என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "armed"

    • கொண்ட லாம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் புஷ்பராணி நேற்றிரவு கொண்ட லாம்பட்டி சூளைமேடு பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தார்.
    • சந்தேகம் அடைந்த போலீசார், காருக்குள் சோதனை செய்தனர்.

    சேலம்:

    சேலம் கொண்ட லாம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் புஷ்பராணி நேற்றிரவு கொண்ட லாம்பட்டி சூளைமேடு பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது நீண்ட நேரமாக ஒரு கார் அங்கு நின்று கொண்டு இருந்ததை கவனித்த அவர் அருகில் சென்று விசாரித்தார்.

    அப்போது காருக்குள் 6 பேர் கும்பல் இருந்தது. அவர்களிடம் விசாரித்த போது கல்லூரிக்கு காவலாளி பணிக்கு செல்வதாக கூறினார்கள்.

    சந்தேகம் அடைந்த போலீசார், காருக்குள் சோதனை செய்தனர். அப்போது அதில் ஏராளமான கொடுவாள், கத்தி உட்பட ஆயுதங்கள் இருந்தது. அவர்கள் யாரையாவது கொலை செய்ய வந்திருக்கலாம் என சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களை பிடிக்க முயன்றனர்.

    உடனே காரில் இருந்த 5 பேர் கண் இமைக்கும் நேரத்தில் தப்பி ஓடினர். போலீசார் சுற்றி வளைத்ததில் ஒருவர் மட்டும் சிக்கினார். பிடிபட்ட நபர் நெல்லை மாவட்டத்தை சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது.

    தொடர்ந்து அவரிடம் கொண்டலாம்பட்டி போலீசார், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தப்பி ஓடிய மற்றவர்களை தேடும் பணியில் ேபாலீசார் ஈடுபட்டுள்ளனர்.

    ஆயுதங்களுடன் வந்த கும்பல் யார்? எதற்காக வந்தார்கள்? யாரையும் கொலை செய்யும் நோக்கில் வந்தனரா? என பல கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    அந்தமானில் இந்திய ராணுவத்தை சேர்ந்த முப்படை வீரர்கள் இன்று நடத்திய கூட்டுப்போர் ஒத்திகை சாகசங்களை ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் பார்வையிட்டு பாராட்டினார். #NirmalaSitharaman #Andaman
    போர்ட் பிளையர்:

    இந்திய ராணுவம், விமானப்படை, கடற்படை இணைந்து கூட்டுப்போர் ஒத்திகையை அவ்வப்போது மேற்கொள்கின்றன. இதை பார்வையிடுவதற்காக ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் இருநாள் பயணமாக நேற்று போர்ட் பிளேருக்கு வந்தார்.
     
    ராணுவ வீரர்களுக்காக கட்டப்பட்ட வீடுகளையும் திறந்து வைத்த நிர்மலா சீதாராமன், கேம்ப்பெல் கடற்கரை பகுதியில் நீரிலும், நிலத்திலும், வானிலும் இந்திய வீரர்கள் நிகழ்த்திய சாகசங்களை அவர் இன்று பார்வையிட்டார். வீரர்களின் சாகசத்தை பாராட்டியதுடன் அவர்களுடன் புகைப்படமும் எடுத்து கொண்டார். #NirmalaSitharaman #Andaman 
    ×