என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Athalanallur"
- கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் 4 கிராம பஞ்சாயத்துக்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
- தோட்டக்கலை உதவி இயக்குநர் சுபா வாசுகி கலந்து கொண்டு திட்டங்கள் குறித்து எடுத்து கூறினார்.
நெல்லை:
நெல்லை மாவட்டம் பாப்பாக்குடி வட்டாரத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் 2023-24-ம் ஆண்டிற்கு கபாலிபாறை, ரெங்கசமுத்திரம், அத்தாளநல்லூர், சங்கன்திரடு ஆகிய 4 கிராம பஞ்சாயத்துக்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
இதனையொட்டி இந்த பஞ்சாயத்துக்களில் அனைத்து துறையின் திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்திட கிராம திட்ட செயலாக்க குழு கூட்டம் நடைபெற்றது. இதில் தோட்டக்கலை உதவி இயக்குநர் சுபா வாசுகி கலந்து கொண்டு தோட்டக்கலைத்துறை மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து எடுத்து கூறினார். கூட்டத்தில் வேளாண்துறை, வேளாண் வணிகம் மற்றும் விற்பனை துறை, ஊரக வளர்ச்சித்துறை, கால்நடை மற்றும் மீன்வளத்துறை அலுவலர்கள், சங்கன் திரடு ஊராட்சி தலைவர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து இத்திட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட 4 கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள், விவசாயிகளின் கருத்துக்கள், கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்தனர்.