search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "and fog"

    • கோடை காலம் தொடங்கும் முன்பே அனல் காற்று வீசி வருகிறது.
    • வெயிலின் தாக்கம் காரணமாக பழங்கள் விற்பனையும் அதிகரித்துள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் கோடை காலம் தொடங்கும் முன்பே அனல் காற்று வீசி வருகிறது. குறிப்பாக காலை 8 மணிக்கே வெயிலின் தாக்கம் அதிகளவில் உள்ளது.

    நேரம் செல்ல, செல்ல அதிகளவில் அனல் காற்று வீசிவருகிறது. மேலும் பகல் நேரங்களில் பஸ்களில் மக்கள் கூட்டம் குறைந்து விட்டது. சாலைகளில் இருசக்கர வாகனங்களில் செல்வோரின் எண்ணிக்கை–யும் குறைந்து–விட்டது.

    அதோடு இல்லாமல் வீடுகளில் எந்தநேரமும் புழுக்கமாக இருப்பதால் மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.

    ஈரோடு மாவட்டத்தின் பல்ேவறு இடங்களில் மாலை நேரங்களில் கோடை மழை பெய்தாலும் இரவில் மட்டுமே குளிர்ந்த காற்று வீசுகிறது.பின்னர் மீண்டும் காலையில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது.

    கோடை காலம் தொடங்கும் முன்பே ஈரோட்டில் அனல் காற்று வீசி வருவதால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.

    வெயிலின் தாக்கம் காரணமாக பல்வேறு இடங்களில் சாலை ஓரங்களில் பழங்கள் விற்பனையும் அதிகரித்துள்ளது. பொதுமக்களும் வெப்பத்தை தணிக்க பழங்களை அதிகளவில் வாங்கி செல்கின்றனர்.

    வெயிலின் காரணமாக பழங்களின் விலையும் உயர்ந்துள்ளது. பொது–மக்கள் தர்பூசணி, இளநீர், சாத்துக்குடி, ஆரஞ்சு, திராட்சை, மாதுளை, சப்போட்டா உள்ளிட்ட பழங்களை அதிகளவில் வாங்கி செல்கின்றனர்.

    அதோடு இல்லாமல் நுங்கு விற்பனையும் களை கட்டியுள்ளது. இது போக கம்பங்கஞ்சி, தயிர், மோர், விற்பனையும் அதிகரித்துள்ளது.

    வெப்பத்தின் பிடியில் இருந்து தப்பிக்க பொதுமக்கள் அதிகளவில் குளிர்ச்சியான பொருட்களை வாங்கி சாப்பிட்டு வருகின்றனர். 

    ×