search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Annamaalai"

    • திருடனை போலீசார் திருப்பூரில் வைத்து மடக்கி பிடித்து கைது செய்தனர்.
    • அங்கமுத்து வேலையை முடித்து விட்டு லாரியில் ஆனைமலை உள்ள தனது வீட்டுக்கு சென்றார். இரவு லாரியை வீட்டின் முன்பு நிறுத்தி தூங்க சென்றார்.

    கோவை:

    கேரளா மாநிலம் கொச்சியை சேர்ந்தவர் மதுசெனை (வயது 38). இவர் பழைய பேப்பர் கம்பெனி நடத்தி வருகிறார். இவரிடம் ஆனைமலை திவான்சாபுதூரை சேர்ந்த அங்கமுத்து என்பவர் லாரி டிரைவராக வேலை செய்த வருகிறார்.

    சம்பவத்தன்று அங்கமுத்து வேலையை முடித்து விட்டு லாரியில் ஆனைமலை உள்ள தனது வீட்டுக்கு சென்றார். இரவு லாரியை வீட்டின் முன்பு நிறுத்தி தூங்க சென்றார். அப்போது அவருடன் வேலை செய்யும் மற்றோரு லாரி டிரைவர் சுரேஷ் என்பவர் அங்கமுத்துவிற்கு போன் செய்து லாரியின் ஜி.பி.எஸ் திருப்பூரில் காட்டுகிறது. எங்கே செல்கீறிர்கள் என கேட்டார்.

    அதற்கு அங்கமுத்து நான் வீட்டில் தான் இருக்கிறேன் என கூறி வீட்டின் வெளியே சென்று பார்த்தார். அப்போது தான் அவருக்கு லாரி திருட்டு ேபானது தெரியவந்தது. அதிர்ச்சி அடைந்த அவர் இதுகுறித்து தனது உரிமையாளர் மதுசெனையிடம் தெரிவித்தார். அவர் உடனே ஆனைமலை வந்து போலீசில் புகார் அளித்தார்.

    போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி குறித்து திருப்பூர் குமரலிங்கம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சோதனை செய்து லாரியையும், லாரியை திருடி வந்த வாலிபரையும் மடக்கி பிடித்தனர்.

    பின்னர் லாரி மற்றும் திருடனை ஆனைமலை போலீசாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில் லாரியை திருடியது ஆனைமலை திவான்சாபுதூரை சேர்ந்த பஞ்சலிங்கம் (34) என்பது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் பஞ்சலிங்கத்தை கைது செய்தனர். பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். லாரி திருட்டு போன ஒரே நாளில் போலீசாரை லாரியை பறிமுதல் செய்து திருடனை கைது செய்தது பொதுமக்கள் பாராட்டினர்.

    ×