என் மலர்
நீங்கள் தேடியது "Ashwath Marimuthu"
- அஷ்வத் மாரிமுத்து மற்றும் பிரதீப் ரங்கநாதன் கூட்டணியில் உருவான திரைப்படம் 'டிராகன்'.
- சமீபத்தில் டிராகன் படக்குழு நடிகர் விஜயை சந்தித்தனர்.
இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து மற்றும் பிரதீப் ரங்கநாதன் கூட்டணியில் உருவான திரைப்படம் 'டிராகன்'. ஏ.ஜி.எஸ். நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. லியோன் ஜேம்ஸ் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார்.
இந்தப் படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.திரைப்படம் வெளியாகி உலகளவில் 100 கோடி ரூபாய் வசூலித்தது. திரைப்படம் ஓடிடி வெளியீட்டிலும் மக்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.
சமீபத்தில் டிராகன் படக்குழு நடிகர் விஜயை சந்தித்தனர்.அப்போது எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது.
இந்நிலையில் இயக்குனர் அஷ்வத் மாரிமுத்து அவரது டிராகன் திரைப்பட 1 வருட பயணத்தை 1 நிமிட வீடியோவாக பகிர்ந்துள்ளார்.
- இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து மற்றும் பிரதீப் ரங்கநாதன் கூட்டணியில் உருவான திரைப்படம் 'டிராகன்'.
- இந்த நிலையில் டிராகன் படக்குழு நடிகர் விஜயை சந்தித்துள்ளனர்.
இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து மற்றும் பிரதீப் ரங்கநாதன் கூட்டணியில் உருவான திரைப்படம் 'டிராகன்'. ஏ.ஜி.எஸ். நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. லியோன் ஜேம்ஸ் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார்.
இந்தப் படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.திரைப்படம் வெளியாகி உலகளவில் 100 கோடி ரூபாய் வசூலித்தது.
இந்த நிலையில் டிராகன் படக்குழு நடிகர் விஜயை சந்தித்துள்ளனர். அஷ்வத் மாரிமுத்து, தயாரிப்பாளர் அர்சனா, லியோன் ஜேம்ஸ், பிரதீப் ரங்கநாதன் விஜயை சந்தித்தனர். இதை மிகவும் நெகிழ்ச்சியுடன் இயக்குனர் அஷ்வத் மாரிமுத்து அவரது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில் அவர் " என்னுடைய நண்பர்களுக்கு தெரியும் நான் எவ்வளவு கடுமையாக வேலை பார்க்கிறேன் நடிகர் விஜயை சந்திப்பதற்கு என்று. அவருக்கு எதிரில் இன்று அமர்ந்தேன். நான் எப்பொழுதும் அதிகமாக பேசுவேன். என்னுடைய டீம் அனைவரும் நான் என்ன பேசப் போகிறேன் என ஆவலுடன் காத்துக் கொண்டு இருந்தனர். ஆனால் என்னால் பேச முடியச்வில்லை. அவரை பார்க்கும் பொழுது என் கண்ணில் ஆனந்த கண்ணீர் மட்டுமே வழிந்தது. நான் அவர் மீது வைத்துள்ள அன்பு உங்களுக்கு சொன்னால் புரியாது. அவர் என்னை பார்த்து "குட் ரைட்டிங் ப்ரோ" என கூறினார் இது போதும். ஜெகதீஷ் அண்ணா மற்றும் அர்ச்சனா மேடமிற்கும் என் மனமார்ந்த நன்றிகள்." என உருக்கத்துடன் பதிவிட்டுள்ளார்.
- சிலம்பரசனின் 51வது திரைப்படத்தை அஷ்வத் மாரிமுத்து இயக்குகிறார்.
- எனக்கு தனுஷையும் பிடிக்கும்.
தமிழ் திரையுலகில் "ஓ மை கடவுளே" திரைப்படம் மூலம் அறிமுகமானவர் இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து. இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும், இவரின் அடுத்தப் படம் குறித்த எதிர்பார்ப்பையும் அதிகப்படுத்தியது.
அதன்படி, இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து இயக்கிய டிராகன் திரைப்படம் சமீபத்தில் வெளியாகி வசூலை வாரிக்குவித்தது. மேலும், இவர் அடுத்ததாக நடிகர் சிலம்பரசன் நடிக்கும் 51-வது திரைப்படத்தை இயக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் சிலம்பரசனின் ரசிகரான அஷ்வத் தனது மூன்றாவது திரைப்படத்தில் அவரையே இயக்குகிறார்.
