என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "AUSvsWI"
- வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் மேக்ஸ்வெல் சதம் அடித்தார்.
- இந்த போட்டியில் ஆஸ்திரேலியா 34 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
அடிலெய்டு:
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 2 போட்டிகள் கொண்ட தொடர் 1-1 என சமனில் முடிந்தது. இதையடுத்து நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3-0 என ஆஸ்திரேலியா கைப்பற்றியது.
தற்போது 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நடைபெற்ற முதலாவது டி20 போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 போட்டி அடிலெய்டில் இன்று நடைபெற்றது.
முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி, மேக்ஸ்வெல்லின் அதிரடி ஆட்டத்தால் 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 240 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 207 ரன்கள் மட்டுமே எடுத்தது, இதனால் ஆஸ்திரேலியா 34 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியது.
இந்நிலையில் இந்த ஆட்டத்தில் மேக்ஸ்வெல் சதம்(120) அடித்ததன் மூலம் ரோகித் சாதனை ஒன்றை சமன் செய்துள்ளார். அதாவது சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக சதம் அடித்தவர்கள் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் ரோகித் (5 சதம்) சாதனையை மேக்ஸ்வெல் (5 சதம்) பகிர்ந்துள்ளார். இவர்களுக்கு அடுத்தபடியாக சூர்யகுமார் யாதவ் ( 4 சதம்), பாபர் அசம் (3 சதம்), காலின் முன்ரோ (3 சதம்) ஆகியோர் உள்ளனர்.
மேலும் நாட் அவுட் மூலம் அதிக சதம் விளாசியவர்கள் பட்டியலில் மேக்ஸ்வெல் முதல் இடத்திலும் ரோகித் 2-வது இடத்திலும் உள்ளனர். இதுபோக 4-வது இடத்தில் களமிறங்கி அதிக ரன்கள் குவித்த சூர்யகுமார் யாதவ் (117), பாப் டு பிளெசிஸ்(119) சாதனையை இவர் முறியடித்துள்ளார்.
- 3 போட்டிகள் கொண்ட தொடரை 3-0 என ஆஸ்திரேலியா கைப்பற்றியது.
- இன்று நடந்த கடைசி ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
வெஸ்ட் இண்டீஸ்- ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியது. முதல் 2 போட்டிகளில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.
இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி, ஆஸ்திரேலியா அணியின் பந்து வீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் 24.1 ஓவரில் 86 ரன்களில் ஆல் அவுட் ஆனது. ஆஸ்திரேலியா தரப்பில் சேவியர் பார்ட்லெட் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதனையடுத்து 87 என்ற எளிய இலக்குடன் ஆஸ்திரேலிய களமிறங்கியது. தொடக்கம் முதலே அதிரடி காட்டிய ஆஸ்திரேலியா 6.5 ஓவரில் 87 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக ஜேக் ஃப்ரேசர்-மெக்குர்க் 18 பந்துகளில் 41 ரன்கள் எடுத்தார்.
இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை ஆஸ்திரேலியா 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.
- 27 ஆண்டுகளுக்குப் பிறகு ஆஸ்திரேலியாவை வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் அபார வெற்றி.
- 8 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் திரில் வெற்றி.
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடி வருகிறது.
இதில், இன்று நடைபெற்ற நான்காம் நாள் ஆட்டத்தில், 8 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் திரில் வெற்றி பெற்றது.
வெஸ்ட் இண்டீஸ் அணி, 27 ஆண்டுகளுக்குப் பிறகு ஆஸ்திரேலியாவை வீழ்த்தி அபாரமாக வெற்றி பெற்றது.
இந்நிலையில், ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்திய பின், வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் பேசிய பேச்சு இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதுகுறித்து அவர் பேசியதாவது;-
எங்களைப் பார்த்தால் பரிதாபமாக இருக்கிறது என்று ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் ரோட்னி ஹாக் கூறினார். அதுவே எங்களுக்கு உத்வேகமாக இருந்தது.
நாங்கள் பரிதாபகரமானவர்கள் அல்ல என்பதை உலகுக்குக் காட்ட விரும்பினோம். அவரிடம் ஒன்று கேட்க வேண்டும். இந்த பலம் உங்களுக்கு போதுமா ?
இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.
- வெஸ்ட் இண்டீஸ் வீரர் கவேம் ஹாட்ஜ் பேட்டிங் செய்த போது வித்தியாசமான முறையில் ஒரு ஷாட் விளையாடி இருக்கிறார்.
