என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Avinasi"

    • கதவு பூட்டுகளை உடைத்து இருவீடுகளிலும் சேர்ந்து ரூ.90 ஆயிரம் பணத்தை மர்ம ஆசாமிகள் திருடி சென்றனர்.
    • அவினாசி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    அவினாசி :

    அவினாசி ஒன்றியம் பழங்கரை கமிட்டியார் காலனியில் ஓய்வு பெற்ற நில அளவையாளர் சாமிநாதன், அதே பகுதியில் அவரது மகள் கோகிலவாணி ஆகியோரது வீட்டின் கதவு பூட்டுகளை உடைத்து இருவீடுகளிலும் சேர்ந்து ரூ.90 ஆயிரம் பணத்தை மர்ம ஆசாமிகள் திருடி சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது. இது குறித்து அவினாசி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    மேலும் அப்பகுதியில் சி.சி.டி.வி.கேமராவை ஆய்வு செய்தபோது திருட்டு சம்பவம் நடந்த வீட்டின் காம்பவுண்டு சுவர் அருகே ஒருவர் செல்போனில் பேசிய படி திரும்பி, திரும்பி பார்த்தவாறு அங்கும் இங்கு மாக நடந்துகொண்டிருப்பது தெரியவந்தது. இரு வீடுகளும் பூட்டியிருப்பதை உளவு பார்த்து திட்டமிட்டு திருட்டு நடந்திருக்கலாம் என்றும் திருடி சென்ற நபர்களில் சி.சி.டி.வி .கேமராவில் பதிவாகியுள்ள நபரும் ஒருவராக இருக்கலாம் என்கிற சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் தனிப்படை அமைத்து கமிட்டியார் காலனி பகுதி, திருப்பூர் சுற்றுவட்டாரப்பகுதி உள்ளிட்ட பல இடங்களில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

    • வீட்டின் முன்கதவு உடைக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
    • பிரோவிலிருந்த பணம் ரூ. 40 ஆயிரம் மற்றும் கோவிலுக்கு செல்வதற்காக காணிக்கை உண்டியல் திருடப்பட்டது.

    அவினாசி :

    திருப்பூர் மாவட்டம் அவினாசி ஒன்றியம் பழங்கரை ஊராட்சி கமிட்டியார் காலனியில் வசிப்பவர் சாமிநாதன் , ஓய்வு பெற்ற சர்வேயர். இவரது மனைவி ருக்மணி . இவர்கள் நேற்று காலை வீட்டை பூட்டிவிட்டு மேட்டுப்பாளையம் சென்றுவிட்டு மாலை 4 மணியளவில் திரும்ப வீட்டிற்கு வந்தனர். அப்போது வீட்டின் முன்கதவு உடைக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தனர்.உள்ளே சென்று பார்த்தபோது இரண்டு பீரோக்கள் உடைக்கப்பட்டு அதிலிருந்த துணிகள் மற்றும் பொருட்கள்சிதறிகிடந்தன. மேலும் பிரோவிலிருந்த பணம் ரூ. 40 ஆயிரம் மற்றும் கோவிலுக்கு செல்வதற்காக காணிக்கை போட்டுவைத்திருந்த உண்டியல் உடைக்கப்பட்டு அதிலிருந்த பணம்சுமார் ரூ.8 ஆயிரமும் திருடப்பட்டது தெரியவந்தது.

    அதே தெருவில் எதிர்திசையில் சாமிநாதனின் மகள் கோகிலவாணி (36) அவரது கணவர் ரமேஷ் (41) ஆகியோர் வசித்து வருகின்றனர். ரமேஷ் நல்ல கட்டிபாளையம் தொடக்கப்பள்ளி ஆசிரியராகவும், கோகிலவாணிகருக்கன்காட்டுப்புதூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் ஆசிரியராகவும் வேலை பார்த்து வருகின்றனர்.இவர்கள் இருவரும் வீட்டை பூட்டிவிட்டு வழக்கம்போல் பள்ளிக்கு சென்று பின்னர் மாலை திரும்பிவந்து பார்த்த போது வீட்டின் பூட்டை உடைத்து பீரோவிலிருந்து பணம் ரூ 50 ஆயிரம் அவர்கள் வீட்டில் வைத்திருந்த உண்டியலை உடைத்து அதிலிருந்து ரூ10 ஆயிரம் ஆகியவைகளை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. ஒரே பகுதியில் பட்டப்பகலில் எதிர் எதிரே ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் வீட்டில் திருட்டு நடந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    கடந்த மாதம் 29-ந்தேதி அதே கமிட்டியார் காலனியில் அடுத்தடுத்து தர்மர், மணிகண்டன் ஆகியோரது வீட்டில் புகுந்து பணம் மற்றும் நகைகள் திருடப்பட்டது குறிப்பிடதக்கது.

    அப்பகுதி மக்கள் இதுகுறித்து கூறுகையில் ,குடியிருப்புகள் நிறைந்த இதே பகுதியில் அடிக்கடி திருட்டு நடைபெறுவதால் பகல் சமயத்தில் கூட வீட்டை பூட்டிவிட்டு வெளியில் எங்கும் செல்லமுடியாத நிலை உள்ளது. பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது. இதுபோல் தொடர் திருட்டு நடைபெறுவது நாங்கள் மிகவும் அச்சத்தில் உள்ளோம். கமிட்டியார் காலனி பகுதியில் போலீசார் ரோந்துபணியில் ஈடுபடவேண்டும் என்றனர்

    கொள்ளை குறித்த புகாரின்பேரில் அவினாசி போலீசார் அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை ஆய்வு செய்து பட்டப்பகலில் திருடி சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். மேலும் தடயவியல் நிபுணர்கள் கைரேகைகளை பதிவு செய்து எடுத்து சென்றுள்ளனர்.

