என் மலர்
நீங்கள் தேடியது "Anti-Bribery Department"
- லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி. சத்யராஜ் தலைமையிலான 10-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் மயிலம் சார் பதிவாளர் அலுவலகத்திற்கு வந்தனர்.
- லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளால் கைப்பற்றப்பட்ட கோப்புகளில் முக்கியமான ஆதாரங்கள் ஏதேனும் சிக்க வாய்ப்பு இருக்கிறது என்று கூறப்படுகிறது.
மயிலம்:
விழுப்புரம் மாவட்டம் மயிலம் சார் பதிவாளர் அலுவலகத்தில் உள்ள அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அங்கு வரும் பொதுமக்களிடம் லஞ்சம் வாங்குவதாக பொதுமக்கள் தரப்பில் இருந்து குற்றம் சாட்டி வந்தனர்.
மேலும் சார்பதிவாளர் அலுவலகத்தின் அருகே இ.சேவை மையம் வைத்து நடத்தி வரும் பால மணிகண்டன் என்பவர் சார் பதிவாளர் அலுவலகத்தின் புரோகராக பணியாற்றி பொதுமக்களிடம் லஞ்சப் பணத்தை அவ்வப்போது வாங்கி கொடுத்து வருவதாகவும் புகார்கள் எழுந்த வண்ணம் இருந்தது.
இந்நிலையில் நேற்று இரவு லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி. சத்யராஜ் தலைமையிலான 10-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் மயிலம் சார் பதிவாளர் அலுவலகத்திற்கு வந்தனர். அப்போது அவர்கள் சார் பதிவாளர் அலுவலகத்திற்குள் சென்று பணியில் இருந்தவர்களை அலுவலகத்திற்குள் அமர வைத்து விட்டு அலுவலகத்தின் பல்வேறு பகுதிகளில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
அந்த சோதனையில் கணக்கில் வராத ரூ. 3.60 லட்சத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பின்னர் சார் பதிவாளர் சங்கீதா மற்றும் புரோக்கர் பால மணிகண்டன் உள்ளிட்ட சார் பதிவு அலுவலக ஊழியர்களிடம் தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர்.
இந்த சோதனை நள்ளிரவு வரையில் நடைபெற்றது. சோதனைக்கு பின்பு சார் பதிவாளர் அலுவலகத்தில் இருந்து முக்கிய கோப்புகளுடன் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அலுவலகத்தில் இருந்து வெளியேறினார்கள்.
லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளால் கைப்பற்றப்பட்ட கோப்புகளில் முக்கியமான ஆதாரங்கள் ஏதேனும் சிக்க வாய்ப்பு இருக்கிறது என்று கூறப்படுகிறது.
இந்த சம்பவம் அந்த மயிலம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- ஒரு ஆவணத்திற்கு ரூ.10 வசூலித்து ரூ.5ஐ கமிஷனாகவும் எடுத்துக் கொண்டுள்ளார்.
- ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை.
5 ரூபாய்க்கு இன்று எந்த மதிப்பும் இல்லை என்று நீங்கள் கருதுவீர்கள், ஆனால் அது ஜாம்நகரில் உள்ள மோர்கண்டா கிராமத்தைச் சேர்ந்த ஒரு கணினி ஆபரேட்டரை சிறையில் அடைத்துள்ளது. விவசாயிகளுக்கு அரசு வருவாய் ஆவணங்களை வழங்க ரூ.5 லஞ்சம் வாங்கியதாக நவீன்சந்திர நகும் என்பவதை லஞ்ச தடுப்புத் துறை கைது செய்துள்ளது.
46 வயதான நகும், 2013ம் ஆண்டு முதல் கிராமத்தில் கணினி தொழில்முனைவோராக (VCE) இரண்டு மணி நேரம் மட்டும் பணியாற்றி வந்தார்.
பொதுவாக ஒவ்வொரு ஆவணத்திற்கும், விண்ணப்பதாரரிடம் இருந்து ரூ. 5 பெறுவதாகவும், இதில், ரூ. 3 நகுமிற்கும் ரூ. 2 அரசாங்கத்திற்கும் கொடுக்கப்படுகிறது.
ஆனால், நகும் ஒரு ஆவணத்திற்கு ரூ.10 வசூலித்து ரூ.5ஐ கமிஷனாகவும் எடுத்துக் கொண்டுள்ளார். இதுதொடர்பாக கிடைத்த புகாரை அடுத்து லஞ்ச தடுப்பு துறையினர் நகுமை கைது செய்துள்ளனர்.
