search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "autonomy"

    • கொள்ளையர்களை எதிர்த்து கருவியின்றி அறிவாயுதம் கொண்டு அரசியல் போர் புரிந்து கொண்டிருக்கிறோம்.
    • இந்தியாவில் பாமரனும் அம்பானியும் ஒரே மாதிரியான வரியினை செலுத்துகின்றனர்.

    மண்ணச்சநல்லூர்:

    திருச்சி மண்னச்சநல்லூரி தேர்தல் பிரசாரத்தின்போது நாம்தமிழர் கட்சி தலைவர் சீமான் பேசியதாவது:-

    பல ஆண்டு கால வறுமையை ஒழிக்க இந்த தேர்தல் அரசியல் வரலாற்று வாய்ப்பு. அன்று வெள்ளையர்களை எதிர்த்து போராடிய நம் முன்னோர்களைப் போல, இன்று கொள்ளையர்களை எதிர்த்து கருவியின்றி அறிவாயுதம் கொண்டு அரசியல் போர் புரிந்து கொண்டிருக்கிறோம்.

    கப்பல் துறை தனியார், போக்குவரத்து துறை தனியார், கல்வி துறை தனியார் மருத்துவத்துறை தனியார் விமானத்துறை சாலை பொருள் தனியார், ரெயில்வே துறைகளை தனியாருக்கு மாற்றவேண்டிய அவசியம் என்ன?

    கல்வி உரிமையை பறிகொடுத்து விட்டு மாநில தன்னாட்சியின் பெயர் பற்றி பேசுவது கொடுமை. இந்தியாவில் பாமரனும் அம்பானியும் ஒரே மாதிரியான வரியினை செலுத்துகின்றனர். ஆனால் இருவரது வாழ்க்கை தரம் தான் வேறுபட்டு இருக்கிறது.

    விலைவாசி உயர்வால் நமது வாழ்க்கை தரம் மாறிப்போச்சு. இந்த நிலை தொடரக்கூடாது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க மாறுதலை ஏற்படுத்திட வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • மாணவர் கூட்டமைப்பு கண்டனம்
    • மாணவிகளின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது.

    புதுச்சேரி:

    புதுவை மாணவர்கள் கூட்டமைப்பு நிறுவனர் சுவாமிநாதன் வெளியி ட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    புதுவை பாரதிதாசன் அரசு மகளிர் கலைக்கல்லூரி நிர்வாகக் கோளாறுகளால் சீரழிந்து வருகிறது. அரசின் கவனத்திற்கு பலமுறை நடக்கும் குளறுபடிகளை கொண்டு சென்றும் நடவடிக்கை இல்லை. இதனால் மாணவிகளின் எதிர்காலம் கேள்விக்கு றியாக உள்ளது.

    மாணவர் சேர்க்கை முடிந்து கல்லூரி துவங்கி 35 நாட்களில் செமஸ்டர் தேர்வு நடத்தியுள்ளனர். இதனால் மாணவிகளின் தேர்ச்சி விகிதம் குறைந்து ள்ளது. எப்போதும் 100 சதவீத தேர்ச்சியை பெறும் பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரி மாணவிகள் 50 சதவீதத்திற்கும் மேற்பட்டவர்கள் ஒரு சில குறிப்பிட்ட பாடங்களில் தோல்வி அடைந்துள்ளனர்.

    இதற்கு கல்வித்துறையும் கல்லூரி நிர்வாகத்தின் அலட்சியமே காரணம். கல்லூரிக்கு வழங்கப்ப ட்டிருந்த தன்னாட்சி அங்கீகாரம் 2017 -ம் ஆண்டு முடிவடைந்தது. இதனை புதுப்பிக்க எந்த நடவடிக்கையும் எடுக்காதது கண்டனத்திற்குரியது.

    அரசு இந்த விவகாரத்தில் உடனடியாக தலையிட்டு கல்லூரி மற்றும் கல்லூரி மாணவிகளுக்கு எழுந்துள்ள பிரச் சனையை உடனடியாக தீர்த்து வைக்க வேண்டும். நடவடிக்கை எடுக்காவிட்டால் கல்லூரி மாணவிகளை ஒன்று திரட்டி அரசுக்கு எதிரான போராட்டம் நடத்தப்படும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    தமிழகத்தில் உள்ள ஆளுநர் ஒவ்வொரு மாவட்டங்களாக சென்று ஆய்வு நடத்தி வருகிறார். இதன்மூலம் மாநிலத்தின் சுயாட்சி பறிக்கப்பட்டுள்ளது என்று எ.வ. வேலு பேசியுள்ளார்.

