search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "arrested youth"

    • தகாத வார்த்தைகள் பேசி பெண்கள் நடக்க முடியாத நிலை நிலவுகிறது என பொதுமக்கள் போலீஸ் நிலையத்தில் மனு.
    • கஞ்சா விற்பனை உள்ளிட்ட சமூகவிரோத செயல்களில் ஈடுபட்டுள்ளனர்.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள மாதப்பூர் ஊராட்சி செந்தில் நகரைச் சேர்ந்த பொதுமக்கள் பல்லடம் போலீஸ் நிலையத்தில் கொடுத்த மனுவில், எங்களது பகுதியில் சமூக விரோதிகள் சிலர் கையில் ஆயுதங்களுடன் சுற்றித் திரிகின்றனர்.அவர்கள் கஞ்சா விற்பனை உள்ளிட்ட சமூகவிரோத செயல்களில் ஈடுபடுவதாக தெரிகிறது. மேலும் தகாத வார்த்தைகள் பேசி பெண்கள் நடக்க முடியாத நிலை நிலவுகிறது .எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து பொதுமக்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டுகிறோம் .

    இதன்படி போலீசார் விசாரணையில் பொதுமக்களுக்கு மிரட்டல் விடுத்த அதே பகுதியைச் சேர்ந்த ஆனந்த்(வயது 35) என்பவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • தன்பாத்தில் இருந்து கேரள மாநிலம் ஆலப்புழாவுக்கு செல்லும் ரெயில்1-வது நடைமேடையில் வந்து நின்றது.
    • ரெயில் நிலையத்தில் மின்தூக்கி அருகே பையுடன் சந்தேகத்துக்கு இடமாக நின்றிருந்தார்.

    திருப்பூர் :

    திருப்பூர் ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அண்ணாத்துரை, போலீசார் அசோக்குமார், கோபால் ஆகியோர் திருப்பூர் ரெயில்நிலையத்தில் சோதனை மேற்கொண்டனர்.அப்போது தன்பாத்தில் இருந்து கேரள மாநிலம் ஆலப்புழாவுக்கு செல்லும் ரெயில்1-வது நடைமேடையில் வந்து நின்றது.ரெயிலில் இருந்து இறங்கிய வாலிபர் ஒருவர், ரெயில் நிலையத்தில் மின்தூக்கிஅருகே பையுடன் சந்தேகத்துக்கு இடமாக நின்றிருந்தார். உடனடியாக அவரிடம் விசாரணை நடத்திய போலீசார் அவர் வைத்திருந்த பையை சோதனைசெய்தனர்.

    அந்த பைக்குள் 7 பொட்டலங்களில் 6 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. வெளிமாநிலத்தில் இருந்து கஞ்சாவைகடத்தி திருப்பூரில் விற்பனை செய்ய கொண்டு வந்துள்ளார்.விசாரணையில் அவர், ஒடிசா மாநிலம் பாலங்கிர் பகுதியை சேர்ந்தஆனந்த்குமார் சாகு (வயது 34) என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆனந்த்குமார் சாகுவை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பிவைத்தனர்.

    வீட்டுக்குள் தனியாக இருந்த பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

    மேலசொக்கநாதபுரம்:

    தேனி மாவட்டம் தேவாரம் அருகே உள்ள மூணாண்டிபட்டியைச் சேர்ந்த பாண்டியன் மகள் மங்கையர்கரசி (வயது 26). இவருக்கு திருமணம் ஆகி கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடால் பிரிந்து வாழ்ந்து வருகிறார்.

    சம்பவத்தன்று இரவு இவர் தனது மகளுடன் வீட்டில் தூங்கிக் கொண்டு இருந்தார். அப்போது முனியாண்டி கோவில் தெருவைச் சேர்ந்த ஈஸ்வரன் மகன் ராஜ்குமார் (25) நைசாக வீட்டுக்குள் புகுந்தார். பின்னர் மங்கையர்கரசியை பலவந்தப்படுத்தி பலாத்காரம் செய்ய முயன்றார். அவர் கூச்சல் போடவே அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் வரத் தொடங்கினர். இதனால் மங்கையர்கரசிக்கு கொலை மிரட்டல் விடுத்து விட்டு தப்பி ஓடி விட்டார்.

    இது குறித்து தேவாரம் போலீஸ் நிலையத்தில் அவர் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து ராஜ்குமாரை கைது செய்தனர்.

