என் மலர்
நீங்கள் தேடியது "Anil Ambani"
- ரிலையன்ஸ் எனர்ஜி லிமிடெட்டின் கீழ் இந்த நிறுவனம் இணைக்கப்பட்டுள்ளது.
- குறைந்த விலையில் வீடுகள் கட்டிக்கொடுக்கும் ரியல் எஸ்டேட் நிறுவனமாக செயல்படும் எனக் கூறப்படுகிறது.
அனில் அம்பானியின் ரிலையன்ஸ் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் (Reliance Infrastructure) தனது தொழிலை விரிவடையச் செய்யும் வகையில் தற்போது புதிதாக ரியல் எஸ்டேட் நிறுவனத்தை தொடங்கியுள்ளது. அந்த நிறுவனத்தறி்கு ஆர்.ஜே.பி.பி.எல். (Reliance Jai Properties Private Limited) எனப் பெயரிட்டுள்ளார்.
இந்த நிறுவனம் மூலம் மலிவான விலையில் வீடு கட்டிக்கொடுப்பதுதான் இலக்கு என அனில் அம்பானி நிறுவனம் தெரிவித்தள்ளது. ஏப்ரல் மாதத்தில் அனில் அம்பானி நிறுவனத்தின் பங்கு மதிப்பு 308 ரூபாய் இருந்தது. தற்போது 225.85. ரூபாய் அளவிற்கு குறைந்துள்ளது இந்த நிலையில் அனில் அம்பானி நிறுவனம் இந்த முடிவை எடுத்துள்ளது.
பிரதம மந்திரி வீடு கட்டி கொடுக்கும் திட்டத்தை குறிவைத்து குறைந்த விலையிலான வீடுகளை கட்டுக்கொடுக்கம் வேலையை குறிவைத்து இந்த நிறுவனத்தை தொடங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
ரிலையன்ஸ் இன்ஃப்ராஸ்ட்ரக்சரின் துணை நிறுவனமான ரிலையன்ஸ் எனர்ஜி லிமிடெட்டின் கீழ் கடந்த 12-ந்தேதி ரிலையன்ஸ் ஜெய் பிராப்பர்ட்டிஸ் தனியார் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக இணைக்கப்பட்டது. சொத்துக்கள் கையகப்படுத்துதல், விற்பனை செய்தல், குத்ததைக்கு விடுதல் போன்ற இந்த நிறுவனம் ஈடுபட உள்ளது.
சில மாதங்களுக்கு முன் வாங்கிய கடனை செலுத்த முடியாததால் இவருடைய நிறுவனங்கள் திவால் அடையும் நிலைக்கு சென்றது குறிப்பிடத்தக்கது.
- நிறுவனத்தின் நிதியை மோசடியாக வேறு செலவுகளுக்கு பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
- அனில் அம்பானிக்கு தடை மட்டுமின்றி ரூ.25 கோடி அபராதமும் விதித்து செபி உத்தரவிட்டுள்ளது.
மும்பை:
பிரபல தொழிலதிபரான அனில் அம்பானி பங்குச்சந்தையில் வர்த்தகம் செய்ய 5 ஆண்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
பங்குச்சந்தை ஒழுங்குமுறை அமைப்பான செபி இந்தத் தடையை விதித்துள்ளது.
நிறுவனத்தின் நிதியை மோசடியாக வேறு செலவுகளுக்கு பயன்படுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் அனில் அம்பானிக்கு இந்த தடையை செபி விதித்துள்ளது.
அனில் அம்பானி மற்றும் ரிலையன்ஸ் ஹோம் பைனான்ஸ் நிறுவனத்தின் முன்னாள் முக்கிய அதிகாரிகள் உள்பட 24 நிறுவனங்கள் பங்குச்சந்தையில் வர்த்தகம் செய்ய 5 ஆண்டுக்கு செபி தடை விதித்துள்ளது.
