என் மலர்
நீங்கள் தேடியது "AUSvIND"
- மெல்போர்ன் டெஸ்டின் முதல் இன்னிங்சில் நிதிஷ்குமார் ரெட்டி சதம் அடித்து அசத்தினார்.
- பார்டர்-கவாஸ்கர் கோப்பை தொடரை 3 - 1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா கைப்பற்றியது.
இந்தியாவுக்கு எதிரான பார்டர்-கவாஸ்கர் கோப்பை தொடரை 3 - 1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா கைப்பற்றி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
இந்த தொடரின் 4-வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நடந்தது. இந்த டெஸ்டின் முதல் இன்னிங்சில் நிதிஷ்குமார் ரெட்டி சதம் அடித்து அசத்தினார்.
ஆஸ்திரேலிய மண்ணில் 8-வது வரிசையில் களமிறங்கி சதமடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை நிதிஷ்குமார் ரெட்டி படைத்தார்.
இந்நிலையில், அண்மையில் நிதிஷ்குமார் கொடுத்த பாட்காஸ்டில் மெல்போர்ன் டெஸ்ட் சதம் குறித்து சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்துள்ளார்.
பாட்காஸ்டில் பேசிய நிதிஷ்குமார், "ஒருமுறை விராட் கோலி சர்ஃபராஸ் கானிடம் 'உன் ஷூ சைஸ் என்ன?' என கேட்டார். அதற்கு அவர் 9 என்றார். பின் திரும்பி என்னை பார்த்து என்னுடைய அளவை கேட்டார். அவருக்கும் எனக்கும் ஒரே அளவு இல்லை என்றாலும், எனக்கு அவரின் ஷூ வேண்டும் என்ற ஆசையில் எப்படியோ யோசித்து 10 எனக் கூறினேன். அவர் ஷூவை கொடுத்தார். அதை அணிந்து மெல்போர்ன் டெஸ்டில் விளையாடி போட்டியில் சதமடித்தேன்" என்று தெரிவித்தார்.
- டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் பேட்டிங் தேர்வு செய்தார்.
- அதிரடியாக ஆடிய ஆஸ்திரேலிய வீராங்கனை பெர்த் மூனே 54 ரன்கள் விளாசினார்.
கேப்டவுன்:
தென் ஆப்பிரிக்காவில் நடைபெறும் மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டதை எட்டி உள்ளது. 10 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் சுற்று முடிவில் 'ஏ' பிரிவில் ஆஸ்திரேலியா (8 புள்ளி) முதலிடமும், தென்ஆப்பிரிக்கா (4 புள்ளி) 2-வது இடமும், 'பி' பிரிவில் இங்கிலாந்து (8 புள்ளி) முதலிடமும், இந்தியா (6 புள்ளி) 2-வது இடமும் பிடித்து அரையிறுதிக்கு முன்னேறின.
இந்த நிலையில் கேப்டவுனில் இன்று நடைபெறும் முதல் அரையிறுதியில் ஆஸ்திரேலியா-இந்தியா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி முதலில் ஆடிய ஆஸ்திரேலியா 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் எடுத்தது. அதிரடியாக ஆடிய பெர்த் மூனே 54 ரன்கள் விளாசினார். கேப்டன் மெக் லேனிங் 49 ரன்களும் (நாட் அவுட்), அலிசா ஹீலி 25 ரன்களும், ஆஷ்லி காட்னர் 31 ரன்களும் எடுத்தனர்.
இந்தியா தரப்பில் ஷிகா பாண்டே 2 விக்கெட் எடுத்தார். இதையடுத்து 173 ரன்கள் எடுத்தால் என்ற இலக்குடன் இந்தியா களமிறங்குகிறது.
- ஆஸ்திரேலிய அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் எடுத்தது
- இந்திய அணியால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்களே எடுக்க முடிந்தது.
கேப்டவுன்:
மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் அரையிறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா-இந்தியா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்று முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் எடுத்தது. அதிரடியாக ஆடிய பெர்த் மூனே 54 ரன்கள் விளாசினார்.
