என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Auto Overturns"

    • ராஜபாளையத்தில் ஆட்டோ கவிழ்ந்து டிரைவர் பலியானார்.
    • மோசமான சாலையால் இந்த விபரீத சம்பவம் நடந்துள்ளது.

    ராஜபாளையம்

    சிவகாசி காக்கிவாடன்பட்டியை சேர்ந்தவர் தளவாய்பாண்டியன் (வயது45), ஆட்டோ டிரைவர். இவர் காக்கிவாடன்பட்டியில் இருந்து சவாரி ஏற்றி கொண்டு ராஜபாளையம் ரெயில் நிலையத்திற்கு வந்தார். பின்னர் அங்கிருந்து மீண்டும் ஊருக்கு புறப்பட்டார்.

    அப்போது எதிர்பாராத விதமாக சாலையில் இருந்த பள்ளத்தில் ஆட்டோ ஏறி இறங்கிய போது நிலை தடுமாறி கவிழ்ந்தது. இதில் ஆட்டோவுக்குள் சிக்கிய தளவாய் பாண்டியன் காயமடைந்து பேச்சு மூச்சின்றி கிடந்தார்.

    அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு ராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்ட தாக தெரிவித்தனர். இதுகுறித்து தளவாய் பாண்டியன் மகன் முரளி மனோஜ் ராஜபாளையம் தெற்கு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். இன்ஸ்பெக்டர் சார்லஸ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    ராஜபாளையம் முழுவதும் பல்வேறு பணிகளுக்காக சாலைகள் தோண்டப்பட்டு சரியாக மூடப்படாமலும், செப்பனிடபடாமலும் குண்டும் குழியுமாக கிடக்கின்றன. இதனால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது. எனவே சாலை களை விரைவாக சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் வலியுறுத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் கடந்த 10 நாட்களாக ராஜபாளையம் பகுதியில் தொடர்ச்சியாக மழை பெய்து வந்ததால் சாலைகளில் புதிய பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. மழைநீர் தேங்கி இருப்பதால் வாகன ஓட்டிகளுக்கு பள்ளங்கள் தெரிவதில்லை. இதனால் விபத்தில் சிக்குகின்றனர். தொடர் விபத்துக்களையும், உயிர் பலிகளையும் தடுக்க முறையான வடிகால் வசதியுடன் சாலைகளை விரைவாக சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • ஆட்டோ கவிழ்ந்து டிரைவர் சாவு; மனைவி- குழந்தை படுகாயம் அடைந்தனர்.
    • விபத்து குறித்து எம்.புதுப்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் கம்மாபட்டி தெருவை சேர்ந்தவர் பவுன்குரு (வயது 28). இவர் சொந்தமாக ஆட்ேடா வைத்து ஓட்டி வந்தார். இவருக்கு புவனேஸ்வரி (21) என்ற மனைவியும், 1 வயது கபிலன் என்ற ஆண் குழந்தை உள்ளது. வருகிற 29-ந் தேதி குழந்தைக்கு காது குத்து விழா நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இதற்காக உறவினர்களை அழைக்கும் பணியில் பவுன்குரு, அவரது மனைவி தீவிரமாக இருந்தனர். சம்பவத்தன்று காடனேரி பகுதியில் உள்ள உறவினரை அழைப்பதற்காக பவுன்குரு தனது மனைவி மற்றும் குழந்தையுடன் ஆட்டோவில் புறப்பட்டார்.மருதநத்தம் விலக்கு ரோட்டில் சென்றபோது திடீரென ஒரு மோட்டார் சைக்கிள் குறுக்கே சென்றது. அதன்மீது மோதாமல் இருப்பதற்காக பவுன்குரு ஆட்டோவை திருப்பினர்.

    இதில் ஆட்டோ கட்டுப்பாட்டை இழந்த நடுரோட்டில் தலைகுப்பிற கவிழ்ந்தது. விபத்தில் படுகாயம் அடைந்த பவுன்குரு பரிதாபாக இறந்தார்.புவனேஸ்வரி,
    1 வயது குழந்தை படுகாயம் அடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து குறித்து எம்.புதுப்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    ×