இந்த நிலையில், சமீபத்திய நேர்காணல் ஒன்றில் பேசிய இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து, "நான் நடிகர் சிலம்பரன் ரசிகர் தான். ஆனால் எனக்கு நடிகர் தனுஷையும் பிடிக்கும். மேலும், நான் அவரிடம் கதை ஒன்றையும் கூறியிருக்கிறேன். அது காதல், ஆக்ஷன் மற்றும் திரில்லர் கலந்த கதையை கொண்ட படம் ஆகும்," என்று தெரிவித்தார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- ஓ மை கடவுளே பார்த்துவிட்டு எனக்கு முதலில் வாழ்த்து தெரிவித்ததும் அவர்தான்.
- அறிமுக வீடியோ உண்மை சம்பவத்தை தழுவி உருவாக்கப்பட்டு இருந்தது.
இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் அடுத்ததாக நடிக்க இருக்கும் படத்தின் அறிமுக வீடியோ நேற்று வெளியிடப்பட்டது. ஓ மை கடவுளே படத்தை இயக்கிய அஸ்வத் மாரிமுத்து இந்த படத்தை இயக்க இருக்கிறார்.
கலகலப்பான காட்சிகள் நிறைந்த புதிய படத்தின் அறிமுக வீடியோ, அஸ்வத் மற்றும் பிரதீப் இடையில் கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற உண்மை கதையை தழுவி உருவாக்கப்பட்டு இருந்தது. இந்த வீடியோவை பார்த்த நடிகர் சிம்பு, இயக்குநர் அஸ்வத் மாரிமுத்துவுக்கு வாழ்த்து தெரிவித்து இருக்கிறார்.

இது தொடர்பாக இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "சிம்பு ரசிகர்களுக்கு வணக்கம். புதிய படத்தின் அறிமுக வீடியோவை பார்த்துவிட்டு தனக்கே உரித்தான ஸ்டைலில் எனக்கு முதலில் வாழ்த்து தெரிவித்தது எஸ்.டி.ஆர். தான். ஓ மை கடவுளே பார்த்துவிட்டு எனக்கு முதலில் வாழ்த்து தெரிவித்ததும் அவர்தான்."
"நான் அவருக்கு சொன்ன கதை முற்றிலும் வேறானது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். அவர் அந்த கதைக்கு தயார் என்றால், அதனை துவங்கிவிடலாம்," என்று குறிப்பிட்டுள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் டிராகன் படத்தில் பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடித்துள்ளார்.
- இப்படத்திற்கு லியோன் ஜேம்ஸ் இசையமைக்கிறார்.
கடந்த 2020 - ஆண்டு பிப் -14 ந்தேதி இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் 'ஓ மை கடவுளே' காதல் நகைச்சுவை படம் வெளியாகி வெற்றி பெற்றது.
இந்நிலையில் தற்போது அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் புதிய படத்தில் பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடித்துள்ளார். இது ஏ.ஜி.எஸ் பட நிறுவனம் தயாரிக்கும் 26 - வது படமாகும்.
இப்படத்திற்கு லியோன் ஜேம்ஸ் இசையமைக்கிறார். படத்திற்கு டிராகன் என தலைப்பு வைத்துள்ளனர்.
மேலும் இப்படத்தில் கே.எஸ். ரவிக்குமார், மிஷ்கின், வி.ஜே. சித்து , ஹர்ஷத் ஆகியோர் நடிக்கின்றனர். படத்தின் நடிக்கப் போகும் மற்ற நடிகர்கள் குறித்த தகவல்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்காக முதல் இரண்டு போஸ்டர்களை வெளியிட்டுள்ளனர்.
படத்தின் மூன்றாவது போஸ்டரை தற்பொழுது படக்குழு வெளியிட்டுள்ளனர். இதில் பிரதீப் ரங்கநாதன் நடிகை அனுபமா பரமேஸ்வரனின் உதட்டை கில்லுவதுப் போல் மிகவும் ரொமாண்டிக்காக போஸ்டர் காட்சி அமைந்துள்ளது. பேக்கிரவுண்டில் கீர்த்தி மற்றும் டிராகன் என்ற பெயர்க்கு ஃப்லேம்ஸ் போடப்பட்டு இருக்கிறது .
