search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "apartment fire"

    • மேத்யூஸ், அவரது மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்பட 4 பேரும் மூச்சுத்திணறி பரிதாபமாக இறந்தனர்.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம் நீராட்டுபுரம் பகுதியை சேர்ந்தவர் மேத்யூஸ் முலக்கல் (வயது40). இவரது மனைவி லினி ஆபிரகாம் (38). இவர்களது குழந்தைகள் இரின் (14), இசாக் (9). மேத்யூஸ் மற்றும் அவரது மனைவி குவைத் நாட்டில் வேலை பார்த்து வந்தனர்.

    இதனால் மேத்யூஸ் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் குவைத் அம்பாசியா பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார். மேத்யூஸ் ராய்ட்டர்சில் உள்ள நிறுவனத்திலும், அவரது மனைவி லினி அல் அஹ்மதி கவர்னரேட் பகுதியில் உள்ள மருத்துவமனையில் நர்சாகவும் பணியாற்றினர்.

    அவர்களது குழந்தைகள் குவைத்தில் உள்ள பள்ளியில் படித்து வந்தனர். விடுமுறை கிடைக்கும் போது கேரளாவில் உள்ள சொந்த ஊருக்கு மேத்யூஸ் தனது குடும்பத்தினருடன் வந்து செல்வது வழக்கம். அதேபோல் கடந்த சில நாட்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு குடும்பத்துடன் வந்திருக்கிறார்.

    பின்பு விடுமுறை முடிந்ததையடுத்து குவைத்துக்கு திரும்பினர். மேத்யூஸ், அவரது மனைவி மற்றும் 2 குழந்தைகள் நேற்று மாலை 4 மணியளவில் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள தங்களது வீட்டுக்கு சென்றிருக்கிறார்கள். பின்பு 4 பேரும் வீட்டில் உள்ள படுக்கையறையில் படுத்து தூங்கியிருக்கின்றனர்.

    அப்போது இரவில் அவர்களது வீட்டில் திடீரென தீவிபத்து ஏற்பட்டிருக்கிறது. படுக்கையறையில் தூங்கிக் கொண்டிருந்த அவர்கள், அறை முழுவதும் புகைமூட்டமான பிறகே எழுந்துள்ளனர். ஆனால் அறை முழுவதும் புகையாக இருந்ததால் அவர்களால் வெளியே வர முடிய வில்லை.

    இதனால் மேத்யூஸ், அவரது மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்பட 4 பேரும் மூச்சுத்திணறி பரிதாபமாக இறந்தனர். இந்த தீவிபத்து குறித்து தகவலறிந்ததும் தீயணைப்பு படையினர் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். ஏ.சி.யில் ஏற்பட்ட பழுது காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. அதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சொந்த ஊருக்கு வந்திருந்த மேத்யூஸ் மறறும் அவரது குடும்பத்தினர், நேற்று மாலை 4 மணிக்கு தான் குவைத்துக்கு சென்றிருக்கிறார். இந்நிலையில் இரவு 8 மணிக்கு தனது வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 4 பேரும் பலியாகினர்.

    சொந்த ஊரிலிருந்து குவைத்துக்கு திரும்பிய 4 மணி நேரத்திலேய அவர்கள் பலியாகி விட்டனர். இது கேரளாவில் உள்ள அவர்களது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • குவைத் நாட்டில் இந்தியர்கள் பலர் பணியாற்றி வருகிறார்கள்.
    • பலியானவர்களின் குடும்பத்துக்கு நிதியுதவியை குவைத் அரசாங்கம் அறிவித்துள்ளது.

    குவைத்சிட்டி:

    குவைத் நாட்டில் இந்தியர்கள் பலர் பணியாற்றி வருகிறார்கள். இதற்கிடையே கடந்த 12-ந்தேதி அந்நாட்டின் தெற்கு அகமதி மாகாணத்தில் மங்கப் நகரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 46 இந்தியர்கள் உள்பட 49 பேர் உயிரிழந்தனர்.

    பலியான இந்தியர்களில் கேளராவை சேர்ந்த 23 பேர், தமிழ்நாட்டை சேர்ந்த 7 பேர், ஆந்திரா-உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த தலா 3 பேர், ஒடிசாவைச் சேர்ந்த இருவர், மகாராஷ்டிரா, கர்நாடகா, பீகார், மேற்கு வங்காளம், பஞ்சாப், அரியானா, ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த தலா ஒருவர் அடங்குவர்.