    • அவிநாசி மின் கோட்ட செயற்பொறியாளா் அலுவலகத்தில் காலை 11 மணிக்கு மின் நுகா்வோா் குறைதீா் கூட்டம் நடைபெற உள்ளது.
    • மின் நுகா்வோா் கலந்துகொண்டு மின் சம்பந்தமான தங்களது குறைகளை தெரிவித்து நிவா்த்தி செய்து கொள்ளலாம்.

    தாராபுரம் :

    அவிநாசியில் மின் நுகா்வோா் குறைதீா் கூட்டம் நாளை 13-ந்தேதி நடைபெற உள்ளது.

    இது குறித்து அவிநாசி கோட்ட செயற்பொறியாளா் விஜயஈஸ்வரன் கூறியதாவது:- அவிநாசி மின் கோட்ட செயற்பொறியாளா் அலுவலகத்தில் நாளை (புதன்கிழமை) காலை 11 மணிக்கு மின் நுகா்வோா் குறைதீா் கூட்டம் நடைபெற உள்ளது.

    இதில், திருப்பூா் மின் பகிா்மான வட்ட மேற்பாா்வைப் பொறியாளா் கலந்துகொண்டு மின் நுகா்வோா் குறைகளைக் கேட்டறிந்து நிவா்த்தி செய்ய உள்ளாா்.எனவே, இக்கூட்டத்தில் மின் நுகா்வோா் கலந்துகொண்டு மின் சம்பந்தமான தங்களது குறைகளை தெரிவித்து நிவா்த்தி செய்து கொள்ளலாம் என்றாா்.

    பல்லடம் மின் பகிா்மான வட்டம், தாராபுரம் கோட்டத்தில் மின் நுகா்வோா் குறைதீா் கூட்டம் நாளை நடைபெறுகிறது.இது குறித்து தாராபுரம் மின் வாரிய செயற்பொறியாளா் வ.பாலன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், பல்லடம் மின் பகிா்மான வட்டம், தாராபுரம் கோட்டத்துக்குள்பட்ட மின் நுகா்வோா் குறைதீா் கூட்டம் தாராபுரம் செயற்பொறியாளா் அலுவலகத்தில் புதன்கிழமை காலை 11 மணி அளவில் நடைபெறுகிறது.இக்கூட்டத்துக்கு பல்லடம் மின்பகிா்மான வட்ட மேற்பாா்வைப் பொறியாளா் தலைமை வகிக்கிறாா்.இதில், மின் நுகா்வோா் கலந்துகொண்டு தங்களது குறைகளைத் தெரிவிக்கலாம் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • நடராஜன் போஸ்ட் மாஸ்டராக வேலை பார்த்து ஓய்வுபெற்றவர்.
    • உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அவினாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அவினாசி

    அவினாசியை அடுத்துள்ள நடுவச்சேரியை சேர்ந்தவர் நடராஜன் (வயது 68). இவர் போஸ்ட் மாஸ்டராக வேலை பார்த்து ஓய்வுபெற்றவர். பல வருடங்களாக மனைவியை பிரிந்து தனித்து வாழ்ந்துவந்தார். இந்த நிலையில் இவர் தனது வீட்டிற்கு அருகில் உள்ள மரத்தில் தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டார். தகவலறிந்த அவினாசி போலீசார் வழக்குபதிவு செய்து அவர் தற்கொலை செய்துகொண்டதற்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

    அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அவினாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    • குடும்பத்தகராறு, கடன் தொல்லை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் சிலர் தற்கொலை செய்து கொண்டனர்.
    • மோட்டார் சைக்கிளில் செல்வோர் சாலை விபத்தில் சிக்கி பலியாவது அதிகரிக்கிறது.

    அவிநாசி :

    திருப்பூர் மாவட்டம் அவிநாசி காவல் நிலைய எல்லைக்குட்பட்டு150க்கும் மேற்பட்ட கிராமங்கள் மற்றும் நகரப்பகுதி உள்ளது.சமீப நாட்களாக குடும்பத்தகராறு, கடன் தொல்லை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் சிலர் தற்கொலை செய்து கொண்டனர்.

    கோவை- சேலம் நெடுஞ்சாலையில் அவிநாசி அமைந்துள்ள நிலையில் அடிக்கடி சாலை விபத்துகளும் ஏற்படுகிறது.குறிப்பாக மோட்டார் சைக்கிளில் செல்வோர் சாலை விபத்தில் சிக்கி பலியாவது அதிகரிக்கிறது. நகரின் உட்புற சாலைகளில் கூட அடிக்கடி விபத்து நேரிடுகிறது. இதை தவிர்க்க, ஆங்காங்கே வேகத்தடை கூட அமைக்கப்பட்டது. இதனால் அவிநாசி போலீசார் சார்பில் மங்கலம் ரோட்டில் உள்ள ஆகாசராயர் கோவிலில் கிடா வெட்டி, சிறப்பு பூஜை செய்யப்பட்டது.

    இது குறித்து போலீசார் கூறுகையில், விபத்து, தற்கொலை உள்ளிட்டவை தினமும் நடக்கிறது. தினமும் ஒரு உடலாவது பிரேத பரிசோதனைக்கு வரும் நிலை ஏற்பட்டிருக்கிறது. இதுபோன்ற அசம்பாவிதம் நடக்கக்கூடாது என்ற வேண்டுதலை முன்வைத்து, ராயர் கோவிலில் கிடா வெட்டி பூஜை செய்தோம் என்றனர்.

    ×