search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "andhra bank"

    • கொள்ளை கும்பல் சென்ற கார் ஐதராபாத்-வாரங்கல் தேசிய நெடுஞ்சாலையில் பழுதானது.
    • 2 சுங்க சாவடிகளை கடந்த ஒரே காரில் வேறு வேறு நம்பர் பிளேட் இருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், வாரங்கல் மாவட்டம், ராய பார்ட்டி பகுதியில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி உள்ளது.

    வங்கிக்குள் சென்ற கொள்ளை கும்பல் கியாஸ் கட்டர் மூலம் வங்கியில் இருந்த லாக்கரை உடைத்தனர். லாக்கரில் இருந்த ரூ. 13.61 கோடி மதிப்பிலான நகைகளை கொள்ளை அடித்துக் கொண்டு காரில் தப்பி சென்றனர்.

    வங்கியில் நடந்த கொள்ளை குறித்து போலீசார் 10 தனிப்படைகள் அமைத்து கொள்ளை கும்பலை தேடி வந்தனர். கொள்ளை கும்பல் சென்ற கார் ஐதராபாத்-வாரங்கல் தேசிய நெடுஞ்சாலையில் பழுதானது. தனியார் லிப்டிங் வாகனம் மூலம் காரை மெக்கானிக் கடைக்கு எடுத்துச் சென்று பழுது நீக்கினர். பின்னர் தாங்கள் ஜவகர் நகரில் தங்கி இருந்த வாடகை வீட்டிற்கு சென்று வீட்டை காலி செய்துவிட்டு மகாராஷ்டிரா வழியாக உத்தரப் பிரதேசம் நோக்கி சென்றனர்.

    பீபி நகர் சுங்க சாவடியை கடக்கும்போது காரில் வேறு ஒரு நம்பர் பிளேட் மாற்றப்பட்டு இருந்தது. 2 சுங்க சாவடிகளை கடந்த ஒரே காரில் வேறு வேறு நம்பர் பிளேட் இருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர். போலீசார் மகாராஷ்டிரா சென்று கொள்ளை கும்பலை சேர்ந்த 3 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2.50 கிலோ எடையுள்ள தங்க நகைகளை பறிமுதல் செய்தனர்.

    மேலும் கொள்ளை கும்பலின் முக்கிய குற்றவாளியான ஒருவர் வேறு பகுதி வழியாக தப்பி செல்வது தெரியவந்தது. அவரையும் மடக்கி பிடித்து அவரிடம் இருந்த 7.50 கிலோ நகைகளை பறிமுதல் செய்தனர்.

    ஒடிசா மாநிலத்தின் சம்பல்பூர் மாவட்டத்தில் உள்ள ஆந்திரா வங்கியில் இன்று துப்பாக்கி முனையில் பணியாளர்களை மிரட்டி 11 லட்சம் ரூபாயை கொள்ளையடித்து சென்றவர்களை போலீசார் தேடுகின்றனர். #Andhrabank #Andhrabankloot #SambalpurAndhrabank
    புவனேஸ்வர்:

    ஒடிசா மாநிலம், சம்பல்பூர் மாவட்டத்துக்குட்பட்ட ஜமன்கிரா பகுதியில் ஆந்திரா வங்கியின் கிளையில் இன்று வழக்கம்போல் வாடிக்கையாளர்கள் நிறைந்திருந்த நேரத்தில் ஒரு மோட்டார் சைக்கிளில் முகமூடி அணிந்த மூன்றுபேர் அங்கு வந்தனர்.

    துப்பாக்கி முனையில் வங்கி பணியாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்களை மிரட்டிய அவர்கள் வங்கியில் இருந்த 10 லட்சத்து 93 ஆயிரம் ரூபாயை கொள்ளையடித்தனர். அங்கிருந்து சென்றபோது வங்கியில் இருந்த கண்காணிப்பு கேமராவை உடைத்து அதில் இருந்த காட்சிப் பதிவு பகுதியையும் (ஹார்ட் டிஸ்க்) எடுத்துகொண்டு மின்னல் வேகத்தில் தப்பி தலைமறைவாகினர்.

    இந்த துணிகர சம்பவம் தொடர்பான தகவல் அறிந்ததும் விரைந்துவந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து, சம்பல்பூர் மாவட்ட எல்லைப்புற சாலைகளில் தடுப்புகளை அமைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். #Andhrabank #Andhrabankloot #SambalpurAndhrabank
    ×