search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "attacked college students"

    • படிக்கட்டில் தொங்கிக் கொண்டு ஆபத்தான முறையில் பயணம் செய்கின்றனர்
    • கூடுதல் பஸ் இயக்க பெற்றோர்கள் வலியுறுத்தல்

    செய்யாறு:

    திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் காலை மற்றும் மாலை என 2 வேளைகளில் சுழற்சி முறையில் வகுப்புகள் நடைபெறுகின்றன.

    இக் கல்லூரியில் திருவண்ணாமலை, விழுப்புரம், ராணிப்பேட்டை மாவட்டங்களைச் சேர்ந்த 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள் படித்து வருகின்றனர்.

    கல்லூரியில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, பேருந்துகள் இயக்கப்படவில்லை. இதனால், காலை, பிற்பகல் மற்றும் மாலை நேரங்களில் பஸ்களில் முண்டியடித்து ஏறியும், படிக்கட்டில் தொங்கிக் கொண்டும் மாணவர்கள் ஆபத்தான முறையில் பயணம் செய்கின்றனர்.

    இந்தநிலையில் பிற்பகல் வகுப்பு முடிந்து வீடு திரும்பும்போது, பஸ்களில் இடம் பிடிப்பதில் ஆரணி பகுதிகளை சேர்ந்த மாணவர்களிடையே நேற்று மோதல் ஏற்பட்டுள்ளது.

    இதனை தொடர்ந்து மாணவர்கள் 2 குழுக்களாக மோதிக்கொண்டனர்.

    அப்போது, ஒருவரையொருவர் பிடித்து தள்ளிக்கொண்டு பலமாக தாக்கிக்கொண்டனர். இதுகுறித்து தகவலறிந்த செய்யாறு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, மாணவர்களின் மோதலை கலைத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப அந்தந்த வழிதடங்கலில் கல்லூரி மற்றும் பள்ளி வேலைகளில் அரசு கூடுதலாக பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்களின் பெற்றோர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    ×