search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "answer"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இந்த விளக்கத்தைத் பார்த்த ஆசிரியர் மாணவனுக்கு முழு மதிப்பெண்களையும் வழங்கி பாராட்டியுள்ளார்.
    • செல் போன்களின் பயன்கள் என்ன? என்பது கேள்வி

    மனிதர்கள் மீது ஏகபோகமாக ஆதிக்கம் செய்யும் மொபைல் போன்கள் உணவு நீருக்கு அடுத்தபடியாக அத்தியாவசிய தேவையாகவே மாறியுள்ளது. அத்தகு மொபைல் போன்களின் பயன்கள் குறித்து பரீட்சையில் கேட்கப்பட்ட கேள்விக்கு மாணவன் ஒருவன் அளித்துள்ள விளக்கம் இணையதில் வைரலாகி வருகிறது. இந்த விளக்கத்தைத் பார்த்த ஆசிரியர் மாணவனுக்கு முழு மதிப்பெண்களையும் வழங்கி பாராட்டியுள்ளார்.

    கேள்வி:

    செல் போன்களின் பயன்கள் என்ன?

    பதில்:

    போன் இல்லையென்றால் மனநிலை [MOOD] நன்றாக இருக்காது, MOOD இல்லையென்றால் படிக்கத் தோன்றாது, படிக்காமல் வேலை கிடைக்காது, வேலை இல்லையென்றால் பணம் இருக்காது, பணம் இல்லையென்றால் சாப்பாடு கிடையாது, சாப்பிடாமல் உடல் எடை குறையும், அதனால் உருவத்தில் மாற்றம் ஏற்படும். உருவம் நன்றாக இல்லையென்றால் யாரும் காதலிக்க மாட்டார்கள், யாரும் விரும்பவில்லையென்றால் கல்யாணம் நடக்காது, கல்யாணம் நடக்கவில்லை என்றால் தனிமையாக உணர்வோம், தனிமையாக இருப்பதால் கவலை ஏற்படும், கவலை மன அழுத்தமாக மாறும், மன அழுத்தம் ஆரோக்கியத்தை பாதித்து இறுதியும் மரணம் ஏற்படும்.

     

    • சேலம், நாமக்கல் மாணவர்கள் எழுதிய ஜே.இ.இ. தேர்வுக்கான பி.இ., பி.டெக் தாள்-1 விடை குறிப்புகள் வெளியிடப்பட்டது.
    • இந்த நுழைவுத்தேர்வு கடந்த ‌ஜூன் மாதம் 24-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை நடைபெற்றது.

    சேலம்:

    இந்திய அரசு கல்வி அமைச்சகத்தின் தேசிய தேர்வு முகமை சார்பாக ேஜ.இ.இ. நுழைவுத் தேர்வு வருடத்திற்கு 2 முறை நடத்தப்படுகிறது. நடப்பு கல்வி ஆண்டுக்கான பகுதி-1 ேஜ.இ.இ. நுழைவுத் தேர்வு (முதன்மை)-2022 அறிவிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியிட்டது.

    ஐ.ஐ.டி, என்.ஐ.டி, ஐ.ஐ.ஐ.டி, போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் பி.இ., பி.டெக், பி.பிளான், பி.ஆர்க். உள்ளிட்ட என்ஜினீயரிங் படிப்பில் சேருவதற்கான இந்த நுழைவுத்தேர்வு கடந்த ‌ஜூன் மாதம் 24-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை நடைபெற்றது.

    சேலம் மாவட்டத்தில் காகாபாளையம் பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் உள்ள தேர்வு மையத்தில் சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, கரூர், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் வசிக்கும் பிளஸ்- 2 தேர்ச்சி பெற்ற மாணவ- மாணவிகள் எழுதினர். தாள் -1 தேர்வு காலை, மதியம் என 2 ஷிப்டுகளாக நடைபெற்றது.

    தாள்- 1 விடைகள் வெளியீடு

    இந்த நிலையில் தேசிய தேர்வு முகமை முதற்கட்ட ேஜ.இ.இ. முதன்ைம நுழைவு தேர்வுக்கான பி.இ., பி.டெக் பாடப்பிரிவு தாள்-1 க்கான இறுதி விடை குறிப்புகள் வெளியிட்டுள்ளது.

    அதில், ஷிப்ட் -1, ஷிப்ட்-2 கேள்வித்தாளுக்கான விடைகள் கேள்வி ஐ.டி. மற்றும் சரியான தேர்வு ஐ.டி. யுடன் வழங்கி உள்ளது.

    பி.இ., பி.டெக் தேர்வு எழுதிய மாணவ- மாணவிகள் இறுதி விடைக்குறிப்புகளை பார்த்து மதிப்பெண்கள் ஒப்பீடு செய்து கொள்ளலாம் என்றும், இன்னும் ஓரிரு நாட்களில் பி.ஆர்க். பி.பிளானிங் தேர்வுக்கான விடை குறிப்புகள் வெளியிடப்படும் என என்.டி.ஏ. தெரிவித்துள்ளது.

    ஜே.இ.இ.அட்வான்ஸ்ட் தேர்வு

    இந்தியாவின் ஒட்டுமொத்த பிளஸ்-2 மாணவர்களில் இருந்து சிறப்பானவர்களை தேர்ந்தெடுக்க ஜே.இ.இ. மெயின் தேர்வு உதவுகிறது. இதில் தேர்ச்சி பெற்றவர்களில் மிக சிறப்பானவர்களை தேர்ந்தெடுத்து ஐ.ஐ.டி.வளாகங்களுக்குள் அனுப்ப ஜே.இ.இ.அட்வான்ஸ்ட் வழிகாட்டும்.

    மெட்ராஸ் ஐ.ஐ.டி., திருச்சி என்.ஐ.டி. போன்று இந்தியா முழுக்க இருக்கும் 23 ஐ.ஐ.டி., 31 என்.ஐ.டி., 19 மத்திய மற்றும் மாநில அரசுகளின் நிதி உதவி பெறும் கல்வி நிறுவனங்கள், பல தனியார் கல்லூரிகள் என பல கல்வி நிறுவனங்களில் சேர்ந்து பயில, இந்த தேர்வு வழிவகுக்கும்.

    எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ. இடைத்தேர்தல்களில் பாஜக பெற்ற தோல்வி என்பது, நீண்ட தூரம் தாண்டுவதற்கு இரண்டு அடி பின்னால் செல்வதற்கு நிகரானது என உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். #RajnathSingh #BypollResults
    போபால்:

    மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் மத்தியப்பிரதேசம் மாநிலத்துக்கு நேற்று சென்றார். அங்கு போலீசாருக்கான பயிற்சி மையம் திறப்பு விழாவில் இன்று கலந்து கொண்டார்.



    அங்கு பாஜக ஆட்சியின் நான்கு ஆண்டு கால சாதனைகள் குறித்து பேசினார். அப்போது, இடைத்தேர்தல்களில் பாஜக பெற்ற தோல்வி குறித்து செய்தியாளர்கள் அவரிடம் கேட்டனர். அதற்கு ராஜ்நாத் சிங் சமாளிப்பாக பதிலளித்துள்ளார்.

    அப்போது அவர் கூறுகையில், சமீபத்தில் நடைபெற்ற இடைத்தேர்தல் முடிவுகளில் பாஜக பெற்ற தோல்வி என்பது, நீண்ட தொலைவை தாண்டுவதற்கு ஒருவர் இரண்டடி பின்னால் செல்வது போலாகும் என குறிப்பிட்டுள்ளார். #RajnathSingh #BypollResults
    ×