என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "australia open tennis"
- ஆஸ்திரேலிய ஓபன் டென்னிசில் 4-வது சுற்று போட்டிகள் நடைபெற்றது.
- இதில் கிரீஸ் வீரரான சிட்சிபாஸ் இத்தாலி வீரரை வென்று காலிறுதிக்கு முன்னேறினார்.
மெல்போர்ன்:
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி தொடர் கடந்த 16-ம் தேதி ஆஸ்திரேலியாவில் தொடங்கி நடந்து வருகிறது. வரும் 29-ம் தேதி வரை பல சுற்றுகள் கொண்ட போட்டிகள் நடைபெற உள்ளன.
இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவின் 3-வது சுற்று போட்டியில் கிரீஸ் வீரரான ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ், இத்தாலி வீரர் ஜானிக் சின்னருடன் மோதினார்.
இதில் சிட்சிபாஸ் 6-4, 6-4 என முதல் இரு செட்களை கைப்பற்றினார். இதற்கு பதிலடியாக சின்னர் அடுத்த இரு செட்களை 6-3, 6-4 என கைப்பற்றினார்.
வெற்றியாளரை நிர்ணயிக்கும் 5வது செட்டை சிட்சிபாஸ் 6-3 கைப்பற்றினார்.
இறுதியில், சிட்சிபாஸ் 6-4, 6-4, 3-6, 4-6, 6-3 என்ற செட் கணக்கில் சின்னரை வீழ்த்தி நான்காவது சுற்றுக்கு முன்னேறினார்.
இதேபோல், அமெரிக்காவின் செபாஸ்டியன் கோர்டா, போலந்தின் ஹுபர்ட் ஹர்காக்சுடன் மோதினார். இதில் கோர்டா 3-6, 6-3, 6-2, 1-6, 7-6 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதிக்கு முன்னேறினார்.
- டி-மினார், 7க்கு 6, 6க்கு 2, 6க்கு 1 என்ற செட் கணக்கில் சுலபமாக வெற்றி கண்டார்.
- நாளை நடைபெறும் நான்காம் சுற்றுப் போட்டியில் முன்னாள் சாம்பியன் ஜோகோவிச்சுடன் பலப்பரீட்சை நடத்தவுள்ளார்.
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் நான்காம் சுற்றுக்கு உள்ளூர் வீரர் அலெக்ஸ் டி-மினார் முன்னேறி உள்ளார்.
ஒற்றையர் பிரிவு 3ம் சுற்று ஆட்டத்தில் பிரான்ஸ் வீரர் பெஞ்சமின் பொன்ஸி உடன் மோதிய டி-மினார், 7க்கு 6, 6க்கு 2, 6க்கு 1 என்ற செட் கணக்கில் சுலபமாக வெற்றி கண்டார்.
இந்த வெற்றி மூலம் நான்காம் சுற்றுக்கு தகுதி பெற்ற டி-மினார், நாளை நடைபெறும் நான்காம் சுற்றுப் போட்டியில் முன்னாள் சாம்பியன் ஜோகோவிச்சுடன் பலப்பரீட்சை நடத்தவுள்ளார்.
- ஆஸ்திரேலிய ஓபனில் ஸ்பெயின் வீரரிடம் ஆண்டி முர்ரே தோல்வி அடைந்தார்.
- முன்னணி வீரர்களான நடால், ஸ்வரேவ், கேஸ்பர் ரூட், மெத்வதேவும் வெளியேறி உள்ளனர்.
மெல்போர்ன்:
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி தொடர் கடந்த 16-ம் தேதி ஆஸ்திரேலியாவில் தொடங்கி நடந்து வருகிறது. வரும் 29-ம் தேதி வரை பல சுற்றுகள் கொண்ட போட்டிகள் நடைபெற உள்ளன.
இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவின் 3-வது சுற்று போட்டியில் இங்கிலாந்து வீரர் ஆண்டி முர்ரே, ஸ்பெயின் வீரர் ராபர்டோ பாவ்டிஸ்டா அகுட்டுடன் மோதினார்.
இந்தப் போட்டியில் தொடக்கம் முதலே சிறப்பாக ஆடிய பாவ்டிஸ்டா 6-1, 6-7, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் ஆண்டி முர்ரேவை வீழ்த்தி நான்காவது சுற்றுக்கு முன்னேறினார்.
முன்னணி வீரர்களான ரபேல் நடால், ஸ்வரேவ், கேஸ்பர் ரூட், மெத்வதேவ் ஆகியோர் தொடரில் இருந்து வெளியேறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- ஆஸ்திரேலிய ஓபன் டென்னிசில் இன்று 3-வது சுற்று போட்டிகள் நடைபெற்றது.
- இதில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச் பல்கேரியா வீரரை வென்றார்.
