என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "appreciate"
- தம்பதியர் இடையே, சரியான புரிதல் இருந்தால், வாழ்க்கையில் எந்த பிரச்னையும் இருக்காது.
- கருத்து வேறுபாடு இல்லாத குடும்பம் இருக்காது.
திருப்பூர் :
திருப்பூர் அமர்ஜோதி நகர் மனவளக்கலை மன்ற அறக்கட்டளை சார்பில் மனைவி நல வேட்பு விழா, மணி மஹாலில் நடந்தது. மனவளக்கலை மன்ற அறக்கட்டளை தலைவர் ஈஸ்வரன் வரவேற்றார்.
மேயர் தினேஷ்குமார், உலக சமுதாய சேவா சங்க மண்டல தலைவர் கருணாநிதி, அறக்கட்டளை செயலாளர் துரைசாமி ஆகியோர் பேசினர். முதுநிலை பேராசிரியர் விவேகானந்தன், தம்பதியர் உயிர்க்கலப்பு தவம் நிகழ்த்தினார்.சச்சிதானந்தா ஜோதி நிகேதன்பன்னாட்டுப்பள்ளி செயலாளர் கவிதாசன் பேசியதாவது:- திருமணமான பிறகே சமுதாயத்தில் மதிக்கப்படும் நிலை உருவாகிறது.வாழ்க்கை சிறப்பாக மாற்றப்படுகிறது. மனைவி ஒரு பல்கலைக்கழகம். குடும்பம் சிறப்பாக இருக்க, மனைவி சிறப்பாக இருக்க வேண்டும்.தம்பதியர் இடையே, சரியான புரிதல் இருந்தால், வாழ்க்கையில் எந்த பிரச்னையும் இருக்காது. கருத்து வேறுபாடு இல்லாத குடும்பம் இருக்காது. இருந்தாலும் கூட, பரஸ்பரம் விட்டுக்கொடுத்து வாழ கற்றுக்கொள்ள வேண்டும். மனநிறைவுடன் வாழ கற்றுக்கொள்ள வேண்டும்.
சட்டம் பேசுபவர் வழக்கு நடத்தலாம். வாழ்க்கை நடத்த முடியாது. குடும்பத்துக்காக தன்னையே அர்ப்பணித்துக்கொண்ட மனைவியை கணவன் மனதார பாராட்டினால், பிரச்னையே இருக்காது. வாரம் ஒருமுறையாவது பாராட்டினால் வாழ்க்கை இனிமையாக அமையும்.தொழிலில் வெற்றியடைந்தவன் வாழ்வே முழுமை பெறும். அதற்கு மனைவியின் உறுதுணை அவசியம். இவ்வாறு அவர் பேசினார்.
பீளமேடு:
கோவை பீளமேடு மசக்காளி பாளையத்தில் பாரதீய ஜனதா பொதுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பாரதீய ஜனதா தேசிய செயலாளர் எச். ராஜா பேசியதாவது-
கும்பாபிஷேகம் நடத்துவது ஆன்மீகம். அதனை இந்து சமய அறநிலைய அதிகாரிகள் தெரிந்து கொள்ள வேண்டும். இந்து கோவில் சொத்து பல இடங்களில் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. மோடி குறித்து மு.க. ஸ்டாலின் பேசியதற்கு கண்டனம் தெரிவிக்கிறேன். கருணாநிதிக்காக பாராளுமன்றத்தில் இரு அவைகளிலும் அஞ்சலி செலுத்திய தலைவர் மோடி. கருணாநிதி சிலையை திறக்க சோனியாவை அழைத்தது ஏன். இலங்கையில் பல லட்சம் தமிழர்களை கொன்று குவித்தவர்கள் தமிழின துரோகிகள்.
சர்ச்சை பேச்சு இருந்தால்தான் அறிவு வளரும். உண்மையை சொன்னால் என்னை தேச விரோதிகள் என பலர் குற்றம் சாட்டுகின்றனர். 1 கோடியே 89 லட்சம் பயனாளிகள் முத்ரா திட்டத்தில் பயன் பெற்று உள்ளனர். பிரதம மந்திரி வீட்டு வசதி திட்டத்தில் 4.5 லட்சம் வீடுகள் கட்டிதரப்பட்டுள்ளன.