- பேட்டை வைத்து விளையாட சொன்னா நீ எத வைச்சு விளையாடுற என்று நெட்டிசன்கள் கிண்டலான பதிவுகளை பகிர்ந்து வருகின்றனர்.
வெஸ்ட் இண்டீஸ் அணி 3 வடிவிலான தொடர்களில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இதில் முதலாவது நடந்து டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது.
இதனையடுத்து இரு அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி 25-ந் தேதி தொடங்கியது. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் 311 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதனை தொடர்ந்து முதல் இன்னிங்சில் விளையாடிய ஆஸ்திரேலியா 9 விக்கெட்டுகளை இழந்து 289 ரன்கள் எடுத்த போது டிக்ளேர் செய்தது.
22 ரன்கள் முன்னிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணி 2-வது இன்னிங்சில் விளையாடி வருகிறது. தற்போது வரை 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 123 ரன்களில் விளையாடி வருகிறது.
இந்நிலையில் நாதன் லயன் பந்து வீச்சை சமாளிக்க வெஸ்ட் இண்டீஸ் வீரர் கவேம் ஹாட்ஜ் புதிய யுக்தியை பயன்படுத்தி உள்ளார். அதன்படி அவர் பேட்டிங் செய்த போது வித்தியாசமான முறையில் ஒரு ஷாட் விளையாடி இருக்கிறார். பேட்டை வைத்து விளையாடாமல் உடலை வைத்து விளையாடி இருக்கிறார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பேட்டை வைத்து விளையாட சொன்னா நீ எத வைச்சு விளையாடுற என்று நெட்டிசன்கள் கிண்டலான பதிவுகளை பகிர்ந்து வருகின்றனர்.
ஏற்கனவே அதே அணியை சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் கெவின் சின்க்ளேர் கவாஜாவின் விக்கெட்டை வீழ்த்தியதும் உற்சாகத்துடன் ஜிம்னாஸ்டிக் வீரர்களை போன்று டைவ் அடித்து சந்தோசத்தை வெளிப்படுத்திய வீடியோ வைரலானது குறிப்பிடத்தக்கது.
- கொரோனாவால் பாதிக்கப்பட்ட கேமரூன் கிரீன் 2-வது டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறார்.
- கேமரூன் கிரீன் சமூக இடைவெளியை பின்பற்றி விளையாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
வெஸ்ட் இண்டீஸ் அணி 2 டெஸ்ட், 3 ஒருநாள், 3 டி20 போட்டிகளில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இதில் முதலில் டெஸ்ட் தொடர் நடைபெற்றது. முதல் டெஸ்ட்டில் ஆஸ்திரேலிய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதனையடுத்து இரு அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடி வருகிறது.
இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஆஸ்திரேலிய வீரர் கேமரூன் கிரீன் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இந்த போட்டியில் இடம் பிடித்துள்ளார். இந்த போட்டியில் அவர் சமூக இடைவெளியை பின்பற்றி விளையாடுகிறார். வீரர்கள் விக்கெட் எடுக்கும் போது பவுலர் மற்றும் கேட்ச் பிடித்த பீல்டருக்கு கைதட்டி வாழ்த்துக்கள் தெரிவிப்பது வழக்கம்.
அந்த வகையில் ஆஸ்திரேலிய வீரர்கள் விக்கெட் எடுக்கும் போது அனைவரும் ஒன்று கூடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் போது அவர் மட்டும் சமூக இடைவெளியை பின்பற்றி மகிழ்ச்சியை தெரிவித்து வருகிறார். ஹசில்வுட் விக்கெட் எடுத்த போது அவரிடம் கைதட்டி மகிழ்ச்சியை தெரிவிக்க வந்த கிரீன் உடனே சுதாரித்து கொண்டு சைகை முழுமாக கைதட்டி மகிழ்ந்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
- வார்னர், மேக்ஸ்வெல் அணிக்கு திரும்பியுள்ளனர்.
- பேட் கம்மின்ஸ் மற்றும் ஸ்டார்க் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
வெஸ்ட் இண்டீஸ் அணி 3 வடிவ கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியா சென்றுள்ளது. முதலில் நடந்த டெஸ்ட்டில் ஆஸ்திரேலிய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனையடுத்து இரு அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி நாளை தொடங்குகிறது.
இரு டெஸ்ட் தொடருக்கு பிறகு 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதனை தொடர்ந்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது.
இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 தொடரில் இடம்பெற்ற 14 பேர் கொண்ட ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியின் கேப்டனாக மிட்செல் மார்ஷ் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் வார்னர், மேக்ஸ்வெல் அணிக்கு திரும்பியுள்ளனர். பேட் கம்மின்ஸ் மற்றும் ஸ்டார்க் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
டி20 அணிக்கான ஆஸ்திரேலிய அணி:-
மிட்செல் மார்ஷ் (கேப்டன்), சீன் அபோட், ஜேசன் பெஹ்ரன்டோர்ஃப், டிம் டேவிட், நாதன் எல்லிஸ், ஜோஷ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலிஸ், கிளென் மேக்ஸ்வெல், மாட் ஷார்ட், ஸ்டோனிஸ், மேத்யூ வேட், டேவிட் வார்னர், ஆடம் ஜாம்பா.
- முதல் டெஸ்ட்டில் ஆஸ்திரேலிய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
- வெஸ்ட் இண்டீஸ் - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி நாளை தொடங்குகிறது.
வெஸ்ட் இண்டீஸ் அணி 2 டெஸ்ட், 3 ஒருநாள், 3 டி20 போட்டிகளில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இதில் முதலில் டெஸ்ட் தொடர் நடைபெற்றது. முதல் டெஸ்ட்டில் ஆஸ்திரேலிய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதனையடுத்து இரு அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி நாளை தொடங்குகிறது. இந்த போட்டி பகல்- இரவு போட்டியாக நடைபெறுகிறது.
இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியின் ஆல் ரவுண்டர் கேமரூன் கிரீன் மற்றும் பயிற்சியாளர் ஆண்ட்ரூ மெக்டொனால்ட் ஆகியோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அடுத்த 24 மணி நேரத்தில் நெகடிவ் முடிவு வரவில்லை என்றாலும் அவர்களால் 2-வது டெஸ்ட் போட்டியில் விளையாட முடியும் என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரிய விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஏற்கனவே ஆஸ்திரேலிய வீரர் டிராவிஸ் ஹெட் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
- ஒரு கட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 58 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து திணறியது.
- சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆரோன் பிஞ்ச் அரை சதம் அடித்தார்.
ஆஸ்திரேலியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் முதலாவது டி20 போட்டி இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிக்கொடுத்தனர்.
இறுதியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 145 ரன்கள் எடுத்தது. அதிகப்பட்சமாக கைல் மேயர்ஸ் 39 ரன்கள் எடுத்தார். ஆஸ்திரேலியா தரப்பில் ஹசில்வுட் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதனையடுத்து 146 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா அணி களமிறங்கியது. அதிரடியாக ஆட்டத்தை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிக்கொடுத்தனர். டேவிட் வார்னர் 14, கீரின் 14, மிட்செல் மார்ஸ் 3, மெக்ஸ்வெல் 0, டிம் டேவிட் 0 என ஆட்டமிழந்தனர்.
ஒரு கட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 58 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து திணறியது. கேப்டன் ஆரோன் பிஞ்சுடன் ஜோடி சேர்ந்த மேத்யூ வேட் நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பிஞ்ச் 58 ரன்னில் பெவிலியன் திரும்பினார். அடுத்து வந்த பேட் கம்மின்ஸ் 4 ரன்னில் போல்ட் ஆனார்.
இறுதியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற கடைசி ஓவரில் 11 ரன்கள் தேவைப்பட்டது. அந்த ஓவரை காட்ரேல் வீசினார். முதல் பந்தில் வேட் பவுண்டரி விளாச இன்னும் 5 பந்தில் 7 ரன்கள் எடுக்க வேண்டி இருந்தது. அடுத்த பந்தில் கேட்ச் மிஸ் செய்யப்பட்டது. இதன் மூலம் 2 ரன்கள் எடுக்கப்பட்டது. 3-வது பந்தில் வேட் 1 ரன் எடுத்தார். 4-பந்தில் மீண்டும் கேட்ச் மிஸ் செய்யப்பட்டது. அதில் ஸ்டார்க் 2 ரன்கள் எடுத்தார். 5-வது பந்தில் 2 ரன்கள் எடுத்து ஆஸ்திரேலியா அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
2 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆஸ்திரேலியா அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான 2-வது டி20 போட்டி வருகிற 7-ந் தேதி நடைபெறுகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்