மெல்போர்ன்:
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி தொடர் கடந்த 16-ம் தேதி ஆஸ்திரேலியாவில் தொடங்கி நடந்து வருகிறது. வரும் 29-ம் தேதி வரை பல சுற்றுகள் கொண்ட போட்டிகள் நடைபெற உள்ளன.
இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவின் 3-வது சுற்று போட்டியில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச், பல்கேரியாவின் கிரிகோர் டிமித்ரோவுடன் மோதினார்.
இந்தப் போட்டியில் ஆரம்பம் முதலே சிறப்பாக ஆடிய ஜோகோவிச் 7-6, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் டிமித்ரோவை வீழ்த்தி நான்காவது சுற்றுக்கு முன்னேறினார்.
- ஆஸ்திரேலிய ஓபனில் அமெரிக்க வீரரிடம் மெத்வதேவ் தோல்வி அடைந்தார்.
- ஏற்கனவே முன்னணி வீரர்களான நடால் ஸ்வரேவ், கேஸ்பர் ரூட் ஆகியோரும் வெளியேறினர்.
மெல்போர்ன்:
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி தொடர் கடந்த 16-ம் தேதி ஆஸ்திரேலியாவில் தொடங்கி நடந்து வருகிறது. வரும் 29-ம் தேதி வரை பல சுற்றுகள் கொண்ட போட்டிகள் நடைபெற உள்ளன.
இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவின் 3-வது சுற்று போட்டியில் ரஷியாவின் டேனில் மெத்வதேவ், அமெரிக்காவின் செபாஸ்டியன் கோர்டாவுடன் மோதினார்.
இந்தப் போட்டியில் தொடக்கம் முதலே அதிரடியாக ஆடிய செபாஸ்டியன் கோர்டா 7-6, 6-3, 7-6 என்ற செட் கணக்கில் மெத்வதேவை வீழ்த்தி நான்காவது சுற்றுக்கு முன்னேறினார்.
ஏற்கனவே முன்னணி வீரர்களான ரபேல் நடால், ஸ்வரேவ், கேஸ்பர் ரூட் ஆகியோர் தொடரில் இருந்து வெளியேறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடந்த 3-வது சுற்று ஆட்டத்தில் ஒன்னிக் சின்னர் (இத்தாலி)-புசோவிக்ஸ் (ஹங்கேரி) பலப்பரீட்சை நடத்தினர்.
- போட்டியில் சின்னர் 4-6, 4-6, 6-1, 6-2 6-0 என்ற செட் கணக்கில் வென்று 4-வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.
கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் மெல்போர்ன் நகரில் நடந்து வருகிறது. பெண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடந்த 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் பார்போஜா கிரெஜ்கோவா (செக் குடியரசு), கலினினா (உக்ரைன்) மோதினர்.
இதில் 21-ம் நிலை வீராங்கனையான கிரெஜ்கோவா 6-2, 6-3 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று 4-வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.
ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடந்த 3-வது சுற்று ஆட்டத்தில் ஒன்னிக் சின்னர் (இத்தாலி)-புசோவிக்ஸ் (ஹங்கேரி) பலப்பரீட்சை நடத்தினர்.
இதில் முதல் 2 செட்களை புசோவிக்ஸ் கைப்பற்றினார். பின்னர் சின்னர் சிறப்பாக விளையாடி அடுத்த மூன்று செட்டுகளையும் தன் வசமாக்கி வெற்றிபெற்றார்.
இந்த போட்டியில் சின்னர் 4-6, 4-6, 6-1, 6-2 6-0 என்ற செட் கணக்கில் வென்று 4-வது சுற்றுக்கு தகுதி பெற்றார். ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் போபண்ணா-ஆஸ்திரேலியாவின் மாத்யூ எப்டன் ஜோடி-முதல் சுற்றிலேயே தோற்று வெளி யேறியது.
இந்த ஜோடி ஆஸ்திரேலியாவின் லூகாஸ் மிட்லர்- அலெக்சாண்டர் எர்லர் ஜோடியிடம் 3-6, 5-7 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்தது.
- ஆஸ்திரேலிய ஓபனில் இருந்து ஸ்வரேவ், கேஸ்பர் ரூட் தோல்வி அடைந்தார்.
- ரபேல் நடால் ஏற்கனவே தொடரில் இருந்து வெளியேறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மெல்போர்ன்:
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி தொடர் கடந்த 16-ம் தேதி ஆஸ்திரேலியாவில் தொடங்கி நடந்து வருகிறது. வரும் 29-ம் தேதி வரை பல சுற்றுகள் கொண்ட போட்டிகள் நடைபெற உள்ளன.
