search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "auctioned"

    • வாரம்தோறும் செவ்வாயன்று தேங்காய் பருப்பும் ஏலம் நடைபெற்றது.
    • 102 விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    வெள்ளகோவில், ஜூன்.28-

    வெள்ளகோவில் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாரம்தோறும் செவ்வாயன்று தேங்காய் பருப்பும் வியாழனன்று சூரியகாந்தி விதையும் ஏலம் நடைபெற்று வருகிறது. ஒழுங்கு முறை விற்பனை கூடத்திற்கு வாணியம்பாடி, மூலனூர், கரூர், ஸ்ரீரங்கம், திருச்சி பகுதி விவசாயிகள் கலந்து கொண்டு தேங்காய் பருப்பு மற்றும் சூரியகாந்தி விதை விற்பனைக்கு கொண்டு வந்து விற்பனை செய்து செல்வார்கள்.

    நேற்று செவ்வாய்கிழமை 102 விவசாயிகள் கலந்து கொண்டு 42 ஆயிரத்து 247 கிலோ தேங்காய் பருப்பு விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இதில் வெள்ளகோவில், காங்கேயம், முத்தூர், ஊத்துக்குளி பகுதியைச் சேர்ந்த 10 வியாபாரிகள் கலந்து கொண்டு ஒரு கிலோ தேங்காய் பருப்பு அதிகபட்சமாக ரூ. 74.88 க்கும், குறைந்தபட்சம் ரூ.56.88க்கும் கொள்முதல் செய்தனர்.

    நேற்று மொத்தம் ரூ.27லட்சத்து 53ஆயிரத்து 504 க்கு வணிகம் நடைபெற்றது. இத்தகவலை வெள்ளகோவில் ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் சி. மகுடேஸ்வரன் தெரிவித்தார்.

    • திங்கட்கிழமை தென்னை மற்றும் பனங்கருப்பட்டி ஏலம் நடைபெறுவது வழக்கம்.
    • 4 ஆயிரம் கிலோ தென்னங் கருப்பட்டியை கொண்டு வந்திருந்தார்கள்.

    குன்னத்தூர் :

    குன்னத்தூரில் கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்ட கருப்பட்டி கூட்டுறவு விற்பனை சம்மேளனம் செயல்பட்டு வருகிறது. இங்கு வாரந்தோறும் திங்கட்கிழமை தென்னை மற்றும் பனங்கருப்பட்டி ஏலம் நடைபெறுவது வழக்கம். அதன்படி நேற்று முன்தினம் நடைபெற்ற ஏலத்திற்கு உற்பத்தியாளர்கள் 4 ஆயிரம் கிலோ தென்னங் கருப்பட்டியை கொண்டு வந்திருந்தார்கள். தென்னங்கருப்பட்டி கிலோ ரூ.85 வீதம் மொத்தம் ரூ.3 லட்சத்து 40 ஆயிரத்துக்கு ஏலம் போனது. இந்த தகவலை கூட்டுறவு கருப்பட்டி சம்மேளன மேலாண்மை இயக்குனர் மற்றும் தலைவர் தெரிவித்தனர்.

    திருப்பூர் மாவட்டம் காங்கயம் நகரம், கரூர் சாலை பகுதியில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் தேங்காய் பருப்பு மறைமுக ஏல முறையில் விற்பனை நடைபெற்றது. இதில் காங்கயம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த 7 விவசாயிகள் 118 மூட்டைகள் (6,161 கிலோ) தேங்காய் பருப்பினை (கொப்பரை) விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.

    இதில் காங்கயம், வெள்ளகோவில், முத்தூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 7 வியாபாரிகள் தேங்காய் பருப்புகளை வாங்க வந்திருந்தனர். இங்கு நடந்த ஏலத்தில் ரூ.4.45 லட்சத்திற்கு பருப்புகள் விற்பனையானது. தேங்காய் பருப்பு அதிக பட்சமாக ஒரு கிலோ ரூ.78-க்கும், குறைந்த பட்சமாக ரூ.58-க்கும், சராசரியாக ரூ.76-க்கும் ஏலம் போனது. ஏலத்திற்கான ஏற்பாடுகளை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் ஆர்.மாரியப்பன் செய்திருந்தார். 

    • கூட்டுறவு விற்பனை சங்கத்தில் வாரந்தோறும் சனி மற்றும் புதன்கிழமைகளில் வாழைப்பழம் மற்றும் தேங்காய் ஏலம் நடைபெற்று வருகிறது.
    • மொத்தம் 2100 வாழைத்தார் ஏலத்திற்கு வந்திருந்தன. அதன் மதிப்பு ரூ.5 லட்சத்து 64 ஆயிரம் ஆகும்.

    கோபி:

    கோபிசெட்டி பாளையம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் வாரந்தோறும் சனி மற்றும் புதன்கிழமைகளில் வாழைப்பழம் மற்றும் தேங்காய் ஏலம் நடைபெற்று வருகிறது.

    ஆடி 18 விடுமுறை என்பதால் கடந்த 1-ந் தேதியே வாழைப்பழங்கள் ஏலம் நடைபெற்றது. இதில் கதலி ஒரு கிலோ ரூ.45-க்கும், நேந்திரன் ஒரு கிலோ ரூ.41-க்கும் விலை போனது.

