என் மலர்
நீங்கள் தேடியது "applicants"
- நேர்காணல் 10 இடங்களில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.
- நேர்காணலில்அதிக எண்ணிக்கையில் இளைஞர்கள் குவிந்ததால், கட்டுப்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
குஜராத் மாநிலம், அங்கலேஷ்வரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலைக்கான நேர்காணலுக்காக 500-க்கும் மேற்பட்டோர் திரண்டதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இந்த நேர்காணல் 10 இடங்களில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், அங்கலேஷ்வர் பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நேர்காணலில்அதிக எண்ணிக்கையில் இளைஞர்கள் குவிந்ததால், கட்டுப்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
அங்கலேஷ்வரில் உள்ள ஒரு ஓட்டலில், ரசாயனத் துறையில் பணியிடங்களை நிரப்புவதை நோக்கமாகக் கொண்டு, நிறுவனம் வாக்-இன் நேர்காணலை ஏற்பாடு செய்தது.
பி.இ உட்பட பல்வேறு தகுதிகள் கொண்ட விண்ணப்பதாரர்கள், கெமிக்கல் இன்ஜினியரிங் மற்றும் ஐடிஐ சான்றிதழ்களில், ஷிப்ட் இன்சார்ஜ், பிளாண்ட் ஆபரேட்டர், சூப்பர்வைசர், மெக்கானிக்கல் ஃபில்டர் மற்றும் எக்ஸிகியூட்டிவ் பதவிகள் போன்ற பதவிகளுக்கு கோரப்பட்டது.
இந்த நெரிசலான கூட்டத்தின்போது, ஓட்டலின் வாயிலில் தடுப்புக்காக அமைக்கப்பட்டிருந்த பிடி கம்பி அழுத்தம் தாங்காமல் உடைய, அங்கிருந்த இளைஞர்கள் கீழே விழுந்தனர். இதனால் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.
சம்பவம் நடந்த போதிலும், நிறுவனத்தை அணுகுவதற்கான முயற்சிகள் பலனளிக்கவில்லை. இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
மேலும், இந்த கூட்டம் வேலையில்லா திண்டாட்டத்தை காட்டுவதாக நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.
- தமிழகம் முழுவதும் குரூப்-4 பதவியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்காக இன்று தேர்வு நடைபெற்றது.
- நெல்லை மாவட்டத்தில் இந்த தேர்வை எழுதுவதற்கு 61, 086 பேர் விண்ணப்பத்திருந்தனர்.
நெல்லை:
தமிழகம் முழுவதும் குரூப்-4 பதவியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்காக இன்று தேர்வு நடைபெற்றது.
நெல்லை மாவட்டத்தில் இந்த தேர்வை எழுதுவதற்கு 61, 086 பேர் விண்ணப்பத்திருந்தனர். மாவட்டத்தில் உள்ள 8 தாலுகாக்களிலும் 191 இடங்களில் மொத்தம் 230 மையங்களில் இன்று தேர்வு நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டத்தில் 10 தாலுகாக்களில் 223 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தது. இதற்காக 63,388 பேர் விண்ணப்பித்து இருந்தனர்.
தென்காசி மாவட்டத்தில் 8 தாலுகாக்களில் அமைக்கப்பட்டு இருந்த 237 மையங்களில் 59,700 பேருக்கு தேர்வெழுத அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது.
இந்த 3 மாவட்டங்களிலும் மொத்தம் 690 மையங்களில் நடந்த தேர்வையொட்டி அனைத்து மையங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. ஒவ்வொரு மையத்தில் தேர்வர்களை கண்காணிப்பதற்கு முதன்மை கண்கா–ணிப்பாளர்கள், கண்கா–ணிப்பாளர்கள், நடமாடும் குழுக்கள், வீடியோ பதிவாளர்கள் உள்ளிட்டவர்கள் நியமிக்கப்பட்டு இருந்தனர்.
தேர்வு முறைகேடுகளை தடுப்பதற்காக கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தது. பறக்கும் படையினரும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். வழக்கமாக தேர்வெண் மட்டுமே இருக்கைகளில் ஒட்டப்படும் நிலையில் தற்போது தேர்வர்களின் புகைப்படமும் ஒட்டப்பட்டு இருந்தது.
தேர்வர்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்து வந்திருந்தனர். மையங்களுக்குள் செல்போன்கள், மின்னணு சாதனங்கள், கை கடிகாரம், புத்தகங்கள், குறிப்புகள் உள்ளிட்டவை கொண்டு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது. காலை 8.30 மணி முதல் தேர்வர்கள் மையங்களுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.
