என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "aravind kejriwal"

    • அதிஷிக்கு டெல்லி துணை நிலை ஆளுநர் வி.கே. சக்சேனா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
    • அதிஷியுடன் 5 பேர் அமைச்சர்களாக பதவி ஏற்றுக்கொண்டனர்.

    டெல்லி மதுபான கொள்கை வழக்கில் ஜாமின் பெற்ற அரவிந்த் கெஜ்ரிவால் பின்னர் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.

    பிறகு டெல்லியின் புதிய முதல்வராக அதிஷி பதவியேற்பார் என அறிவிக்கப்பட்டது.

    இந்நிலையில், டெல்லியின் புதிய முதலமைச்சராக அதிஷி இன்று பதவியேற்றுக் கொண்டார்.

    அதிஷிக்கு டெல்லி துணை நிலை ஆளுநர் வி.கே. சக்சேனா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

    அதிஷியுடன் சௌரம் பரத்வாஜ் உள்ளிட்ட 5 பேர் அமைச்சர்களாக பதவி ஏற்றுக்கொண்டனர்.

    இந்த பதவியேற்பு விழாவில் கெஜ்ரிவால் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.

    • டெல்லியின் புதிய முதலமைச்சராக அதிஷி இன்று பதவியேற்றுக் கொண்டார்.
    • அதிஷிக்கு டெல்லி துணை நிலை ஆளுநர் வி.கே. சக்சேனா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

    டெல்லி மதுபான கொள்கை வழக்கில் ஜாமின் பெற்ற அரவிந்த் கெஜ்ரிவால் பின்னர் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.

    பிறகு டெல்லியின் புதிய முதல்வராக அதிஷி பதவியேற்பார் என அறிவிக்கப்பட்டது.இந்நிலையில், டெல்லியின் புதிய முதலமைச்சராக அதிஷி இன்று பதவியேற்றுக் கொண்டார்.

    அதிஷிக்கு டெல்லி துணை நிலை ஆளுநர் வி.கே. சக்சேனா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். அதிஷியுடன் சௌரம் பரத்வாஜ் உள்ளிட்ட 5 பேர் அமைச்சர்களாக பதவி ஏற்றுக்கொண்டனர்.

    முதல்வராக பதவியேற்ற பின்பு அரவிந்த் கெஜ்ரிவால் காலில் விழுந்து அதிஷி ஆசீர்வாதம் வாங்கினார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

    • அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.
    • டெல்லியின் புதிய முதலமைச்சராக அதிஷி பதவியேற்று கொண்டார்.

    டெல்லி மதுபான கொள்கை வழக்கில் ஜாமின் பெற்ற அரவிந்த் கெஜ்ரிவால் பின்னர் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.

    இதனையடுத்து, டெல்லியின் புதிய முதலமைச்சராக அதிஷி பதவியேற்று கொண்டார்.

    இந்நிலையில் டெல்லி முதல்வர் அதிஷி தனது எக்ஸ் ஒரு புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார். அப்புகைப்படத்தில் முதல்வர் நாற்காலியில் அதிஷி அமர்ந்துள்ளார். பக்கத்தில் இன்னொரு காலி நாற்காலி போடப்பட்டுள்ளது.

    அவரது பதிவில், "தனது சகோதரர் ராமர் வனவாசத்திற்கு சென்றபோது எந்த வலியுடன் அயோத்தியை பரதர் ஆட்சி செய்தாரோ, அதே வலியுடன் டெல்லியின் முதலமைச்சராக பொறுப்பேற்றேன். ராமரின் செருப்பை வைத்து பரதர் எப்படி 14 ஆண்டுகள் ஆட்சி செய்தாரோ, அதே போல 4 மாதங்கள் டெல்லியை ஆட்சி செய்வேன்" என்று பதிவிட்டுள்ளார். 

    • அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.
    • டெல்லியின் புதிய முதலமைச்சராக அதிஷி பதவியேற்று கொண்டார்.

