாமி இதுபோன்ற செயல்களையும் அனுமதிக்கலாமா? இதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். புதுவை கலாச்சார சீரழிவு மையமாக மாறுவதை தடுக்க நள்ளிரவில் ரெஸ்டோபார் திறப்பதை அரசு ரத்து செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது அ.தி.மு.க. மாநில அவைத் தலைவர் அன்பானந்தம், மாநில பொருளாளர் ரவி பாண்டுரங்கன், அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் பாப்புசாமி ஆகியோர் உடனிருந்தனர்.

    • மாநில பொருளாளர் ரவி பாண்டுரங்கன் தலைமை தாங்கினார்.
    • வார்டு செயலாளர்கள் ஜெயக்குமார், பாலு, பன்னீர்செல்வம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    புதுச்சேரி:

    அரியாங்குப்பம் தொகுதி அ.தி.மு.க சார்பில் தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவர், அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

    அரியாங்குப்பம் பிரம்மன் சதுக்கம் எதிரில் மாநில கழக செயலாளர் அன்பழகன் அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். நிகழ்ச்சிக்கு மாநில பொரு ளாளர் ரவி பாண்டுரங்கன் தலைமை தாங்கினார். அவைத் தலைவர் அன்பானந்தம், நகர செயலாளர் அன்பழகன் உடையார், மாநில அம்மா பேரவை செயலாளர் பாஸ்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    மாநிலத் துணைச் செயலாளர் நாகமணி, பொதுக்குழு உறுப்பினர் பாலன், இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை மாநில செயலாளர் தமிழ் வேந்தன், எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் பாண்டுரங்கன், , தொகுதி அவைத் தலைவர் ராஜேந்திரன், வார்டு செயலாளர்கள் ஜெயக்குமார், பாலு, பன்னீர்செல்வம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். தொகுதி செயலாளர் ராஜா, ஜீவா ஏற்பாடு செய்தனர்.

    • அ.தி.மு.க. வலியுறுத்தல்
    • 100-க்கணக்கான ஒட்டல் உரிமையாளர்கள் கடற்கரை மணல் பகுதிகளில் வேலி அமைத்து, டெண்ட் அமைத்து தங்களுக்கு சொந்தமானதாக அபகரித்து வருகின்றனர்.

    புதுச்சேரி:

    புதுவை மாநில அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    புதுவையில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள காமாட்சி அம்மன் கோவில் நிலத்தை போலி பத்திரம் தயாரித்து, போலி பட்டா மாற்றம் செய்து முறைகேடுகள் நடத்தியதாக 10-க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    இந்த நிலையில் பத்திர பதிவுத் துறையில் கடந்த 2 ஆண்டுகளாக பட்டா மாற்றம் செய்யப்பட்ட சுமார் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பதிவுகள் பத்திர பதிவுத் துறை இணையதளத்தில் இருந்து ஒட்டுமொத்தமாக காணாமல் போய் உள்ளது.

    திட்டமிட்டு இந்த தவறை துறை அதிகாரிகள் தைரியத்துடன் செய்துள்ளதாக தெரிகிறது.

    இது புதுவை மாநிலத்திற்கு ஏற்பட்ட மிகப்பெரிய தலைகுனிவு ஆகும். இந்த விவகாரத்தில் முதல்-அமைச்சர் ரங்கசாமி ஒரு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். கொரோனா காலத்தில் தங்களது உயிரையும் துச்சமென நினைத்து ஒப்பந்த அடிப்படையில் 100-க்கும் மேற்பட்ட செவிலியர்கள் பணியில் அமர்த்தபட்டனர்.

    தற்போது செவிலியர் பணியிடங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அரசு முடிவு செய்துள்ளது.

    இதில் கொரோனா காலத்தில் பணிபுரிந்த செவிலியர்களுக்கு பணி வழங்க வேண்டும் அல்லது பணி நியமன விதிப்படி பணிக்கு ஆட்கள் எடுக்கும் போது ஏற்கனவே கொரோனா காலத்தில் பணிபுரிந்து வந்த செவிலியர்களுக்கு 25 சதவீதம் மதிப்பெண் கொடுத்து அவர்கள் பணியில் சேருவதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.

    புதுவை மாநிலம் முழு வதும் தற்போது கடற்கரைப் பகுதிகள் தனியாரால் அபகரிக்கப்பட்டு வருகிறது. 100-க்கணக்கான ஒட்டல் உரிமையாளர்கள் கடற்கரை மணல் பகுதிகளில் வேலி அமைத்து, டெண்ட் அமைத்து தங்களுக்கு சொந்தமானதாக அபகரித்து வருகின்றனர்.

    அங்கு வரும் சுற்றுலா பயணிகளிடம் பணம் வசூல் செய்து வருகின்றனர். போலி பத்திரம் மூலம் 15 கி.மீ தூரம் உள்ள கடற்கரையை அபகரிக்கும் சூழல் உள்ளது. வழக்கம் போல் அரசு பாராமுகம் போல் இல்லாமல் தனி யார்கள் ஆக்கிரமிப்பு செய்வது தடுத்து நிறுத்த வேண்டும்.

    ஒரு ஆட்டோவில் 6 மாணவர்களை மட்டுமே ஏற்றி செல்ல வேண்டும். அளவுக்கு அதிகமான மாணவர்கள் ஏற்றி செல்லக்கூடாது. என்ன சட்டம் உள்ளதோ அதனை அதிகாரிகள் அமல்படுத்த வேண்டும். அதிகப்படியாக மாணவர்களை ஏற்றி செல்வது தடுத்து நிறுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். 

    ×