வீடு தோறும் கழிப்பறை வசதி நாடு முழுவதும் 7 கோடியே 69 லட்சத்தில் கட்டித்தரப்பட்டுள்ளது. மின் வெட்டு இல்லை என்ற நிலை உருவாக்கியது மத்திய மின் திட்டத்தின் மூலமே தான். பயிர் காப்பீட்டு மூலம் ஏராளமான விவசாயிகள் பயன் பெற்று வருகின்றனர். 300 ரூபாய்க்கு 30 ஆயிரம் வரை பசு மாட்டுக்கு இன்சூரன்ஸ் வழங்கி உள்ளனர். ஆர்.கே. நகர் போல் 234 தொகுதிகளிலும் தி.மு.க. தோல்வி அடையும். பாஜக வில் பல முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் சேர்ந்துள்ளனர். கோவில்களில் முறைப்படி பூஜை பரிகாரங்கள் செய்ய வில்லை எனில் கோவிலை இந்துக்களிடம் கொடுக்க வேண்டும்.
சிலை மீட்பு விவகாரத்தில் பொன்.மானிக்கவேல் சிறப்பாக செயல்படுகிறார். அவர் மீது புகார் கூற சில அதிகாரிகள் வரிசை கட்டி நிற்கின்றனர். இறுதியில் தர்மமே வெல்லும். தி.மு.க. கூட்டணி தானாகவே உடைந்து போகும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கோவை கவுண்டம் பாளையம் தொகுதிக்குட் பட்ட பாரதீய ஜனதா பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் கூட்டம் நடைபெற்றது. கவுண்டம்பாளையம் தொகுதி அமைப்பாளர் எஸ்.ஆர்.தாமு தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் கலிவரதன் முன்னிலை வகித்தார். மண்டல தலைவர் வினோ வரவேற்று பேசினார்.
இதில் கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசும்போது, தினமும் 2 மணி நேரம் பொதுமக்களை சந்தித்து மத்திய அரசின் சாதனைகளை பற்றி எடுத்துரைக்க வேண்டும். மத்திய அரசின் திட்டத்தால் பயன் அடைந்தவர்களை முதலில் சந்தித்து அவர்கள் கருத்துகளை அடுத்தவர்களுக்கு எடுத்து சொல்ல வேண்டும். 435 பூத் கமிட்டி உறுப்பினர்களும் 3 முதல் 4 பேராக சென்று தகவல்களை பரிமாற வேண்டும்.
உங்கள் பூத் கமிட்டியில் உள்ள பொதுமக்கள் எண்ணங்களை புரிந்து செயல்பட வேண்டும் என பேசினார். கூட்டத்தில் முன்னாள் எம்.பி. கார்வேந்தன், கோட்ட அமைப்பு செயலாளர் சதீஷ்குமார், மாவட்ட தலைவர் நந்தகுமார், மாநில செயற்குழு உறுப்பினர் செங்கை வாசு, மாவட்ட பொதுசெயலாளர்கள் செல்வராஜ், ரமேஷ்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர். #hraja #ponmanickavel
திருப்பூர் அருகே உள்ள நாச்சிபாளையத்தை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 34). பனியன் தொழிலாளி. சம்பவத்தன்று இவர் தனது மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு புறப்பட்டார்.
அப்போது, வழியில் இருந்த, டாஸ்மாக் மதுக்கடை அருகே சென்ற போது நடுரோட்டில் ஒரு கவர் கிடந்தது. அதைப்பார்த்து சந்தேகம் அடைந்த செந்தில்குமார் மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு கவரை எடுத்து பிரித்து பார்த்தார். அதில் கட்டுக்கட்டாக பணம் இருந்தது. பணத்தை கண்டெடுத்தது குறித்து திருப்பூர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தார்.
அருகில் உள்ள போலீஸ் நிலையத்தில் பணத்தை ஒப்படைக்குமாறு கமிஷனர் அலுவலகத்தில் இருந்து அறிவுறுத்தப்பட்டது. இதையடுத்து ரூரல் போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரனிடம், பணம் இருந்த கவரை செந்தில்குமார் ஒப்படைத்தார். சப்-இன்ஸ்பெக்டர் கவரை பெற்று பணத்தை எண்ணிப்பார்த்தபோது அதில் ரூ.2 லட்சம்இருந்தது.
நடுரோட்டில் கிடந்த பணத்தை, நேர்மையுடன் போலீசிடம் ஒப்படைத்த, செந்தில்குமாரை போலீசார் பாராட்டினர். மேலும், அவருக்கு பரிசு வழங்கி கவுரவப்படுத்த, போலீசார் கமிஷனர் அலுவலகத்துக்கு, பரிந்துரைத்தனர்.