இதில் ஆடவர் ஒற்றையர் 2-வது சுற்று போட்டியில் அமெரிக்காவின் ஜென்சன் புரூக்ஸ்பை, தரவரிசையில் 2ம் நிலை வீரரான கேஸ்பர் ரூட் ஆகியோர் மோதினர்.
இந்தப் போட்டியில், அதிரடியாக விளையாடிய ஜென்சன் 6-3, 7-5, 6-7 (4), 6-2 என்ற செட் கணக்கில் கேஸ்பரை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
இதேபோல், நேற்று நடைபெற்ற 2வது சுற்று ஆட்டத்தில் முன்னணி டென்னிஸ் வீரரான அலெக்சாண்டர் ஸ்வரேவ் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.
ஒலிம்பிக் சாம்பியனான ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரேவ், அமெரிக்காவின் மைக்கேல் மோவுடன் மோதினார். இந்த போட்டியில் மைக்கேல் 6-7, (1-7), 6-4, 6-3, 6-2 என்ற செட் கணக்கில் ஸ்வரேவை வீழ்த்தி வெற்றி பெற்றார்.
ஏற்கனவே ரபேல் நடால் தொடரில் இருந்து வெளியேறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- ஆஸ்திரேலிய ஓபன் டென்னிசின் 2ம் சுற்றில் நடால் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.
- ஆஸ்திரேலிய வீரர் நிக் கிரியாஸ் காயத்தால் போட்டியில் இருந்து விலகினார்.
மெல்போர்ன்:
கிராண்ட்ஸ்லாம் என்ற உயரிய அந்தஸ்து பெற்ற ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்னில் நடைபெற்று வருகிறது.
ஒற்றையர் பிரிவின் இரண்டாவது சுற்று ஆட்டங்கள் நடந்தன. ஆண்கள் பிரிவில் முன்னாள் 'நம்பர் ஒன்' வீரர் ரஷியாவின் டேனில் மெத்வதேவ் தன்னை எதிர்த்த ஆஸ்திரேலியாவின் ஜான் மில்மேனுடம் மோதினார். இதில் 7-5, 6-2, 6-2 என்ற நேர் செட்டில் வென்றார்.
உலகின் 4-ம் நிலை வீரர் சிட்சிபாஸ் (கிரீஸ்) 6-3, 6-0, 6-2 என்ற செட் கணக்கில் ரிங்கி ஹிஜிகதாவை (ஆஸ்திரேலியா) வென்று மூன்றாம் சுற்றுக்கு முன்னேறினார்.
- ஆஸ்திரேலிய ஓபன் டென்னிசின் முதல் சுற்றில் நடால், ஸ்வியாடெக் வெற்றி பெற்றனர்.
- ஆஸ்திரேலிய ஓபன் முன்னாள் சாம்பியனான சுவிட்சர்லாந்தின் வாவ்ரிங்கா தோல்வியடைந்தார்.
மெல்போர்ன்:
கிராண்ட்ஸ்லாம் என்ற உயரிய அந்தஸ்து பெற்ற ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்னில் நடைபெற்று வருகிறது.
ஒற்றையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டங்கள் நடந்தன. ஆண்கள் பிரிவில் முன்னாள் 'நம்பர் ஒன்' வீரர் டேனில் மெத்வதேவ் (ரஷியா) தன்னை எதிர்த்த மார்கோஸ் கிரோனை (அமெரிக்கா) 6-0, 6-1, 6-2 என்ற நேர் செட்டில் பந்தாடினார்.
4-ம் நிலை வீரர் சிட்சிபாஸ் (கிரீஸ்) 6-3, 6-4, 7-6 (8-6) என்ற செட் கணக்கில் குவான்டின் ஹேஸ்சை (பிரான்ஸ்) வெளியேறினார்.
ஹர்காக்ஸ் (போலந்து), ஷபோவலோவ், அலியாசிம் (கனடா), ஜேனிக் சினெர் (இத்தாலி), பிரான்சிஸ் டியாபோ (அமெரிக்கா), கேமரூன் நோரி (இங்கிலாந்து) ஆகியோரும் முதல் சுற்றில் வெற்றி பெற்றனர்.
முன்னாள் ஆஸ்திரேலிய ஓபன் சாம்பியனான வாவ்ரிங்கா (சுவிட்சர்லாந்து) 7-6 (7-3), 3-6, 6-1, 6-7 (2-7), 4-6 என்ற செட் கணக்கில் அலெக்ஸ் மோல்கனிடம் (சுலோவேனியா) போராடி வீழ்ந்தார்.
ஆஸ்திரேலிய நட்சத்திர வீரர் நிக் கிரியாஸ் கால் முட்டி காயம் காரணமாக கடைசி நேரத்தில் போட்டியில் இருந்து விலகியது உள்ளூர் ரசிகர்களை ஏமாற்றத்திற்கு ஆளாக்கியது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்