பாளையில் உள்ள ஒரு மையத்தில் நடந்த தேர்வினை கலெக்டர் விஷ்ணு பார்வையிட்டார். இதேபோல் தென்காசி மாவட்டத்தில் கலெக்டர் ஆகாஷ், தூத்துக்குடி மாவட்டத்தில் கலெக்டர் செந்தில்ராஜ் ஆகியோர் தேர்வு மையங்களை பார்வையிட்டனர்.
இதனையொட்டி மாவட்டம் முழுவதும் சிறப்பு பஸ்களும் இயக்கப்பட்டன. நெல்லை மாநகர பகுதியில் புதிய பஸ் நிலையத்தில் இருந்து தேர்வு மையங்கள் வழியாக வழக்கமான பஸ்களுடன் கூடுதலாக சில பஸ்களும் இயக்கப்பட்டன.
நெல்லை மாவட்டத்தில் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களில் 50,151 பேர் மட்டுமே தேர்வு எழுதினர். 10,935 பேர் தேர்வு எழுத வரவில்லை.
இதனால் மொத்தத்தில் விண்ணப்பித்தவர்களில் 82 சதவீதம் பேர் மட்டுமே தேர்வு எழுதி உள்ளனர்.
- விழுப்புரம் மாவட்டத்தில் நாளை 207மையங்களில் டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வை 68,244 பேர் எழுதுகின்றனர்.
- விழுப்புரம், செஞ்சி, கண்டாச்சிபுரம், மரக்காணம், மேல்மலையனூர், திருவெண்ணைநல்லூர், திண்டிவனம், வானூர், விக்கிரவாண்டி ,உள்ளிட்ட 9 வட்டங்களில் தேர்வு நடக்கிறது.
விழுப்புரம்:
டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்ப செயல்முறையை கடந்த ஏப்ரல் 28 ஆம் தேதி முடிவடைந்தது. குரூப் 4 தேர்வுக்கு இதுவரை சுமார் 21.85 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது. அந்த தகவலின்படி, ஆண் விண்ணப்பதா ரர்கள் சுமார் 9,26,583 பேரும், பெண் விண்ண ப்பதாரர் 12,58,616 பேரும், 129 பேர் மூன்றாம் பாலினத்தவர்களும் அடங்குவார்கள். விழுப்பு ரம்மாவட்டத்தில் 207தேர்வு மையங்களில் 68244 பேர் நாளை தேர்வு எழுத உள்ளனர் விழுப்புரம் மாவட்டத்தில் 9 வட்டங்களில் தேர்வு நடைபெற உள்ளது. அதன் விவரம் வருமாறு:-
விழுப்புரம், செஞ்சி, கண்டாச்சிபுரம், மரக்காணம், மேல்மலையனூர், திருவெண்ணைநல்லூர், திண்டிவனம், வானூர், விக்கிரவாண்டி ,உள்ளிட்ட 9 வட்டங்களில் தேர்வு நடக்கிறது. தேர்வுக்கான ஏற்பாடுகளை விழுப்புரம் மாவட்டவருவாய் அலுவலரும் மாவட்ட ஆட்சியரும் பொறுப்பு பரமேஸ்வரிசெய்து வருகிறார்,தேர்வு மையங்களுக்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் விழுப்புரம் ஒன்றியம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றது.
- நகர் ஊரமைப்புத்துறை அலுவலர்களுக்கு ஆன்-லைன் சிறப்பு பயிற்சி முகாம் தொடங்கப்பட்டது.
- முகாம் ஏற்பாடுகளை விழுப்புரம் மாவட்ட நகர் ஊரமைப்புத்துறை உதவி இயக்குநர் உமாராணி, கண்காணிப்பாளர் மான்சிங் மற்றும் அலுவலர்கள் செய்திருந்தனர்.
விழுப்புரம்:
விழுப்புரம் அரசு மருத்துவமனை சாலையில் உள்ள நகர் ஊரமைப்புத்துறை அலுவலகத்தில், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் கடலுார் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த அலுவலர்களுக்கு பயிற்சி முகாம் தொடங்கியது. இதனை இணை இயக்குநர் சங்கரமூர்த்தி தொடங்கி வைத்தார்.
