என் மலர்
நீங்கள் தேடியது "Aura"
- இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் மனைவிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.
- இந்தத் தம்பதிக்கு கடந்த ஆண்டு ஆண் குழந்தை பிறந்தது.
புதுடெல்லி:
இந்திய கிரிக்கெட்டின் ஆல்ரவுண்டராக சிறந்து விளங்கியவர் யுவராஜ் சிங். கடந்த 2000-மாவது ஆண்டு முதல் 2017 வரையில் இந்தியாவுக்காக சர்வதேச போட்டிகளில் விளையாடியவர். 2011 ஒருநாள் உலக கோப்பை தொடரில் தொடர் நாயகன் விருதை வென்றவர்.
யுவராஜ் சிங்கின் மனைவி ஹசில் கீச். 2016-ம் ஆண்டு திருமணமான இந்தத் தம்பதிக்கு கடந்த ஆண்டு ஆண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தைக்கு ஒரியன் என பெயர் வைக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, யுவராஜ் சிங்கின் மனைவி ஹசில் கீச் மீண்டும் கர்ப்பமடைந்தார்.
இந்நிலையில், ஹசில் கீச்க்கு பெண் குழந்தை பிறந்தது. அதேவேளை பெண் குழந்தைக்கு ஆரா என பெயரிடப்பட்டுள்ளதாக யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக யுவராஜ் சிங் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள செய்தியில், உறக்கமில்லா இரவுகள் எங்கள் செல்ல மகளை வரவேற்றதால் மிகவும் மகிழ்ச்சியாக மாறிவிட்டது. இதோ எங்கள் இளவரசி ஆரா என பதிவிட்டுள்ளார். மேலும் அவர், அவரது மனைவி ஹேசல் கீச், மகன் மற்றும் மகளும் உள்ள புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.