    பூவன் ஒருத்தார் ரூ.780-க்கும், செவ்வாழை ஒருத்தார் ரூ.720-க்கும் ரொபஸ்டா ஒருத்தார் ரூ.560-க்கும் ரஸ்தாலி ஒருத்தார் ரூ.580-க்கும், முந்தன் ஒருத்தார் ரூ.710-க்கும், பச்சைநாடன் ஒருத்தார் ரூ.470-க்கும் விலை போனது. மொத்தம் 2100 வாழைத்தார் ஏலத்திற்கு வந்திருந்தன. அதன் மதிப்பு ரூ.5 லட்சத்து 64 ஆயிரம் ஆகும்.

    ஏலத்தில் கோபி சத்தியமங்கலம், ஈரோடு, திருப்பூர், கோவை மற்றும் சுற்று வட்டார பகுதியில் இருந்து ஏராளமான வியாபாரிகள் வந்து ஏலத்தில் கலந்து கொண்டு வாழைப்பழங்களை வாங்கி சென்றனர்.

    • சென்னிமலை முருகன் கோவிலில் பிரசாத கடை ரூ. 15 லட்சத்து 50 ஆயிரத்திற்கு ஏலம் போனது. அதேபோல் மலை அடிவாரத்தில் உள்ள முடிகாணிக்கை செலுத்தும் இடத்தில் முடியினை சேகரித்து கொள்ள ஒரு வருடத்திற்கு ரூ.66 ஆயிரத்து 200 ஏலம் போனது.
    • இதேபோல் மலை மீது பூக்கடை, தேங்காய், பழம் விற்பனை செய்யும் கடைகள், குழந்தைகள் விளையாட்டு பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் ஏலம் குறைவாக கேட்டதால் ஏலம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

    சென்னிமலை:

    ஈரோடு மாவட்டத்தின் புகழ் பெற்ற மலை கோவிலாக விளங்கும் சென்னிமலை முருகன் கோவிலுக்கு நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வந்து முருகப்பெ ருமானை வழிபட்டு செல்கி ன்றனர். இந்த கோவிலின் ஆண்டு வருமானம் ரூ.3 கோடியே 40 லட்சம் ஆகும்.

    இந்நிலையில் சென்னிமலை மலை அடிவாரத்தில் உள்ள கோவில் அலுவலகத்தில் சென்னிமலை மலை மீதுள்ள முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதம் விற்பனை செய்து கொள்ளும் கடை ஒரு வருடத்திற்கு நடத்த தக்கார் அன்னகொடி, செயல் அலுவலர் அருள்குமார் தலைமையில் ஏலம் நடந்தது.

    இதில் பிரசாத கடை ரூ. 15 லட்சத்து 50 ஆயிரத்திற்கு ஏலம் போனது. அதேபோல் மலை அடிவாரத்தில் உள்ள முடிகாணிக்கை செலுத்தும் இடத்தில் முடியினை சேகரித்து கொள்ள ஒரு வருடத்திற்கு ரூ.66 ஆயிரத்து 200 ஏலம் போனது.

    இதேபோல் மலை மீது பூக்கடை, தேங்காய், பழம் விற்பனை செய்யும் கடைகள், குழந்தைகள் விளையாட்டு பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் ஏலம் குறைவாக கேட்டதால் ஏலம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

    • சென்னிமலை அருகே வெப்பிலி துணை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய்கள் ஏலம் நடைபெற்றது.
    • ஏலத்தில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 42 ஆயிரத்து 708 தேங்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.

    சென்னிமலை:

    சென்னிமலை அருகே வெப்பிலி துணை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய்கள் ஏலம் நடைபெற்றது. ஏலத்தில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 42 ஆயிரத்து 708 தேங்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.

    இதில் கிலோ ஒன்றுக்கு குறைந்தபட்ச விலையாக 20 ரூபாய் 20 காசுக்கும், அதிகபட்ச விலையாக 26 ரூபாய் 39 காசுக்கும், சராசரி விலையாக 21 ரூபாய் 31 காசுக்கும் ஏலம் போனது. மொத்தம் 13 ஆயிரத்து 189 கிலோ எடையுள்ள தேங்காய்கள் 2 லட்சத்து 94 ஆயிரத்து 605 ரூபாய்க்கு விற்பனை ஆனது.

    அதேபோல் கொப்பரை தேங்காய்கள் 5 மூட்டைகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர். இதில் கிலோ ஒன்றுக்கு குறைந்தபட்ச விலையாக 76 ரூபாய் 99 காசுக்கும், அதிகபட்ச விலையாக 77 ரூபாய் 99 காசுக்கும், சராசரி விலையாக 77 ரூபாய் 49 காசுக்கு ஏலம் போனது.

    மொத்தம் 98 கிலோ எடையுள்ள கொப்பரை தேங்காய்கள் 7 ஆயிரத்து 590 ரூபாய்க்கு விற்பனை ஆனது. தேங்காய் மற்றும் கொப்பரை தேங்காய்கள் இரண்டும் சேர்த்து மூன்று லட்சத்து இரண்டாயிரத்து 195 ரூபாய்க்கு விற்பனை நடைபெற்றது.

    ×