search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Assistants"

    • தயாரிப்பாளர்களை நிர்ப்பந்திப்பதாக சர்ச்சைகள்.
    • தயாரிப்பாளர் கஷ்டத்தை உணர்ந்து நடக்க வேண்டும்.

    நடிகர், நடிகைகள் படப்பிடிப்புக்கு வரும்போது நிறைய உதவியாளர்களை அழைத்து வந்து அவர்களுக்கும் சம்பளம் கொடுக்க தயாரிப்பாளர்களை நிர்ப்பந்திப்பதாக சர்ச்சைகள் கிளம்பி உள்ளன.

    இந்த நிலையில் தயாரிப்பாளர்களுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து நடிகை கீர்த்தி சனோன் கூறும்போது, "நடிகர் நடிகைகள் படப்பிடிப்புக்கு வரும்போது அவர்களுடன் எத்தனைபேர் இருக்க வேண்டும் என்று ஒரு வரைமுறை ஏற்படுத்த வேண்டும்.

    அதிகம்பேரை அழைத்து வருவதால் தயாரிப்பாளருக்கு படப்பிடிப்பில் அதிகம் செலவு ஏற்படும். தயாரிப்பாளர் கஷ்டத்தை உணர்ந்து நடக்க வேண்டும்'' என்றார்.

    நடிகை லட்சுமி மஞ்சு கூறும்போது, "ஹாலிவுட் செட்டில் நடிகர்களே அவர்களது இருக்கைகளை கொண்டு வந்து போட்டுக் கொள்வார்கள். நம்ம ஊரில் நடிகை அல்லது நடிகர் வந்தால் நாற்காலியை நகர்த்த கூட உதவியாளர் இருப்பார்.

    ஹாலிவுட் நடிகர் நடிகைகள் பக்கத்தில் ஒரு மேக்கப் ஆர்டிஸ்ட், ஒரு ஹேர் டிரஸ்ஸர் மட்டும்தான் இருப்பார்கள். மிகக் குறைந்த பேருடன் வேலை நடக்கும். நம்ம ஊரில் ஒரு ஹேர் டிரஸ்ஸர் இருந்தால் அவருக்கு ஒரு அசிஸ்டன்ட், ஒரு மேக் அப் ஆர்டிஸ்ட் இருந்தால் அவருக்கு ஒரு அசிஸ்டன்ட் இருப்பார்கள். இப்படி வீண் செலவு எதற்கு என்பதுதான் கேள்வி. பெரிய நடிகர் நடிகைகள் ஒரு படை வைத்துக் கொள்வதை குறைத்துக் கொள்ள வேண்டும்''என்றார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • தமிழக அரசின் மக்கள் நல்வாழ்வுத்துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
    • மூன்று ஷிப்ட் அடிப்படையில் பணி நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    அரசு மருத்துவமனைகளில் பணிபுரியம் கடைநிலை ஊழியர்களுக்கு இதுவரை 2 ஷிப்ட் என்ற முறைகள் பணிநேரம் ஒதுக்கப்பட்டு இருந்தது.

    இந்த நிலையில் தமிழக அரசின் மக்கள் நல்வாழ்வுத்துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு அரசின் மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையின் கீழ் இயங்கும் அரசு மருத்துவக் கல்லூரிகள், அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் செவிலியர் உதவியாளர்கள் ( தரம் 2) மற்றும் கடைநிலை ஊழியர்களான மருத்துவ பணியாளர்கள் மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு மூன்று ஷிப்ட் அடிப்படையில் பணி நேரம் ஒதுக்கீடு செய்து மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் அரசாணை பிறப்பித்துள்ளார்.

    காலை 6 மணி முதல் மணி 1 மணி வரை, மதியம் 1 மணி முதல் இரவு 9 மணி, இரவு 8 மணி முதல் காலை 6 மணி வரை என்று மூன்று ஷிப்ட் அடிப்படையில் பணி நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    மொத்த பணியாளர்களில் 50 சதவீத பேர் முதல் ஷிப்டிலும், 25 சதவீத ஊழியர்கள் 2 வது ஷிப்டிலும், 25 சதவீத ஊழியர்கள் 3-வது ஷிப்டிலும் பணியில் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • 202 ஒப்பந்த தொழிலாளர்களை நீக்கி விட்டு, அந்த இடங்களில் புதிய தொழிலாளர்களை நியமிக்க ரெயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது.
    • புதிதாக ஊழியர்களை நியமிக்க தடை விதிக்க வேண்டும் என மனுதாரர் சங்கத்தின் தரப்பில் வாதிடப்பட்டது.

    சென்னை:

    ரெயில்வே நிர்வாகத்தால் நடத்தப்படும் மருத்துவமனைகளில் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்ட 202 உதவியாளர்களுக்கு பணி நிரந்தரம் செய்ய கோரி தட்சிண ரெயில்வே ஊழியர்கள் சங்கம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த மத்திய நிர்வாக தீர்ப்பாயம், கோரிக்கையை நிராகரித்து, கடந்த டிசம்பர் 19-ந்தேதி உத்தரவிட்டது.

    இந்த 202 ஒப்பந்த தொழிலாளர்களை நீக்கி விட்டு, அந்த இடங்களில் புதிய தொழிலாளர்களை நியமிக்க ரெயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது.

    இந்நிலையில் தீர்ப்பாயத்தின் உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, ஒப்பந்த தொழிலாளர்கள் நியமனத்தில் தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும் என கடந்த டிசம்பர் 20-ந்தேதி உத்தரவிட்டது.

