search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "arguments"

    • கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
    • கடும் தள்ளு முள்ளு ஏற்பட்டு திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது.

    திண்டிவனம்:

    கடலூர் மாவட்டம் புவனகிரி மஞ்ச கொல்லை கிராமத்தில் வன்னியர் சமூகத்தை சேர்ந்த வாலிபர் ஒருவரை வழிமறித்து குறிப்பிட்ட ஒரு சமூகத்தை சார்ந்தவர்கள் குடி போதையில் அந்த வாலிபரை கடுமையாக அடித்தும், காலால் முகத்தில் உதைத்தும் அராஜகம் செய்தாக கூறப்படுகிறது.

    அந்த வாலிபர் கடுமையாக உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டார். வாலிபரை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி பா.ம.க.வினர் சாலை மறியல் செய்தனர்.

    இந்த நிலையில் வன்னியர் சமூக மக்களிடம் ஏற்பட்ட பதட்டத்தை தணிக்க அப்பகுதிக்கு சென்று வன்னியர் சங்க தலைவர் பு.தா.அருள்மொழி சமாதானம் செய்துள்ளார்.

    ஆனால் விடுதலை சிறுத்தைகள் விநிர்வாகி ஒருவர்.தா. அருள்மொழியை கழுத்தை அறுத்து விடுவதாக கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. அது காணொளியாக முகநூலில் வலம் வந்தது.

    இந்த நிலையில் வன்னியர் சங்க தலைவர் மீது கொலை மிரட்டல் விடுத்த அந்த நபர் மீது குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என திண்டிவனம் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்ட 200-க்கும் மேற்பட்ட பா.ம.க.வினர் வந்தனர்.

    அப்போது நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் போராட்டம் செய்யவிடாமல் பா.ம.க.வினர் மற்றும் வன்னியர் சங்க நிர்வாகிகளை போலீசார் தடுத்ததால் அப்பகுதியில் கடும் தள்ளு முள்ளு ஏற்பட்டு திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது.

    இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பாதுகாப்பு பணியில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் அப்பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர்.

    • கொத்தமங்கலம் கிராமத்தில் சுமார்-5௦௦க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
    • மின்துறை ஊழியர்கள் அதைசரிசெய்வதற்கு அரசு பள்ளிக்கு வந்தனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த கொந்த மங்கலம் கிராமத்தில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் பல்வேறு சாலைகளில் உள்ள மின்கம்பங்களின் வயர்கள் தாழ்வாக செல்கின           இது குறித்து கிராம மக்கள் பலமுறை புகார் தெரிவித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. அதே போலஅரசு பள்ளி வளாகத்தில் தாழ்வான மின்கம்பிகள் செல்வதாகவும் பலமுறை புகார் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் அரசு பள்ளி வளாகத்தில் உள்ள மின் வயர் அருந்து விழுந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக மாணவ மாணவிகள் உயிர்த்தப்பினர். இதுகுறித்து மின்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மின் துறை ஊழியர்கள் அதை சரி செய்வதற்காக அரசு பள்ளிக்கு வந்தனர்.  மின் உயர் கீழே அறுந்து விழுந்ததை கேள்விப்பட்ட பள்ளி மாணவ மாணவிகளின் பெற்றோர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் ஒன்று கூடி மின் ஊழியர்களை முற்றுகையிட்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    பள்ளி வளாகத்தில் உள்ள மின்கம்பத்தை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும். கொத்தமங்கலத்தில் பல்வேறு தெருகளில் உள்ள மின்கம்பங்களில் வயர்கள் தாழ்வாக உள்ளதை அதை சரி செய்ய வேண்டும் இல்லை என்றால் சாலை மறியலில் ஈடுபடுவோம் என பொதுமக்கள் தெரிவித்தனர்  .மேலும் பள்ளி மாணவர்கள் கூறுகையில், இந்த பள்ளியில் படிப்பதற்கே எங்களுக்கு பயமாக உள்ளது மின் வயர்கள் தாழ்வாக செல்வதால் விபத்து நடக்கும் அபாயம் உள்ளது எனவும், பள்ளி வளாகத்தில் உள்ள மின்கம்பத்தை மாற்ற பலமுறை நாங்களும் எங்கள் பெற்றோரும் பள்ளி தலைமை ஆசிரியரிடமும், மின்துறை ஊழியர்களிடமும் கூறி இருந்தும் எந்த ஒரு நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் கூறினா ர்கள். எனவே, இதனை உடனடியாக மின்க ம்ப ங்களை மா ற்ற தேவை யான நடவ டிக்கை களை எடுக்க வே ண்டு மென கோரிக்கை விடுத்தனர்.

    • அரசுக்கு சொந்தமான இடத்தில் 7 வீடுகள் கட்டப்பட்டு இருப்பதாக ஒரு சிலர் மாநகராட்சிக்கு புகார் அளித்தனர்.
    • மாநகராட்சி அதிகாரிகள், ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு வீடுகளை இடிக்க சென்றனர்.

