search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Avoid Plastic Bags"

    • பிளாஸ்டிக்கை தவிர்த்து துணிப்பைகளை பயன்படுத்த வேண்டும் என கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார்.
    • இதில், ரூ. 10 நாணயம் செலுத்தி மஞ்சள் பை பெற்றுக் கொள்ளலாம்.

    தஞ்சாவூா்:

    தஞ்சாவூா் சரபோஜி சந்தையில் தானியங்கி மஞ்சள் பை வழங்கும் எந்திரம் தொடங்கப்பட்டது.

    மாவட்ட நிா்வாகம், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சாா்பில் அமைக்க ப்பட்ட இந்த எந்திரத்தின் செயல்பாட்டை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் தொடங்கி வைத்தார்.

    பின்னர் அவர் பேசியதாவது:-

    நெகிழி பயன்பாட்டை அகற்றி துணியால் செய்யப்பட்ட மஞ்சள் பையைப் பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் இந்தத் தானியங்கி மஞ்சள் பை வழங்கும் எந்திரம் அமைக்கப்பட்டுள்ளது. இதில், ரூ. 10 நாணயம் செலுத்தி மஞ்சள் பை பெற்றுக் கொள்ளலாம்.

    பொதுமக்கள் பிளாஸ்டிக்கை தவிா்த்து மீண்டும் மஞ்சள் பை அல்லது துணிப் பைகளைப் பயன்படுத்த வேண்டும். இது தொடர்பாக துண்டு பிரசுரங்கள் வழங்கி யும் விழிப்புணர்வு ஏற்படுத்த ப்பட்டது. இவ்வாறு அவர் பேசினார்.

    ×