    தமிழ்நாட்டை சேர்ந்த வீராசாமி மாரியப்பன் (தூத்துக்குடி), சின்னதுரை கிருஷ்ணமூர்த்தி (கடலூர்), சிவசங்கர் கோவிந்தன் (சென்னை ராயபுரம்) முகமது ஷெரீப் (திண்டிவனம்), கருப்பணன் ராமு (ராமநாதபுரம்), ராஜூ எபநேசன் (திருச்சி) , ரிச்சர்ட் ராய் (பேராவூரணி) ஆகியோர் இறந்தனர்.

    பலியான இந்தியர்களின் உடல்கள் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டு இறுதிச்சடங்கு செய்யப்பட்டது.

    இந்த நிலையில் தீ விபத்தில் பலியானவர்களின் குடும்பத்துக்கு நிதியுதவியை குவைத் அரசாங்கம் அறிவித்துள்ளது. பலியானவர்களின் குடும்பங்களுக்கு குவைத் அரசாங்கம் தலா 15 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் (சுமார் ரூ. 12.50 லட்சம்) இழப்பீடாக வழங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    குவைத் மன்னர் ஷேக் மெஷல் அல்-அஹ்மத் அல்-ஜாபர் அல்-சபாவின் உத்தரவின் பேரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்கப்படும் என்று அரபு டைம்ஸ் ஊடகம் தெரிவித்துள்ளது.

    • இரண்டு மீட்டர் அகலமான பாதையில் அமைந்துள்ள இக்கட்டிடத்தில் தீ வேகமாக பரவி எரிந்தது.
    • தீ விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வியட்நாமின் ஹனோய் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் நள்ளரவில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது.

    இரண்டு மீட்டர் அகலமான பாதையில் அமைந்துள்ள இக்கட்டிடத்தில் தீ வேகமாக பரவி எரிந்தது. இதனால் தூங்கி கொண்டிருந்தவர்கள் அலறியடித்தப்படி வெளியே ஓடி வந்தனர். ஆனால் சிலர் தீயில் சிக்கி கொண்டனர்.

    தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.


    சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த விபத்தில் 14 பேர் உயிரிழந்தனர். 3 பேர் காயம் அடைந்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    தீ விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


    • பாசில்கான் மரணம் தொடர்பாக அவரது குடும்பத்திற்கு இந்திய தூதரகம் இரங்கல் தெரிவித்துள்ளது.
    • நியூயார்க்கில் உள்ள இந்திய தூதரகம், பாசில்கானின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் தொடர்பில் உள்ளது.

    இந்தியாவை சேர்ந்தவர் பாசில்கான் (27). இவர் அமெரிக்காவில் தி ஹெச்சிங்கர் ஊடகத்தில் பத்திரிகையாளராக பணியாற்றி வந்தார். பாசில்கான், நியூயார்க்கின் ஹார்லெமில் உள்ள அடுக்கு மாடி குடியிருப்பில் வசித்தார். இந்த நிலையில் அந்த அடுக்குமாடி குடியிருப்பில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. இ-பைக் பேட்டரியில் ஏற்பட்ட தீ, குடியிருப்பில் பரவியது. இதனால் அங்கு வசிப்பவர்கள் வெளியேற முயன்றனர். ஆனால் சிலர் தீ, புகை மூட்டத்தில் சிக்கி கொண்டனர். தீ விபத்தில் பாசில்கான் சிக்கி உயிரிழந்தார். தீயில் இருந்து தப்பிக்க 17 பேர் ஜன்னல்கள் வழியாக குதித்தனர். காயம் அடைந்த அவர்களை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    பாசில்கான் மரணம் தொடர்பாக அவரது குடும்பத்திற்கு இந்திய தூதரகம் இரங்கல் தெரிவித்துள்ளது. இதுகுறித்து இந்திய தூதரகம் கூறும்போது, "ஹார்லெமில் உள்ள அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட துரதிர்ஷ்டவசமான தீ விபத்தில் இந்தியாவின் பாசில்கான் இறந்ததைப் பற்றி அறிந்து வருத்தமடைந்தோம். நியூயார்க்கில் உள்ள இந்திய தூதரகம், பாசில்கானின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் தொடர்பில் உள்ளது. அவரது குடும்பத்துக்கு உதவிகளை தொடர்ந்து வழங்குவோம்"என்று தெரிவித்தது.