    கடலூர்:

    கடலூர் திருப்பாதிரிப்புலியூர் குப்பன் குளம் நெடுஞ்சாலை நகர் பகுதியில் அரசுக்கு சொந்தமான இடத்தில் 7 வீடுகள் கட்டப்பட்டு இருப்பதாக ஒரு சிலர் மாநகராட்சிக்கு புகார் அளித்தனர். மேலும் இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளனர்‌. இந்த நிலையில் கடந்த 21 -ந் தேதி மாநகராட்சி அதிகாரிகள் வீடுகளை இடிக்க சென்ற போது துணை மேயர் தாமரைச்செல்வன் தலைமையில் வீடுகளை இடிப்பதற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இதனை தொடர்ந்து வீடுகளை காலி செய்ய வேண்டும் அல்லது நீதிமன்றத்தில் வழக்கு தொடர அவகாசம் வழங்கி சென்றனர். இந்த நிலையில் இன்று காலை கடலூர் மாநகராட்சி ஆணையாளர் நவேந்திரன் உத்தரவின் பேரில் மாநகராட்சி அதிகாரிகள், ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு வீடுகளை இடிக்க சென்றனர். அப்போது அங்கு பொதுமக்கள் திரண்டனர். பின்னர் மீண்டும் வீடுகளை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இத்தகவல் அறிந்த அதிமுக கவுன்சிலர் தஷ்ணா, நிர்வாகி நாகராஜ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி குளோப் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். தொடர்ந்து கடலூர் மாநகராட்சி ஆணையாளர் நவேந்திரன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தார்.

    அப்போது பொதுமக்களிடம் கூறுகையில், நீதிமன்ற உத்தரவின் பேரில் இந்த வீடுகளை இடிக்க மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் வந்துள்ளனர். ஆனால் கடந்த முறை நீங்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளோம் என தெரிவித்து கூடுதல் அவகாசம் வேண்டும் என கேட்டதை தொடர்ந்து நாங்கள் வீடுகளை இடிக்காமல் சென்றோம். ஆனால் நீதிமன்ற உத்தரவுபடி வருகிற 6-ம் தேதிக்குள் கண்டிப்பாக வீடுகளை இடிக்க வேண்டும். ஆனால் நீங்கள் மீண்டும் வீடுகளை இடிக்க எதிர்ப்பு தெரிவித்தால் சட்டப்படி நடவடிக்கை கண்டிப்பாக எடுக்கப்படும். ஆகையால் வருகிற 4-ம் தேதிக்குள் நீதிமன்றத்தில் வழக்கு தொடருங்கள் அல்லது வீடுகளை காலி செய்யுங்கள் இதனை மீறினால் பாரபட்சம் இன்றி கண்டிப்பாக வீடுகள் இடிக்கப்படும் என தெரிவித்தார். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது.

    • மயிலாடுதுறையில் இருந்து பயணிகள் விழுப்புரத்திற்கு டிக்கெட் பெற்றுக் கொண்டு வந்து கொண்டிருந்தனர்‌.
    • வருங்காலங்களில் இது போன்ற பாதிப்புகள் ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்‌.

    கடலூர்:

    விழுப்புரம் பகுதியில் ெரயில்வே தண்டவாளத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் ெரயில்கள் இயங்காது என ெரயில்வே நிர்வாகம் அறிவித்திருந்தனர். இன்று காலை மயிலாடுதுறையில் இருந்து பயணிகள் விழுப்புரத்திற்கு டிக்கெட் பெற்றுக் கொண்டு வந்து கொண்டிருந்தனர்‌. அப்போது கடலூர் முதுநகர் ெரயில் நிலையத்திலிருந்து ெரயில் செல்லாது என அதிகாரிகள் அறிவித்து ெரயிலில் இருந்த பயணிகளை உடனடியாக இறங்குமாறு அறிவுறுத்தினர். அப்போது இதனை கேட்ட ெரயில் பயணிகள் கடும் அதிர்ச்சி அடைந்து ெரயில்வே துறை அதிகாரியிடம் சம்பவம் குறித்து கேட்டறிந்தனர். அப்போது விழுப்புரம் பகுதியில் ெரயில்வே தண்டவாளத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் விழுப்புரம் வரை ெரயில்கள் இயங்காது என தெரிவித்தனர்.

    அப்போது பொதுமக்கள் கடும் கோபம் அடைந்து எதற்காக விழுப்புரம் வரை ெரயில் டிக்கெட் வழங்கீனர்கள்? இதற்கு யார் அனுமதி கொடுத்தார்கள்? என அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கிருந்த அதிகாரிகள் இது சம்பந்தமாக ெரயில்வே துறை உயர் அதிகாரி களிடம் தெரிவித்து வருங்காலங்களில் இது போன்ற பாதிப்புகள் ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்‌. தற்போது கடலூர் முதுநகரில் இருந்து அவர் அவர்கள் எடுத்த ெரயில் கட்டணத்தை மீதி தொகை வழங்கப்படும் என தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து ரயில்வே துறை அதிகாரிகள் பொது மக்களுக்கு வழங்கக்கூடிய ரயில் கட்டணத்தை வழங்கினர். பின்னர் பொதுமக்கள் அவசர அவசரமாக கொட்டும் மழையில் நனைந்தபடி பஸ்சில் செல்வதற்கு ஓடினர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது.

    ×