என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Anupam Kher"
- சாகித் கபூர், விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ஃபார்சி ['Farzi'] வெப் சீரிஸை பார்த்து அச்சடிக்கப்பட்டுள்ளது.
- ரிசர்வ் பேங் ஆப் இந்தியா என்பதற்கு பதிலாக ரிசோல் பேங் ஆப் இந்தியா என்றும் ஸ்டேட் பேங் ஆப் இந்தியா என்றும் அச்சிடப்பட்டுள்ளது.
குஜராத்தில் பாலிவுட் நடிகர் அனுபம் கேர் புகைப்படத்துடன் அச்சிடப்பட்ட கோடிக்கணக்கில் மதிப்புடைய கள்ளநோட்டுகள் சிக்கியுள்ளது. சாகித் கபூர், விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ஃபார்சி ['Farzi'] வெப் சீரிஸை பார்த்து இன்ஸ்பயர் ஆகி அதில் வருவது போல் ஏமாற்றி பணம் சம்பாதிக்க நினைத்த கும்பல் ஒன்று மகாத்மா காந்திக்கு பதிலாக பாலிவுட் நடிகர் அனுபம் கேரின் படத்தை கொண்ட ரூ.1.30 கோடி மதிப்பிலான 500 ருபாய் கள்ளநோட்டுகளை அச்சடித்துப் பதுக்கிவைத்துள்ளது.
இந்த நோட்டுகளில் ரிசர்வ் பேங் ஆப் இந்தியா என்பதற்கு பதிலாக ரிசோல் பேங் ஆப் இந்தியா என்றும் ஸ்டேட் பேங் ஆப் இந்தியா என்றும் அச்சிடப்பட்டுள்ளது. குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த இந்த கள்ளநோட்டுகளை காவல்துறை தற்போது பறிமுதல் செய்துள்ளனர்.
500 रुपीए नोटों पर गांधी बापू की जगह @AnupamPKher की फोटो !!!अनुपम खेर की तस्वीर वाले 1.30 करोड़ रुपीए देकर 2100 ग्राम गोल्ड की ठगाई अहमदाबाद में बुलियन के कारोबारी से ठगी का हैरतंगेज मामला सामने आया pic.twitter.com/47mPhKLK3v
— Kamit Solanki (@KamitSolanki) September 30, 2024
மேலும் இதுதொடர்பாக சூரத் நகரில் பதுங்கி இருந்த நால்வரை குஜராத் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். பாலிவுட் திரையுலகின் மூத்த நடிகர்களுள் ஒருவரான அனுபம் கேர் நடிப்பில் எமர்ஜென்சி படம் விரைவில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
- அவரை ரசிகர்களாகச் சந்தித்தோம் என கபூர் கூறினார்.
- கபூருடன் வந்த கேர், கிரிக்கெட் வீரரை மிகவும் சிரிக்க வைத்ததாக கூறினார்.
படுகாயமடைந்த ரிஷப் பந்தை நேரில் சந்தித்து நலம் விசாரித்த பாலிவுட் நடிகர்கள்டேராடூன்:
இந்தியாவின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் நேற்று அதிகாலை டெல்லி-டேராடூன் நெடுஞ்சாலையில் தனது சொகுசு கார் சாலையின் நடுவே உள்ள தடுப்பு மீது மோதி விபத்துக்குள்ளானது. அதில் அவர் அதிஷ்டவசமாக உயிர் தப்பினார்.
இந்நிலையில் கார் விபத்தில் காயமடைந்து மேக்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்தை பாலிவுட் நடிகர்கள் அனில் கபூர் மற்றும் அனுபம் கேர் ஆகியோர் சந்தித்தனர்.
அவர் (பண்ட்) நலமாக இருக்கிறார். அவரை ரசிகர்களாகச் சந்தித்தோம். அவர் விரைவில் குணமடைய பிரார்த்திகிறோம். அவர் மீண்டும் விளையாடுவதைப் பார்ப்போம் என்று மருத்துவமனையிலிருந்து வெளியே வந்த பிறகு செய்தியாளர்களிடம் கபூர் கூறினார்.
கபூருடன் வந்த கேர், கிரிக்கெட் வீரரை மிகவும் சிரிக்க வைத்ததாக கூறினார்.
மேலும் அவர், மருத்துவமனையில் பந்த், அவருடைய அம்மா மற்றும் உறவினர்களை சந்தித்தோம். பண்ட் நலமாக இருக்கிறார். அவரை மிகவும் சிரிக்க வைத்தோம்," என்று கூறினார்.
