என் மலர்
நீங்கள் தேடியது "Assassins"
- ரியல் எஸ்டேட் தொழில் செய்தவர் கொலை வழக்கில் கொலையாளிகளை பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்துள்ளனர்.
- சிசிடிவி காமிரா பதிவுகளை எடுத்து ஆய்வு செய்து வருகின்றனர்.
மேலூர்
சிவகங்கை மாவட்டம் கட்டாணி பட்டி அருகே உள்ள பொன்குண்டு பட்டியை சேர்ந்தவர் கண்ணன் (வயது55). இவர் இடத்தை வாங்கி விற்கும் தொழில் செய்து வந்தார். இவரது மனைவி முருகேஸ்வரி. இவர் கரூரில் ஓட்டல் நடத்தி வருகிறார்.
இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர். மாதத்தின் பெரும்பாலான நாட்களில் சொந்த ஊரில் தங்கும் கண்ணன் மேலூருக்கு வேலை நிமித்தமாக சென்று வருவது உண்டு. அதன்படி நேற்று மதியம் கண்ணன் தனது மொபட்டில் மேலூருக்கு வந்து கொண்டிருந்தார்.
நான்கு வழிச்சாலையில் உள்ள ஆட்டுக்குளம் பகுதியில் வந்து கொண்டிருந்த போது காரில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் கண்ணனை மறித்து சரமாரியாரக அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியது. இதில் படுகாயமடைந்த கண்ணன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இந்த கொலை தொடர்பாக மேலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரியல் எஸ்டேட் தொழில் முன்விரோதத்தில் கண்ணன் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
தனிப்படை
இதனிடையே கண்ண னை கொலை செய்து காரில் தப்பிய கொலை யாளிகளை பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரில், இன்ஸ்பெக்டர் மன்னவன் (மேலூர்), சப்-இன்ஸ்பெக்டர் குமரகுரு (ஊமச்சிக்குளம்) ஆகியோர் தலைமையில் 2 தனிப்ப டைகள் அமைக்கப் பட்டுள்ளது. தனிப்படை போலீசார் கொலை நடந்த பகுதியில் பொருத்தப் பட்டிருந்த சிசிடிவி காமிரா பதிவுகளை எடுத்து ஆய்வு செய்து வருகின்றனர்.
கொலையாளிகள் சிக்கிய பின்பே கொலைக்கான காரணம் தெரியவரும்.