அனில் அம்பானிக்கு ரூ.25 கோடி அபராதம் விதித்துள்ள செபி, பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட எந்த ஒரு நிறுவனத்திலும் இயக்குநராகவோ அல்லது முக்கிய பொறுப்பாளராகவோ இருக்கவும் தடை விதித்துள்ளது.
அத்துடன், ரிலையன்ஸ் ஹோம் பைனான்ஸ் நிறுவனத்துக்கு 6 மாதத்துக்கு தடை விதித்துள்ள செபி, அந்நிறுவனத்துக்கு ரூ.6 லட்சம் அபராதமும் விதித்துள்ளது.
- இந்த சட்டப்பிரிவுகளின் கீழ் ஒருவருக்கு 10 ஆண்டு ஜெயில், அபராதம் விதிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
- தங்களுக்கு காலஅவகாசம் வேண்டும் என வருமான வரித்துறை தரப்பில் ஐகோர்ட்டில் கூறப்பட்டது.
மும்பை :
வருமான வரித்துறையினர் கடந்த மாதம் 8-ந் தேதி ரிலையன்ஸ் நிறுவன சேர்மன் அனில் அம்பானிக்கு நோட்டீஸ் அனுப்பி இருந்தனர். அந்த நோட்டீஸ், அனில் அம்பானி வேண்டும் என்றே சுவீஸ் வங்கியில் 2 வங்கி கணக்கில் உள்ள ரூ.814 கோடி பணம் குறித்து வருமான வரித்துறையிடம் மறைத்து, ரூ.420 கோடி வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக கூறியிருந்தனர்.
இந்த விவகாரத்தில் அனில் அம்பானி மீது கருப்பு பண ஒழிப்பு தடுப்பு சட்டம் பிரிவு 50, 51 கீழ் நடவடிக்கை எடுக்க முடியும் எனவும் தெரிவித்து இருந்தனர். இந்த சட்டப்பிரிவுகளின் கீழ் ஒருவருக்கு 10 ஆண்டு ஜெயில், அபராதம் விதிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தநிலையில் அனில் அம்பானி அவர் மீதான வருமான வரித்துறை நோட்டீசை எதிர்த்து மும்பை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். மனுவை நீதிபதிகள் கங்காபுர்வாலா, ஆர்.என். லத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. அப்போது அனில் அம்பானி தரப்பில் ஆஜரான வக்கீல், "அனில் அம்பானிக்கு எதிரான சட்டப்பிரிவு 2015-ம் ஆண்டு தான் நடைமுறைக்கு வந்தது. ஆனால் அவர் மேற்கொண்ட பணப்பரிவர்த்தனைகள் 2006-07 மற்றும் 2010-11-ம் ஆண்டு நடந்தவை. எனவே குறிப்பிட்ட சட்டப்பிரிவின் கீழ் அனில் அம்பானி மீது நடவடிக்கை எடுக்க முடியாது" என கூறினார்.
இதுகுறித்து பதில் அளிக்க தங்களுக்கு காலஅவகாசம் வேண்டும் என வருமான வரித்துறை தரப்பில் ஐகோர்ட்டில் கூறப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள் மனு மீதான விசாரணையை நவம்பர் 17-ந் தேதிக்கு ஒத்தி வைத்தனர். மேலும் அதுவரை அனில் அம்பானி மீது நடவடிக்கை எடுக்க வருமான வரித்துறைக்கு இடைக்கால தடை விதித்தனர்.
- அனில் அம்பானி, சுவிஸ் வங்கிகளில் ரகசிய கணக்குகளில் ரூ.420 கோடி வரி ஏய்ப்பு.
- அனில் அம்பானியிடம் விளக்கம் கேட்டு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
புதுடெல்லி :
பிரபல தொழில் அதிபர் அனில் அம்பானி, சுவிஸ் வங்கிகளில் ரகசிய கணக்குகளில் ரூ.814 கோடி அளவுக்கு முதலீடு செய்து, ரூ.420 கோடி வரி ஏய்ப்பு செய்திருப்பதாக கூறப்படுகிறது.