இதன் மூலம் அனுபமா பரமேஸ்வரன் இப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார் என படக்குழு தெரிவித்துள்ளது. இப்படம் ஒரு காலேஜ் லவ் ஸ்டோரி நிறைந்த காமெடிக் கதையாக அமைந்திருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- சிம்பு நடிக்கப்போகும் அடுத்த திரைப்படத்தின் அப்டேட்டை வெளியிட்டுள்ளார்
- அஷ்வத் மாரிமுத்து தற்பொழுது பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் டிராகன் திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
சிம்பு நடித்த `பத்து தல' திரைப்படம் மக்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பை பெற்றது. அதைத் தொடர்ந்து இயக்குனர் மணி ரத்னம் இயக்கியுள்ள தக் லைஃப் திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் சிம்பு நடித்துள்ளார்.
இதை தொடர்ந்து சிம்பு தேசிங்கு பெரியசாமி இயக்கவுள்ள STR 48 திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இப்படம் ஒரு பெரிய வரலாற்று பின்னணி கதைக்களத்துடன் உருவாகும் திரைப்படமாகும்.
இந்நிலையில் சிம்பு அவரது எக்ஸ் தளத்தில் நேற்று ஒரு பதிவு ஒன்றை பகிர்ந்தார் அது இணையத்தில் வைரலானது. அதில் அவர் 2000 களில் நடித்த படங்களான தம், மன்மதன், வல்லவன், விடிவி, இவையெல்லாம் சேர்த்து ஜென் சி மோடில் அப்படி இருக்க போறது நம்முடைய அடுத்த திரைப்படம் என பதிவிட்டுள்ளார்.
தற்பொழுது அவர் நடிக்கப்போகும் அடுத்த திரைப்படத்தின் அப்டேட்டை வெளியிட்டுள்ளார். இவர் அடுத்ததாக அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ஏஜிஎஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரிப்பில் நடிக்கவுள்ளார்.
இதுக்குறித்து வெளியிட்ட போஸ்டரில் சிம்பு அவரது 2000 களில் வெளிவந்த படங்களில் உள்ள கெட்டப்பில் இருக்கிறார். கையில் கர்சீப் சுற்றி, டேட்டூ குத்தி மிகவும் ஸ்டைலான தோற்றத்தில் உள்ளார்.
அஷ்வத் மாரிமுத்து தற்பொழுது பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் டிராகன் திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
இந்த பதிவு இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இதனால் ரசிகர்கள் மிகவும் எதிர்ப்பார்ப்புடன் காத்துக் கொண்டுள்ளனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- பிரதீப் ரங்கநாதன், அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் நடிக்கிறார்.
- டிராகன் படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
சென்னை:
தமிழ் சினிமாவில் 'கோமாளி' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். இவரின் கோமாளி படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. அதன் பிறகு, கதாநாயகனாக நடித்து 'லவ் டுடே' படத்தை இயக்கினார். இப்படமும், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.
இதனால் பிரதீப் ரங்கநாதனின் அடுத்த படம் குறித்த எதிர்பார்ப்பும் சற்று அதிகமாகவே இருந்து வந்தது. இதைத் தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் புதிய படத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்து வருகிறார். இப்படத்திற்கு 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் பிரதீப் ரங்கநாதனுடன் இணைந்து, கிரீத்தி ஷெட்டி, எஸ்.ஜே.சூர்யா, கவுரி கிஷன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
பிரதீப் ரங்கநாதன், தற்போது அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் நடிக்கிறார். இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இத்திரைப்படத்திற்கு 'டிராகன்' என்று தலைப்பு வைக்கப்பட்டு உள்ளது. லியோன் ஜேம்ஸ் படத்திற்கு இசை அமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளதாக இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து தெரிவித்திருந்தார்.
இந்தநிலையில் தற்போது, 'டிராகன்' படத்தின் கதாபாத்திர அறிமுக போஸ்டரை படக்குழு தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளது.
- டிராகன் படத்தை ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரித்துள்ளது.
- டிராகன் படத்திற்கு லியோன் ஜேம்ஸ் இசையமைக்கிறார்.
'கோமாளி' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான பிரதீப் ரங்கநாதன், 'லவ் டுடே' படத்தை இயக்கி அதில் நாயகனாகவும் நடித்து இருந்தார். இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதைத் தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' படத்திலும், அஸ்வத் மாரிமுத்து இயக்கும் 'டிராகன்' படங்களில் பிரதீப் ரங்கநாதன் நடித்து வருகிறார்.
