என் மலர்
நீங்கள் தேடியது "awareness vehicle"
- சிறுதானியங்களை உணவில் சேர்த்து கொள்வதால் மனித ஆரோக்கியம் மேம்படுகிறது.
- பயிர்களின் உற்பத்தியை மேம்படுத்தவும் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும் அரசு முயற்சிகள் எடுத்து வருகிறது
காங்கயம் :
தற்சமயம் அரிசி உணவே பிரதானமாக உள்ளது. இதனால், தாது உப்புகள் மற்றும் வைட்டமின்கள் போதுமான அளவு கிடைப்பதில்லை.
அதனை நிவர்த்தி செய்யும் பொருட்டு சத்துக்கள் கொண்ட சோளம், கம்பு, ராகி, திணை, வாலி ,சாமை, வரகு, பனிவரகு மற்றும் குதிரை போன்ற சிறுதானியங்களை உணவில் சேர்த்து கொள்வதால் மனித ஆரோக்கியம் மேம்படுகிறது. எனவே சோளம், கம்பு, ராகி, திணை, சாமை, வரகு, பனிவரகு மற்றும் குதிரை வாலி பயிர்களின் உற்பத்தியை மேம்படுத்தவும் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும் அரசு முயற்சிகள் எடுத்து வருகிறது.
அதன்படி காங்கயம் வட்டாரம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்திலிருந்து சிறுதானிய உற்பத்தி மற்றும் மானிய திட்டங்கள் குறித்தான விழிப்புணர்வு வாகனத்தை காங்கயம் ஊராட்சி ஒன்றிய குழு துணைத்தலைவர் ஜீவிதா ஜவகர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
விழாவில் காங்கயம் வட்டார நகர செயலாளர் சேமலையப்பன், காங்கயம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் வசந்தாமணி, வேளாண்மை அலுவலர். ரேவதி,துணை வேளாண்மை அலுவலர் ரமேஷ், உதவி வேளாண்மை அலுவலர்கள் சிவக்குமார், அப்துல்ரஹ்மான், ஜோதிஸ்வரன், கல்யாணராஜன், அட்மா உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் வசந்தமுருகன் , தேவராஜ், தொகுப்பு ஒருங்கிணைப்பாளர் சிந்தியா மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.
- பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக நெல்லை மின் பகிர்மான வட்ட மேற்பார்வை மின் பொறியாளர் குருசாமி உத்தரவின் படி பேட்டை பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் பிரச்சார வாகனம் மூலம் துண்டு பிரசுரம் வழங்கி பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
- நகர்ப்புற கோட்ட செயற்பொறியாளர் முத்துக்குட்டி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
நெல்லை:
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் நெல்லை மின் பகிர்மான வட்டம் நெல்லை நகர்புறக் கோட்டத்தில், மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி கடந்த மாதம் 28-ந்தேதி முதல் இன்று வரை நடைபெற்றது.
இப்பணி குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக நெல்லை மின் பகிர்மான வட்ட மேற்பார்வை மின் பொறியாளர் குருசாமி உத்தரவின் படி பேட்டை பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் பிரச்சார வாகனம் மூலம் துண்டு பிரசுரம் வழங்கி பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இதனை நகர்ப்புற கோட்ட செயற்பொறியாளர் முத்துக்குட்டி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந் நிகழ்ச்சியில் பழைய பேட்டை உபகோட்ட உதவி செயற்பொறியாளர் சங்கர், உதவி மின் பொறியாளர் சரவணன் மற்றும் பணியாளர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
இந்த வாகனமானது பேட்டை, பழைய பேட்டை, டவுண் மற்றும் தச்சநல்லூர் பகுதிகளுக்கு சென்று பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்காத மின் நுகர்வோர்கள் உடனடியாக தங்கள் பகுதியில் இருக்கும் பிரிவு அலுவலகத்திலும், சிறப்பு முகாம்களிலும், இணைய வழி மூலமாகவும் உடனடியாக இணைத்துக்கொள்ள அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
- நெல்லை மற்றும் தென்காசி மாவட்டத்தில் மின் இணைப்பு என்னுடன் ஆதார் எண் இணைக்கும் பணி கடந்த 28-ந் தேதி முதல் 103 பிரிவு அலுவலகங்களிலும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது
- பிரசார வாகனத்தை நெல்லை மின் பகிர்மான வட்ட மேற்பார்வை மின் பொறியாளர் குருசாமி வள்ளியூர் பஸ் நிலையம் அருகில் தொடங்கி வைத்தார்.
