என் மலர்
நீங்கள் தேடியது "Appointment of DMK"
- வாடிப்பட்டி பேரூராட்சியில் சபை உறுப்பினர்களாக தி.மு.க.வினரை நியமித்ததால் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் போராட்டம் நடத்தினர்.
- இதில் தி.மு.க. 10 வார்டுகளிலும் 1வார்டில் சுயேட்சையும், 7 வார்டுகளில் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணி செய்து வருகின்றனர்.
வாடிப்பட்டி
வாடிப்பட்டி பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. இதில் தி.மு.க. 10 வார்டுகளிலும் 1வார்டில் சுயேட்சையும், 7 வார்டுகளில் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணி செய்து வருகின்றனர்.
உள்ளாட்சி தினத்தை யொட்டி வாடிப்பட்டி பேரூராட்சியில் உள்ள 18 வார்டுகளிலும் நேற்று வார்டு சபை கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் வார்டுசபைகூட்டம் நடத்த அந்தந்தவார்டு கவுன்சிலர்கள் தலைவ ராகவும், அலுவலக பணியாளர் ஒருவர் செயலாளராகவும், பொதுமக்களில் 3பேர் சபைஉறுப்பினராகவும் நியமனம் செய்து கூட்டம் நடத்தவேண்டும்.
வாடிப்பட்டி பேரூரா ட்சியில் 18 வார்டுகளிலும் சபை உறுப்பினர்களாக பொதுமக்களில் இருந்து நியமனம் செய்யப்பட்ட 3பேரும் தி.மு.க.வினராக தேர்வுசெய்யப்ப ட்டுள்ளதை அறிந்த அ.தி.மு.க. கவுன்சிலர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதையடுத்து நேற்று நடந்த வார்டுசபைகூட்டத்தை அ.தி.மு.க.கவுன்சிலர்கள் இளங்கோவன், கீதா, சூர்யா, ப்ரியதர்ஷனி, பஞ்சவர்ணம், வெங்கடேசுவரி, அசோக்குமார் ஆகியோர் கூட்டத்தை புறக்கணித்து பேரூராட்சிஅலுவலகம் முன்பு வாயில் கருப்பு துணிகட்டி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
இது குறித்து கவுன்சிலர் இளங்கோவன் கூறுகையில், வார்டுசபைகூட்டத்திற்கு நியமனம் செய்யப்பட்ட 3உறுப்பினர்களில் ஒருவர்கூட பெண்கள் இல்லை. அனைவரும் தி.மு.க.வை சேர்ந்தவர்கள். எனவே இந்தகூட்டத்தை அ.தி.மு.க. கவுன்சிலர்கள் புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டம் செய்கிறோம் என்றார். அதன் பின் பேரூராட்சி செயலர் சண்முகத்திடம் மனு கொடுத்தனர்.