என் மலர்
நீங்கள் தேடியது "arrested auto driver"
குள்ளனம்பட்டி:
மதுரை அவனியாபுரம் அருகே உள்ள வெள்ளக்கல் பகுதியைச் சேர்ந்தவர் பாண்டி. இவருக்கு 2 மகள்களும் ஒரு மகனும் உள்ளனர். கடந்த சில நாட்களாக நாகல்நகர் பகுதியில் தங்கி 2 மகள்களுடன் அந்த பகுதியில் பிச்சை எடுத்து பிழைப்பு நடத்தி வந்தார்.
கடந்த 4 நாட்களுக்கு முன்பு அதே பகுதியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் சேக் பரீத், தங்கராஜ் ஆகியோர் பாண்டியின் 16 வயது கொண்ட மகளை ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்றுள்ளனர்.
அப்போது அவர்கள் ஒவ்வொரு நாளும் தனித்தனியாக 2 பேரும் சேர்ந்து மைனர் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இது தொடர்பாக பாண்டி திண்டுக்கல் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் சப்-இன்ஸ்பெக்டர் தமிழ்செல்வி வழக்குபதிவு செய்து ஆட்டோ டிரைவர் சேக் பரீத், தங்கராஜ் ஆகியோரை கைது செய்தனர்.
நெல்லை:
செங்கோட்டையில் இருந்து கடையநல்லூருக்கு நேற்று ஒரு அரசு டவுன் பஸ் சென்றது. பஸ்சை சங்கரன் கோவில் அருகே உள்ள நெடுங்குளத்தை சேர்ந்த டிரைவர் சாமிநாதன் (வயது 46) ஓட்டினார். அந்த பஸ் அச்சன்புதூர் அருகே உள்ள பொய்கை ஊரணி அருகே வந்த போது, ஆட்டோவில் ஏற முயன்ற பயணிகள் பஸ்சில் ஏறிவிட்டனர்.
இதனால் ஆத்திரம் அடைந்த வடகரையை சேர்ந்த ஆட்டோ டிரைவர் மைதீன் அப்துல் காதர் (30), அரசு பஸ் டிரைவரை அவதூறாக பேசி சரமாரி அடித்து உதைத்தார்.
இதுகுறித்து பஸ் டிரைவர் சாமிநாதன், அச்சன்புதூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆட்டோ டிரைவர் மைதீன் அப்துல் காதரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.