வள்ளியூர்:
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் நெல்லை மின் பகிர்மான வட்டத்திற்கு உட்பட்ட நெல்லை மற்றும் தென்காசி மாவட்டத்தில் மின் இணைப்பு என்னுடன் ஆதார் எண் இணைக்கும் பணி கடந்த 28-ந் தேதி முதல் 103 பிரிவு அலுவலகங்களிலும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இப்பணியனது 31. 12. 2022 வரை தொடர்ந்து நடைபெறும். மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைக்கும் பணியை பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக வள்ளியூர் கோட்டத்தில் வள்ளியூர் பிரிவு அலுவலகத்தின் சார்பாக பிரசார வாகன பேரணி தொடக்க விழா நடைபெற்றது.
பிரசார வாகனத்தை நெல்லை மின் பகிர்மான வட்ட மேற்பார்வை மின் பொறியாளர் குருசாமி வள்ளியூர் பஸ் நிலையம் அருகில் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் செயற்பொறியாளர் வள்ளியூர் கோட்டம் வளன்னரசு, வள்ளியூர் கோட்டத்திற்கு உட்பட்ட அனைத்து உதவி செயற்பொறியாளர்கள், உதவி மின் பொறியாளர்கள், மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர். பிரசார வாகனமானது வள்ளியூர் கோட்டத்திற்கு உட்பட்ட அனைத்து இடங்களுக்கும் சென்று பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
- நாளையுடன் முடிவடைகிறது
- பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்
திருப்பத்தூர்:
ஆண்களுக்கான குடும்ப அறுவை சிகிச்சை முகாம் கடந்த 21-ந் தேதி தொடங்கியது.
இதனையடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்த கடந்த 28-ந் தேதி திருப்பத்தூர் அடுத்த ராமநாயக்கன் பேட்டை துணை ஆரம்ப சுகாதார நிலையத்தில் விழிப்புணர்வு பிரசார வாகனத்தை ஊரக நலப் பணிகள் இணை இயக்குனர் மாரிமுத்து தலைமையில் தொடங்கி வைக்கப்பட்டது.
இதில் வேலூர் மாவட்ட குடும்ப நல செயலக துணை இயக்குனர் மணிமேகலை திருப்பத்தூர் துணை இயக்குனர் சுகாதாரப் பணிகள் செந்தில் பச்சூர் சுகாதார நிலையம் வட்டார மருத்துவ அலுவலர் செல்லமுத்து மற்றும் ராம நாயக்கன் பேட்டை துணை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மருத்துவ அலுவலர் மற்றும் பணியாளர்கள் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இம்முகாம் நாளையுடன் (ஞாயிற்றுக்கிழமை) முடிவடைகிறது.
- ‘எல்லோருக்குமான இலவச சட்ட உதவி’ என்ற தலைப்பில் விழிப்புணர்வு பிரசார வாகனம் தொடக்க விழா நடைபெற்றது.
- 3 நாட்களுக்கு பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் காணொலி மூலமாக ஒளிபரப்பப்படும்.
திருப்பூர் :
திருப்பூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் 'எல்லோருக்குமான இலவச சட்ட உதவி' என்ற தலைப்பில் விழிப்புணர்வு பிரசார வாகனம் தொடக்க விழா திருப்பூர் மாவட்ட கோர்ட்டு வளாகத்தில் நேற்று நடைபெற்றது. முதன்மை மாவட்ட நீதிபதி ஸ்வர்ணம் நடராஜன் தலைமை தாங்கி, வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
அப்போது அவர் கூறும்போது, 'இன்று (நேற்று) முதல் இந்த விழிப்புணர்வு பிரசார வாகனம் தொடர்ந்து 3 நாட்களுக்கு பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் நின்று இலவச சட்ட உதவி மையத்தின் நோக்கங்கள் மற்றும் பொதுமக்களுக்கு எவ்வாறு பயன்படுகிறது என்பதை காணொலி மூலமாக ஒளிபரப்பப்படும். எனவே பொதுமக்கள் இதை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்' என்றார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட நீதிபதிகள் சுகந்தி, நாகராஜன், தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் புகழேந்தி, ஸ்ரீகுமார், சார்பு நீதிபதிகள் செல்லத்துரை, மேகலா மைதிலி, குற்றவியல் நீதித்துறை நடுவர்கள் பாரதிபிரபா, பழனிக்குமார், முருகேசன், ரஞ்சித்குமார், ஆதியன், கார்த்திகேயன், வக்கீல்கள் அருணாசலம், ஈஸ்வரமூர்த்தி, சிவபிரகாசம், சண்முகவடிவேல், பத்மநாபன், ராஜேந்திரன், ஸ்ரீராம் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
- தேவராஜி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
- ஏராளமானேர் கலந்துகொண்டனர்
ஜோலார்பேட்டை:
நாட்டறம்பள்ளி வட்டம் ஐங்காலபுரம் கிராமத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம், பொது சுகாதாரத்தின் சார்பில் ரத்த சோகை விழிப்புணர்வு வாக னத்தை ஜோலார்பேட்டை க.தேவராஜி தொகுதி எம்.எல்.ஏ. கொடியசைத்து வைத்தார்.
