என் மலர்
உள்ளூர் செய்திகள்
நெல்லையில் மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பு தீவிரம்பிரசார வாகனம் மூலம் விழிப்புணர்வு
- பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக நெல்லை மின் பகிர்மான வட்ட மேற்பார்வை மின் பொறியாளர் குருசாமி உத்தரவின் படி பேட்டை பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் பிரச்சார வாகனம் மூலம் துண்டு பிரசுரம் வழங்கி பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
- நகர்ப்புற கோட்ட செயற்பொறியாளர் முத்துக்குட்டி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
நெல்லை:
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் நெல்லை மின் பகிர்மான வட்டம் நெல்லை நகர்புறக் கோட்டத்தில், மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி கடந்த மாதம் 28-ந்தேதி முதல் இன்று வரை நடைபெற்றது.
இப்பணி குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக நெல்லை மின் பகிர்மான வட்ட மேற்பார்வை மின் பொறியாளர் குருசாமி உத்தரவின் படி பேட்டை பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் பிரச்சார வாகனம் மூலம் துண்டு பிரசுரம் வழங்கி பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இதனை நகர்ப்புற கோட்ட செயற்பொறியாளர் முத்துக்குட்டி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந் நிகழ்ச்சியில் பழைய பேட்டை உபகோட்ட உதவி செயற்பொறியாளர் சங்கர், உதவி மின் பொறியாளர் சரவணன் மற்றும் பணியாளர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
இந்த வாகனமானது பேட்டை, பழைய பேட்டை, டவுண் மற்றும் தச்சநல்லூர் பகுதிகளுக்கு சென்று பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்காத மின் நுகர்வோர்கள் உடனடியாக தங்கள் பகுதியில் இருக்கும் பிரிவு அலுவலகத்திலும், சிறப்பு முகாம்களிலும், இணைய வழி மூலமாகவும் உடனடியாக இணைத்துக்கொள்ள அறிவுறுத்தப்பட்டு உள்ளது.