அவர் வேண்டுமென்றே சுவிஸ் வங்கி முதலீடுகளை மறைத்து வரி ஏய்ப்பு செய்துள்ளதாக வருமான வரித்துறை குற்றம் சாட்டி, அவர் மீது வழக்கு தொடர முடிவு செய்துள்ளது.
இது தொடர்பாக அனில் அம்பானியிடம் விளக்கம் கேட்டு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
ரபேல் ஒப்பந்தத்தை பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பதற்கு 10 நாட்களுக்கு முன்பு தான் அனில் அம்பானி ரிலையன்ஸ் டிபன்ஸ் நிறுவனத்தை தொடங்கினார் என காங்கிரஸ் சார்பு நேஷனல் ஹெரால்டு பத்திரிகை செய்தி வெளியிட்டு இருந்தது. இதையடுத்து காங்கிரஸ் மீதும், நேஷனல் ஹெரால்டு பத்திரிகை மீதும் அனில் அம்பானி சார்பில் ரூ.5 ஆயிரம் கோடி கேட்டு ஆமதாபாத் கோர்ட்டில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது.
இந்நிலையில் அந்த வழக்கை வாபஸ் பெற அனில் அம்பானி முடிவு செய்துள்ளார். இது குறித்து அனில் அம்பானியின் ரிலையன்ஸ் குழும நிறுவனம் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேர்தலையொட்டி அரசியல் காரணங்களுக்காக தான் இது போன்ற செய்திகள் வெளியாகி இருக்கின்றன. தற்போது தேர்தல் முடிவடைந்து விட்டது. எனவே எங்கள் தரப்பில் தொடரப்பட்ட அவமதிப்பு வழக்கை வாபஸ் பெற முடிவு செய்திருக்கிறோம் என கூறப்பட்டு உள்ளது. எனினும் அறிக்கை யார் பெயரில் வெளியிடப்பட்டது என்று குறிப்பிடப்படவில்லை.

பிரான்சில் இயங்கிவரும் அனில் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் நிறுவனம் செலுத்த வேண்டிய ரூ.1,100 கோடி வரி பாக்கியை அந்நாட்டு அரசு தள்ளுபடி செய்து விட்டதாக பிரபல பிரான்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டது.
பிரான்ஸ் நாட்டிலிருந்து வாங்கப்படும் ரபேல் போர் விமானங்களை நிர்வகிக்கும் ஒப்பந்தத்தை அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் பெற்ற பின்னர் இந்த வரி தள்ளுபடி நடந்ததாக அந்த பத்திரிகை செய்தி சுட்டிக் காட்டியிருந்தது.

இந்நிலையில், அனில் அம்பானியின் வரி பாக்கியை அந்நாட்டு அரசு தள்ளுபடி செய்தது ஏன்? என டெல்லியில் உள்ள பிரான்ஸ் நாட்டின் தலைமை தூதரகம் இன்றிரவு விளக்கம் அளித்துள்ளது.
இதுதொடர்பாக பிரான்ஸ் தலைமை தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’அனில் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் பிலாக் நிறுவனத்துக்கும் பிரான்ஸ் நாட்டு வரிவிதிப்பு அதிகாரிகளுக்கும் இடையில் நடந்த பேச்சுவார்த்தையில் எட்டப்பட்ட சமரச திட்டத்தின் மூலம் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
பிரான்ஸ் அரசின் சட்டத்திட்டங்கள் மற்றும் கட்டுப்பாடுகளுக்கு இணங்க இந்த சமரசம் ஏற்பட்டது. இவ்விவகாரத்தில் எந்த விதமான அரசியல் தலையீடுகளும் கிடையாது’ என குறிப்பிடப்பட்டுள்ளது. #AnilAmbani #TaxSettlement #Frenchembassy #RelianceFlag

ஸ்வீடன் நாட்டு தொலைத்தொடர்பு நிறுவனமான எரிக்ஸன், ரிலையன்ஸ் தொலைத்தொடர்பு நிறுவனத்துக்குத் தொழில்நுட்பங்கள், கருவிகள், சேவைகள் அளிக்க ரூ.2014-ம் ஆண்டு 7 ஆண்டுகள் ஒப்பந்தம் செய்திருந்தது. இதற்காக எரிக்ஸன் நிறுவனத்துக்கு ரூ.1500 கோடி ரிலையன்ஸ் நிறுவனம் தர வேண்டி இருந்தது.