அதனை தொடர்ந்து ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம் மற்றும் பொது சுகாதாரம் சார்பில் அமைக்கப்பட்டிருந்த ஊட்டச்சத்து கண்காட்சியை மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி பார்வையிட்டார். மாவட்ட சமூக நல அலு வர்ஸ்டெல்லா வரவேற்றார். தொடர்ந்து அதனை ஜோலார்பேட்டை வட்டார குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் சக்திசுபாசினிதிட்டங்களை விளக்கினார்.
5 பள்ளி மாணவிகள், 5 கர்ப்பி ணிகளுக்கு ஊட்டச்சத்து கையேடு, துண்டு பிரசுரங்களை மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் எம்.எல்.ஏ. ஆகியோர் வழங்கினர்.
தேசிய ஊட்டச்சத்து மாத திருவிழாவை முன்னிட்டு ஊட்டச்சத்து தோட்டம் அமைப்பதற்காக தேர்வு செய் யப்பட்டுள்ள நிலத்தை மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி , க.தேவராஜி எம். எல்.ஏ. ஆகியோர் பார்வை யிட்டனர் .
மாவட்ட ஊராட் சிக்குழு தலைவர் என்.கே. ஆர்.சூரியகுமார், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலு வலர் திருமாவளவன், நாட்ட றம்பள்ளி ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர் வெண்மதிமு னிசாமி, துணைத் தலைவர் தேவராஜ், தாசில்தார் பூங்கொடி, மாவட்ட இளைஞர் அணிதுணை அமைப்பாளர் சிங்காரவேலன், குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் கள், மேற்பார்வையாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
- இனி இல்லை ரத்தசோகை ஊட்டச்சத்து விழிப்புணர்வு வாகனம் அறிமுகப்படுத்த பட்டது.
- பொம்மலாட்ட நிகழ்ச்சி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
கரூர்:
கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று மாவட்ட திட்ட அலுவலகம், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பில் இனி இல்லை ரத்தசோகை என்ற ஊட்டச்சத்து விழிப்புணர்வு வாகனத்தை கலெக்டர் தொடங்கி வைத்தார். கரூர் மாவட்ட திட்ட அலுவலகம் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பில் செப்டம்பர் மாதம் 1-ந்தேதி முதல் நவம்பர் மாதம் 30-ந்தேதி வரை நடைபெற இருக்கும் ரத்தசோகை விழிப்புணர்வு முகாமின் செயல் திட்டம் குறித்து இனி இல்லை ரத்தசோகை என்ற விழிப்புணர்வு பிரசாரம் செய்யப்பட உள்ளது.
இதில் மகளிர் திட்டம் மூலம் சமூக வளக்குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டு வீடு, வீடாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். மேலும், இந்த பிரச்சார வாகனம் மூலம் வாரத்திற்கு 4 நாட்கள் வீதம் 3 மாத காலத்திற்கு வட்டாரத்தின் முக்கிய இடங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். தொடர்ந்து பொதுமக்களிடையே ஊட்டச்சத்து குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திட பொம்மலாட்ட நிகழ்ச்சி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என கலெக்டர் தெரிவித்தார். முன்னதாக கலெக்டர் தலைமையில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர்கள் மற்றும் கல்லூரி மாணவிகள் ஊட்டச்சத்து உறுதிமொழியினை ஏற்றுக் கொண்டனர்.
- தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பாக 44-வது செஸ் ஒலிம்பியாட் 2022 போட்டிகள் நடைபெறவுள்ளது.