    கிருஷ்ணகிரியில் தனியார் ஆஸ்பத்திரியில் நர்சை தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி நகர் தர்மராஜா நகரை சேர்ந்தவர் சேகர். இவரது மகள் கவிபாரதி (வயது19). இவர் கிருஷ்ணகிரி பிரபல தனியார் ஆஸ்பத்திரியில் நர்சாக பணியாற்றி வந்தார். 

    கடந்த 24-ந்தேதிஅன்று கவிபாரதி ஆஸ்பத்திரியில் பணியில் இருந்தார். அப்போது அங்கு வந்த கிருஷ்ணகிரி பழையபேட்டையை சேர்ந்த பெரியசாமி மகன் சக்திவேல் என்பவர் கவிபாரதியிடம் தகராறில் ஈடுபட்டார். இதில் வாக்குவாதம் முற்றி கவிபாரதியை சரமாரியாக சக்திவேல்  தாக்கினார். 

    இது குறித்து கவிபாரதி கிருஷ்ணகிரி டவுன் போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீஸ் சப்-இன்ஸ் பெக்டர் ராமச்சந்திரன் வழக்குபதிவு செய்து பெண்ணை தாக்கியதாக சக்திவேலை கைது செய்தனர். 
    பண்ருட்டியில் இருந்து சென்னைக்கு பஸ்சில் வந்த இளம் பெண்ணை ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

    திருவள்ளூர்:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டியை சேர்ந்த 19 வயது இளம்பெண்ணும், 17 வயது சிறுமியும் குடும்பத்தினரிடம் சண்டை போட்டு விட்டு வீட்டில் இருந்து வெளியேறினர். இருவரும் கடலூரில் இருந்து சென்னைக்கு பஸ்சில் ஏறி சென்றனர்.

    அந்த பஸ்சில் திருவள்ளூர் அடுத்த மேலானூரை சேர்ந்த ராஜா என்பவர் பயணம் செய்தார். அப்போது சிறுமிகள் பேசிக் கொண்டிருப்பதை ராஜா கவனித்தார். சிறுமிகள் வீட்டில் கோபித்துக் கொண்டு வெளியேறியதை அறிந்து கொண்ட ராஜா அவர்களிடம் பேச்சு கொடுத்தார்.

    தனக்கு கம்பெனிகளில் வேலை செய்யும் நண்பர்கள் நிறைய பேரை தெரியும். அவர்களிடம் சொல்லி உங்களுக்கு வேலை வாங்கி தருகிறேன் என்று கூறினார். அவரது பேச்சை சிறுமிகள் நம்பினர். இதையடுத்து சிறுமிகளை பஸ்சில் இருந்து இறக்கி தனது வீட்டுக்கு அழைத்து சென்றார்.

    அப்போது ராஜா தனது நண்பர்களிடம் வேலை தொடர்பாக பேசினார். அவரது பேச்சில் சந்தேகம் அடைந்த சிறுமிகள் இருவரும் தாங்கள் ஊருக்கே செல்வதாக கூறினர். தங்களை திருவள்ளூர் பஸ் நிலையத்தில் கொண்டு சென்று விடும்படி ராஜாவிடம் கூறினார்கள்.

    இதையடுத்து இளம்பெண் ஒருவரை முதலில் பஸ்நிலையத்துக்கு அழைத்து சென்றுவிட்டுள்ளார். பின்னர் மற்றொரு பெண்ணை பஸ்நிலையத்துக்கு அழைத்து சென்றார்.

    அப்போது வெயில் அதிகமாக இருப்பதாக கூறி ஈக்காடு கண்டிகை அருகே உள்ள சவுக்கு தோப்பில் சிறிது ஓய்வு எடுக்கலாம் என்று அழைத்து சென்றுள்ளார். அங்கு வைத்து அந்த பெண்ணை ராஜா பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார்.

    இதனால் பதறிய அந்த பெண் அழுது கொண்டே சவுக்கு தோப்பில் இருந்து வெளியே ஓடிவந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் ராஜாவை மடக்கி பிடித்தனர்.

    அந்த பெண்ணிடம் விசாரித்த போது பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக தெரிவித்தார்.

    இதையடுத்து ராஜாவை புல்லரம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்து திருவள்ளூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து ராஜாவை கைது செய்தனர். அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    இளம்பெண்கள் இருவரையும் போலீசார் மீட்டனர். அவர்களது பெற்றோரை வரவழைத்து ஒப்படைத்தனர்.