இதையடுத்து 173 ரன்கள் எடுத்தால் என்ற இலக்குடன் இந்தியா களமிறங்கியது. டாப் ஆர்டர் வீராங்கனைகள் ரன் குவிக்க தவறிய நிலையில், கடுமையாக போராடிய ஜெமிமா ரோட்ரிக்ஸ் 43 ரன்களும், கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 52 ரன்களும் சேர்த்து நம்பிக்கை அளித்தனர். எனினும் மறுமுனையில் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் சரிந்ததால், இந்திய அணியால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்களே எடுக்க முடிந்தது.
இதனால் ஆஸ்திரேலிய அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அத்துடன், தொடர்ந்து 7வது முறையாக உலக கோப்பை இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது.
- போதிய வெளிச்சம் இல்லாததால் (Bad Light) ஆட்டம் நிறுத்தப்பட்டது.
- 46 ஓவர்கள் வீசப்பட்ட நிலையில் இன்றைய ஆட்டம் முடிவடைந்ததாக அறிவிக்கப்பட்டது.
ஆஸ்திரேலியா- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்து முதல் இன்னிங்சில் 313 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. முகமது ரிஸ்வான் 88 ரன்களும், ஆமிர் ஜமால் 82 ரன்களும் சேர்த்தனர்.
ஆஸ்திரேலிய அணி சார்பில் பேட் கம்மின்ஸ் 5 விக்கெட்டும், ஸ்டார்க் 2 விக்கெட்டும் வீழ்த்தினர். பின்னர் ஆஸ்திரேலியா 1 ஓவரில் 6 ரன்கள் எடுத்த நிலையில் முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.
இன்று 2-வது நாள் ஆட்டம் நடைபெற்றது. டேவிட் வார்னர், கவாஜா ஆகியோர் ஆட்டத்தை தொடங்கினர். வார்னர் 34 ரன்னில் ஆட்டமிழந்தார்.
அடுத்து கவாஜா உடன் லபுசேன் ஜோடி சேர்ந்தார். மதிய உணவு இடைவேளை வரை ஆஸ்திரேலியா 1 விக்கெட் இழப்பிற்கு 78 ரன்கள் எடுத்திருந்தது.
மதிய உணவு இடைவேளைக்குப்பின் ஆட்டம் தொடங்கியதும் கவாஜா 47 ரன்னில் வெளியேறினார். 3-வது விக்கெட்டுக்கு லபுசேன் உடன் ஸ்மித் ஜோடி சேர்ந்தார். 47 ஓவர்கள் வீசப்பட்ட நிலையில் போதிய வெளிச்சமின்மை காரணமாக போட்டி நிறுத்தப்பட்டது.

ஆஸ்திரேலியாவில் தற்போது கோடைக்காலம். இருந்தபோதிலும் திடீரென கருமேகம் சூழ்ந்ததால் போட்டி தொடர்ந்து நடைபெறவில்லை. இன்றைய ஆட்ட நேரம் முடியும்வரை அதில் முன்னேற்றம் ஏதும் இல்லை. இதனால் 2-வது நாள் ஆட்டம் 47 ஓவருடன் முடிவடைந்தது.
ஆஸ்திரேலியா 47 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 116 ரன்கள் எடுத்துள்ளது. லபுசேன் 23 ரன்னுடனும், ஸ்மித் 6 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.
- லபுசேன், மிட்செல் மார்ஷ் அரைசதம் அடித்தனர்.
- ஆமிர் ஜமால் ஆறு விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
ஆஸ்திரேலியா- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் நேற்றுமுன்தினம் (ஜனவரி 4-ந்தேதி) தொடங்கியது. டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்து முதல் இன்னிங்சில் 313 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. முகமது ரிஸ்வான் 88 ரன்களும், ஆமிர் ஜமால் 82 ரன்களும் சேர்த்தனர். ஆஸ்திரேலிய அணி சார்பில் பேட் கம்மின்ஸ் 5 விக்கெட்டும், ஸ்டார்க் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
பின்னர் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சை தொடங்கியது. நேற்றைய 2-வது நாள் ஆட்டத்தில் டேவிட் வார்னர் 34 ரன்னில் ஆட்டமிழந்தார். கவாஜா 47 ரன்னில் வெளியேறினார். ஆஸ்திரேலியா 47 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 116 ரன்கள் எடுத்திருந்தபோது போதிய வெளிச்சமின்மை காரணமாக போட்டி நிறுத்தப்பட்டது. அப்போது லபுசேன் 23 ரன்னுடனும், ஸ்மித் 6 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். அத்துடன் 2-வது ஆட்டம் முடிவுக்கு வந்தது.