இந்நிலையில் ரிலையன்ஸ் நிறுவனம் ரூ.45 ஆயிரம் கோடி கடனில் இருப்பதால், உச்சநீதிமன்றத்தின் அறிவுரையின்படி, ரூ.550 கோடி பெற்றுக்கொள்ள எரிக்ஸன் நிறுவனம் சம்மதித்தது. கடந்த ஆண்டு மே மாதம் உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் ரூ.550 கோடியை வழங்க ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு 120 நாட்கள் அவகாசத்தை அளித்தது. அதாவது செப்டம்பர் 30-ம் தேதிக்குள் ரூ.550 கோடியை எரிக்ஸன் நிறுவனத்துக்குச் செலுத்த வேண்டும்.
இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அனில் அம்பானி மற்றும் அவரது நிறுவனத்தின் இரண்டு இயக்குனர்களும் குற்றவாளி என அறிவித்தது. மேலும், 4 வார காலத்திற்குள் எரிக்ஸன் நிறுவனத்திற்கு ரூ.453 கோடியை வழங்க வேண்டும் என்றும் இல்லாவிடில், 3 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க நேரிடும் எனவும் தெரிவித்தது.
உச்சநீதிமன்ற உத்தரவுப்படி வரும் (19-ம் தேதி)க்குள் எரிக்ஸன் நிறுவனத்திற்கு 453 கோடி ரூபாய் வழங்காவிட்டால், சிறைக்கு செல்ல வேண்டிய இக்கட்டான நிலைக்கு அனில் அம்பானி தள்ளப்பட்டுள்ளார்.
453 கோடியை திரட்டுவதற்காக, அனில் அம்பானி பல்வேறு விதத்திலும் முயன்று வந்தார். இதற்கிடையில், வரியாக செலுத்திய 260 கோடி ரூபாயை திரும்ப வழங்க எஸ்பிஐ உள்ளிட்ட நிறுவனங்களுக்கு உத்தரவிட வேண்டும் என்ற அவரது கோரிக்கையை தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயம் நிராகரித்தது.

நெருக்கடியான நேரத்தில் எரிக்ஸன் நிறுவனத்திற்கு செலுத்த வேண்டிய தொகையை வழங்க அனில் அம்பானியின் மூத்த சகோதரர் முகேஷ் அம்பானி உதவியுள்ளார். இதையடுத்து, தனது சகோதரர் முகேஷ் அம்பானிக்கும், முகேஷ் அம்பானி மனைவி நீடா அம்பானிக்கும் அனில் அம்பானி நன்றி தெரிவித்துள்ளார். “நெருக்கடியான நேரத்தில் எனக்கு உறுதுணையாக நின்று தக்க நேரத்தில் உதவியதற்கு மிகவும் நன்றிக்கடன் பட்டுள்ளேன்” என அனில் அம்பானி நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். #AnilAmbani #MukeshAmbani #Ericsson

இதையடுத்து உச்ச நீதிமன்றத்தை அணுகியது எரிக்ஸன் நிறுவனம். நீதிமன்ற உத்தரவுப்படி சட்ட விதிகளை மதிக்கவில்லை என்று எரிக்ஸன் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், 2018-ம் ஆண்டு டிசம்பர் 15-ம் தேதிக்குள் ஆண்டுக்கு 12 சதவீத வட்டியுடன் நிலுவை தொகையை எரிக்ஸன் நிறுவனத்துக்கு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது.
