என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "attack on girl"

    • நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கோதூர் அருகே மாலிப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் நிலப் பிரச்சினை சம்பந்தமாக வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
    • இது குறித்து செல்வி நல்லூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் ரங்கசாமி, முத்துசாமி ,கண்ணையன் ஆகிய 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கோதூர் அருகே மாலிப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பொம்மசாமி ( வயது 48 ). இவரது மனைவி செல்வி (43). இவர்களுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த உறவினர்கள் ரங்கசாமி, முத்துசாமி, கண்ணையன் ஆகியோருக்கும் நிலப்பிரச்சினை சம்பந்தமாக முன்விரோதம் இருந்து வந்தது .இந்நிலையில் செல்வி இருந்த பகுதிக்கு வந்த ரங்கசாமி, முத்துசாமி, கண்ணையன் ஆகியோர் செல்வியிடம் நிலப் பிரச்சினை சம்பந்தமாக வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    இதில் இரு பிரிவினருக்கும் வாய்த் தகராறு ஏற்பட்டது .இதனால் ஆத்திரம் அடைந்த ரங்கசாமி, முத்துசாமி, கண்ணையன் ஆகியோர் சேர்ந்து செல்வியை தாக்கியுள்ளனர். இதில் காயம் அடைந்த செல்வி நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    இது குறித்து செல்வி நல்லூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் ரங்கசாமி, முத்துசாமி ,கண்ணையன் ஆகிய 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×