இன்று 3-வது நாள் ஆட்டம் தொடங்கியது. தொடர்ந்து விளையாடிய லபுசேன் 60 ரன்களில் ஆட்டமிழந்தார். ஸ்மித் 38 ரன்னில் வெளியேறினார். அதன்பின் வந்த மிட்டிசெல் மார்ஷ் அரைசதம் அடித்து 54 ரன்னில் வெளியேறினார். அலேக்ஸ் கேரி 38 ரன்னில் அவுட்டானர். இந்த ஜோடி ஆட்டமிழந்ததும் ஆஸ்திரேலியா மளமளவென விக்கெட்டுகளை இழக்க ஆரம்பித்தது.

பின்னர் கடைநிலை பேட்ஸ்மேன்களை ஆமிர் ஜமால் அடுத்தடுத்து வீழ்த்த ஆஸ்திரேலியாவால் ரன் சேர்க்க முடியாமல் 299 ரன்னில் ஆல்அவுட் ஆனது. ஜமால் கடைசி ஏழு பந்தில் 4 விக்கெட்டுகளை சாய்த்தார். அவர் மொத்தம் ஆறு விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
பாகிஸ்தான் தற்போது 14 ரன்கள் பின்தங்கிய நிலையில் உள்ளது. பாகிஸ்தான் 2-வது இன்னிங்சில் சிறப்பாக விளையாடினால் இந்த போட்டியில் வெற்றி பெற வாய்ப்புள்ளது.
- முதல் இன்னிங்சில் பாகிஸ்தான் 14 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது.
- 2-வது இன்னிங்சில் 115 ரன்னில் சுருண்டதால் தோல்வியை சந்திக்க நேர்ந்தது.
ஆஸ்திரேலியா- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்டில் சிட்னியில் கடந்த 3-ந்தேதி தொடங்கியது. டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 313 ரன்கள் சேர்த்தது. பின்னர் நேர்த்தியான பந்து வீச்சால் ஆஸ்திரேலியாவை 299 ரன்னில் சுருட்டியது. ஜமால் சிறப்பாக பந்து வீசி 6 விக்கெட் கைப்பற்றினார்.
பின்னர் 14 ரன்கள் முன்னிலைப் பெற்ற நிலையில் 2-வது இன்னிங்சில் பாகிஸ்தான் சொதப்பியது. ஹேசில்வுட் பந்து வீச்சில் விக்கெட்டுகளை மளமளவென பறிகொடுத்தது. இதனால் நேற்றைய 3-வது நாள் ஆட்ட முடிவில் 68 ரன்கள் எடுப்பதற்குள் 7 விக்கெட்டுகளை இழந்தது தத்தளித்தது. முகமது ரிஸ்வான் 6 ரன்களுடனும், ஜமால் ரன்ஏதும் எடுக்காமலும் இருந்தனர்.
இன்று 4-வது நாள் ஆட்டம் தொடங்கியது. ரிஸ்வான் 28 ரன்னிலும், ஜமால் 18 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் 115 ரன்னில் சுருண்டது. ஹேசில்வுட் 4 விக்கெட்டும், நாதன் லயன் 3 விக்கெட்டும் வீழ்த்தினர். இதனால் ஆஸ்திரேலியாவுக்கு 130 ரன்கள் மட்டுமே இலக்காக நிர்ணயித்தது.

லபுசேன்- டேவிட் வார்னர்
130 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா களம் இறங்கியது. கவாஜா ரன்ஏதும் எடுக்காமல் டக்அவுட் ஆனார். டேவிட் வார்னர் சிறப்பாக விளையாடி 57 ரன்கள் எடுத்து வெளியேறினார். இது அவரின் கடைசி டெஸ்ட் இன்னிங்ஸ் ஆகும்.
லபுசேன் 62 ரன்களும, ஸ்மித் 4 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருக்க ஆஸ்திரேலியா 2 விக்கெட் இழப்பிற்கு 130 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த வெற்றியோடு மூன்று போட்டிகள் கொண்ட தொடரை ஆஸ்திரேலியா 3-0 எனக் கைப்பற்றி பாகிஸ்தானை ஒயிட்வாஷ் செய்தது. ஆமிர் ஜாமல் ஆட்டநாயகன் விருதும், பேட் கம்மின்ஸ் தொடர் நாயகன் விருதையும் வென்றனர்.
