என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Athletes"

    • ராஜ்பவன் தொகுதி வைத்திக்குப்பம் அய்யனார் கோவில் மேடு பகுதியை சேர்ந்த இளைஞர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
    • தற்கான ஏற்பாடுகளை தொகுதி தலைவர் நாகராஜன் செய்திருந்தார்.

    புதுச்சேரி:

    ராஜ்பவன் தொகுதி வைத்திக்குப்பம் அய்யனார் கோவில் மேடு பகுதியை சேர்ந்த இளைஞர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. விழாவில் சி ற ப் பு விருந்தினராக வி.பி. ராமலிங்கம் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு வாலிபால், கேரம், கிரிக்கெ ட், இறகுப்பந்து உள்ளிட்ட விளையாட்டு உபகரணங்களை வழங்கினார்.

    நிகழ்ச்சியில் ராஜ்பவன் தொகுதி செயலாளர் சதீஷ் குமார், பா.ஜனதா .பொதுக்குழு உறுப்பினர் ரவிச்சந் திரன் மற்றும் அய்யனார் கோவில் மேடு இளைஞர்கள் பலர் கலந்துகொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை தொகுதி தலைவர் நாகராஜன் செய்திருந்தார். இதைத் தொடர்ந்து குமரகுருபள்ளம் பகுதியை சேர்ந்த செல்வி, சத்தியா ஆகியோர் பா.ஜனதாவில் இணைந்தனர்.

    தேசிய அளவில் பதக்கம் வெல்லும் புதுவை விளையாட்டு வீரர்களுக்கு ரொக்க பரிசு வழங்க வேண்டும் என்று புதுவை ஒலிம்பிக் சங்கம் வலியுறுத்தி உள்ளது.
    புதுச்சேரி:

    புதுவை ஒலிம்பிக் சங்க பொதுக்குழு கூட்டம் காந்தி வீதியில் உள்ள ஒட்டல் செண்பகாவில் நடந்தது. ஒலிம்பிக் சங்க தலைவர் பக்தவச்சலம் தலைமை தாங்கினார்.

    பொதுச்செயலாளர் வேல்முருகன், வாழ்நாள் தலைவர் பூங்காவனம், மூத்த துணை தலைவர் உதயகுமார், துணை தலைவர்கள் ஏம்பலம் செல்வம், ஜெயராஜ், பொருளாளர் சுப்ரமணி, இணை செயலாளர்கள் சூரியமூர்த்தி, ஸ்டாலின் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ள விளையாட்டு சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

    புதுவை மாநில விளையாட்டு குழுமத்தின் ஊழியர்களுக்கு 8 மாத காலமாக சம்பளம் கொடுக்காமலும், அங்கீகாரம் பெற்றுள்ள விளையாட்டு சங்கங்களுக்கு 2012 முதல் நிதி ஏதும் கொடுக்காமல் உள்ளதற்கு கண்டனம் தெரிவிப்பது.

    பல ஆண்டுகளாக தேசிய அளவில் தங்கம், வெள்ளி மற்றும் வெண்கல பதக்கம் பெற்ற விளையாட்டு வீரர்களுக்கு பண பரிசு வழங்கப்படவில்லை. இதனை அரசு உடனே வழங்க வேண்டும்.

    புதிய விளையாட்டு சங்கங்கள் 10 ஆண்டுகளுக்கும் மேலாக புதுவை மாநில விளையாட்டு குழு மத்திடம் அங்கீகாரம் கோரியும் அங்கீகாரம் தராமல், அவர்களுக்கு வேண்டிய சங்கங்களுக்கு மட்டும் புதுவை மாநில விளையாட்டு குழுமத்தின் சட்ட திட்டங்களுக்கு புறம்பாக அங்கீகாரம் கொடுத்து உள்ளதற்கு கண்டனம் தெரிவிப்பது.

    விளையாட்டின் மீது அக்கறையே செலுத்தாமல் விளையாட்டு சங்கங்களுக்கு சரியான நிதி கொடுக்காமல் அனுபவமிக்க உறுப்பினர் செயலாளரை கொண்ட புதுவை மாநில விளையாட்டு குழுமத்தின் செயல்பாடுகளை வன்மையாக கண்டிப்பதுடன் இது குறித்து முதல்-அமைச்சர், விளையாட்டுத்துறை அமைச்சர், புதுவை மாநில விளையாட்டு குழுமத்தின் துணை தலைவர் மற்றும் கல்வித்துறை செயலாளர் ஆகியோருக்கு புகார் மனு கொடுப்பது.

    மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
    நாகை மாவட்டத்தில் வருகிற 19-ந்தேதி தமிழ்நாடு பொன்விழா தடகளப் போட்டிகள் மாவட்ட விளையாட்டரங்கில் நடத்தப்படவுள்ளது என்று கலெக்டர் சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.

    கீழ்வேளூர்:

    தமிழ்நாடு என பெயர் சூட்டப்பட்டு 50ம் ஆண்டில் காலடி எடுத்து வைப்பதன் பொன்விழா ஆண்டை முன்னிட்டு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலம், மாவட்ட அளவிலான தடகள போட்டிகள் 21 வயதிற்குட்பட்ட வீரர், வீராங்கனைகளுக்கு எதிர்வரும் 19.7.18 அன்று காலை 9 மணி முதல் மாவட்ட விளையாட்டரங்கில் நடத்தப்படவுள்ளது என்று நாகை மாவட்ட கலெக்டர் சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.

    தடகள விளையாட்டில் 100மீ. ஓட்டம், உயரம் தாண்டுதல் மற்றும் நீளம் தாண்டுதல் ஆகிய பிரிவுகளில் ஆடவர் மற்றும் மகளிர் பிரிவிற்கு தனித்தனியாக நடத்தப்படவுள்ளது. போட்டியில் கலந்து கொள்பவர்கள் 31.12.17 அன்று 21 வயதிற்குட்பட்டவர்களாக இருத்தல் வேண்டும். முதலிடத்தில் வெற்றி பெறுபவருக்கு முதல் பரிசுத் தொகையாக ரூ.2,500ம், 2ம் பரிசு ரூ.1,500ம், 3ம் பரிசு ரூ.1,000ம் வழங்கப்பட உள்ளது.

    மாவட்ட போட்டிகளில் வெற்றி பெறுபவர்கள் மாநில போட்டிக்கு அரசு செலவில் அழைத்துச் செல்லப்படுவர். மாநில போட்டியில் வெற்றி பெறும் வீரர்களுக்கு முதல் பரிசு ரூ.50,000-ம் மற்றும் 4 கிராம் தங்கப்பதக்கம், 2ம் பரிசு ரூ.25,000ம் மற்றும் 4 கிராம் தங்கப்பதக்கம், 3ம் பரிசு ரூ.10,000ம் மற்றும் 4 கிராம் தங்கப் பதக்கம் முதலமைச்சரால் சென்னையில் நடைபெறவுள்ள தமிழ்நாடு 50ம் ஆண்டு பொன்விழாவில் வழங்கப்படும்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    ராணுவம், ரெயில்வே உள்ளிட்ட மத்திய அரசு பணியில் இருக்கும் விளையாட்டு வீரர்கள் சர்வதேச போட்டிகளில் பதக்கம் வென்றால், அவர்களுக்கான பரிசுத்தொகையை குறைக்க அரியானா அரசு முடிவு செய்துள்ளது.
    சண்டிகர்:

    அரியனா மாநில அரசு விளையாட்டு துறையில் அதிக கவனம் செலுத்தி வருகிறது. சமீபத்தில் அம்மாநில விளையாட்டு மேம்பாட்டிற்காக அம்மாநில அரசு ஒரு அதிரடி முடிவை எடுத்தது. அதன்படி அம்மாநிலத்தை சேர்ந்த விளையாட்டு வீரர்கள் தாங்கள் சம்பாதிக்கும் தொகையில் 3-ல் ஒரு பங்கை மாநில விளையாட்டு மேம்பாட்டுக்காக வழங்க உத்தரவிட்டது.

    விளையாட்டு வீரர்கள், எதிர்க்கட்சிகள் என கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில் அந்த உத்தரவு திரும்ப பெறப்பட்டது. இந்நிலையில், ராணுவம், ரெயில்வே உள்ளிட்ட மத்திய அரசு பணியில் இருக்கும் விளையாட்டு வீரர்கள் சர்வதேச போட்டிகளில் பரிசு வென்றால் அவர்களுக்கான பரிசுத்தொகையை குறைக்க அரசு முடிவெடுத்துள்ளது.



    ஒரு வீரர் பதக்கம் வெல்லும் போது சம்பந்தப்பட்ட துறை சார்பிலும் பரிசுத்தொகை வழங்கப்படுகிறது. இதனால், அவர்களுக்கான மாநில அரசின் பரிசுத்தொகையை குறைக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என விளையாட்டுத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.
    அரியானா அரசின் இந்த முடிவுக்கும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
    ×