    கோட்டக்குப்பத்தில் உறவினர் வீட்டில் செல்போனை திருடி சென்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

    சேதராப்பட்டு:

    புதுவையை அடுத்த தமிழக பகுதியான கோட்டக்குப்பம் தேவி தியேட்டர் தெருவை சேர்ந்தவர் ரஞ்சித்குமார் (வயது21). இவர் புதுவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலைபார்த்து வருகிறார். இவரிடம் விருத்தாசலத்தை சேர்ந்த உறவினர் சிவா(19) என்பவர் அணுகி புதுவையில் ஏதாவது வேலை வாங்கி தருமாறு கேட்டார். அதனை ரஞ்சித்குமார் ஏற்று சிவாவை தனது வீட்டுக்கே வரவழைத்து வீட்டில் தங்க வைத்தார். மேலும் சிவாவுக்கு வேலைக்கு முயற்சி செய்து வந்தார்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று ரஞ்சித்குமார் தனது விலை உயர்ந்த செல்போனை வீட்டில் வைத்து விட்டு வெளியே சென்றார். பின்னர் வந்து பார்த்தபோது செல்போனை காணாமல் திடுக்கிட்டார். மேலும் சிவாவும் மாயமாகி இருந்தார். தனது செல்போனை சிவா திருடி சென்று இருக்கலாம் என எண்ணி அவரை தேடி வந்தார்.

    இந்த நிலையில் புதுவையில் சுற்றி திரிந்த சிவாவை பிடித்து ரஞ்சித்குமார் விசாரித்தார். அப்போது செல்போன் திருடியதை சிவா ஒப்புக்கொண்டார். இதையடுத்து சிவாவை கோட்டக்குப்பம் போலீசில் ரஞ்சித்குமார் ஒப்படைத்தார். போலீசார் வழக்குபதிவு செய்து சிவாவை கைது செய்தனர். பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி கடலூர் ஜெயிலில் அடைத்தனர்.

    நல்லம்பள்ளி அருகே உபாதைகள் கழிக்க சென்ற பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அடுத்துள்ள ஏலகிரி பகுதியில் 22 வயது இளம்பெண். திருமணமான இவர் அந்த பகுதியில் உபாதைகள் கழிப்பதற்காக நேற்று சென்றார். அப்போது பாகல்பட்டியை சேர்ந்த பேப்பர் போடும் தமிழ்வீரன் (25) என்பவர் இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார். பெண் சத்தம் போட்டததால் வாலிபர் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார்.

    பின்னர் இன்று காலை பேப்பர் போடுவதற்காக தமிழ்வீரன் ஏலகிரி பகுதிக்கு சென்றார். அப்போது பொதுமக்கள் தமிழ்வீரனை கையும் களவுமாக பிடித்தனர். 

    இது குறித்து தொப்பூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற தமிழ்வீரனை பொதுமக்கள் போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவரை கைது செய்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பெண்ணை கடத்திச் சென்று கட்டாய திருமணம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

    பேரையூர்:

    மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே உள்ள சிந்துப்பட்டி போலீஸ் சரகத்திற்குட்பட்ட தேவன் பட்டியைச் சேர்ந்த 17 வயது பெண் கப்பலூரில் உள்ள மில்லில் வேலை பார்த்து வந்தார்.

    அங்கு உசிலம்பட்டி அருகே உள்ள பொட்டல்பட்டியைச் சேர்ந்த தனுஷ்கோடி மகன் சின்னசாமி (வயது 34) என்பவரும் வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர்.

    இந்த நிலையில் சின்னசாமிக்கும், கட்டதேவன் பட்டியைச் சேர்ந்த 17 வயது பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டது. அவர்கள் திடீரென மாயமாகி விட்டனர்.

    இது குறித்த புகாரின் பேரில் சிந்துப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் மாயமான இளம்பெண், திருமங்கலம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையம் வந்து ஒரு புகார் கொடுத்தார்.

    அதில், சின்னச்சாமி கோவைக்கு அழைத்துச் சென்று மருதமலையில் திருமணம் செய்து கொண்டார். பின்னர் உறவு வைத்ததாகவும், அதன் பின்னர் மீண்டும் திருமங்கலம் அழைத்து வந்து விட்டுச் சென்றதாகவும் குறிப்பிட்டு இருந்தார்.