பிரதீப் ரங்கநாதன் மற்றும் அஸ்வத் மாரிமுத்து கூட்டணியில் உருவாகும் டிராகன் படத்தை ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப் படத்திற்கு லியோன் ஜேம்ஸ் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளதாக இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து தெரிவித்திருந்தார்.

இந்தநிலையில், 'டிராகன்' படத்தில் வி.ஜே. சித்து அன்பு என்ற கதாபாத்திரத்திலும், ஹர்ஷத் கான் வெற்றி என்ற கதாபாத்திரத்திலும் நடிப்பதாக படக்குழு எக்ஸ் தளத்தில் போஸ்டர் வெளியிட்டுள்ளது. முன்னதாக இந்தப் படத்தில் கயடு லோஹர் பல்லவி என்ற கதாபாத்திரத்தில் நடிப்பதாக படக்குழு தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- இப்படத்தில் பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடித்துள்ளார்.
- இந்த படத்தை ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரித்துள்ளது.
ஓ மை கடவுளே திரைப்படத்தை இயக்கிய அஸ்வத் மாரிமுத்து அடுத்ததாக டிராகன் திரைப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடித்துள்ளார்.
இந்த படத்தை ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரித்துள்ளது. இந்தப் படத்திற்கு லியோன் ஜேம்ஸ் இசையமைத்துள்ளார்.
இப்படத்தில் கயடு லோஹர் , விஜே சித்து, ஹர்ஷத் மற்றும் பிரபல இயக்குநர்களான மிஷ்கின் , கவுதம் வாசுதேவ் மேனன், மரியம் ஜார்ஜ், சித்ரா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தை நெருங்கி உள்ளதாக இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இப்படத்தின் முதல் பாடலான ரைஸ் ஆஃப் தி டிராகன் சமீபத்தில் வெளியாகி மக்களிடையே வரவேற்பை பெற்ற நிலையில் படத்தின் அடுத்த பாடலான டிரீம் சாங் பாடலின் ப்ரோமோ வீடியோ படக்குழு வெளியிட்டுள்ளது. அந்த ப்ரோமோ வீடியோவில் இயக்குனரான அஷ்வத் மாரிமுத்து நடித்துள்ளார். பிரதீப் ரங்கநாதனும் அஸ்வத் மாரிமுத்தும் பல வெளிநாட்டு மாநிலங்களில் இருந்து படத்தை பற்றி நகைச்சுவையாக பேசும் காட்சி இடம் பெற்றுள்ளது. படத்தின் இரண்டாம் பாடலான வழித்துணையே வரும் ஜனவரி 13 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- சிம்புவின் 51-வது படத்தின் டைட்டில் அறிவிப்பு போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.
- இப்படத்துக்கு 'காட் ஆப் லவ்' எனப் பெயரிடப்பட்டுள்ளது.
நடிகர், பாடகர் என பல பரிணாமங்கள் கொண்ட சிலம்பரசன் தற்போது தயாரிப்பாளராகவும் களம் இறங்கியுள்ளார். அவரது பிறந்தநாளான இன்று, சொந்தமாக 'அட்மேன் சினி ஆர்ட்ஸ்' என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ள நடிகர் சிம்பு 50-வது பட அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளார். இந்த படத்தை இயக்குநர் தேசிங்கு பெரியசாமி இயக்குகிறார். இந்தப் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.
இதை தொடர்ந்து சிம்புவின் 51-வது படத்தின் டைட்டில் அறிவிப்பு போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படத்துக்கு 'காட் ஆப் லவ்' எனப் பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தை அஸ்வத் மாரிமுத்து இயக்குகிறார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. 'காட் ஆப் லவ்' திரைப்படம் கோடை விடுமுறையின்போது வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
- டிராகன் படத்தை ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரித்துள்ளது.
- டிராகன் படத்திற்கு லியோன் ஜேம்ஸ் இசையமைத்துள்ளார்.
இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து மற்றும் பிரதீப் ரங்கநாதன் கூட்டணியில் உருவாகி இன்று வெளியான திரைப்படம் 'டிராகன்'. ஏ.ஜி.எஸ். நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. லியோன் ஜேம்ஸ் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார்.
வெளியீட்டுக்கு முன்பே டிராகன் திரைப்படத்தின் ஓ.டி.டி. மற்றும் இதர உரிமங்கள் விற்கப்பட்டு விட்டதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்து இருந்தது. மேலும், இந்தப் படம் திரையரங்கு வெளியீட்டில் பெரும் வசூல் முழுவதும் நிறுவனத்திற்கு போனஸ் தான் என்றும் தெரிவித்தது.