    தென்கொரியாவில் கத்திக்குத்து தாக்குதலில் 12 வயது சிறுமி உள்பட 5 பேர் ரத்த வெள்ளத்தில் சரிந்து சம்பவ இடத்திலேயே பலியாகினர். #SouthKorea #Apartment #FireAccident
    சியோல்:

    தென்கொரியாவின் ஜியோங்சங் மாகாணத்தில், ஜின்ஜூ நகரில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று உள்ளது. இந்த அடுக்குமாடி குடியிருப்பின் 4-வது தளத்தில் வசித்து வந்த 42 வயதான நபர் ஒருவர் நேற்று காலை தனது வீட்டுக்கு தானே தீவைத்தார். அதன் பின்னர் கத்தியுடன் வீட்டில் இருந்து வெளியேறிய அவர், 2-வது தளத்துக்கு சென்று நின்றார். இதற்கிடையில், அவரது வீட்டில் வைக்கப்பட்ட தீ, அருகில் இருந்த மற்ற வீடுகளுக்கும் பரவியது. இதனால் அந்த வீடுகளில் இருந்தவர்கள் அலறி அடித்துக்கொண்டு கீழே ஓடிவந்தனர். அப்போது, அவர்களை 2-வது தளத்தில் நின்று கொண்டிருந்த அந்த நபர் கத்தியால் சரமாரியாக குத்தினார்.

    இதில் 12 வயது சிறுமி உள்பட 5 பேர் ரத்த வெள்ளத்தில் சரிந்து சம்பவ இடத்திலேயே பலியாகினர். இந்த பரபரப்பு சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் அந்த அடுக்குமாடி குடியிருப்பை சுற்றிவளைத்தனர். பின்னர் 4-வது மாடியில் எரிந்த தீயை அணைத்தனர். அதனை தொடர்ந்து, தாக்குதல் நடத்திய நபரை சுற்றிவளைத்த போலீசார் அவரை துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர். போலீசாரிடம் அவர் தனக்கு சம்பளம் கிடைக்க தாமதமானதால் விரக்தியில் இப்படி செய்ததாக போலீசாரிடம் கூறினார். ஆனால் வேலை எதுவும் பார்க்கவில்லை என்பது விசாரணையில் தெரியவந்தது. எனவே அவர் மனநலம் பாதிக்கப்பட்டவராக இருக்கக்கூடும் என சந்தேகிக்கும் போலீசார், அந்த கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.   #SouthKorea #Apartment #FireAccident 
    சிரியாவில் 4 மாடிகளை கொண்ட குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில், தீயில் கருகி சிறுவர்கள் 7 பேரும் பரிதாபமாக உயிர் இழந்தனர். #Syria #ApartmentFire #Damascus
    டமாஸ்கஸ்:

    சிரியா தலைநகர் டமாஸ்கசின் மத்திய பகுதியில் உள்ள மனாக்லியா என்கிற இடத்தில் 4 மாடிகளை கொண்ட குடியிருப்பு உள்ளது. 4-வது மாடியில் உள்ள ஒரு வீட்டில் ஒரே குடும்பத்தை சேர்ந்த சிறுவர்கள் 7 பேர் இருந்தனர். சற்றும் எதிர்பாராத வகையில் அந்த வீட்டில் திடீரென தீப்பிடித்தது.

    கண்இமைக்கும் நேரத்தில் தீ மளமளவென வீடு முழுவதும் பரவியது. இதனால் சிறுவர்கள் வெளியேற முடியாமல் உள்ளே சிக்கிக்கொண்டனர். தீயில் கருகி சிறுவர்கள் 7 பேரும் பரிதாபமாக உயிர் இழந்தனர். #Syria #ApartmentFire #Damascus 
    அமெரிக்காவின் வடக்கு கரோலினா பகுதியில் உள்ள ஒரு வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி காங்கோவைச் சேர்ந்த 5 குழந்தைகள் உயிரிழந்தனர். #NorthCarolina #apartmentfire

    வாஷிங்டன்: 

    அமெரிக்காவின் வடக்கு கரோலினா பகுதியில் உள்ள ஒரு வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி காங்கோவைச் சேர்ந்த 5 குழந்தைகள் உயிரிழந்தனர். 
    காங்கோவில் இருந்து அகதிகளாக அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்த குடும்பம் ஒன்று வடக்கு கரோலினா பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தது. அவர்கள் தங்கியிருந்த வீட்டில் அதிகாலை 4 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. உடனடியாக அப்பகுதிக்கு விரைந்த தீயணைப்பு துறையினர் போராடி தீயை அணைத்தனர். அந்த தீயில் சிக்கி 2 குழந்தைகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.  மேலும் படுகாயமடைந்த மூன்று குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 



    இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மூன்று குழந்தைகளும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனால் அந்த தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்த 5 குழந்தைகளும் 8 வயதுக்கும் குறைவானவர்கள் என்று கூறப்படுகிறது. #NorthCarolina #apartmentfire
    ×