    இதுகுறித்து திருமங்கலம் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பானுமதி விசாரணை நடத்தி போக்சோ சட்டத்தின் கீழ் சின்ன சாமியை கைது செய்தார்.

    தோட்ட தொழிலாளியை கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்த வரை போலீசார் கைது செய்தனர்.

    பேரையூர்:

    திருமங்கலத்தைச் சேர்ந்தவர் முத்துக்குமார். இவருக்கு சொந்தமாக அதே பகுதியில் தோட்டம் உள்ளது. இந்த தோட்டத்தில் வெள்ளிராஜன் (வயது 58) என்பவர் வேலை பார்த்து வந்தார்.

    சம்பவத்தன்று திருமங்கலம் அருகே உள்ள செங்குளத்தைச் சேர்ந்த குண்டாறு சக்திவேல் (35) என்பவர் தோட்டத்துக்கு வந்துள்ளார். அவர் அங்கிருந்த ஆடுகளை திருட முயன்றார். இதை பார்த்த வெள்ளிராஜன் அவரை தடுத்துள்ளார். இதனால் 2 பேருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

    இதில் ஆத்திரம் அடைந்த குண்டாறு சக்திவேல் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து வெள்ளிராஜனை சரமாரியாக குத்தியும், தாக்கியும் அங்கிருந்து தப்பினார்.

    ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய வெள்ளிராஜனை அக்கம், பக்கத்தினர் மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இதையடுத்து திருமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கோவையில் பதுங்கி இருந்த கொலையாளி குண்டாறு சக்திவேலை கைது செய்தனர். இவர் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

    மிரட்டியும் கள்ளக்காதலை மனைவி கைவிடாததால் தலைதுண்டித்து கொலை செய்தேன் என்று கைதான கணவர் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

    பெருந்துறை:

    பெருந்துறை அருகே மேட்டுக்கடையில் வசித்தவர் முனியப்பன் (வயது 28) இவரது மனைவி நிவேதா(19), இருவரும் கடந்த 8 மாதத்துக்கு முன் காதல் திருமணம் செய்து கொண்டனர்.

    இருவரும் மேட்டுக்கடையில் ஒரு வீட்டில் வாடகைக்கு குடியிருந்து 2 பேருமே வேலைக்கு போய் வந்தனர்.

    இளம்பெண் நிவேதாவுக்கு ஆண் நண்பர்களுடன் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர் செல்போனில் அவர்களுடன் பேசி வந்தார். இதைகண்ட கணவர் முனியப்பன் ஆத்திரம் அடைந்தார். “நமக்கு திருமணமாகிவிட்டது. மற்ற ஆண்களுடன் பேசுவதை பழகுவதை விட்டுவிடு” என்று சத்தமும் போட்டார். ஆனால் நிவேதா இதை கேட்டதாக தெரியவில்லை.

    இந்த நிலையில் அந்த பகுதியை சேர்ந்த ஒரு வாலிபருடன் நிவேதா ஒன்றாக இருந்ததை நேரில்கண்டு முனியப்பன் கடும் ஆத்திரம் அடைந்தார். இருவருக்கும் கடுமையான சண்டை ஏற்பட்டது.

    இந்த வீட்டில் இருந்தால் மனைவியின் கள்ளக் காதலர்கள் மீண்டும் வரக் கூடும் என எண்ணிய முனியப்பன் அந்த வீட்டை விட்டு வேறு வீட்டுக்கு குடியிருக்க திட்டமிட்டார்.

    இதனால் தனது மனைவியுடன் மோட்டார் சைக்கிளில் வீடுபார்க்க சென்று கொண்டிருந்தார். அப்போது அவர்களிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. கோபம் அடைந்த முனியப்பன் மனைவியை அடித்து உதைத்தார். இருவரும் மாறி... மாறி... தாக்கினர். பிறகு முனியப்பன் ஆத்திரத்தில் கத்தியால் நிவேதாவின் கழுத்தை அறுத்து துண்டித்தார். இதில் அவர் பரிதாபமாக இறந்தார்.

    மனைவியின் பிணத்தை மறைக்க மோட்டார் சைக்கிளில் துண்டித்த தலை மற்றும் உடலை எடுத்து சென்ற போது பொதுமக்களிடம் சிக்கினார். பெருந்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகவனம் அவரை கைது செய்தார்.

