என் மலர்
நீங்கள் தேடியது "Application must be completed and submitted"
- வருகிற 14-ந் தேதி நடக்கிறது
- கலெக்டர் தகவல்
வேங்கிக்கால்:
திருவண்ணாமலையில் பள்ளி மாணவர்களுக்கான அண்ணா சைக்கிள் போட்டி வருகிற 14-ந் தேதி காலை 7 மணிக்கு நடைபெற உள்ளது.
போட்டியில் 13 வயது முதல் 17 வயது உள்ளவர்கள் வரை கலந்துகொள்ளலாம். இதில் முதல் பரிசாக ரூ.5 ஆயிரம், 2-வது பரிசாக ரூ.3 ஆயிரம், 3-வது பரிசாக ரூ.2 ஆயிரம் வழங்கப்படும். 4 முதல் 10-ம் இடம் வரை பிடிப்பவர்களுக்கு பரிசாக தலா ரூ.1000 வழங்கப்படும்.
போட்டியில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் பிறப்பு சான்று, ஆதார் அட்டை, வங்கி கணக்கு புத்தகத்தின் நகலுடன், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலகத்தில் வழங்கப்படும் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து வழங்க வேண்டும்.
போட்டி குறித்து கூடுதல் தகவல்களை பெற 04175 233169 என்ற தொலைபேசி எண்ணில் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலரை தொடர்பு கொண்டு தகவல்களை பெறலாம் என கலெக்டர் பா.முருகேஷ் தெரிவித்தார்.