- விராட் கோலியின் சிந்தனை மற்றும் செயல்கள் அப்படியே ஆஸ்திரேலியர்களை போன்று இருக்கிறது.
- சவால்களை எதிர்கொண்டு எதிரணியை விட சிறப்பாக செயல்பட முயற்சிப்பது என அனைத்தும் ஆஸ்திரேலிய வீரர்களை நினைவூட்டுகிறது.
மெல்போர்ன்:
இந்திய கிரிக்கெட் அணி நவம்பர் மாதம் முதல் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதலாவது டெஸ்ட் நவ.22-ந் தேதி பெர்த்தில் தொடங்குகிறது. இந்த தொடரில் இந்திய வீரர் விராட் கோலியின் ஆக்ரோஷமான பேட்டிங்கை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.
இந்த நிலையில் கோலி குறித்து ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் ஸ்டீவன் சுமித் அளித்த ஒரு பேட்டியில், 'விராட் கோலியின் சிந்தனை மற்றும் செயல்கள் அப்படியே ஆஸ்திரேலியர்களை போன்று இருக்கிறது என்று நான் நம்புகிறேன். அவர் போட்டிக்கு தயாராகும் விதம், சவால்களை எதிர்கொண்டு எதிரணியை விட சிறப்பாக செயல்பட முயற்சிப்பது என அனைத்தும் ஆஸ்திரேலிய வீரர்களை நினைவூட்டுகிறது. அவர் இந்திய அணியில் இருக்கும் ஆஸ்திரேலியர் என்று நினைக்கிறேன்.
இந்த தொடரில் நான் விராட் கோலிக்கு எதிராக வரிந்துகட்டுவதில் கவனம் செலுத்தப் போவதில்லை. களம் இறங்கி முடிந்த வரை அதிக ரன்கள் எடுத்து ஆஸ்திரேலியாவை வெற்றி பெற செய்ய வேண்டும் என்பதே எனது நோக்கம். நானும் விராட் கோலியும் அவ்வப்போது குறுந்தகவல்களை பகிர்ந்து கொள்வோம். கோலி ஒரு நல்ல மனிதர் மற்றும் அற்புதமான வீரர். அவருக்கு எதிராக விளையாடுவது எப்போதும் சிறப்பாக இருக்கும்' என்றார்.
- இந்திய அணி நவம்பர் மாதம் முதல் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.
- ஸ்டீவன் சுமித் தொடக்க ஆட்டக்காரராக தொடர்வாரா? என்பது குறித்து யோசித்து கொண்டிருக்கிறோம்.
சவுத்தம்டன்:
இந்திய கிரிக்கெட் அணி நவம்பர் மாதம் முதல் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் பெர்த்தில் நவ. 22-ந் தேதி தொடங்குகிறது.
ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரராக இருந்த டேவிட் வார்னர், இந்த ஆண்டு தொடக்கத்தில் டெஸ்ட் போட்டியில் இருந்து விடைபெற்றார். அவரது ஓய்வுக்கு பிறகு ஸ்டீவன் சுமித் அந்த இடத்தில் விளையாடி வருகிறார்.
ஆனால் சுமித்தால் ஒரு தொடக்க ஆட்டக்காரராக பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை. இதனால் அவர் மீண்டும் நடுவரிசைக்கு மாற்றப்படுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இது குறித்து ஆஸ்திரேலிய அணியின் தலைமை பயிற்சியாளர் ஆண்ட்ரூ மெக்டொனால்டு கூறுகையில், 'ஸ்டீவன் சுமித் தொடக்க ஆட்டக்காரராக தொடர்வாரா? என்பது குறித்து யோசித்து கொண்டிருக்கிறோம். இந்த விஷயத்தில் தீர்க்கமான எந்த முடிவுக்கும் வரவில்லை. இந்தியாவுக்கு எதிரான தொடர் குறித்து நாங்கள் சிட்னியில் ஆலோசித்தோம். அதில் எங்களது பந்துவீச்சின் ஆழம் குறித்து பேசி இருந்தோம்.