    போலீசாரிடம் கொலையாளி முனியப்பன் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

    இதில் “நானும் நிவேதாவும் காதல் திருமணம் செய்து கொண்டோம். சந்தோ‌ஷமாகத்தான் வாழ்ந்தோம். அப்போதுதான் என் மனைவிக்கு வேறு ஒருவருடன் கள்ளக்காதல் இருந்ததை கண்டேன். மேலும் பல ஆண்களுடன் போனில் பேசியதையும் கண்டேன்.

    இதனால் அவளை பல தடவை கண்டித்தேன். ஆனால் அவள் என்பேச்சை கேட்கவில்லை. தொடர்ந்து கள்ளக்காதலில் ஈடுபட்டாள். அவளை நான் மிரட்டியும் பார்த்தேன். அப்படியும் கேட்டகவில்லை. இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் கழுத்தை அறுத்து கொலை செய்தேன். தப்ப முயன்ற போது சிக்கி கொண்டேன்” என்று கூறினார். 

    காலாப்பட்டில் இருந்து மரக்காணத்துக்கு ஷேர் ஆட்டோவில் மதுபாட்டில் கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

    சேதராப்பட்டு:

    காலாப்பட்டில் இருந்து மரக்காணத்துக்கு தினந்தோறும் ஏராளமான ஷேர் ஆட்டோக்கள் இயக்கப்படுகிறது. அப் பகுதியை சேர்ந்தவர்கள் ஷேர் ஆட்டோவில் மரக்காணத்தில் இருந்து காலாப்பட்டுக்கும், அது போல் காலாப்பட்டில் இருந்து மரக்காணத்துக்கும் பயணம் செய்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் காலாப்பட்டில் இருந்து மரக்காணத்துக்கு செல்லும் ஒரு ஷேர் ஆட்டோவில் மது பாட்டில்கள் கடத்தப்படுவதாக காலாப்பட்டு போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.

    இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் வெற்றிவேல் தலைமையில் சப்- இன்ஸ்பெக்டர் சிவப்பிரகாசம் மற்றும் போலீசார் நேற்று மாலை பெரிய காலாப்பட்டு பெட்ரோல் பங்க் அருகில் இருந்து வந்த ஒரு ஷேர் ஆட்டோவை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.

    அப்போது ஷேர் ஆட்டோவில் பயணம் செய்த ஒரு வாலிபர் ஒருவர் 2 சாக்கு பைகள் வைத்திருந்தார். அந்த சாக்கு பைகளை திறந்து பார்த்த போது, அதில் மது பாட்டில்கள் இருந்தன. மொத்தம் 130 குவார்ட்டர் பிராந்தி பாட்டில்கள் அதில் இருந்தன.

    இதையடுத்து அந்த வாலிபரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த வாலிபர் மரக்காணம் அருகே கந்தாடு கிராமத்தை சேர்ந்த மதன் (வயது 24) என்பதும், இவர் நேற்று முன்தினம் காலாப்பட்டில் உள்ள தனியார் மதுக்கடையில் மது பாட்டில்களை மொத்தமாக வாங்கி பதுக்கி வைத்து நேற்று ஷேர் ஆட்டோவில் மரக்காணத்துக்கு கடத்தி செல்ல இருந்தது தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து மதனை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்த மதுபாட்டில்களை பறிமுதல் செய்து கலால்துறையிடம் ஒப்படைத்தனர்.

    மாணவியை கடத்திய வாலிபரை போலீசார் போக்சோ கட்டத்தில் கைது செய்து சேலம் சிறையில் அடைத்தனர்.
    பாலக்கோடு:

    தர்மபுரி மாவட்டம் மாரண்டஹள்ளியை அடுத்த கும்மனூர் கிராமம் எம்.ஜி.ஆர். காலனியை சேர்ந்தவர் ராஜா. இவரது மகன் முத்துராஜ் (21).

    இவர் அதே பகுதியை சேர்ந்த 17 வயது மாணவியை கடந்த மாதம் கடத்தி சென்று விட்டதாக பெண்ணின் பெற்றோர் மாரண்டஹள்ளி போலீசில் புகார் செய்தனர். இதன் பேரில் போலீசார் மாணவியை தேடி வந்தனர். இந்த நிலையில் எம்.ஜி.ஆர். நகருக்கு கடத்தப்பட்ட பெண்ணுடன் வந்த முத்துராஜை போலீசார் நேற்று போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

    பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். மாணவி காப்பகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டார். 
    ×