அவரது உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
- மதிப்புமிக்க திரைப்பட விழாவில் போட்டி பிரிவில் இந்த படம் வந்தது சரியானது அல்ல என கருத்து.
- இது குறித்து அவமானம் இப்போ அதிகாரப்பூர்வமானது என்று பிரகாஷ் ராஜ் கருத்து தெரிவித்திருந்தார்.
53வது சர்வதேச கோவா திரைப்பட விழா கோலாகலமாக நடைபெற்று நிறைவடைந்தது. திரைப்பட விழாவில் இயக்குனர் விவேக் அக்னிஹோத்ரி இயக்கிய 'தி காஷ்மீர் பைல்ஸ்' படம் திரையிடப்பட்டது. இப்படத்திற்கு விருதுகள் எதுவும் கிடைக்கவில்லை. எனினும் நிறைவு நாளில் பேசிய தேர்வுக்குழு தலைவரும் இஸ்ரேலிய திரைப்பட இயக்குனருமான நாடவ் லேபிட், தி காஷ்மீர் பைல்ஸ் படம் திரையிடப்பட்டது குறித்து அதிருப்தி தெரிவித்தார்.
அவர் பேசுகையில், ‛தி காஷ்மீர் பைல்ஸ் திரைப்படம் வெறுப்புணர்வை தூண்டும் வகையில் தயாரிக்கப்பட்ட இழிவான திரைப்படம். பிரசார தன்மை கொண்டதாக உள்ளது. இது போன்ற மிகவும் மதிப்புமிக்க திரைப்பட விழாவில் போட்டி பிரிவில் இந்த படம் வந்தது சரியானது அல்ல. இத்திரைப்படத்தை திரையிடப்பட்டதற்கு அதிருப்தியைத் தெரிவித்துக் கொள்கிறோம்' என்றார். அவரது பேச்சு விழாவில் சலசலப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பான வீடியோவும் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேர்வுக்குழுவின் நாடவ் லேபிட்டுக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்புகளும் ஆதரவும் தெரிவித்தனர்.
நாடவ் லேபிட் தெரிவித்த கருத்து குறித்து நடிகர் பிரகாஷ் ராஜ் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருந்தார். அதில், அவமானம் இப்போ அதிகாரப்பூர்வமானது என்று குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் இதுகுறித்து பிரபல ஹாலிவுட் நடிகர் அனுபம் கேர் கருத்து தெரிவித்துள்ளார். அதில், பொய் எவ்வளவு பிரம்மாண்டமாக இருந்தாலும் அது வீழ்ந்துவிடும். உண்மையின் முன்னால் அது தாக்குப் பிடிக்காது என்றார்.
தேர்வுக்குழு தலைவரின் கருத்துக்கு தி காஷ்மீர் பைல்ஸ் பட இயக்குனர் அக்னிஹோத்ரி, ‛உண்மை எப்போதும் பேராபத்தானது. அது சிலரை பொய் பேசவைத்துவிடும்' என அவர் காட்டமாக கூறியது குறிப்பிடத்தக்கது.
- ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் தொடர் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
- காஷ்மீரி பண்டிட் கொல்லப்பட்டதற்கு நடிகர் அனுபம் கெர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஜம்மு:
சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் நடந்து முடிந்துள்ள நிலையில், காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் சந்தேகத்திற்குரிய வகையிலான பயங்கரவாதிகளின் தாக்குதலில் காஷ்மீரி பண்டிட் ஒருவர் உயிரிழந்து உள்ளார் என போலீசார் தெரிவித்தனர்.
இந்த தாக்குதலில் அவரது சகோதரர் காயமடைந்துள்ளார். உயிரிழந்த நபர் சுனில் குமார் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவரது சகோதரர் பிந்து குமார் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில், காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் பொதுமக்கள் கொல்லப்பட்டதற்கு நடிகர் அனுபம் கெர் கண்டனம் தெரிவித்தார்,
இதுதொடர்பாக அவர் கூறுகையில், காஷ்மீரி பண்டிட்கள் மீதான அட்டூழியங்கள் இன்றும் தொடர்வது வெட்கக் கேடானது. பயங்கரவாதிகள் தங்கள் சொந்த மக்களைக் கூட கொன்றுவிடுகிறார்கள். இந்தியாவுடன் நிற்கும் அனைவரையும் அவர்கள் கொன்று விடுகிறார்கள். இது கடந்த 30 ஆண்டுகளாக நடந்துவருகிறது. நீங்கள் எவ்வளவு அதிகமாகக் கண்டிக்கிறீர்களோ, அவ்வளவு குறையும். இந்த தீவிரவாத மனநிலையை நாம் மாற்ற வேண்டும் என தெரிவித்தார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்