என் மலர்
நீங்கள் தேடியது "Anticipatory Bail Petition"
- வேலை வாங்கி தருவதாக மோசடி செய்த சிவகாசி பா.ஜ.க. நிர்வாகி முன்ஜாமீன் மனு செய்யப்பட்டது.
- அதில் இந்த வழக்கிற்கும், தனக்கும் தொடர்பில்லை என்றும் அரசியல் காரணங்களுக்காகவே தன்னை இந்த வழக்கில் சேர்த்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
விருதுநகர்
சிவகாசி நகர பா.ஜ.க. செயலாளர் பாண்டியன் இவரின் மகனுக்கு ரெயில்வேயில் வேலை வாங்கி தருவதற்காக சிவகாசி மேற்கு மாவட்ட தலைவர் சுரேஷ்குமார், மாவட்ட தலைவர் கலையரசன் ஆகியோர் கடந்த 2018-ம் ஆண்டு ரூ.11 லட்சம் பெற்றுக்கொண்டதாக கூறப்படுகிறது.
அதன் பிறகு ரெயில் வேயில் வேலை கிடைக்க வில்லை. இதையடுத்து துறை முகத்தில் வேலை வாங்கி தருவதாக சுரேஷ்குமார் மற்றும் கலையரசன் தெரிவித்துள்ளனர். ஆனால் அந்த வேலையும் கிடைக்கவில்லை.
பணத்தையும் திரும்ப கொடுக்கவில்லை. இதுகுறித்து மாவட்ட குற்றப்பிரிவில் பாண்டியன் அளித்த புகாரின் பேரில் கலையரசன் கைது செய்யப்பட்டார். சுரேஷ்குமாரை தேடி வந்தனர். இந்த நிலையில் முன்ஜாமீன் கேட்டு சுரேஷ்குமார் சிவகாசி கோர்ட்டில் மனுதாக்கல் செய்துள்ளார்.
அதில் இந்த வழக்கிற்கும், தனக்கும் தொடர்பில்லை என்றும் அரசியல் காரணங்களுக்காகவே தன்னை இந்த வழக்கில் சேர்த்துள்ளதாகவும், அதனால் தனக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
- போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முன் ஜாமீன் மனு ஒத்திவைக்கப்பட்டது.
- மனுவை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் ஏற்கனவே தள்ளுபடி செய்தது.
ஸ்ரீவில்லிபுத்தூர்
சிவகாசி அருகே உள்ள சக்தி நகரை சேர்ந்த ரவிச்சந்திரன் என்ற தொழிலதிபரை கடத்தி மிரட்டிய புகார் தொடர்பாக முன்னாள் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. ராஜவர்மன் (வயது 52), தங்கமுனியசாமி(30), நரிக்குடி ஊராட்சி ஒன்றிய துணை தலைவர் ரவிசந்திரன் (53), அவரது மனைவி அங்காள ஈஸ்வரி (50), ஓய்வு பெற்ற டி.எஸ்.பி. ராஜேந்திரன், சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்து மாரியப்பன் ஆகிய 6 பேர் மீது ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீசார் ஆள் கடத்தல், மிரட்டி பணம் பறித்தல், கொலை முயற்சி உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் முன்ஜாமீன் கேட்டு ராஜ வர்மன், தங்கமுனியசாமி, ரவிச்சந்திரன், அங்காள ஈஸ்வரி ஆகியோர் தாக்கல் செய்த மனுவை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் ஏற்கனவே தள்ளுபடி செய்தது.
இந்நிலையில் இந்த வழக்கில் முன்ஜாமீன் கேட்டு போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் முத்து மாரியப்பன் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கை விசாரித்த முதன்மை மாவட்ட நீதிபதி(பொறுப்பு) பூர்ண ஜெய ஆனந்த் 25-ந் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