மேலும், நகும் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
டிஜிபி (சட்டம் மற்றும் ஒழுங்கு) மற்றும் ஏசிபி குஜராத் இயக்குனரான ஷம்ஷேர் சிங் கூறறுகையில், "லஞ்சத் தொகை சிறியதாக இருந்தாலும், கிராமப்புறங்களில் அன்றாடம் நடக்கும் ஊழல் நடவடிக்கைகளைத் தடுக்கும் முயற்சியை இது பிரதிபலிக்கிறது" என்றார்.
- மனைவி மற்றும் தாயார் பெயரில் ரூ.1.10 கோடி வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது தெரியவந்தது.
- லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தெலுங்கானா மாநிலம் நிஜாமாபாத் மாநகராட்சி கண்காணிப்பு மற்றும் வருவாய் துறை அதிகாரியாக இருப்பவர் தாசரி நாகேந்திரன்.
இவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்து உள்ளதாக லஞ்ச ஒழிப்பு துறை போலீசாருக்கு பல்வேறு புகார்கள் சென்றன.
நேற்று முன்தினம் இரவு லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் நாகேந்திரன் வீட்டிற்குள் அதிரடியாக புகுந்து சோதனை செய்தனர்.

படுக்கைக்கு அடியில் இருந்த பெட்டியில் ரூ.2.93 கோடி ரொக்கமும், ரூ.6 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள், மனைவி மற்றும் தாயார் பெயரில் ரூ.1.10 கோடி வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது தெரியவந்தது.
மேலும் ரூ.1.98 கோடி மதிப்புள்ள 17 அசையா சொத்துக்கள் வாங்கி இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. தாசரி நாகேந்திரன் வீட்டில் மொத்தம் ரூ 6 கோடி மதிப்பிலான பணம் நகைகள் மற்றும் சொத்துக்கள் இருப்பது தெரிய வந்தது.
இது குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அரசுத் துறைகளில் ஊழல் மற்றும் லஞ்சம் என்பது அதிகளவில் நடக்கிறது.
- சட்டத்திற்கு புறம்பாக பணம் சம்பாதிக்கிறார்கள்.
திருவனந்தபுரம்:
மக்கள் தங்களுக்கு தேவையான பல திட்டங்களை அரசுத்துறைகளின் மூலமாகவே பெறவேண்டி இருக்கிறது. இதனால் அரசுத் துறைகளில் ஊழல் மற்றும் லஞ்சம் என்பது அதிகளவில் நடக்கிறது. அதனைத்தடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தபோதிலும் லஞ்சம் பெறுவது நடந்தபடியே இருக்கிறது.
அரசுத்துறைகளில் பணிபுரியக்கூடியவர்களில் இதுபோன்று லஞ்சம் வாங்கு பவர்கள் தங்களின் பதவி மற்றும் பணிக்கு தகுந்தாற்போல் சட்டத்திற்கு புறம்பாக பணம் சம்பாதிக்கிறார்கள். இந்தநிலையில் கேரள மாநிலத்தில் அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் ஊழலில் ஈடுபடுவதையும், லஞ்சம் வாங்குவதையும் தடுக்க லஞ்ச ஒழிப்பு துறை புதிய திட்டத்தை வகுத்துள்ளது.
தேசிய பாதுகாப்பு தொடர்பான வழக்குகளில், அதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை சிக்க வைப்பதற்காக, அவர்களது செல்போன் உரையாடல்களை காவல்துறை, உளவுத்துறை மற்றும் குற்றப்பிரிவினர் ஒட்டு கேட்கின்றனர்.
அந்த கோரிக்கையை தான் கேரள லஞ்ச ஒழிப்புத்துறை மாநில அரசிடம் கேட்டுள்ளது. கேரள மாநில லஞ்ச ஒழிப்பு துறையின் தலைமை டி.ஜி.பி. யோகேஷ் குப்தா தான் அந்த கோரிக்கையை மாநில அரசிடம் வைத்துள்ளார்.
அதாவது கேரள மாநி லத்தில் உள்ள அனைத்து அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் செல்போன்களை லஞ்ச ஒழிப்பு துறை "ஹேக்" செய்ய அனுமதிக்க வேண்டும் என்பது தான் அவரது கோரிக்கையாக இருக்கிறது.
இதன் மூலமாக ஊழலில் ஈடுபடும் மற்றும் லஞ்சம் வாங்கக்கூடிய அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்களை வழக்கில் சிக்க வைக்க முடியும் என்று லஞ்ச ஒழிப்புத் துறை கேரள மாநில அரசிடம் தெரிவித்திருக்கிறது.
லஞ்ச ஒழிப்பு துறை டி.ஜி.பி.யின் இந்த கோரிக்கையை ஏற்று அரசு அனுமதி வழங்கினால், அரசின் முன் அனுமதியின்றி யாருடைய போனையும் லஞ்ச ஒழிப்பு துறையினர் 7 நாட்களுக்கு "ஹேக்" செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.