என் மலர்
நீங்கள் தேடியது "at Bhagwati Amman"
- கொடுமுடி அருகே கருக்கம்பாளையத்தில் உள்ள பகவதி அம்மன் கோவிலில் சுமங்கலிபூஜை நடைபெற்றது.
- இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். பின்னர் அனைவருக்கும் பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது,
கொடுமுடி:
கொடுமுடி அருகே கருக்கம்பாளையத்தில் உள்ள பகவதி அம்மன் கோவிலில் சுமங்கலிபூஜை நடைபெற்றது.இதனையொட்டி கிராமத்து பெண்கள் அனைவரும் கோவிலில் கூடினர். அம்மனுக்கு சிறப்பு அபிசேகம், ஆராதனை நடைபெற்றது.
அதனை தொடர்ந்து உற்சவ மூர்த்தியான அம்மன் விக்கிரகத்துக்கும் சிறப்பு அலங்காரம் செய்யப் பட்டு அம்மன் சிலைக்கு முன்பாக வைக்கப்பட்டு பெண்கள் அனைவரும் பக்தி பாடல்களை பாடி வழிபட்டனர்.
அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது.இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். பின்னர் அனைவருக்கும் பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது,