என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Authoor"
- நேற்று விடுமுறை என்பதால் முகமது உமர் தனது நண்பர்களுடன் முக்காணி தாமிரபரணி ஆற்றங்கரையில் குளிக்க சென்றுள்ளான்.
- சத்தம் கேட்ட அங்கிருந்தவர்கள் ஓடி வந்து மாணவனை மீட்டு ஆத்தூர் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆத்தூர்:
தூத்துக்குடி மாவட்டம் வடக்கு ஆத்தூர் ஆற்றங்கரை தெருவை சேர்ந்தவர் அப்துல் சமது (வயது42). இவரது மகன் முகமது உமர் (12). ஆத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தான்.
ஆற்றில் மூழ்கி பலி
நேற்று விடுமுறை என்பதால் முகமது உமர் தனது நண்பர்களுடன் முக்காணி தாமிரபரணி ஆற்றங்கரையில் குளிக்க சென்றுள்ளான். அப்போது ஆற்றின் ஆழமான பகுதிக்கு சென்ற மாணவன் தண்ணீரில் மூழ்கினான். இதனை பார்த்த சக நண்பர்கள் கத்தி கூச்சலிட்டனர்.
சத்தம் கேட்ட அங்கிருந்தவர்கள் ஓடி வந்து மாணவனை மீட்டு ஆத்தூர் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவனை பரிசோதித்த டாக்டர்கள் முகமது உமர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
ஆத்தூர் போலீசார் மாணவன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மாலையில் மாரிமுத்து வீட்டிற்கு வந்தபோது கதவு நீண்ட நேரமாக திறக்கப்படாமல் இருந்தது.
- அதிர்ச்சியடைந்த அவர் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது மீனாட்சி தூக்கிட்ட நிலையில் காணப்பட்டார்.
ஆத்தூர்:
முக்காணி அருகே உள்ள குருவிதுறையை சேர்ந்தவர் மாரிமுத்து. இவரது மகள் மீனாட்சி (வயது15). இவர் முக்கானி அரசு மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று மாரிமுத்து மற்றும் அவரது மனைவி ஆகியோர் வேலைக்கு சென்று விட்டனர். வீட்டில் மீனாட்சி மட்டும் தனியாக இருந்தார். மாலையில் மாரிமுதது வீட்டிற்கு வந்தபோது கதவு நீண்ட நேரமாக திறக்கப்படாமல் இருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது மீனாட்சி தூக்கிட்ட நிலையில் காணப் பட்டார். அவரை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் சேர்த்தனர். ஆனால் அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது ெதாடர்பாக ஆத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவி ஏன் தற்கொலை செய்து கொண்டார் என விசாரணை நடத்தி வருகின்றனர்.
- முத்துராஜ் அதே ஊரை சேர்ந்த பேச்சிமுத்து என்பவருக்கு 2 மாதத்திற்கு முன்பு கடனாக ரூ. 5 ஆயிரம் கொடுத்துள்ளார்.
- கடந்த 4-ந்தேதி கணேசன் வேலை செய்யும் ஏரலில் உள்ள கடையில் வைத்து பணத்தை கேட்டுள்ளார். அதனால் அவர்களுக்குள் வாய் தகராறு ஏற்பட்டுள்ளது.
ஆத்தூர்:
தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள தெற்கு ஆத்தூர் நரசன்விளையை சேர்ந்த ராமசாமி மகன் முத்துராஜ் (வயது28). பெயிண்டர். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் மகள் உள்ளனர்.
ரூ. 5 ஆயிரம் கடன்
இவர் அதே ஊரை சேர்ந்த கணேசன் மகன் பேச்சிமுத்து (25) என்பவருக்கு 2 மாதத்திற்கு முன்பு கடனாக ரூ. 5 ஆயிரம் கொடுத்துள்ளார். அதனை பலமுறை திருப்பி கேட்டும் அவர் கொடுக்கவில்லை என தெரிகிறது. இதனால் கடந்த 4-ந்தேதி கணேசன் வேலை செய்யும் ஏரலில் உள்ள கடையில் வைத்து பணத்தை கேட்டுள்ளார். அதனால் அவர்களுக்குள் வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர் அவர்கள் அங்கிருந்து சென்றுவிட்டனர்.
இந்நிலையில் இரவு முத்துராஜ் நரசன்விளை அம்மன் கோவில் அருகே வந்த போது அங்கு வந்த பேச்சிமுத்து, அவரது தம்பி இசக்கி ராஜா ஆகியோர் பணம் கேட்டு வேலை செய்யும் கடைக்கு எப்படி வரலாம் என தகராறு செய்து அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது.
அரிவாள் வெட்டு
இதில் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த பேச்சிமுத்து அரிவாளை எடுத்து முத்துராஜை வெட்டிவிட்டு சென்றுவிட்டார். காயமடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்த புகாரின் பேரில் ஆத்தூர் இன்ஸ்பெக்டர் பாலமுருகன், சப்-இன்ஸ்பெக்டர் சிவராஜா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஆத்தூர் அருகே உமரிக்காடு பகுதியில் கோட்டைவாழ் அய்யன் கோவில் உள்ளது.
- கோவிலுக்கு வரும் மின் இணைப்பு, மரத்திற்கு கீழ் செல்வதால் நிழல் தரும் மரங்களை வெட்டும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
ஆத்தூர்:
ஆத்தூர் அருகே உமரிக்காடு பகுதியில் கோட்டைவாழ் அய்யன் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு உள்ளூர் சுற்றுவட்டாரங்களை மட்டுமல்லாமல் வெளியூரில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்ய வருகின்றனர். இக் கோவிலை சுற்றி ஏராளமான மரங்கள் உள்ளது. கோவிலுக்கு வரும் மின் இணைப்பு, மரத்திற்கு கீழ் செல்வதால் நிழல் தரும் மரங்களை வெட்டும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதற்கு தீர்வாக கோவில் நிர்வாகம் வயரிங் செய்யும் பி.வி.சி. பைப்புகளை மின்வாரிய ஊழியர்கள் ஒத்துழைப்போடு மின் கம்பியின் உள்ளாக நுழைத்து மாட்டி விட்டது. இதனால் மரங்கள் மின்கம்பியில் உரசும் அபாயம் நீங்கியது. மின்கம்பியை சுற்றி பாதுகாப்பான பி.வி.சி. பைப் இருப்பதால் மின்கம்பிகள் ஒன்றோடு ஒன்று உரசினால் கூட எவ்வித அபாயம் ஏற்படுவதில்லை. மரங்களை பாதுகாக்க மற்ற இடங்களிலும் அரசு இதுபோன்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- ஆத்தூர் பேரூராட்சி பொது நிதியிலிருந்து பேவா்பிளாக் சாலை மற்றும் கழிவுநீா் வடிகால் அமைக்கும் பணி நடைபெறுகிறது.
- இதற்கான பணிகளை ஆத்தூா் பேரூராட்சித் தலைவா் ஏ.கே.கமால்தீன் தொடங்கி வைத்தாா்.
ஆத்தூர்:
ஆத்தூா் பேரூராட்சி 7-வது வாா்டு பேட்டைதெருவில் ரூ.38.50 லட்சம் மதிப்பீட்டில் பேரூராட்சி பொது நிதியிலிருந்து பேவா்பிளாக் சாலை மற்றும் கழிவுநீா் வடிகால் அமைக்கும் பணி நடைபெறுகிறது. இதற்கான பணிகளை ஆத்தூா் பேரூராட்சித் தலைவா் ஏ.கே.கமால்தீன் தொடங்கி வைத்தாா்.
நிகழ்ச்சியில் நிா்வாக அதிகாரி முருகன், பொறி யாளா் ஆவுடைப்பாண்டி, மேற்பாா்வையாளா் இளையராஜா, கவுன்சிலா்கள் அசோக்குமாா், முத்து, கேசவன், சிவா, பாலசிங், கவுஹா்ஜான், சங்கரேஸ்வரி ராம்குமாா், கோமதி, வசந்தி, கமலச்செல்வி உள்ளிட் டோா் கலந்து கொண்டனா்.
- ஆத்தூரில் முக்காணி -ஆத்தூரை இணைக்கும் தாமிரபரணி ஆற்றின் கடைசி பாலம் உள்ளது.
- இதையடுத்து விவசாயிகள் அதிக ஆழத்தில் தண்ணீரை மோட்டார் மூலம் எடுத்து பாசனம் செய்து வருகின்றனர்.
ஆத்தூர்:
நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களை வளமாக்கும் தாமிரபரணி ஆறு தென் மாவட்டத்திலேயே உற்பத்தியாகி தென் மாவட்டத்திலேயே கடலில் கலக்கும் பெருமை பெற்றது.
கடைசி பாலப்பகுதி
இந்த ஆறு நெல்லை மாவட்டம் பொதிகை மலையில் உற்பத்தியாகி தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள புன்னக்காயல் கடலில் கலக்கிறது. ஆத்தூரில் முக்காணி -ஆத்தூரை இணைக்கும் தாமிரபரணி ஆற்றின் கடைசி பாலம் உள்ளது. தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடும் போது இந்த பாலத்திற்கு மேல் வெள்ளம் ஓடி தூத்துக்குடி மாவட்டத்தை பரபரப்பாக்கும். அப்போது தூத்துக்குடி- திருச்செந்தூர் போக்குவரத்து நிறுத்தப்படும்.
இந்த பாலப்பகுதியில் தற்போது தண்ணீர் முழுமையாக வற்றி தரைகள் வெளியில் தெரிகிறது. இதனால் ஆத்தூர் சுற்று வட்டாரங்களில் நீர்மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது. இதையடுத்து விவசாயிகள் அதிக ஆழத்தில் தண்ணீரை மோட்டார் மூலம் எடுத்து பாசனம் செய்து வருகின்றனர்.
விவசாயிகள் எதிர்பார்ப்பு
மேலும் தண்ணீர் அதிகமான அளவு கீழ் செல்லும் போது அருகில் உள்ள கடல்நீர் ஊருக்குள் வந்து நிலத்தடி நீர் உப்பாக மாற வாய்ப்பு உள்ளது.
இதற்கிடையே தற்போது மழை காரணமாக அணைகளில் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் குடிநீர் தேவைக்கு மட்டுமல்லாமல் விவசாயிகளும் பாபநாசம் அணையில் இருந்து தாமிரபரணி ஆற்றிற்கு தண்ணீர் திறப்பதை எதிர்பார்த்து உள்ளனர்.
- ஆத்தூர் வடக்கு ரதவீதி நல்ல பிள்ளையார் கோவிலில் வருஷாபிஷேகம் நடைபெற்றது.
- பின்னர் கோவில் விமானத்திற்கு அபிஷேகம் நடைபெற்றது.
ஆத்தூர்:
ஆத்தூர் வடக்கு ரதவீதி நல்ல பிள்ளையார் கோவி லில் வருஷாபிஷேகம் நடை பெற்றது. விழாவையொட்டி காலை 7 மணிக்கு நடை திறக்கப்பட்டு மஹா கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜை தொடங்கியது. பின்னர் கோவில் விமானத்திற்கு அபிஷேகம் நடைபெற்றது.
தொடர்ந்து நல்லபிள்ளை யார் மற்றும் பரிவார தேவதைகளுக்கு சிறப்பு அபிஷேகமும், அலங்கார தீபாராதனைகளும் நடை பெற்றது. தொடர்ந்து பக்தர் களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடு களை ஆத்தூர் வடக்கு ரதவீதி நல்லபிள்ளையார் கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.