இந்த நிலையில், பட ரிலீசை ஒட்டி செய்தியாளர்களை சந்தித்த டிராகன் படத்தின் இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து தான் இயக்கப்போகும் புதிய படம் தொடர்பாக தகவல் தெரிவித்துள்ளார். இந்தப் படம் அவர் இயக்க இருக்கும் சிம்புவின் 51-வது (எஸ்.டி.ஆர். 51) படத்தை தொடர்ந்து பிரதீப் ரங்கநாதனை வைத்து மீண்டும் படம் இயக்குவதாக இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து தெரிவித்துள்ளார்.
எஸ்.டி.ஆர். 51 படத்தைத் தொடர்ந்து தான் இயக்கும் படத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பார் என்றும் இந்தப் படத்தையும் ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்கும் என்றும் இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து தெரிவித்துள்ளார். 2027-ம் ஆண்டு வாக்கில் இந்தப் படம் அமையும் என்றும் அப்போது பிரதீப் ரங்கநாதனின் கால்ஷீட் கிடைப்பதை பொருத்து அதன் அறிவிப்பு வெளியாகும் என்றும் அவர் தெரிவித்தார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- டிராகன் படத்தை ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரித்துள்ளது.
- டிராகன் படத்திற்கு லியோன் ஜேம்ஸ் இசையமைத்துள்ளார்.
இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து மற்றும் பிரதீப் ரங்கநாதன் கூட்டணியில் கடந்த வாரம் வெளியான திரைப்படம் டிராகன். ஏ.ஜி.எஸ். நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. லியோன் ஜேம்ஸ் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார்.
வெளியீட்டுக்கு முன்பே டிராகன் திரைப்படத்தின் ஓ.டி.டி. மற்றும் இதர உரிமங்கள் விற்கப்பட்டு விட்டதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்து இருந்தது. மேலும், இந்தப் படம் திரையரங்கு வெளியீட்டில் பெரும் வசூல் முழுவதும் நிறுவனத்திற்கு போனஸ் தான் என்றும் தெரிவித்து இருந்தது.
ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், டிராகன் படத்தை பார்த்த இயக்குநர் ஷங்கர் படக்குழுவை பாராட்டி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், "டிராகன் மிக அழகான திரைப்படம். அருமையான எழுத்துக்கள் - இயக்குநருக்கு பாராட்டுக்கள். அனைத்து கதாபாத்திரங்களும் அழகாகவும், முழுமையாகவும் இருந்தது."
"பிரதீப் ரங்கநாதன் தான் ஒரு அசாத்திய எண்டர்டெயினர் என்பதை வெளிப்படுத்தியதோடு, உறுதியான மற்றும் திறமையான நடிகர் என்பதையும் உணர்த்தி இருக்கிறார். இயக்குநர் மிஷ்கின், அனுபமா பரமேஸ்வரன் மற்றும் ஜார்ஜ் மரியான் ஆகியோர் தங்கள் கதாபாத்திரங்களுக்கு உயிர் கொடுத்துள்ளனர்."
"அனைத்து கதாபாத்திரங்களும் சிறப்பாக நடித்துள்ளனர். கடைசி 20 நிமிடங்கள் என் கண்களை கலங்க செய்துவிட்டது. அதிகரித்து வரும் ஏமாற்று வேலைகள் நிறைந்த உலகில், இது மிகவும் அவசியமான தகவல். ஏஜிஎஸ் புரொடக்ஷன் மற்றும் ஒட்டுமொத்த படக்குழுவுக்கும் வாழ்த்துக்கள்," என குறிப்பிட்டுள்ளார்.
இயக்குநர் ஷங்கரின் பதிவுக்கு பதில் எழுதிய பிரதீப் ரங்கநாதன் தனது எக்ஸ் தளத்தில், "சார், உங்கள் திரைப்படங்களை பார்த்தே வளர்ந்து, உங்களை ரசித்து, உங்களை உற்று நோக்கி வந்த ஒரு Fan boy இத்தனை வாழ்த்துக்களை பெறுவதை நினைத்தும் பார்க்கவில்லை. நீங்கள் (எனக்கு மிகவும் பிடித்த இயக்குநர்) என்னை பற்றி பேசியது நம்ப முடியாத கனவு. என் உணர்வுகளை வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியவில்லை. ரொம்ப நன்றி சார். நான் உங்களை மிகவும் நேசிக்கிறேன்," என குறிப்பிட்டுள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.