search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "assurance"

    • வைகை வறண்டதால் திருநகரில் விநியோகம் பாதிக்கப்பட்டது.
    • உள்ளூர் போர் வெல் மூலம் தண்ணீர் வழங்கப்படுகிறது.

    திருப்பரங்குன்றம்

    மதுரை மாநகராட்சிக்கு உள்பட்ட திருப்பரங்குன்றம், திருநகர் பகுதி பொதுமக்கள் கடந்த பத்து நாள்களாக குடிநீன்றி அவதிபடுகின்ற–னர்.

    சோழவந்தான் பகுதியை அடுத்த பன்னியான் சித்தை–யாபுரம் பகுதியில் வைகை ஆற்றில் 5 ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கப்பட்டு அங்கிருந்து திருப்பரங்குன்றம், திருநகர், பாண்டியன் நகர், அமைதிசோலை நகர், நெல்லையப்பபுரம் உள்ளிட்ட பகுதிகளில் வைகை கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் கடந்த 10 நாட்களாக இப்பகுதிகளில் தண்ணீர் வருவதில்லை என பொதுமக்களிடம் புகார் எழுந்துள்ளது. குடிநீர் இல் லாததால் இப்பகுதி பொது–மக்கள் தனியார் லாரிகளில் குடிநீர் குடம் ரூ.10 விலை கொடுத்து வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ள–னர்.

    மேலும் புழக்கத்திற்கும் தண்ணீர் இல்லாததால் பொதுமக்கள் கடும் அவதிய–டைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட மாந–கராட்சி நிர்வாகம் இப்பகுதி பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகிக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண் டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

    மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட திருப்பரங்குன்றம் வார்டு எண் 97, 98 மற்றும் 99-ல் உள்ள உள்ளூர் நீர் ஆதாரங்கள் போதிய அளவு இல்லாததால், காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தின் கீழ், மாநகராட்சி தண்ணீர் வழங்க வேண்டும் என, அப் பகுதி மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள். தற்போது சுழற்சி முறையில் மூன்று நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் வினியோகம் என்ற மாநகராட்சியின் உறுதிமொழிக்கு மாறாக, ஐந்து முதல் ஆறு நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிதண்ணீர் வழங்கப்படுகி–றது.

    வாரத்திற்கு ஒரு முறை மட்டுமே தண்ணீர் கிடைக்கி–றது. கடந்த இரண்டு மாதங்க–ளில், எஸ்.மேட்டுத்தெரு, பள்ளர் மேட்டுத்தெரு, சக்கி–லியர் மேட்டுத்தெரு, கூடல் மலைத்தெரு, படப்பை மேட் டுத்தெரு ஆகிய பகுதி–களில் குடிநீர் விநியோகம் என்பது வாரம் ஒருமுறை அல்லது 10 நாட்களுக்கு ஒருமுறை என்ற நிலைக்கு தள்ளப்பட் டுள்ளது.

    இதுதொடர்பாக அப்பகு–தியை சேர்ந்த பெண் ஒருவர் கூறுகையில், கடந்த 2 ஆண்டுகளாக மாநகரில் நல்ல மழை பெய்தபோதிலும், நீரேற்று நிலையங்களில் ஏற்பட்டுள்ள பிரச்சினை–களாலும், தண்ணீர் வரத்து குறைந்ததாலும் குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் போர் வெல் மூலம் தண்ணீர் வழங்கப்படுகிறது.

    இந்த மூன்று வார்டுக–ளுக்கும் நாள் ஒன்றுக்கு 1 மில்லியன் லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. ஆனால் அதற்கு தேவையான அளவு தண்ணீர் கிடைப்பதில்லை. மாநகராட்சி நிர்வாகம் சார்பில் டேங்கர் லாரிகள் மூலம் தண்ணீர் வினியோகம் செய்தாலும், இப்பகுதிகள் பலர் மாடி வீடுகளில் இருப் பதால் தண்ணீர் பிடிக்க முடிவதில்லை.