- கலெக்டர் அலுவலக வளாகத்தில் ‘நம்ம செஸ், நம்ம பெருமை” விழிப்புணர்வு ஒட்டு வில்லைகள் ஒட்டப்பட்ட தனியார் பள்ளி வாகனத்தினை கலெக்டர் கிருஷ்ணனுண்ணி கொடியசைத்து தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
ஈரோடு:
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பாக, செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் ஜுலை 28 முதல் ஆகஸ்ட் 10 வரை நடைபெறுகிறது.
இதை முன்னிட்டு, ஈரோடு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி கலெக்டர் அலுவலக வளாகத்தில் 'நம்ம செஸ், நம்ம பெருமை" விழிப்புணர்வு ஒட்டு வில்லைகள் ஒட்டப்பட்ட தனியார் பள்ளி வாகனத்தினை கொடியசைத்து தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பாக, செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் 2022 போட்டிகள் வருகின்ற 28-ந்தேதி முதல் 10-ந்தேதி வரை நடைபெறவுள்ளது.
இப்போட்டியில் 188 நாடுகளைச் சார்ந்த சுமார் 2500-க்கும் மேற்பட்ட செஸ் விளையாட்டு வீரர்கள் பங்குபெறவுள்ளனர்.
அதனடிப்படையில் மாவட்ட கலெக்டர் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், செஸ் ஒலிம்பியாட் 2022 போட்டிகள் தொடர்பாக ஈரோடு மாவட்ட பள்ளி மாணவ, மாணவியர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், 'நம்ம செஸ் நம்ம பெருமை" என்ற விழிப்புணர்வு ஒட்டு வில்லைகள் ஒட்டப்பட்ட தனியார் பள்ளி வாகனத்தினை பார்வையிட்டார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் சந்தோஷினி சந்திரா, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் சதீஷ்குமார் உட்பட தொடர்புடைய துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- கடலூரில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்த விழிப்புணர்வு மின்னனு வீடியோ வாகனத்தை கலெக்டர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
- 54 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் நிகழ்வுகள் நடைபெற உள்ளது.
கடலூர்:
பேரறிஞர் அண்ணாவால்'தமிழ்நாடு" என அறிவிக்கப்பட்ட ஜுலை -18-ம் நாளினை தமிழ்நாடு திருநாளாக கொண்டாடப்படும் வகையில் கடலூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மேல் அழிஞ்சிப்பட்டு ஊராட்சியில் மரக்கன்றுகள் நடும் விழா கலெக்டர் பாலசுப்ரமணியம் தொடங்கி வைத்தார். தொடர்ந்து கட லூர் ஊராட்சி ஒன்றியத்தி ற்குட்பட்ட ஊராட்சிகளில் 1100 மரக்கன்றுகள் நடப்படப்பட்டு வருகிறது. மேலும் கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் தமிழ்நாடு திருநாளை கொண்டாடும் வகையில் 54 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் நிகழ்வுகள் நடைபெற உள்ளது.
44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி மாமல்லபுரத்தில் நடைபெற உள்ளதை முன்னிட்டு கடலூர் மாவட்டத்தில் பொதுமக்கள், மாணவ, மாணவியர்கள் அறிந்து கொள்ளும் வகையில் ஒலிம்பிக் ஜோதி விழிப்புணர்வு பேரணி, மரக்கன்றுகள் நடுதல், விழிப்புணர்வு நடைபயணம் மேற்கொள்ளுதல், வணிக வளாகங்கள், உணவகங்கள் மற்றும் கடைகளில் செஸ் ஒலிம்பியாட் சின்னம் ஸ்டிக்கர் ஒட்டுதல், செஸ் போட்டிகள் நடத்துதல் மற்றும் செஸ் போட்டிகள் குறித்து மாணவ-மாணவியர்களுக்கிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வினாடி வினா போட்டிகள் நடத்துதல் என பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.
அதன் தொடர்ச்சியாக கடலூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலான அதிநவீன மின்னனு வீடியோ வாகனத்தை கலெக்டர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இவ்வாகனம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் சென்று செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தவுள்ளது. இந்நிகழ்ச்சியில் கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) பவன்குமார் கிரியப்பனவர். , சேம்பர் ஆப் காமர்ஸ் தலைவர் ஜி.ஆர்.துரைராஜ், துணைத் தலைவர் செல்ல பாண்டியன் பகுதி செயலாளர்கள் சதீஷ், தமிழ் முருகன், மாவட்ட விளையாட்டு அலுவலர் சிவா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.