    டெல்லி மதுபான கொள்கை வழக்கில் ஜாமின் பெற்ற அரவிந்த் கெஜ்ரிவால் பின்னர் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். இதனையடுத்து, டெல்லியின் புதிய முதலமைச்சராக அதிஷி பதவியேற்று கொண்டார்.

    முதல்வர் பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து முதன்முறையாக டெல்லி சட்டசபையில் இன்று அரவிந்த் கெஜ்ரிவால் உரையாற்றினார்.

    அப்போது பேசிய கெஜ்ரிவால், "என்னையும் மணீஷ் சிசோடியாவையும் இங்கு பார்த்து எதிர்க்கட்சியில் உள்ளவர்கள் வருத்தப்படுவார்கள். பிரதமர் மோடி சக்தி வாய்ந்தவர், ஆனால் அவர் கடவுள் இல்லை. இந்த பிரபஞ்சத்தில் கடவுள் அல்லது ஒருவித ஆற்றல் நமக்கு உதவி செய்கிறது. எனக்கு பதவி ஆசை இல்லை. 3 முறை பதவியை ராஜினாமா செய்துள்ளேன்.

    உச்ச நீதிமன்றத்துக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன். சில நாட்களுக்கு முன்பு ஒரு பாஜக தலைவரை சந்தித்தேன், என்னை சிறைக்கு அனுப்புவதால் உங்களுக்கு ஏதேனும் நன்மைகள் உண்டா என்று நான் அவரிடம் கேட்டேன். அதற்கு அவர் நாங்கள் முழு டெல்லி அசையும் தடம் புரட்டியுள்ளோம் என்று கூறினார்.

    மக்களவை தேர்தலுக்கு முன்பு ஒடிசாவில் தனியார் தொலைக்காட்சிக்கு பிரதமர் மோடி பேட்டி அளித்திருக்கிறார்.

    அதில் பிரதமர் மோடி, "நான் மனிதப் பிறவி அல்ல. என்னை இந்த உலகிற்கு அனுப்பியது பரமாத்மாதான். பயாலஜிக்கலாக நான் பிறந்திருக்க வாய்ப்பில்லை. ஏதோவொரு விஷயத்தை நடத்தியே ஆக வேண்டும் என்பதற்காக, கடவுள் என்னை இந்த பூமிக்கு அனுப்பியிருக்கிறார். நான் பெற்றிருக்கும் இந்த ஆற்றல் சாதாரண மனிதரால் பெற்றது கிடையாது. அது கடவுளால் மட்டுமே கொடுக்க முடியும்" என்று பேசியிருந்தார்.

    • மிகவும் நச்சுத்தன்மை வாய்ந்ததாகவும் உள்ளது என்றார்.
    • பிரச்சினையை முடித்துக் கொள்ள வேண்டும் என்று கூறினார்.

    தேர்தல் ஆணையத்திற்கு பதிலளித்த கெஜ்ரிவால், ஹரியானாவிலிருந்து பெறப்பட்ட தண்ணீர் மனித ஆரோக்கியத்திற்கு 'மிகவும் நச்சுத்தன்மை வாய்ந்தது' என்று கூறுகிறார்

    அரியானா அரசு யமுனையில் "விஷத்தை கலப்பதாக" கூறியது தொடர்பாக தேர்தல் ஆணையம் அனுப்பிய நோட்டீசுக்கு ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் பதில் அளித்தார். அதில், சமீப காலங்களில் பா.ஜ.க. ஆளும் மாநிலத்தில் இருந்து பெறப்பட்ட பச்சை நீர் மனித ஆரோக்கியத்திற்கு "மிகவும் மாசுபட்டதாகவும் மிகவும் நச்சுத்தன்மை வாய்ந்ததாகவும் உள்ளது," என்றார்.

    இது தொடர்பாக அவர் தேர்தல் ஆணையத்திற்கு 14 பக்கங்கள் கொண்ட பதிலை அனுப்பியுள்ளார். அத்தகைய "விஷ நீர்" மக்களால் உட்கொள்ள அனுமதிக்கப்பட்டால் அது கடுமையான உடல்நலக் கேடு மற்றும் மரணத்திற்கு வழிவகுக்கும் என்று அவர் கூறியுள்ளார்.