    மேலும் பக்கத்து தெருக்க–ளில் உள்ளவர்களும், வயதா–னவர்களும் நடக்க முடியாத நிலையில் தண்ணீர் பிடிக்க அவதிப்பட்டு வருகின்றனர். மேலும், மூலக்கரை அருகே உள்ள பம்பிங் ஸ்டேஷனில் 2 மின் மோட்டார்களில் ஏற்பட்ட பிரச்சினையால், கடந்த இரண்டு மாதங்களாக அப்பகுதியில் நீர் அழுத்தம் குறைந்துள்ளது.

    இதுகுறித்து மாநகராட்சி மேற்கு மண்டலத்தலைவர் சுவிதாவிமல் கூறுகையில், வைகை ஆற்றில் நீர்வரத்து இல்லாததால் வைகை கூட்டு குடிநீர் மூலம் தண்ணீர் விநியோகிப்பது தடை பட்டுள்ளது. தற்காலி–கமாக லாரிகள் மூலம் அனைத்து பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யப் படுகிறது.

    லாரிகள் செல்ல–முடியாத பகுதிகளில் சிறிய–ரக வாக–னங்களில் தன்னார் வலர் கள் மூலமும், எங்களது சொந்த செலவிலும் பொது–மக்களுக்கு குடிநீர் விநியோ–கம் செய்து வருகி–றோம். இதேபோல பொதுமக்கள் புழக்கத்திற்கு மாடக்குளம் மற்றும் மூலக்கரை பகுதியில் இருந்து தண்ணீர் விநியோ–கிக்கப்பட்டு வந்தது.

    அப்பகு–தியில் இருந்து மின்மோட்டார்கள் பழுது ஆனதால் தண்ணீர் விநியோ–கிக்க முடியமல் போனது. மின் மோட்டார்கள் சரி–செய்யப்பட்டு இன்னும் ஓரிருநாள்களில் குடிநீர் சீராக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    திருப்பரங்குன்றம் பகு–திக்கு காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தில் இருந்து மேல் நிலை நீர்த்தேக்க தொட்டி–களில் தண்ணீர் தேக்கி வைத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தண்ணீர் பற் றாக்குறையை சமாளிக்க முடியும் என்றார்.

    மாநகராட்சி உயர் அதி–காரி ஒருவர் கூறுகை–யில், மேற்கண்ட மூன்று வார்டுக–ளுக்கும் ஒரு நாளைக்கு 1 மில்லியன் லிட்டர் தண்ணீர் தேவைப்படுவதாகவும், அதிகப்படியான தண்ணீரை திருப்பரங்குன்றம் பகுதிக்கு வழங்க, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்திடம் குடிமை அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. அடுத்த இரண்டு மாதங்க–ளுக்கு மாற்று நாட்களில் திருநகரில் இருந்து குடிநீர் விநியோகம் செய்யப்படும். மூலக்கரை பம்பிங் ஸ்டே–ஷனில் உள்ள 60 ஹெச்பி மோட்டார் பம்ப் அடுத்த இரண்டு நாட்களில் சரி செய்யப்படும் என்று தெரி–வித்தார்.

    • ஊராட்சிகளில் மக்களைத் தேடி மனுக்கள் பெறும் முகாம் நடைபெற்றது.
    • முகாமிற்கு மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் தலைமை தாங்கினர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சு.கொளத் தூர், தேவபாண்ட லம், கள்ளக்குறிச்சி சட்டமன்றத் தொகுதிக் குட்பட்ட சிறுவங்கூர், உலகங்காத்தான், உளுந்தூர் பேட்டை சட்டமன்ற தொகுதிக் குட்பட்ட எலவனசூர் கோட்டை, களமருதூர் ஆகிய ஊராட்சிகளில் மக்களைத் தேடி மனுக்கள் பெறும் முகாம் நடைபெற்றது. முகாமிற்கு மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் தலைமை தாங்கினர். விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார், எம்.எல்.ஏ.க்கள் உதயசூரியன், வசந்தம் கார்த்திகேயன், மணிக்கண்ணன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் புவனேஸ்வரி பெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக பொதுப்பணிகள், நெடுஞ்சா லைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு கலந்து கொண்டு பேசியதாதாவது:- 

    தமிழ்நாடு அரசு தேர்தல் வாக்குறுதியின்படி மாநிலத்தில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிதியுதவியாக ரூ.4 ஆயிரம் வழங்கும் கோப்பில் முதல் கையெழுத்திட்டார். இதேபோல் பெண்கள் கல்லூரி படிப்பை நல்லமுறையில் கற்க வேண்டும் என்பதற்காகவும், அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாகவும் அவர்களின் கணக்கில் மாதம் ரூ.ஆயிரம் வழங்கும் புதுமைப்பெண் திட்டத்தை உருவாக்கி அதனை செயல்படுத்தி வருகிறார்.

