என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ATM card"

    நண்பரின் ஏ.டி.எம். கார்டு மூலம் ரூ. 5 ஆயிரம் பணம் திருடிய வாலிபரை போலீசார் தேடி வருகிறார்கள்.
    ஆரல்வாய்மொழி:

    ஆரல்வாய்மொழி செண்பகராமன்புதூர் பகுதியைச் சேர்ந்தவர் பகவதியப்பன் (வயது27). இவர் பூக்கடையில் வேலை பார்த்து வருகிறார்.

    அதே பகுதியைச் சேர்ந்த சக்தி(20). இவர் காற்றாலையில் வேலை பார்த்து வருகிறார். இருவரும் நண்பர்கள். இந்த நிலையில் சம்பவத்தன்று சக்தி தனது நண்பர் பகவதியப்பன் வீட்டிற்கு சென்றிருந்தார். அப்போது அவரது வீட்டில் இருந்த ஏ.டி.எம். கார்டை நண்பருக்கு தெரியாமல் எடுத்து வந்தார்.

    அந்த பகுதியில் உள்ள ஒரு ஏ.டி.எம். எந்திரத்தில் ரூ. 5 ஆயிரம் பணத்தை எடுத்தார். மீண்டும் ஏ.டி.எம். கார்டை நண்பன் வீட்டில் வைத்து விட்டார். பணம் எடுத்தற்கான குறுச்செய்தி பகவதியப்பன் செல்போனுக்கு வந்தது.

    அதிர்ச்சி அடைந்த பகவதியப்பன் வீட்டிற்கு வந்து விசாரித்தார். ஆனால் ஏ.டி.எம்.மில் யாரும் பணம் எடுக்கவில்லை என கூறினார்கள். அப்போது தனது நண்பர் சக்தி வீட்டிற்கு வந்தது தெரியவந்தது. தனது நண்பரை தொடர்பு கொள்ள முடியவில்லை. 
    இதையடுத்து ஆரல்வாய்மொழி போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சுகுமாரன் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினார். 

    விசாரணையில் சக்தி தலைமறைவாக இருப்பது தெரியவந்தது. இதையடுத்து சக்தி மீது வழக்குபதிவு செய்து அவரை தேடி வருகிறார்கள்.
    வத்தலக்குண்டுவில் பெண்ணிடம் ஏ.டி.எம். கார்டை பெற்று ரூ.20ஆயிரம் பணத்தை அபேஸ் செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

    வத்தலக்குண்டு:

    வத்தலக்குண்டு அருகில் உள்ள மேலக்கோவில் பட்டியை சேர்ந்தவர் கண்ணன். கூலிதொழிலாளி. இவரது மனைவி சசிகலா(25). நேற்று மாலை மதுரை மெயின்ரோட்டில் உள்ள ஏ.டி.எம் மையத்தில் பணம் எடுக்க வந்தார். பணம் எடுப்பது குறித்த தகவல் சரிவர தெரியாததால் அருகில் இருந்த ஒரு வாலிபரிடம் தனது அக்கவுண்டில் எவ்வளவு பணம் உள்ளது என பார்க்குமாறு கூறியுள்ளார்.

    கார்டை வாங்கிய அந்த வாலிபர் ரூ.20 ஆயிரம் பணத்தை எடுத்துக்கொண்டு உங்கள் அக்கவுண்டில் பணம் இல்லை என கூறி சென்றுவிட்டார். அவர் சென்றபிறகு ரூ.20ஆயிரம் பணம் எடுக்கப்பட்டதாக தனது செல்போன் எண்ணுக்கு வந்த தகவலை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து வத்தலக்குண்டு போலீசில் புகார் அளித்தார்.

    போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தியதில் பணத்தை எடுத்தது தேனி மாவட்டம் டி.வாடிப்பட்டி எம்.ஜி.ஆர் நகரை சேர்ந்த சாமிக்கண்ணு மகன் கனகராஜ்(30) என தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்து நிலக்கோட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    ×