    நகரத்தில் குடிநீரின் தரம் காரணமாக "அவசர பொது சுகாதார நெருக்கடியை" மட்டுமே முன்னிலைப்படுத்த விரும்புவதாகவும், எந்த சட்டத்தையும் அல்லது மாதிரி நடத்தை விதிகளையும் அவர் மீறவில்லை என்றும், எனவே இந்த பிரச்சினையை முடித்துக் கொள்ள வேண்டும் என்றும் அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார்.

    அரியானாவிலிருந்து பெறப்பட்ட நீரில் அம்மோனியா அளவு மிகவும் "மிக அதிகமாக" இருந்ததால், டெல்லியில் உள்ள நீர் சுத்திகரிப்பு நிலையங்களால் அதை பதப்படுத்தி மனித பயன்பாட்டுக்கு பாதுகாப்பான மற்றும் அனுமதிக்கப்பட்ட வரம்புகளுக்கு ஏற்ற வகையில் குறைக்க முடியவில்லை என்றும் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.

    இந்த விவகாரம் தொடர்பாக பா.ஜ.க. தாக்கல் செய்த புகாரை தொடர்ந்து, இது குறித்து விளக்கம் அளிக்க தேர்தல் ஆணையம் செவ்வாய் கிழமை அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நோட்டீஸ் அனுப்பி இருந்தது. இந்த நோட்டீசுக்கு அவர் நேற்று (புதன்கிழமை) இரவு 8 மணிக்குள் பதில் அளிக்க அவருக்கு அவகாசம் அளித்தது.

    • தேர்தல் ஆணையம் மற்றொரு வாய்ப்பை வழங்குகிறது.
    • தேர்தல் ஆணையம் அரவிந்த் கெஜ்ரிவாலைக் கேட்டுக்கொள்கிறது.

    அரியானா அரசு யமுனையில் "விஷத்தை கலப்பதாக" கூறியது தொடர்பாக தேர்தல் ஆணையம் அனுப்பிய நோட்டீசுக்கு ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் பதில் அளித்தார். அதில், சமீப காலங்களில் பா.ஜ.க. ஆளும் மாநிலத்தில் இருந்து பெறப்பட்ட பச்சை நீர் மனித ஆரோக்கியத்திற்கு "மிகவும் மாசுபட்டதாகவும் மிகவும் நச்சுத்தன்மை வாய்ந்ததாகவும் உள்ளது," என்று தெரிவித்து இருந்தார்.

    அரவிந்த் கெஜ்ரிவால் அளித்த பதிலை பரிசீலனை செய்த தேர்தல் ஆணையம், இந்த விவகாரத்தில் உரிய ஆதாரங்களை வழங்க வேண்டும் என்று கெஜ்ரிவாலை கேட்டுக் கொண்டுள்ளது. மேலும், இதற்காக நாளை காலை 11 மணி வரை அவகாசம் வழங்கியுள்ளது.

    இது தொடர்பாக தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிக்கையில், "நல்லிணக்கம், வெவ்வேறு குழுக்கள் இடையே பகையை ஏற்படுத்துவது, பொது அமைதி மற்றும் அமைதியின்மையை ஏற்படுத்தியதாக அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காமல் இருக்க தேர்தல் ஆணையம் அவருக்கு மற்றொரு வாய்ப்பை வழங்குகிறது.

    யமுனையில் அம்மோனியா அதிகரித்தது தொடர்பான பிரச்சினையை, யமுனையில் விஷத்தன்மை அதிகரித்த பிரச்சினையையுடன் சம்பந்தப்படுத்தாமல் தக்க ஆதாரத்தை வழங்க அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

    மேலும், யமுனை நதியில் நச்சுத் தன்மையின் அளவு, அதன் தன்மை மற்றும் ஏற்படும் விதத்தை விளக்க வேண்டும். நதிநீரில் உள்ள விஷத்தன்மையை கண்டறியும் வழிமுறையை டெல்லி ஜல் போர்டு பொறியாளர்கள் நாளை காலை 11 மணிக்குள் வழங்குமாறு தேர்தல் ஆணையம் கேட்டுக்கொள்கிறது.

