search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "assistant headmaster"

    நாகர்கோவில் அருகே பள்ளியில் மாணவி தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம் குறித்து பள்ளி உதவி தலைமை ஆசிரியை மீது போலீசார் 2 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
    நாகர்கோவில்:

    நாகர்கோவில் அருகே உள்ள புத்தேரி பகுதியைச் சேர்ந்த 17 வயது மாணவி ஒருவர் வடசேரி பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார்.

    அந்த மாணவியை பள்ளியின் உதவி தலைமை ஆசிரியை தகாத வார்த்தையால் பேசியதுடன் கையால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்த அந்த மாணவி, பள்ளியின் முதல் மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றார்.

    இதில் மாணவியின் இடுப்பு பகுதியில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து பள்ளி ஆசிரியர்கள், மாணவியை மீட்டு அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    மாணவி தற்கொலைக்கு முயன்றது குறித்து அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பள்ளிக்கு விரைந்து வந்தனர். மாணவி தற்கொலை முயற்சிக்கு காரணமான ஆசிரியை கைது செய்யக்கோரி, பள்ளி வளாகத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

    இதுபற்றி தகவல் அறிந்ததும், டி.எஸ்.பி. இளங்கோவன், மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆசிரியை மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படுமென்று போலீசார் உறுதி அளித்தனர்.

    இதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர். இந்த சம்பவம் குறித்து மாணவியின் தந்தை வடசேரி போலீசில் புகார் செய்தார். புகாரின்பேரில், உதவி தலைமை ஆசிரியை மீது இந்திய தண்டனைச் சட்டம் 294(பி), 323 ஐ.பி.சி. ஆகிய 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    தற்கொலைக்கு முயன்ற மாணவியை மேல் சிகிச்சைக்காக மற்றொரு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. #tamilnews
    காடையாம்பட்டி அருகே உதவி தலைமையாசிரியர் பணிமாற்றம் செய்யப்பட்டதை கண்டித்து பள்ளி மாணவ-மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து இன்று காலை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    காடையாம்பட்டி:

    சேலம் மாவட்டம் காடையாம்பட்டி அருகே மோரூர் பகுதியில் அரசுமேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் கடந்த 1 மாதத்துக்கு முன்பு பள்ளி வளாகத்தில் புதிய கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை போடப்பட்டது.

    இந்நிலையில் பள்ளி நிர்வாகம் பூமி பூஜை போட்ட இடத்தில் புதிய கட்டிடம் கட்டாமல் பள்ளி விளையாட்டு மைதானத்தில் கட்டிடம் கட்டும் பணியை தொடங்கியது. இது குறித்து தகவல் அறிந்த ஊர் பொதுமக்கள் பள்ளியை முற்றுகையிட்டு ஏன் பூமி பூஜை போட்ட இடத்தில் கட்டிடம் கட்டாமல் பள்ளி குழந்தைகள் விளையாடும் விளையாட்டு மைதானத்தில் கட்டிடம் கடடுகின்றீர்கள்? என்று தலைமையாசிரியர் சங்கமித்திரையிடம் கேட்டனர். ஆனால் பள்ளி நிர்வாகம் இது குறித்து சரியான பதில் அளிக்காததால் பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.

    இதனால் கடந்த மாதம் தலைமையாசிரியர் சங்கமித்திரை பணிமாற்றம் செய்யப்பட்டார். பின்னர் இந்த சம்பவத்தில் உதவி தலைமையாசிரியர் கோவிந்தராஜ் நேற்று பணி மாற்றம் செய்யப்பட்டார்.

    உதவி தலைமையாசிரியர் கோவிந்தராஜ் பணிமாற்றம் செய்யப்பட்டதை கண்டித்து பள்ளி மாணவ-மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து இன்று காலை போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்து வந்த தீவட்டிப்படி போலீஸ் இன்ஸ்பெக்டர் சம்பத் மற்றும் போலீசார் பள்ளி மாணவர்களை சமாதனப்படுதது முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் பள்ளி மாணவர்கள் அவர் வேலைக்கு வரும் வரை போராட்டத்தை தொடருவோம் என்று போராட்டத்தை கைவிட மறுத்து தொடர்ந்து போராட் டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தின் போது ஆசிரியர்கள் யாரும் மாணவர்கள் போராட்டத்தை கைவிடுமாறு சொல்ல வராததால் போலீசார் மட்டும் பேச்சு வார்த்தையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். #tamilnews
    ×