    காரியாபட்டி:

    திருச்சுழியில் தி.மு.க. இளைஞர் எழுச்சி நாள் பொதுக்கூட்டம் நடந்தது. திருச்சுழி தெற்கு ஒன்றிய செயலாளர் பொன்னுத்தம்பி தலைமை தாங்கினார். நரிக்குடி ஒன்றிய செயலாளர்கள் போஸ், கண்ணன், காரியாபட்டி ஒன்றிய செயலாளர்கள் செல்லம், கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருச்சுழி வடக்கு ஒன்றிய செயலாளர் சந்தனபாண்டி வரவேற்றார்.

    திருச்சுழி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தங்கம்தென்னரசு, அருப்புக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் சாத்தூர் ராமச்சந்திரன் ஆகியோர் பேசினர்.

    முன்னாள் அமைச்சரும், திருவண்ணாமலை தெற்கு மாவட்ட செயலாளருமான எ.வ.வேலு சிறப்புரையாற்றினர். அவர் பேசியதாவது:-

    தமிழகத்திற்கு இப்போது சுதந்திரம் இல்லை. தமிழகத்தை மத்திய அரசு கையில் வைத்துக்கொண்டு ஆட்சி செய்து வருகிறது.

    தமிழக அரசு சுயமாக செயல்படவில்லை. தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு நபர்களுக்கும் ரூ. 45 ஆயிரம் கடன் உள்ளது. அவ்வளவு தொகையை தமிழக அரசு கடன் பெற்றுளது. தமிழ்நாடு வளர்ந்தா உள்ளது? இல்லை. கடனில் தான் உள்ளது.

    ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது தமிழகத்தில் 2 லட்சம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கி தருவேன் என்று கூறினார். ஆனால் அறிக்கை வெளியிட்டதோடு சரி. இதுவரை எந்த இளைஞர்களுக்கும் வேலைவாய்ப்பை உருவாக்கி கொடுக்கவில்லை.

    தமிழகத்தில் 85 ஆயிரம் பேருக்கு வேலை கொடுக்கும் நிறுவனம் ஜப்பானில் இருந்து வந்து காத்துக் கிடந்தது. ஆனால் ஜப்பான் நாட்டு நிறுவனத்திற்கு ஏன் அனுமதி கொடுக்கவில்லை என்று தெரியவில்லை. அந்த நிறுவனம் தற்போது ஆந்திராவிற்கு சென்று விட்டது.

    தமிழை பழமையான மொழி என்று பேசிய பிரதமர் மோடி அவரது கட்டுப்பாட்டில் உள்ள விமானத்துறைகளில் உள்ள விமானங்களில் ஏன் தமிழ் பேசுவது இல்லை.

    தமிழகத்தில் சுயாட்சி பறிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள ஆளுநர் ஒவ்வொரு மாவட்டங்களாக சென்று ஆய்வு நடத்தி வருகிறார். இதன்மூலம் மாநிலத்தின் சுயாட்சி பறிக்கப்பட்டுள்ளது.

    ஆளுநர் எங்கு சென்று ஆய்வு நடத்துகிறாரோ அங்கு எல்லாம் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் கருப்புக்கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்து வருகிறோம்.

    ஆனால் தற்போது தமிழகத்தை ஆண்டு கொண்டிருக்கிற ஆட்சியாளர்களோ எதுவும் கண்டுகொள்வதில்லை. ஏனென்றால் அவர்கள் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் இருந்து வருகிறார்கள்.

    மாநிலத்தின் சுயாட்சியை என்றும் விட்டுக்கொடுக்காமல் திராவிட முன்னேற்ற கழகம் தமிழகத்தின் உரிமைக்காக தொடர்ந்து போராடும்.

    விருதுநகர் எம்.எல்.ஏ. சீனிவாசன், ராஜபாளையம் எம்.எல்.ஏ தங்கப்பாண்டியன், திருச்சுழி மணிவாசகம், மாநில வர்த்தக அணி செயலாளர் வனராஜா, தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர்கள் சந்திரன், சண்முகச்சாமி, கமலி பாரதி, காரியாபட்டி நகரச் செயலாளர் செந்தில், வர்த்தக அணி மாவட்ட துணைச் செயலாளர் தமிழ்வாணன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் திருச்சுழி பாஸ்கரன், உடையனாம்பட்டி முருகன், சாமிக்கண்ணு, குரண்டி சிவசக்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×