பணத்தை கண்டெடுத்த செந்தில்குமார் கூறும்போது, யாரோ உழைத்து சம்பாதித்த பணம். தவறவிட்டனர் என்பதற்காக நான் வைத்துக்கொள்வது நியாயமில்லை. இதனால் பணத்தை போலீசில் ஒப்படைத்தேன் என்று கூறினார். ரூ.2 லட்சம் தவற விட்டவர்கள் உரிய ஆதாரங்களை திருப்பூர் ரூரல் போலீசில் காண்பித்து பணத்தை பெற்றுக்கொள்ளலாம் என்று போலீசார் அறிவித்து உள்ளனர்.
சென்னையில் பெண் டாக்டரிடம் சங்கிலி பறித்த கொள்ளையனை பிடித்து கொடுத்த வாலிபருக்கு தனியார் நிறுவனத்தில் ஏ.சி. மெக்கானிக் வேலை கிடைத்துள்ளது. போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் இதற்கான ஏற்பாட்டை செய்துள்ளார்.
சென்னை அண்ணாநகர் டி பிளாக்கில் வசிப்பவர் டாக்டர் அமுதா (வயது 50). கடந்த ஏப்ரல் மாதம் 17-ந்தேதி தனது கிளினிக்கில் டாக்டர் அமுதா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துக் கொண்டிருந்தார். அப்போது அவரிடம் சிகிச்சை பெறுவதுபோல் வந்த ஒருவர் திடீரென்று கத்தியைக்காட்டி மிரட்டினார்.
டாக்டர் அமுதாவின் கழுத்தில் கிடந்த 10 பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பி ஓடினார். அதிர்ச்சியடைந்த டாக்டர் அமுதா கூச்சல் போட்டுக்கொண்டே கொள்ளையனை விரட்டிச் சென்றார். அப்போது அங்கு வந்த சூர்யா என்ற இளைஞர் தங்க சங்கிலியை பறித்துச் சென்ற கொள்ளையனை விரட்டிச்சென்று மடக்கிப்பிடித்தார்.
பின்னர் அந்த கொள்ளையன் அண்ணாநகர் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். விசாரணையில் அந்த கொள்ளையன் திருவள்ளூர் மாவட்டம் கண்டிகையை சேர்ந்த ஜானகிராமன் (26) என்பது தெரியவந்தது. அவரை கைது செய்து, 10 பவுன் சங்கிலியையும் மீட்டனர்.
கொள்ளையனை பிடித்த சூர்யாவை தனது அலுவலகத்திற்கு நேரில் வரவழைத்து போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் பாராட்டு தெரிவித்தார். சூர்யா தனக்கு வேலை இல்லை என்றும், ஆனால் ஏ.சி.மெக்கானிக் தொழில் தெரியும் என்றும் போலீஸ் கமிஷனரிடம் கூறினார்.
உரிய வேலை வாங்கித்தருவதாக சூர்யாவுக்கு கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் வாக்குறுதி அளித்தார். அந்த வாக்குறுதி நேற்று நிறைவேற்றப்பட்டது.
கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் ஏற்பாட்டின்பேரில் சென்னை டி.வி.எஸ். நிறுவனத்தில் சூர்யாவுக்கு ஏ.சி.மெக்கானிக் வேலை கிடைத்தது. இதற்கான பணி நியமன ஆணையை டி.வி.எஸ். நிறுவனத்தின் பொது மேலாளர் சீனிவாசன் போலீஸ் கமிஷனர் முன்னிலையில் சூர்யாவிடம் நேற்று வழங்கினார்.
மேலும், சூர்யாவுக்கு பாராட்டு தெரிவித்து எஸ்.ஆர்.எம்.குழுமத்தின் சேர்மன் ரவிபச்சமுத்து ரூ.1 லட்சம் வழங்கினார். சென்னை டவர்ஸ் ரோட்டரி சங்கம் சார்பில் சூர்யாவுக்கு ரூ.2 லட்சம் வழங்கப்பட்டது. இதுதொடர்பான வங்கி காசோலைகளும் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் முன்னிலையில் சூர்யாவிடம் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் கூடுதல் கமிஷனர் ஜெயராம், சாரங்கன், இணை கமிஷனர் விஜயகுமாரி, அண்ணாநகர் துணை கமிஷனர் டாக்டர் சுதாகர் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்