ஆனால், குறிப்பிட்ட தேதி கடந்தும், ரிலையன்ஸ் நிறுவனத்தின் அதிபர் அனில் அம்பானி அந்த தொகையை எரிக்ஸன் நிறுவனத்துக்கு வழங்கவில்லை. இதையடுத்து, எரிக்ஸன் நிறுவனத்தின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.
கடந்த 12ம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, அனில் அம்பானி நேரில் ஆஜரானார். மேலும், அவரது சார்பில் 118 கோடி ரூபாய் செலுத்தப்பட்டது. தொடர்ந்து வழக்கு விசாரணை நடைபெற்ற நிலையில், இன்று தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றம், இவ்வழக்கில் அனில் அம்பானி மற்றும் அந்த நிறுவனத்தின் இரண்டு இயக்குனர்களை குற்றவாளிகள் என அறிவித்தது.
அத்துடன், அனில் அம்பானி மற்றும் 2 இயக்குனர்களும் இன்னும் 4 வாரங்களுக்குள் எரிக்சன் நிறுவனத்துக்கு ரூ.453 கோடியை செலுத்த வேண்டும், தவறினால் 3 மாத சிறைத்தண்டனை வழங்கப்படும் என்றும் நீதிமன்றம் தெரிவித்தது.
இதுதவிர 3 பேருக்கும் தலா 1 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. அபராத தொகையை ஒரு மாதத்திற்குள் செலுத்தாவிட்டால், ஒரு மாத சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது. #RelianceCommunication #AnilAmbani
ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும் என முன்னர் மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய அரசு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றாத மோடி தலைமையிலான அரசை கண்டித்து டெல்லியில் சந்திரபாபு நாயுடு இன்று உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகிறார்.
டெல்லியில் உள்ள ஆந்திர பவனில் நடைபெற்றுவரும் இந்த உண்ணாவிரதப் போராட்டத்துக்கு பல்வேறு கட்சி தலைவர்கள் நேரில் சென்று ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

அப்போது உண்ணாவிரதப் பந்தலில் பேசிய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், ‘தெலுங்கானா மாநிலம் பிரிக்கப்படுவதற்காக பாராளுமன்றத்தில் முன்னர் விவாதம் நடைபெற்றபோதே ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கப்பட வேண்டும் என்ற நிபந்தனைக்கு அனைத்து கட்சிகளும் ஆதரவு தெரிவித்திருந்தன.
எனவே, எங்கள் அரசு அளித்த வாக்குறுதியை இனியும் தாமதிக்காமல் மத்திய அரசு உடனடியாக நிறைவேற்றித்தர வேண்டும். இதற்காக போராட்டம் நடத்தும் சந்திரபாபு நாயுடுவுக்கு எங்களது முழுமையான ஆதரவு உண்டு’ என்று தெரிவித்தார்.
பின்னர் பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ‘பிரதமர் மோடி எங்கெல்லாம் செல்கிறாரோ, அங்கெல்லாம் ஒரு பொய்யைப்பேசி வருகிறார். ஒவ்வொரு மாநிலத்துக்கும் மாறிமாறி செல்லும் அவர் பொய்களை மாற்றி மாற்றிப் பேசுகிறார். ஆந்திராவுக்கு போகும்போது சிறப்பு அந்தஸ்து பற்றி பொய் பேசுகிறார். அவரது நம்பகத்தன்மை முற்றிலுமாக அழிந்துப்போய் விட்டது.
ஆந்திராவுக்கு சிறப்பு மாநில அந்தஸ்துக்காக அளிக்கப்பட வேண்டிய நிதியை தொழிலதிபர் அம்பானிக்கு பிரதமர் மோடி கொடுத்து விட்டார்’ என குறிப்பிட்டுள்ளார். #ChandrababuNaidu #Modistole #AnilAmbani #RahulGandhi