மேலும், இணையதளம் வாயிலாக மனைப்பிரிவுகளுக்கு விண்ணப்பித்தல், கோப்புகளின் மீது நடவடிக்கை எடுத்தல் மற்றும் அரசுக்கான கட்டணங்களை செலுத்துதல், அரசு உத்தரவு வழங்குதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் குறித்து, அலுவலக பணியாளர்கள் மற்றும் விண்ணப்பதாரர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.முகாம் ஏற்பாடுகளை விழுப்புரம் மாவட்ட நகர் ஊரமைப்புத்துறை உதவி இயக்குநர் உமாராணி, கண்காணிப்பாளர் மான்சிங் மற்றும் அலுவலர்கள் செய்திருந்தனர்.
தமிழகம் முழுவதும் உள்ள 564 என்ஜினீயரிங் கல்லூரிகளில் பி.இ., பி.டெக். படிப்புகளில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட இடங்கள் உள்ளன. இந்த இடங்களில் அரசு ஒதுக்கீட்டுக்கு 65 சதவீதமும், நிர்வாக ஒதுக்கீட்டுக்கு 35 சதவீதம் ஒதுக்கப்பட்டுள்ளன. சிறுபான்மையினர் கல்லூரியாக இருந்தால் அரசு ஒதுக்கீட்டுக்கும், நிர்வாக ஒதுக்கீட்டுக்கும் தலா 50 சதவீதம் இடங்கள் ஆகும்.
அரசு ஒதுக்கீட்டு இடங்களில் மாணவர்கள் சேருவதற்கு அண்ணா பல்கலைக்கழகம் கலந்தாய்வு நடத்தி வருகிறது. இந்த ஆண்டு என்ஜினீயரிங் படிப்புக்கான கலந்தாய்வு ஆன்-லைன் மூலம் நடத்தப்படும் என்று உயர்கல்வி துறை அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார். அதேபோல், என்ஜினீயரிங் படிப்பில் சேருவதற்கு ஆன்-லைன் மூலம் விண்ணப்பிக்கவும் அறிவுறுத்தப்பட்டு இருந்தது.
அதன்படி, கடந்த மாதம் (மே) 3-ந் தேதி ஆன்-லைன் மூலம் மாணவ-மாணவிகள் விண்ணப்பிக்க தொடங்கினார். இதன் மூலம் அவர்கள் வீட்டில் இருந்த படியே இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். அப்படி இணையதள வசதி இல்லாதவர்களுக்கு என்று தமிழகத்தில் 42 உதவி மையங்கள் தொடங்கப்பட்டன. அதிலும் மாணவ-மாணவிகள் என்ஜினீயரிங் படிப்பில் சேருவதற்கு விண்ணப்பித்தனர்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் கடந்த மாதம் 30-ந் தேதி என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் பிரச்சினை காரணமாக கடந்த சில நாட்களுக்கு கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் இணையதள சேவை முடக்கப்பட்டதால், அந்த பகுதியில் இருந்து என்ஜினீயரிங் படிப்பில் சேருவதற்கு விண்ணப்பிப்பவர்களுக்காக காலஅவகாசத்தை நீட்டியது.
அந்தவகையில், நேற்று கடைசி நாளாக அறிவிக்கப்பட்டு இருந்தது. கடந்த மாதம் 31-ந் தேதி வரை ஒரு லட்சத்து 40 ஆயிரம் விண்ணப்பங்கள் வந்திருந்தன. கடைசி நாள் நேற்றுடன் முடிவடைந்த நிலையில், நேற்று இரவு 8 மணி நிலவரப்படி ஒரு லட்சத்து 52 ஆயிரம் பேர் விண்ணப்பித்து இருந்தனர். இரவு 12 மணி வரை நேரம் இருப்பதால், ஒரு லட்சத்து 59 ஆயிரம் பேர் வரை விண்ணப்பிக்க வாய்ப்பு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடந்த ஆண்டு என்ஜினீயரிங் படிப்பில் சேருவதற்கு ஒரு லட்சத்து 41 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதன்படி பார்த்தால், இந்த ஆண்டு என்ஜினீயரிங் படிப்பில் சேருவதற்கு விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து இருக்கிறது.
விண்ணப்பிப்பதற்கான பணிகள் முடிந்துள்ள நிலையில், விண்ணப்பதாரர்களின் அசல் சான்றிதழ்கள் சரிபார்க்கும் பணி வருகிற 8-ந் தேதி முதல் 14-ந் தேதி வரை நடைபெற இருக்கிறது. என்ஜினீயரிங் படிப்புக்கான கலந்தாய்வு, மருத்துவ கலந்தாய்வு கால அட்டவணைக்கு ஏற்ப தீர்மானிக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.