என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "atheletic"
- 6 குறுமையங்களில் ஆகஸ்டு 22-ந்தேதி முதல் குறுமைய குழு விளையாட்டு போட்டிகள் நடந்து வந்தது.
- காலாண்டு தேர்வு அட்டவணை வெளியிட மாவட்ட கல்வித்துறை வேகம் காட்டி வருவதால், போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் :
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 6 குறுமையங்களில் ஆகஸ்டு 22-ந்தேதி முதல் குறுமைய குழு விளையாட்டு போட்டிகள் நடந்து வந்தது.ஒவ்வொரு போட்டியிலும், 14, 17 மற்றும், 19 வயது மாணவ, மாணவிகள் பிரிவில் மாநகராட்சி, அரசு, தனியார் பள்ளி அணிகள் ஆர்வமுடன் பங்கேற்று வருகின்றன. அனைத்து குழு விளையாட்டு போட்டிகளும் முடிந்த நிலையில், தடகள போட்டிகள் எப்போது துவங்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
திருப்பூர் வடக்கு மற்றும் தெற்கு குறுமைய தடகள போட்டிகள் வருகிற 12, 13ம் தேதி 2 நாட்கள் நடக்க இருந்தது. ஆனால் காலாண்டு தேர்வு அட்டவணை வெளியிட மாவட்ட கல்வித்துறை வேகம் காட்டி வருவதால், தற்காலிகமாக குறுமைய தடகள போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.மாவட்டத்தின் அனைத்து குறுமையங்களிலும் தடகள போட்டிகள் நடக்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என குறுமைய போட்டி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
- மாநில அளவிலான தடகளப் போட்டி கிருஷ்ணகிரியில் நடைபெற்றது. இதில் தமிழகம் முழுவதிலும் இருந்து மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.
- பிளஸ்-1 மாணவி அபிநயா 100 மீட்டர் ஓட்ட போட்டியில் 12.38 நொடிகளில் கடந்து தங்கப்பதக்கம் வென்று புதிய சாதனை படைத்தார்
நெல்லை:
மாநில அளவிலான தடகளப் போட்டி கிருஷ்ணகிரியில் நடைபெற்றது. இதில் தமிழகம் முழுவதிலும் இருந்து மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். வண்ணார்பேட்டை விவேகானந்தா வித்யாஷ்ரம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 மாணவி அபிநயா 100 மீட்டர் ஓட்ட போட்டியில் 12.38 நொடிகளில் கடந்து தங்கப்பதக்கம் வென்று புதிய சாதனை படைத்தார்.
இவர் 7-ந் தேதி முதல் 13-ந் தேதி வரை ஆந்திர மாநிலத்தில் நடைபெற இருக்கும் தென் இந்திய அளவிலான தடகள போட்டிக்கு தேர்வாகி உள்ளார். வெற்றி பெற்ற மாணவியை பள்ளியின் சேர்மன் சிவாசேதுராமன், தாளாளர் முனைவர் திருமாறன், முதல்வர் முருகவேள், துணைமுதல்வர் ஜேக்கப்துரைராஜ் ஆகியோர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்