    மேலும், விவசாயிகள் நலன் காக்க இதுவரை ஒன்றரை இலட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்புகள் வழங்கி விவசாயிகளின் துயர் துடைத்துள்ளார். தொடர்ந்து நடப்பாண்டிலும் கிட்டத்திட்ட 50 ஆயிரம் இலவச விவசாய மின் இணைப்புகள் வழஙகப்படும் என பட்ஜெட்டில் அறி வித்துளார். இதுபோன்று எண்ணற்ற திட்டங்களை மக்களுக்காக மக்களைத் தேடி செய்து வருகிறார்கள். அதன்படி மக்களைத் தேடி மனுக்கள் பெறும் முகாமில் சங்கராபுரம் சட்டமன்ற தொகுதியில் 631 கோரிக்கை மனுக்களும், கள்ளக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் 866 மனுக்களும், உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதியில் 888 மனுக்களும் ஆக மொத்தம் 2 ஆயிரத்து 385 மனுக்கள் பெறப்பட்டன. அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு பொதுமக்கள் வழங்கும் மனுக்கள் மீது உடனடியாக தீர்வு காணப்படும். தீர்வு காணப்படாத மனுக்கள் தொடர்பாக மனுதாரர் களுக்கு உடனடியாக பதில் அளிக்கப்படும் என கூறினார் முன்னதாக அமைச்சர் மாடாம்பூண்டியில் இருந்து மணலூர்பேட்டை வழியாக திருவண்ணாமலை வரை செல்வதற்கான மகளிர் இலவச பஸ்சினையும், கள்ளக்குறிச்சியில் இருந்து திருவண்ணாமலை வழியாக பெங்களூர் செல்லும் புதிய பஸ்சினைனையும் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் மாவட் போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ், மாவட்ட வருவாய் அலுவலர் சத்தியநாராயணன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மணி, வேளாண்மை இணை இயக்குநர் கருனாநிதி, துணை இயக்குநர் சுகாதார பணிகள் ராஜா, கள்ளக்குறிச்சி வருவாய் கோட்டாட்சியர் பவித்ரா, திருக்கோவிலூர் வருவாய் கோட்டாட்சியர் யோகஜோதி, கண்காணிப்பு பொறியாளர் (நெடுஞ்சாலை) பழனி, பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் மோகனசுந்திரம், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் ஷெர்லி ஏஞ்சலா, மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் சுப்ரமணி, ஊராட்சிகள் உதவி இயக்குநர் ரெத்தினமாலா, மாவட்ட சமூக நல அலுவலர் தீபிகா, மாவட்ட ஆவின் சேர்மேன் ஆறுமுகம், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக விழுப்புரம் மண்டல பொது மேலாளர் செந்தில், ஒன்றிய குழு தலைவர்கள் சத்தியமூர்த்தி, தாமோதரன் உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.  உளுந்தூர்பேட்டை எலவனாசூர்கோட்டையில் நடந்த விழாவில் நகர மன்ற தலைவர் திருநாவுக்கரசு, துணைத் தலைவர் வைத்தியநாதன், உளுந்தூர்பேட்டை தாசில்தார் ராஜ், மாவட்ட மக்கள் செய்தி தொடர்பு அலுவலர் சரவணன், உதவி அலுவலர் சிவகுமார், ஊராட்சி மன்ற தலைவர் நந்தகோபால், நகர மன்ற கவுன்சிலர்கள் டேனியல் ராஜ் செல்வகுமார், ரமேஷ் பாபு, மாலதி ராமலிங்கம், சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×