சுமித்தை பின்வரிசைக்கு மாற்றினால், மற்ற வீரர்களில் யாராவது ஒருவர் மேல் வரிசையில் விளையாட வைக்க வேண்டும். அதேநேரத்தில் சுமித் விளையாடி வந்த பேட்டிங்கில் 4-வது வரிசையில் தற்போது கேமரூன் கிரீன் நன்றாக ஆடுகிறார். எனவே இந்த விஷயத்தில் இப்போதைக்கு உறுதியாக எதுவும் சொல்ல முடியாது.
நாங்கள் எங்களது டாப்-6 முன்னணி பேட்ஸ்மேன்கள் (சுமித், கவாஜா, டிராவிஸ் ஹெட், கேமரூன் கிரீன், மிட்செல் மார்ஷ், லபுஸ்சேன்) மீது நம்பிக்கை வைத்திருக்கிறோம். அவர்கள் நியூசிலாந்தை தொடரை சிறப்பாக முடித்தார்கள். அதனால் அவர்களில் எந்த மாற்றமும் இருக்காது' என்றார்.
- நான் விராட் கோலியை ஒன்று அல்லது இரண்டு முறை வீழ்த்தியிருப்பேன்.
- அவரும் என்னுடைய பந்தில் ரன்கள் அடித்திருப்பார். அதில் எந்த சந்தேகமும் இல்லை.
இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியா சென்று ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. இந்த டெஸ்ட் கிரிக்கெட்டின்போது ஸ்லெட்ஜிங்கிற்கு பஞ்சம் இருக்காது. ஆஸ்திரேலிய வீரர்கள், தங்கள் நாட்டிற்கு விளையாட வரும் வீரர்களுடன் கடுமையான வகையில் வார்த்தைப்போரில் ஈடுபடுவது உண்டு.
இந்திய அணி அவர்களுக்கு ஈடுகொடுத்து பதிலடி கொடுப்பார்கள். இதனால் இந்தியா- ஆஸ்திரேலியா போட்டி சுவாரஸ்யமாக இருக்கும். விராட் கோலி, மிட்செல் ஸ்டார்க், கம்மின்ஸ் போன்றோர் களத்தில் நேருக்கு நேர் மோதும்போது அனல் பறக்கும்.
இந்த நிலையில் கிரிக்கெட் மைதானத்தில் விராட் கோலி உடனான சண்டையை ரசிப்பேன் என மிட்செல் ஸ்டார்க் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஸ்டார்க் கூறுகையில் "விராட் கோலியுடனான சண்டையை நான் ரசிக்கிறேன். ஏனென்றால் ஒருவருக்கு ஒருவர் எதிராக ஏராளமான கிரிக்கெட்டுகள் விளையாடியுள்ளோம். நான் எப்போதும் நல்ல வார்த்தைப்போர் ஈடுபடுவது உண்டு. நான் உண்மையிலேயே அவரை ஒன்று அல்லது இருமுறை வீழ்த்தியிருப்பேன். எனக்கு எதிராக அவரும் ரன்கள் அடித்திருப்பார் என்பதில் எந்த சந்தேகமம் இல்லை. ஆகவே, இது சிறந்த போட்டியாக இருக்கும். இருவரும் ரசிக்கிறோம்" என்றார்.
இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி கடந்த இரண்டு டெஸ்ட் தொடரையும் ஆஸ்திரேலியா மண்ணில் வென்றுள்ளது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்த முறை எப்படியாவது தொடரை கைப்பற்ற வேண்டும் என ஆஸ்திரேலியா திட்டமிட்டுள்ளது.
- இந்த அணியில் 2 தமிழக வீரர்கள் இடம் பிடித்துள்ளனர்.
- துணை கேப்டனாக அபிமன்யு ஈஸ்வரன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
ஆஸ்திரேலிய மண்ணில் இந்தியா விளையாடும் பார்டர் -கவாஸ்கர் கோப்பை வரும் நவம்பர் மாதம் துவங்க உள்ளது. கடைசியாக அங்கு விளையாடிய 2 தொடர்களையும் வென்ற இந்திய கிரிக்கெட் அணி இம்முறை ஆஸ்திரேலியாவில் ஹாட்ரிக் வெற்றியை பெற தயாராகி வருகிறது.