    இவ்வாறு செய்ய தவறும் பட்சத்தில், இந்த விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையம் தக்க முடிவை எடுக்கும். போதுமான மற்றும் சுத்தமான நீர் கிடைக்க வழி செய்வது நிர்வாக ரீதியிலான பிரச்சினை. இந்த விவகாரங்களில் சம்பந்தப்பட்ட அனைத்து அரசாங்கங்களும் எல்லா நேரங்களிலும் அனைத்து மக்களுக்கும், இதை பாதுகாக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் வலியுறுத்தியுள்ளது.

    • ஆம் ஆத்மி, பா.ஜ.க, காங்கிரஸ் ஆகிய கட்சிகளிடையே மும்முனை போட்டி நிலவியது.
    • பாஜக 48, ஆம் ஆத்மி கட்சி 22 இடங்களில் முன்னிலையில் உள்ளது.

    டெல்லி சட்டசபைக்கு கடந்த 5-ந் தேதி வாக்குப்பதிவு நடந்தது. 70 சட்டசபை தொகுதிகளிலும் மொத்தம் 699 வேட்பாளர்கள் களத்தில் நின்றனர்.

    ஆம் ஆத்மி, பா.ஜ.க, காங்கிரஸ் ஆகிய கட்சிகளிடையே மும்முனை போட்டி நிலவியது.

    பலத்த பாதுகாப்புடன் நடந்த தேர்தலில் 60 சதவீத வாக்குகள் பதிவாகின. இதனை தொடர்ந்து டெல்லி சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன. பாஜக 48, ஆம் ஆத்மி கட்சி 22 இடங்களில் முன்னிலையில் உள்ளது.

    இந்நிலையில் புது டெல்லி தொகுதியில் போட்டியிட்ட ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் தோல்வி அடைந்துள்ளார். எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் பர்வேஷ் வர்மா வெற்றி முகத்தை எட்டியுள்ளார்.

    இந்நிலையில், டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பை தலை வணங்கி ஏற்கிறேன் என ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

    மேலும் அவர், " டெல்லி சட்டசபையில் ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக செயல்படுவது மட்டுமல்லாமல் மக்களுக்காக தொடர்ந்து பணியாற்றுவோம்.

    டெல்லி மக்களுக்கு அளித்த வாக்குறுதிகள் அனைத்தையும் பாஜகவினர் நிறைவேற்றுவார்கள் என நம்புகிறேன்" என்றார்.

    தேர்தல் பிரசாரத்தின்போது டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலின் கன்னத்தில் அறைந்த நபர் அளித்த பேட்டியில், நான் ஏன் இப்படி செய்தேன் என தெரியவில்லை என கூறியுள்ளார். #AravindKejriwal
    புது டெல்லி:

    டெல்லி முதல் மந்திரியும், ஆம் ஆத்மி கட்சி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி மோத்தி நகர் பகுதியில் கடந்த மே 4ம் தேதி திறந்த வாகனத்தில் சென்று அக்கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார்.

    அப்போது கூட்டத்தில் இருந்த ஒருவர் ஆவேசமாக தகாத வார்த்தைகளால் திட்டியவாறு ஓடிவந்து வாகனத்தின் மீது ஏறிநின்று, கெஜ்ரிவாலின் கன்னத்தில் பளாரென்று அறைந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த அரவிந்த் கெஜ்ரிவால் சற்று தடுமாறி நிலைகுலைந்தார்.



    அதன்பின்னர் அங்கிருந்த ஆம் ஆத்மி கட்சி நிர்வாகிகள் கெஜ்ரிவாலை தாக்கிய சுரேஷ் என்ற அந்த  நபரை மடக்கி பிடித்து போலீசரிடம் ஒப்படைத்தனர். அவர் மீது டெல்லி காவல்துறையின் கிரிமினல் சட்டப்பிரிவு 107/5-ன்கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், கடந்த மே 5ம் தேதி மாஜிஸ்திரேட் முன்னிலையில் ஆஜர்படுத்தினர். கைதான சுரேஷை 2 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்குமாறு மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.

