என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "annu rani"
- அன்னு ராணி 4வது வாய்ப்பில் 60 மீட்டர் தூரத்திற்கு ஈட்டி எறிந்து 3வது இடத்தை பிடித்தார்.
- ஆஸ்திரேலியாவின் கெல்சி-லீ பார்பர், 64.43 மீட்டர் இலக்கை எட்டி தங்கம் வென்றார்.
பர்மிங்காம்:
இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெற்று வரும் காமன்வெல்த் விளையாட்டு போட்டி இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ளது. இதில் இந்தியா தொடர்ந்து பதக்கங்களை குவித்து வருகிறது. இன்று குத்துச்சண்டை பிரிவில் 2 தங்கம், மும்முறை தாண்டுதல் போட்டியில் தங்கம், வெள்ளி என இந்திய வீரர்கள் பதக்கங்கள் வென்றனர்.
இந்நிலையில், ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய வீராங்கனை அன்னு ராணி வெண்கலப் பதக்கம் வென்றார். 4வது வாய்ப்பில் அவர் தனது அதிகபட்ச தூரமான 60 மீட்டர் தூரத்திற்கு ஈட்டி எறிந்து 3வது இடத்தை பிடித்தார். இதன்மூலம் காமன்வெல்த் ஈட்டி எறிதல் போட்டியில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை அன்னு ராணி பெற்றுள்ளார்.
உலக சாம்பியன் கெல்சி-லீ பார்பர் (ஆஸ்திரேலியா), 64.43 மீட்டர் இலக்கை எட்டி தங்கம் வென்றார். அதே நாட்டின் மற்றொரு வீராங்கனை மெக்கென்சி லிட்டில் (64.27 மீ) வெள்ளிப் பதக்கம் வென்றார்.
இதேபோல் ஆண்களுக்கான 10 ஆயிரம் மீட்டர் வேகநடை போட்டியில் இந்திய வீரர் சந்தீப் குமார் வெண்கலப் பதக்கம் வென்றார். இதன்மூலம் இந்தியா 16 தங்கம், 12 வெள்ளி, 19 வெண்கலம் என 47 பதக்கங்களைப் பெற்று பதக்க பட்டியலில் ஐந்தாவது இடத்தில் நீடிக்கிறது.
- அன்னு ராணி பதக்கம் வெல்லத் தவறினாலும், உலக சாம்பியன்ஷிப்பில் முதல் எட்டு இடங்களை 2 முறைப் பெற்ற இரண்டாவது இந்தியப் பெண்மணி ஆனார்.
- 61.12 மீட்டர் தூரம் எறிந்து 7-வது இடத்தை பிடித்தார்.
ஓரேகான்:
18-வது உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி அமெரிக்காவின் ஓரேகானில் நடைபெற்று வருகிறது. இதில் 22 பேர் கொண்ட இந்திய தடகள அணி, ஒலிம்பிக் சாம்பியன் நீரஜ் சோப்ரா தலைமையில் பங்கேற்றுள்ளது. மகளிருக்கான ஈட்டி எறிதல் இறுதிச் சுற்று போட்டிகள் நடைபெற்றன. அதில் இந்தியா சார்பில் அன்னு ராணி பங்கேற்றார். இந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய அன்னு ராணி, தனது சிறந்த முயற்சியாக 61.12 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்தார்.
இதன்மூலம், உலக தடகள சாம்பியன்ஷி ஈட்டி எறிதல் இறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனை அன்னு ராணி ஏழாவது இடத்தைப் பிடித்தார். ஆஸ்திரேலியாவின் கெல்சி-லீ பார்பர் 66.91 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார். அமெரிக்காவின் காரா விங்கர்(64.05 மீட்டர்) வெள்ளிப் பதக்கம் வென்றார்.
ஜப்பானின் ஹருகா கிடாகுச்சி(63.27 மீட்டர்) வெண்கலம் வென்றார். அன்னு ராணி பதக்கம் வெல்லத் தவறினாலும், உலக சாம்பியன்ஷிப்பில் முதல் எட்டு இடங்களை 2 முறைப் பெற்ற இரண்டாவது இந்தியப் பெண்மணி ஆனார். உலக தடகள சாம்பியன்ஷிப் தொடரில் இறுதிப் போட்டிக்கு தொடர்ந்து 2 முறை முன்னேறிய முதல் இந்தியர் அன்னு ராணி ஆவார். 18-வது உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் ஜூலை 24 அன்று நிறைவடையும்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்