அதற்கு முன்பாக இந்தியா ஏ அணியும் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 முதல் தர போட்டிகளில் விளையாட உள்ளது. அதுபோக பெர்த் நகரில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணிக்கு எதிராகவும் இந்தியா ஏ அணி ஒரு பயிற்சி போட்டியில் விளையாட உள்ளது. இந்நிலையில் அந்த போட்டிகளில் விளையாடுவதற்கான இந்தியா ஏ அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த அணிக்கு ருதுராஜ் கெய்க்வாட் கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
துணை கேப்டனாக அபிமன்யு ஈஸ்வரன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். விக்கெட் கீப்பராக இஷான் கிஷன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த அணியில் தமிழ்நாட்டிலிருந்து சாய் சுதர்சன் மற்றும் பாபா இந்திரஜித் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள்.
சமீபத்திய வங்கதேச தொடரில் அசத்திய நித்திஷ் ரெட்டி மற்றும் படிக்கல் ஆகியோரும் தேர்வாகியுள்ளனர். பவுலிங் துறையில் கலில் அகமது, முகேஷ் குமார், யாஸ் தயாள், நவ்திப் சைனி, ஆல் ரவுண்டராக அசத்தி வரும் தானுஷ் கோட்டியான் ஆகியோரும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள்.
ஆஸ்திரேலியா ஏ தொடருக்கான இந்தியா ஏ அணி: ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), அபிமன்யு ஈஸ்வரன் (துணை கேப்டன்), சாய் சுதர்சன், நித்திஷ் ரெட்டி, படிக்கல், ரிக்கி புய், பாபா இந்திரஜித், இஷான் கிஷன், (கீப்பர்), அபிஷேக் போரல் (கீப்பர்), முகேஷ் குமார், கலீல் அகமது, யாஷ் தயாள், நவ்தீப் சைனி, மானவ் சுதர், டானுஷ் கோட்டியான்.
- புஜாரா அணிக்கு தேர்வு செய்யப்படுவாரா? என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.
- அவர் கடைசியாக கடந்த ஆண்டு ஜூன் மாதம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஆடினார்.
புதுடெல்லி:
இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இந்த பார்டர்- கவாஸ்கர் தொடரின் முதல் டெஸ்ட் அடுத்த மாதம் (நவம்பர்) 22-ந்தேதி பெர்த்தில் தொடங்குகிறது.
இந்நிலையில் ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணி வருகிற 28-ந்தேதி அறிவிக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
இந்த தொடரில் 103 டெஸ்டில் விளையாடிய அனுபவம் வாய்ந்த புஜாரா அணிக்கு தேர்வு செய்யப்படுவாரா? என்ற எதிர்பார்ப்பு அதிகமகா உள்ளது. அவர் கடைசியாக கடந்த ஆண்டு ஜூன் மாதம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஆடினார்.
- பார்டர்- கவாஸ்கர் தொடரின் முதல் டெஸ்ட் நவம்பர் 22-ம் தேதி தொடங்குகிறது.
- ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ இன்று அறிவித்துள்ளது.
புதுடெல்லி:
இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இந்த பார்டர்- கவாஸ்கர் தொடரின் முதல் டெஸ்ட் அடுத்த மாதம் 22-ம் தேதி பெர்த்தில் தொடங்குகிறது.
இந்நிலையில், ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ இன்று அறிவித்துள்ளது.
ரோகித் சர்மா (கேப்டன்), ஜஸ்பிரித் பும்ரா (துணை கேப்டன்), ஜெய்ஸ்வால், அபிமன்யு ஈஸ்வரன், சுப்மன் கில், விராட் கோலி, கே.எல்.ராகுல், ரிஷப் பண்ட், சர்பராஸ் கான், துருவ் ஜுரல், அஸ்வின், ஜடேஜா, முகமது சிராஜ், ஆகாஷ் தீப், பிரசித் கிருஷ்ணா, ஹர்ஷித் ரானா, நிதிஷ்குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர்
ஹர்ஷித் ரானா மற்றும் ஆல் ரவுண்டர் நிதிஷ்குமார் ரெட்டி ஆகியோர் அறிமுகமாகின்றனர்.
ரிசர்வ் வீரர்கள்: முகேஷ் குமார், நவ்தீப் சைனி, கலீல் அகமது
புஜாரா, முகமது ஷமி, குல்தீப் யாதவ் ஆகியோர் அணியில் இடம்பெறவில்லை.