search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Aquarium"

    • ஆறுகளில் நாட்டு இன நன்னீர் மீன் குஞ்சுகள் இருப்பு செய்யும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
    • காவிரி கொள்ளிடம் ஆற்றில் 40 ஆயிரம் நாட்டு இன மீன் குஞ்சுகள் ஆற்றில் விடப்பட்டது.

    கும்பகோணம்:

    அணைக்கரை கொள்ளிடம் ஆற்றில் உள்நாட்டு மீன்வளம் அதிகரிக்க செய்தல் திட்டம் சார்பில் 40,ஆயிரம் மீன் குஞ்சுகளை அரசு தலைமை கொறடா கோவி.செழியன் தொடங்கி வைத்தார்.

    திருப்பனந்தாள் ஒன்றியம் அணைக்கரை கொள்ளிடம் ஆற்றில் பிரதான் மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டம், தமிழ்நாடு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் மூலம் மத்திய அரசின் தேசிய மீன்வள மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் ஆறுகளில் நாட்டு இன நன்னீர் மீன் குஞ்சுகள் இருப்பு செய்யும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி காவிரி கொள்ளிடம் ஆற்றில் 40 ஆயிரம் நாட்டு இன மீன் குஞ்சுகள் ஆற்றில் விடப்பட்டது.

    அழிவின் நிலையில் உள்ள நாட்டு மீன் குஞ்சுகளான கட்லா, ரோகு, மிர்கால், சேல் கெண்டை, கல்பாசு போன்ற நாட்டு மீன் குஞ்சுகள் விடும் பணி காவிரி கொள்ளிடம் ஆற்றில் அரசு தலைமை கொறடா கோவி செழியன் தலைமையில் நடைபெற்றது.

    இதுகுறத்து அரசு கொறடா கோவி.செழியன் பேசியதாவது:-

    இந்த திட்டத்தின் மூலம் ஆற்றில் நாட்டின மீன் உற்பத்தி ஆண்டிற்கு 20 டன் கூடுதலாக உற்பத்தியாவதற்கு வாய்ப்பு உள்ளது.இப்பகுதியில் மீன்பிடித் தொழில் செய்யும் மீனவ ர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும், பொது மக்களுக்கு நாட்டின மீன்கள் கிடைக்கப் பெறுவதற்கு வழி வகுப்போடு, அழிவின் விளிம்பு நிலையில் உள்ள நாட்டின மீன்களை பாதுகாப்பதற்காகவும், இத்திட்டம் செயல்படுத்த ப்படுகிறது.

    மேலும் கல்லணையில் இருந்து காவேரி அரசலாறு தலைப்பு வரை 205 கி.மீ. தூரம் வரை பாய்ந்து செல்லும் காவிரி வெண்ணாறு, வெட்டாறு ஆற்றில் ஒரு கி.மீ. தூரத்திற்கு 2000 நாட்டு மீன் குஞ்சுகள் என 205 கி.மீட்டருக்கு 5 லட்சத்து நாட்டின மீன் குஞ்சுகள் விடப்பட்டன. என்று தெரிவித்தார்.

    முன்னதாக ராமலிங்கம் எம்.பி. கலந்து கொண்டு மீனவர்களுக்கு அடையாள அட்டை மீன் உரம் வழங்கினார்.

    நிகழ்ச்சியில் நாகப்பட்டி னம் மீன்வள மற்றும் மீனவர் நலத்துறை இணை இயக்குனர் இளம்வழுதி, உதவி இயக்குனர் சிவகுமார், திருப்பனந்தாள் ஒன்றிய குழு துணைத் தலைவர் கோ.க அண்ணாதுரை, ஒன்றிய செயலாளர்கள் உதயச ந்திரன், மிசா மனோகரன் மாவட்ட பிரதிநிதி சண்முகம் ஊராட்சி மன்ற தலைவர்கள் அஞ்சம்மாள் பசுபதி, மணலூர் குமார், அசோகன், அன்சாரி மற்றும் நிர்வாகிகள், மீன்வள நலத்துறை அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    ×