    இதற்கிடையில், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒப்பந்த தொழிலாளர்களுக்கு பணி நியமன உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு உள்ளதாகக் கூறி, அவர்களை பணி நியமனம் செய்ய தடை விதிக்க வேண்டும் என தட்சிண ரெயில்வே ஊழியர்கள் சங்கத்தின் சார்பில் கூடுதல் மனு தாக்கல் செய்யப்பட்டது.

    இந்த மனு, நீதிபதிகள் சுரேஷ் குமார் மற்றும் கும ரேஷ் பாபு அமர்வில் விசாரணைக்கு வந்த போது, 202 ஊழியர்களுக்கு பதிலாக புதிய ஒப்பந்த ஊழியர்களை நியமித்தால், அது இந்த வழக்கை பயனற்றதாக்கி விடும் என்பதால், புதிதாக ஊழியர்களை நியமிக்க தடை விதிக்க வேண்டும் என மனுதாரர் சங்கத்தின் தரப்பில் வாதிடப்பட்டது.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரெயில்வே நிர்வாகம் தரப்பில், மனுதாரர் சங்க உறுப்பினர்களின் நியமனம் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கு பதில் நியமிக்கப்பட உள்ளவர்களின் தேர்வு நடவடிக்கைகள் 2023-ம் ஆண்டு மார்ச் மாதமே தொடங்கிவிட்டது என்றும் விளக்கம் அளிக்கப்பட்டது.

    பணி நிரந்தரம் வழங்க வேண்டும் என்ற மனுதாரர்கள் கோரிக்கையை மத்திய நிர்வாக தீர்ப்பாயம் நிராகரித்துள்ளதால், அவர்களை நீக்கி விட்டு, புதிய ஒப்பந்த ஊழியர்கள் 60 நாட்களுக்கு என்ற அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

    ரெயில்வே நிர்வாகம் தரப்பில் முன் வைக்கப்பட்ட இந்த வாதங்களை ஏற்க மறுத்த நீதிபதிகள், இந்த விவகாரத்தில் தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும் என்ற உத்தரவை ரெயில்வே நிர்வாகம் மீறியுள்ளதாக கூறினர்.

    பின்னர், புதிய ஒப்பந்த தொழிலாளர்களை நியமிக்க இடைக்கால தடை விதித்த நீதிபதிகள், மருத்துவமனைகளில் உதவியாளர்கள் பற்றாக்குறை இருந்தால், அந்த இடங்களில், மனுதாரர் சங்க உறுப்பினர்களை பயன்படுத்திக் கொள்ளலாம். அப்படி மறுநியமனம் வழங்கினால், அதன் மூலம் அவர்களுக்கு எந்த உரிமையும் கோர முடியாது. இந்த மனுவுக்கு பதிலளிக்கும்படி, ரெயில்வே நிர்வாகத்துக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை பிப்ரவரி 3-வது வாரத்துக்கு தள்ளி வைத்தனர்.

    • ஒன்றிய பணி மேற்பார்வையாளர்களுக்கு மதிப்பீடு உச்சவரம்பை ரூ.5 லட்சமாக உயர்த்த வேண்டும்.
    • கணினி உதவியாளர்களுக்கு பணிவரன் முறைப்படுத்த வேண்டும்.

    சீர்காழி:

    சீர்காழி, கொள்ளிடத்தில் ஊரக வளர்ச்சித்துறையினர் ஆர்ப்பாட்டத்தால் நேற்று ஊராட்சி ஒன்றிய அலுவலகம் வெறிச்சோடி காணப்பட்டது.

    ஊரக வளர்ச்சித் துறையில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும், தேர்வு நிலை மற்றும் சிறப்பு நிலை உள்ளிட்ட அரசு ஊழியர்க ளுக்கு வழங்கப்படும் அனைத்து உரிமைகளையும் ஊராட்சி செயலாளர்களுக்கு வழங்க வேண்டும், சட்டமன்ற விதிகளை உடனே வெளியிட வேண்டும், கணினி உதவியாளர்கள் அனைவருக்கும் பணிவரன் முறைப்படுத்த வேண்டும், வரையறுக்கப்பட்ட மேம்படுத்தப்பட்ட ஊதியத்தினை மாநிலம் முழுவதும் ஒரே மாதிரியாக வழங்க வேண்டும், அனைத்து நிலை பதிவு உயர்வுகளையும் உரிய காலத்தில் வழங்க வேண்டும், ஒன்றிய பணி மேற்பார்வையாளர்களுக்கு மதிப்பீடு உச்சவரம்பை ரூ.5 லட்சமாக உயர்த்த வேண்டும்,

    ஊரக வளர்ச்சி துறை ஊழியர்கள் மீது மேற்கொள்ள ப்படும் ஒழுங்கு நடவடிக்கை களை கைவிட வேண்டும், அரசாணை எண் 54 திருத்தம் செய்ய வேண்டும் உள்ளிட்ட 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி புதன்கிழமை முதல் வேலை நிறுத்த போராட்டம் செய்வ தாக அறிவித்திருந்தனர்.

    அதன்படி நேற்று சீர்காழி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஒன்றிய பொறியாளர்கள், பணி மேற்பார்வையாளர்கள், கணினி உதவியாளர்கள் உள்ளிட்டோர் பணிக்கு வராததால் அன்றாட ஊராட்சி ஒன்றிய பணிகள் பாதிக்கப்பட்டது.

    இதேபோல் கொள்ளிடம் ஊராட்சி ஒன்றியத்திலும் அலுவல ர்கள்,ஊழியர்கள் பணிக்கு வராததால் அலுவலகம் வெறிச்சோடி காணப்பட்டது.

    ×