search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Anti-narcotics"

    • திருச்செங்கோடு நகராட்சி சார்பில் சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினத்தை ஒட்டி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
    • 500க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். பேரணியை திருச்செங்கோடு நகர்மன்ற தலைவர் நளினி சுரேஷ் பாபு கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

    திருச்செங்கோடு:

    திருச்செங்கோடு நகராட்சி சார்பில் சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினத்தை ஒட்டி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில் 500க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். பேரணியை திருச்செங்கோடு நகர்மன்ற தலைவர் நளினி சுரேஷ் பாபு கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் நடேசன், மாவட்ட வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் சுரேஷ்பாபு, மருத்துவ அணி மாவட்ட துணை அமைப்பாளர் ரவிசங்கர், கே.எஸ்.ஆர் பல் மருத்துவம் மற்றும் ஆராய்ச்சி கல்லூரி முதல்வர் சரத் அசோகன், நர்சிங் கல்லூரி முதல்வர் ருத்ரா மணி, நகர் மன்ற உறுப்பினர்கள் ராதா, சேகர், மகேஸ்வரி, செல்வி ராஜவேல், செல்லம்மாள் தேவராஜன், புவனேஸ்வரி உலகநாதன், தாமரைச் செல்வி மணிகண்டன், திவ்யா வெங்கடேசன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். பழைய பேருந்து நிலையம் அண்ணா சிலை அருகில் இருந்து தொடங்கிய பேரணி 4 ரத வீதிகள் வழியாக சென்றது. பேரணியில் சென்றவர்கள் போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய போர்டுகளை ஏந்தியபடி சென்றனர்.

    • சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கலெக்டர் கிறிஸ்துராஜ் அறிவுறுத்தினார்.
    • தடுத்து அவர்களுக்கு அறிவுரைகளை வழங்குவேன்.

    திருப்பூர் : 

    திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து வீட்டுமனை பட்டா மற்றும் முதியோர் உதவித்தொகை, புதிய குடும்ப அட்டை , சாலை வசதி, குடிநீர் வசதி என பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 448 மனுக்களை பெற்றுக்கொண்டதுடன் மனுதாரர்கள் முன்னிலையிலேயே விசாரணை செய்து அதன் மீது உரிய நடவடிக்கையினை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கலெக்டர் கிறிஸ்துராஜ் அறிவுறுத்தினார்.

    தொடர்ந்து கலெக்டர் தலைமையில் போதைப்பழக்கத்தால் ஏற்படும் தீயவிளைவுகளை நான் முழுமையாக அறிவேன். தான் போதை பழக்கத்திற்கு ஆளாகமாட்டேன், மேலும் எனது குடும்பத்தினரையும் நண்பர்களையும் போதைப்பழக்கத்திற்கு ஆளாக்காமல் தடுத்து அவர்களுக்கு அறிவுரைகளை வழங்குவேன். போதைப்பழக்கத்திற்கு உள்ளானவர்களை மீட்டெடுத்து அவர்களை நல்வழிப்படுத்த எனது பங்களிப்பை முழுமையாக தருவேன்.போதைப்பொருட்களின் உற்பத்தி நுகர்வு பயன்பாடு ஆகியவற்றிற்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளின் மூலம் போதைப்பொருட்களை தமிழ்நாட்டில் வேரறுக்க அரசுக்கு துணை நிற்பேன். மாநிலத்தின் வளர்ச்சிக்கும் மக்களின் நல்வாழ்விற்கும் நான் அர்ப்பணிப்புடன் பங்காற்றுவேன் என்று உளமாற உறுதி கூறுகிறேன் எனஅனைத்துத்துறை அலுவலர்களும் போதைப்பழக்கத்திற்கு எதிரான உறுமொழி எடுத்துக்கொண்டனர்.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்பீம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் லட்சுமணன் ,மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) விஜயராஜ், தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்புத்திட்டம்) செல்வி, உதவி ஆணையர் (கலால்) ராம்குமார், துணை கலெக்டர்கள் மற்றும் அனைத்து அரசுத்துறைகளின் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • போதைப் பொருள்களால் உடலுக்கு ஏற்படும் தீமைகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.
    • போதைப்பொருள்லிருந்து தற்காத்துக் கொள்ளும் வழிமுறைகள் குறித்து மாணவ, மாணவிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டது.

    காங்கயம் :

    காங்கயம் காவல் துறை சாா்பில் போதைப் பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.காங்கயம்- தாராபுரம் சாலையில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு காங்கயம் காவல் உதவி ஆய்வாளா் சந்திரன், பள்ளியின் தலைமை ஆசிரியா் சிவகுமாா் ஆகியோா் தலைமை வகித்தனா்.

    இதில் போதைப் பொருள்கள் ஒழிப்பு குறித்தும், போதைப் பொருள்களால் உடலுக்கு ஏற்படும் தீமைகள் குறித்தும், பாலியல் குற்றங்கள் குறித்தும், அதிலிருந்து தற்காத்துக் கொள்ளும் வழிமுறைகள் குறித்தும் மாணவ, மாணவிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் காங்கயம் போலீசார், காங்கயம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

    ×