    இந்நிலையில் இது தொடர்பாக நேற்று பிரபல செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டி ஒன்றில் சுரேஷ் கூறுகையில், ‘ஒரு மாநிலத்தின் முதல்வரை மதிக்காமல், நான் ஏன் இப்படி செய்தேன் என தெரியவில்லை. எப்படி அறைந்தேன் எனவும் தெரியவில்லை. நான் எந்த கட்சியினையும் சார்ந்தவன் அல்ல. நான் செய்த இந்த தவறின் பின்னணியில் யாரும் இல்லை.

    என் பின்னால் நின்றுக் கொண்டு யாரும் இவ்வாறு செய்யச்சொல்லி தூண்டவில்லை. இச்சம்பவத்திற்கு நானே முழு பொறுப்பு. நான் போலீசாரின் கஸ்டடியில் இருக்கும்போதும் எனக்கு எவ்வித தொந்தரவும் ஏற்படவில்லை. போலீசார் என்னிடம் ஒன்றை தான் கூறினார்கள். நான் செய்தது எவ்வளவு பெரிய தவறு என்பதை தான். அதனை நான் உணர்ந்தேன். இதற்காக மிகவும் வருந்துகிறேன்’ என கூறினார். #AravindKejriwal


    நல்ல திட்டங்கள் கிடைக்க வேண்டுமெனில் சந்திரபாபு நாயுடுஜியை மீண்டும் முதல்வராக்குங்கள் என டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார். #ArvindKejriwal #ChandrababuNaidu
    விஜயவாடா:

    ஆந்திராவில் பாராளுமன்ற தேர்தல் தொகுதியுடன் சட்டசபை தேர்தலும் நடைபெற உள்ளது. இதனையொட்டி தெலுங்கு தேசம் கட்சிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய வந்த டெல்லி முதல்-மந்திரியும் ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் இன்று ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடுவை சந்தித்து பேசினார். 

    பின்னர் அரவிந்த் கெஜ்ரிவால் விஜயவாடாவில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

    ஆந்திர மக்களுக்கு தொடர்ந்து நல்ல திட்டங்கள் கிடைக்க வேண்டும் என்றால் சந்திரபாபு நாயுடுஜியை மீண்டும்  முதல்வராக்குங்கள் என்றார். #ArvindKejriwal #ChandrababuNaidu 
    டெல்லி முதல்மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடையூறுகள் தராமல் அவரை வேலை செய்ய விடுமாறு மத்திய அரசுக்கு சிவசேனா இன்று அறிவுறுத்தியுள்ளது. #ShivSena #ArvindKejriwal
    மும்பை:

    டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி கட்சிக்கும் மத்திய பாஜக அரசுக்கும் மோதல் நீடித்து வருகிறது. டெல்லியின் துணை நிலை ஆளுநருக்கு சுதந்திரமாக முடிவு எடுக்கும் அதிகாரம் இல்லை என்றும், மந்திரி சபையின் அறிவுரையின் பேரில்தான் அவர் செயல்பட முடியும் என்று உச்சநீதிமன்றம் சமீபத்தில் அதிரடியாக தீர்ப்பளித்தது.

    இதுதொடர்பாக சிவசேனா கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான சாமனாவில் இன்று செய்தி வெளியிடப்பட்டது. அதில், டெல்லியின் ஆம் ஆத்மியின் ஆட்சி முறையாக இல்லையென்றால் ஆட்சியை கலைத்து விடுங்கள் என்றும், அதற்கு பதிலாக பணி செய்ய விடாமல் தடுக்க கூடாது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

    மேலும், டெல்லியில், துணை நிலை ஆளுநருக்கும், முதல்மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் இடையே போட்டி இல்லை என்றும், பிரதமர் மோடிக்கும் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் இடையே தான் போட்டி நிலவுவதாகவும் குற்றம்சாட்டியுள்ளது.

    உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை அடுத்து, இனியாவது டெல்லி முதல்மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலை அவரது பணியை செய்யவிடுமாறு சாமனா நாளிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. #ShivSena #ArvindKejriwal
    உடல்நலக் குறைவால் டெல்லி ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுடனான ஆலோசனை கூட்டத்தை இன்று ரத்துசெய்த முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் சிகிச்சைக்காக பெங்களூரு புறப்பட்டு செல்கிறார். #ArvindKejriwal #KejriwalinBengaluru #Kejriwaltreatment
    புதுடெல்லி:

    டெல்லி அரசுக்கு ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் ஒத்துழைக்க மறுப்பதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் கவர்னர் அலுவலகத்துக்குள் 9 நாள் தர்ணா போராட்டம் நடத்திய முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று தனது உள்ளிருப்பு போராட்டத்தை முடித்து கொண்டார்.

    கவர்னரின் அறிவுறுத்தலின்படி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலை இன்று பல்வேறு துறைகளை சேர்ந்த மூத்த அதிகாரிகள் சந்தித்துப் பேசுவார்கள் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது.

    ஆனால், 9 நாள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் கெஜ்ரிவாலின் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. அவரது உடலில் ரத்த சர்க்கரையின் அளவு அதிகமாகியுள்ளதால் சிகிச்சைக்காக நாளை கெஜ்ரிவால் பெங்களூரு புறப்பட்டு செல்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஏற்கனவே மூச்சுத்திணறல் உள்ளிட்ட சில பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டுள்ள அரவிந்த் கெஜ்ரிவால் அவ்வப்போது பெங்களூருவில் உள்ள தனியார் இயன்முறை (நேச்சுரோபதி) மருத்துவமனயில் சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. #ArvindKejriwal #Kejriwaltreatment
    ஒவ்வொரு ஆண்டும் கோடையில் டெல்லியில் கடுமையான நீர் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில், அடுத்த ஆண்டு கோடை காலத்தில் தண்ணீர் பிரச்சனை இருக்காது என டெல்லி முதல்மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார். #ArvindKejriwal
    புதுடெல்லி:

    டெல்லியின் தெற்கு பகுதியில் புதிய துணை மின்நிலையத்தை துவக்கி வைக்கும் நிகழ்ச்சியில் அம்மாநில முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் பங்கேற்றார். அப்போது பேசிய அவர், தனியார் மருத்துவமனைகளில் வசூலிக்கப்படும் அதிகப்படியான கட்டணத்தை குறைக்க அரசு நடவடிக்கை எடுக்கும் என தெரிவித்துள்ளார்.

    மேலும், இத்தனை வருடங்களாக மக்கள் அவர்களுக்கு தேவையான சான்றிதழ்களை பெறுவதற்கு அரசு அலுவலகங்களில் காத்திருந்து, லஞ்சம் கொடுத்து வாங்கி வந்துள்ளதாகவும், இனி சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளே மக்களின் வீட்டிற்கு நேரடியாக சென்று சான்றிதழ்களை வழங்க வழிசெய்ய அரசு திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

    மேலும், இந்த திட்டம் குறித்து டெல்லி கவர்னர் அனில் பாய்ஜாலை நாளை நேரில் சந்தித்து பேச இருப்பதாகவும் டெல்லி முதல்மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.

    தொடர்ந்து பேசிய அவர், தேர்தலின் போது அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் அனைத்தும் முழுமையாக நிறைவேற்றப்படும் எனவும், அதற்கு மக்களும் சிறிது பொறுமையுடன் இருக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

    மேலும், டெல்லியின் பல பகுதிகளில் ஏற்பட்டுள்ள நீர் தட்டுப்பாட்டை  போக்க பல்வேறு திட்டங்களை தீட்டி வருவதாகவும், அடுத்த வருட கோடைக்காலத்தில் டெல்லியில் தண்ணீர் பிரச்சனை இருக்காது என்றும் தெரிவித்துள்ளார். #ArvindKejriwal
    ×