- ஆத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி பழைய மாணவர்களின் சங்க விழா பள்ளி வளாகத்தில் நடந்தது.
- கூட்டத்தில் பள்ளியின் வளர்ச்சி பற்றி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
ஆத்தூர்:
ஆத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி பழைய மாணவர்களின் சங்க விழா பள்ளி வளாகத்தில் நடந்தது. பள்ளியின் முன்னாள் மாணவர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியை அன்னலெட்சுமி, பேரூராட்சி தலைவர் கமால்தீன். பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் தங்கராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரூராட்சி துணைத் தலைவி மகேஸ்வரி முருகப்பெருமாள் வரவேற்று பேசினார். முன்னாள் மாணவர் சந்தானம் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். முன்னாள் ஆசிரியை திருமலை, முன்னாள் ஆசிரியர் நாராயணன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தங்கள் கருத்துக்களை எடுத்துரைத்தனர்.
கூட்டதில் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மேலும் நிர்வாகக்குழு தலைவராக ஞானதுரை செயலாளராக புஹாரி, பொருளாளராக குப்புசாமி ஆகியோர் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டனர். நிர்வாகக் குழுஉறுப்பினர்கள் தேர்ந்தெ டுக்கப்பட்டனர். கூட்டத்தில் பள்ளியின் வளர்ச்சி பற்றி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் கவுன்சிலர்கள் சங்கரேஸ்வரி ராம்குமார், ராஜலட்சுமி, முருகன், கேசவன், கமல் செல்வி, முன்னாள் மாணவர்கள் ரெம்சியஸ், ராதாகிருஷ்ணன், கார்த்திக், மதிமாறன், ஜமால், ஆசிரியர் முருகன் உட்பட ஏராளமான முன்னாள் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
- தூத்துக்குடி மாவட்ட் சமூக பாதுகாப்புத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு திட்டம், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு இணைந்து நேற்று ஆத்தூர் பேரூராட்சியில் குழந்தைகள் நல பாதுகாப்பு குழு கூட்டம் நடைபெற்றது.
- குழந்தைகள் பாதுகாப்பு குறித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது
ஆத்தூர்:
தூத்துக்குடி மாவட்ட் சமூக பாதுகாப்புத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு திட்டம், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு இணைந்து நேற்று ஆத்தூர் பேரூராட்சியில் குழந்தைகள் நல பாதுகாப்பு குழு கூட்டம் நடைபெற்றது.
இதில் ஆத்தூர் பேரூராட்சி மன்றத் தலைவர் கமாலுதீன் தலைமையில் நடைபெற்றது.இதில் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது
கூட்டத்தில் தூத்துக்குடி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு குழு அலுவலர், மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகின் பிரதிநிதி கிளாரன்ஸ், ஆத்தூர் காவல் உதவி ஆய்வாளர் மாணிக்கராஜ், பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் மகேஸ்வரி, ஆத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர், ஆத்தூர் சுகாதார ஆய்வாளர் சங்கர சுப்பிரமணியன், வார்டு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
- தூத்துக்குடி ராஜபாண்டி தெருவை சேர்ந்தவர் குமார் (வயது 30). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 3 குழந்தைகள் உள்ளது.
- சம்பவத்தன்று நிறுவனத்தில் வேலை பார்த்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் அவரை தாக்கியது.
ஆத்தூர்:
தூத்துக்குடி ராஜபாண்டி தெருவை சேர்ந்தவர் குமார் (வயது 30). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 3 குழந்தைகள் உள்ளது.
குமார் பழையகாயலில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று நிறுவனத்தில் வேலை பார்த்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் அவரை தாக்கியது. இதில் பலத்த காயமடைந்த அவரை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்ந்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனளிக்காமல் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இது தொடர்பாக ஆத்தூர் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்